5939 |
வேகத்தில் நாலுவிதம் உண்டு. |
5940 |
வேகப் பொறுத்தது ஆறப் பொறுக்க் கூடாதா? |
5941 |
வேகாத வீட்டில் வேகும் கட்டை காமம். |
5942 |
வேகாத சோற்றுக்கு விருந்தாளிகள் இரண்டு பெயர். |
5943 |
வேகிற வீட்டில் பிடுங்குகிறது லாபம். |
5944 |
வேகிற வீட்டுக்கு வெட்டுகிற கிணறு. |
5945 |
வேகிற வீட்டிற்குக் கணக்கு பார்ப்பார் உண்டோ? |
5946 |
வேகிற வீட்டை அவிக்காமல் இருப்பார் உண்டோ? |
5947 |
வேசி உறவு காசிலும் பணத்திலுந்தான். |
5948 |
வேசி காசு பறிப்பாள். |
5949 |
வேசியாரும் நாயும் விதிநூல் வைத்தியரும் பாசம் அற்று நிற்பது கண்பார். |
5950 |
வேடக்காரனுக்கும் ஆடக்காரனுக்கும் பகை, வேசிக்கும் தாசிக்கும் பகை. |
5951 |
வேடக்hரா வேடம் விடடா, ஒடக்காரா ஓடம் விடடா. |
5952 |
வேடத்தில் நாலு விதம் உண்டு. |
5953 |
வேடத்தினால் என்ன, வெண்ணீற்றினால் என்ன? |
5954 |
வேடமோ தவவேடம் மனதிலோ அவவேடம். |
5955 |
வேடம் மூன்று வகை. |
5956 |
வேடம் அழிந்துபோம். |
5957 |
வேடம் கூடமும் கொள்ளாது. |
5958 |
வேடருக்கு அருமையான் வேட்டை முசல் வேட்டை. |
5959 |
வேடருக்கு தேன் பங்சமா, மூடருக்கு அடி பஞ்சமா? |
5960 |
வேடர் இல்லா ஊரில் யாவம் குடி இருக்கும். |
5961 |
வேடர்களில் மலைவேடர் விசேஷம். |
5962 |
வேடர் கையில் அகப்பட்ட தேன் கூண்டுபொல. |
5963 |
வேட்டை ஆடிச் சிங்கம் தின்னும். |
5964 |
வேட்iயில் பெரிய வேட்டை பன்றி வேட்டை. |
5965 |
வேட்டையில் பிரியமான வேட்டை சிக்காரி வேட்டை. |
5966 |
வேண்டாத பெண்டாட்டியின் கைபட்டாற் குற்றம் கால் பட்டாற் குற்றம். |
5967 |
வேண்டாத பேருக்கு ஈந்து என்ன, வேலையில் ஆற்றுத்தண்ணீர் விழுந்து எனன? |
5968 |
வேண்டி வினை செயேல் |
5969 |
வேண்டி வேண்டிக் கொடுத்தாலும் வேண்டாம் என்றாற்போல. |
5970 |
வேண்டுமெனற்hல் வீடு வேண்டாம என்றால் காடு. |
5971 |
வேண்டும் என்று நூற்றல் வெணணெய்க் கொடிபோல. |
5972 |
வேதத்தில் நாலு விதம் உண்டு. |
5973 |
வேதத்திற்கும் விக்கிரபத்திக்கும் பகை. |
5974 |
வேதத்தை அறியாத கிழவன் வீண. |
5975 |
வேதத்திற்கு உலகம் பகை உலகத்திற்கு ஞானம் பகை. |
5976 |
வேதம் ஆய்ந்து ஒதல் போதகர் முறைமை. |
5977 |
வேதம் பொய்த்தாலும வியாழம் பொய்யாது. |
5978 |
வேதம் கேட்டவரை வேதம் கேட்டவர் என்பான் ஏன்? |
5979 |
வேதம் ஏன் நாதம் ஏன் விஸ்தாரக் கள்ளருக்கு? |
5980 |
வேதம் ஒத்த மித்திரன். |
5981 |
வேதம் ஒதிய வேதியருக்கு ஒர் மழை. |
5982 |
வேதாரணியத்தில் பாம்பு கடிக்கிறதாம் இல்லை, வேதாரணித்தில் பாம்பு குறைகிறதும் இல்லை. |
5983 |
வேதியருக்கு அழகு வேதமும் ஒழுக்கமும். |
5984 |
வேதியருக்கு அழகு வேதம் ஒதுதல். |
5985 |
வேந்தனும் பாம்பும் சரி. |
5986 |
வேந்தன் சீறில் ஆந்துணை இல்லை. |
5987 |
வேப்பெண்ணெயும் ஆபத்துக்கு உதவும். |
5988 |
வேப்பெண்ணெய் விற்ற காசு கசக்குமா? |
5989 |
வேப்பெண்ணெய் விருந்து எண்ணெய் அல்ல, மருந்து எண்ணெய். |
5990 |
வேம்பில் தேனை விட்டால் கசப்பு நீங்குமா? |
5991 |
வேம்பும் கரும்பாச்சுசே வெற்றிலையும் நஞ்சாச்சே. |
5992 |
வேம்புக்குப் பல் அழகு, வேலுக்குப் பல் இறுகும். |
5993 |
வேம்பும் சரி வேந்தனும் சரி. |
5994 |
வேம்பும் சரி பாம்பும் சரி. |
5995 |
வேம்பை விரும்ப விரும்பக் கரும்பு. |
