We are proud to present the biggest collection of Tamil proverbs.(ஈ-வரிசை)
Here is the link for popular Proverbs : Popular Tamil Proverbs
 

1143 ஈ கலையாமல் தேன் எடுப்பாhக்ள், எடுக்காமற் பிடிப்பார்கள்.
1144 ஈகை உடையவன் எக்களிப்பு அடைவான்.
1145 ஈக்கு விடம் தலையில், தேளுக்கு கொடுக்கில்.
1146 ஈசலுக்கு எல்லாம் பகை.
1147 ஈசல் இறகு எல்லாவற்றிலும் மிருது.
1148 ஈசல் மடிந்தாற்போல் மாண்டதே சேனை.
1149 ஈசற் பெரும்போக்கில் தவளை தத்தி விழுங்குகிறது.
1150 ஈசனுக்கு ஒப்பு இங்கு ஒன்றும் இல்லை.
1151 ஈச்சங்கள்ளு எதிலும் குளிர்ச்சி.
1152 ஈச்சம் காட்டில் எருமை குடியிருந்த கதை.
1153 ஈடன் பாடஞ்சான் கூழையெருது நுளம்பஞ்சாது.
1154 ஈடாகாதவனை எதிராக்காதே.
1155 ஈடுள்ள குடிக்குக் கேடு இல்லை.
1156 ஈட்டிய பொருளினும் எழுத்தே உடைமை.
1157 ஈட்டி எட்டியமட்டும் குத்தும், பணம் பதின்காதமும் குத்தும்.
1158 ஈட்டுக்கு ஈடும் சோட்டுக்குச் சோடுமாய இருந்தால் வாசி.
1159 ஈட்டுக்கும் பாட்டுக்கும் இருந்தாள் இடுகுமரி.
1160 ஈந்து பார்த்தால் இம்மி வெளி ஆகும்.
1161 ஈப்பிசினி இரப்பதுகூடக் கக்கிசம்.
1162 ஈயத்தைக் காய்ச்சலாம் இரும்பைக் காய்ச்சலாமா?
1163 ஈயம் பிடித்தவன் எது சொல்லினும் கேளான்.
1164 ஈயாத புல்லனை எவ்விடத்திலும் காணோம்.
1165 ஈயார் தேட்டைத் தீயார் கொள்வார்.
1166 ஈயார் பொருளுக்குத் தீயார்.
1167 ஈயும் எறும்பும் எங்கும் உண்டு.
1168 ஈயைப் பிடித்தால் கை வேறு கால் வேறு.
1169 ஈயைப்போலே சுத்தமும் எறும்பைப்போலே பலமும்.
1170 ஈரச்சீPலையைப்போட்டுக் கழுத்து அறுப்பான்.
1171 ஈர நாவிற்கு எலும்பு இல்லை.
1172 ஈரம் அற்ற இடத்திலே ஈ மொய்க்குமா, ஈரம் உள்ள இடத்திலே ஈ மொய்க்குமா?
1173 ஈரவெங்காயத்திற்கு இருபத்தெட்டுப் புகை.
1174 ஈரை நினைப்பான் பேரை மறக்கான்.
1175 ஈரைப் பேனாக்கி பேனைப் பெருமாள் ஆக்கினேன்.
1176 ஈர் உருவப் பேன் அகப்படுமா?
1177 ஈ விஷடித்ததும் நாய் திருடித்தின்றதும்
1178 ஈ விழுந்த சாதம் எடுத்தாலொழியப் போமா?
1179 ஈவோனுக்கு ஒரு போசனம், இரப்போனுக்கு ஏராளம்.
1180 ஈழத்திற் செக்காட இங்கே பதம் பார்க்க.
1181 ஈனவும் தெரியாது நக்கவும் தெரியாது.
1182 ஈன்றவள் தாய் பாட்டி, இவள் தாயின் தாய் பீட்டி.
1183 ஈன்றோர் நஞ்சிற் சான்றோர் இல்லை.