5996 |
வேரைக் கல்லி வெந்நீர் வார்த்த கதை. |
5997 |
வேர் களைந்த மரம் பிழைப்பது எங்கே? |
5998 |
வேர் நின்றால் மரம் நிற்கும், வியாபாரம் நின்றால் செட்டி நிற்பான். |
5999 |
வேர் மூலிகை, மரமூலிகை காய் மூலிகை. |
6000 |
வேலமரத்து முள்ளும் ஆலமரத்துக் கனியும் ஆனேன். |
6001 |
வேலமரத்திற்கு நிழல் இல்லை, வெள்ளாளனுக்கு உறவு இல்லை. |
6002 |
வேலம் பட்டை மேகத்தை நீக்கும், ஆலம் பட்டை பித்தத்தை அடிக்கும். |
6003 |
வேலி ஒன்றுக்குப் பன்னிரண்டு கலம் விரைப்பாடு. |
6004 |
வேலி ஒன்றுக்குப் ஈரணை மாடும், இரண்டு ஆளும் வேண்டும். |
6005 |
வேலிக்கு ஓணான் சாட்சி, வெந்ததுக்குச் சொக்கன் சாட்சி. |
6006 |
வேலிக்குப் போட்ட முள் காலுக்கு விiயாச்சுது. |
6007 |
வேலி பயிரை மேய்ந்தால் விளைவது எப்படி? |
6008 |
வேலிலும் நாலு பலன் உண்டு. |
6009 |
வேலிவைத்துக் காப்பாற்றாத கன்றும் ஆலைவைத்து ஆட்டாத வாணியனும் சரி அல்ல. |
6010 |
வேலை அற்ற அம்பட்டன் பூனையைப் பிடித்துச் சிரைத்தானாம். |
6011 |
வேலை அதிகம் சம்பளம் கொஞ்சம். |
6012 |
வேலை இல்லா ஊரக்கு ராஜா ஏன், பாம்பு இல்லா ஊருக்குக் கீரிப்பிள்ளை ஏன்? |
6013 |
வேலை இல்லாதவனுக்குச் சாப்பாடு என்னத்திற்கு, எச்சிசோற்றுக்காரனுக்கு டம்பம் என்னத்திற்கு? |
6014 |
வேலை இல்லாத அம்பட்டன் ஆட்டைச் சிரைத்தானாம். |
6015 |
வேலை ஏன், பிள்ளை ஏன், வேலை இல்லாருக்குச் சாப்பாடு ஏன்? |
6016 |
வேலைக்கள்ளிக்குப் பிள்ளைமேல் சாக்கு, வெட்கம் கெட்ட நாறிக்கு அகமுடையான்மேலே சாக்கு. |
6017 |
வேலைக்கள்ளிக்கு வேளைக்குக் காற்படி, வீண் கட்டைக்கு வேளைக்கு அரைப்படி. |
6018 |
வேலைக்கள்ளிக்குப் பிள்ளைமேலே சாக்கு. |
6019 |
வேலைக்காரியாய் வந்தவள் வீட்டுகாரியானால் அவள் அதிஷ்டம். |
6020 |
வேலைக்காரி என்று வேண்டிய பேர்கள் கேட்டார்கள், குடித்தனக்கரி என்று கொடுக்கமாட்டோம் என்றார்கள். |
6021 |
வேலைக்குத் தக்க கூலி, விருப்பத்துக்குத் தக்க கூhமை. |
6022 |
வேலைக்கோ சம்பளம், ஆளுக்கோ சம்பளம்? |
6023 |
வேலை செய்தாற் கூலி, வேஷம் போட்டாற் காசு. |
6024 |
வேலை செய்யாத பிள்ளையைக் கையில வை, வேலை செய்கிற பிள்ளையைக காலில் வை. |
6025 |
வேலை மினக்கெட்ட அம்பட்டன் பெண்டாட்டடி தலையைச் சிதைதானாம். |
6026 |
வேலை மினக்கெட்டு அம்பட்டன் பூனைக்குட்டியைச் சிரைத்தானாம். |
6027 |
வேலை முத்தோ பிள்ளை முத்தோ? |
6028 |
வேலையைப் பார்த்துக் கூலி கொடு. |
6029 |
வேலையைப் பார்த்துப் பெண்ணை எடு, சாலையைப் பார்த்து ஊருக்கு நட. |
6030 |
வேல் வைத்துப் பயிர் ஆக்குவோர் இல்லை. |
6031 |
வேழத்தை ஒத்த வினை வந்தால் தீர்வது எப்படி? |
6032 |
வேழத்திற்குச சிறிதும் பெரிதாய்த் தோன்றும். |
6033 |
வேழம் முழங்கினாற்போல. |
6034 |
வேலை அறிந்து பேசு, நாளை அறிந்து பயணம் பண்ணு. |
6035 |
வேலைக்கு அரைக்காசு ஆயிரம் பொன் ஆகும். |
6036 |
வேலைக்கு உதவாத பிள்ளை தாழங்காய்க்குச் சரி. |
6037 |
வேளையோ அவவேலை வீட்டிலோ அன்னம் இல்லை. |
6038 |
வேறே வினை தேவை இல்லை, வினையாத்தாள் கோவிலுக்குப் போகவேண்டியதில்லை. |
6039 |
வேனலுக்குக் கன மழை வரும், வேந்தனுக்குக் கன சனம் சேரும். |
6040 |
வேனிற் காலத்திற்கு விசிறி ஆன காலத்திற்கு ஆச்சாவும் தேக்கும். |