We are proud to present the biggest collection of Tamil proverbs.(ஊ-வரிசை)
Here is the link for popular Proverbs : Popular Tamil Proverbs
 

1400 ஊசல் ஆடியும் தன் நிலையில் நிற்கும்.
1401 ஊசி ஒரு முழத்துணியையாவது கொடுக்கும் உற்றார் என்ன கொடுப்பார்.
1402 ஊசி கொள்ளப போய் துலாம் கணக்குப் பார்க்கிறதா?
1403 ஊசி கோக்கிறதற்கு ஊரில் துளாவாரம் ஏன்?
1404 ஊசிக்குக் கள்ளன் உடனே இருப்பான்.
1405 ஊசிக்கு ஊசி எதிரேறிப பாயுமா?
1406 ஊசி பொன்னானால் என்ன பெறும்?
1407 ஊசி போகிறது கணக்குப் பார்ப்பான பூசனிக்காய் போகிறது தெரியாது.
1408 ஊசி போல மிடறும் தாழிபோல வயிறும்.
1409 ஊசி மலிவென்று சீமைக்குப் போகலாமா?
1410 ஊசி முனையில் தவம் செய்தாலும் உள்ளது தான் கிடைக்கும்.
1411 ஊசியின் காதில் ஒட்டகம் நுழையுமா?
1412 ஊசியை ஊசிக்காந்தம் இழுக்கம், உத்தமனைச் சினேகம் இழுக்கும்.
1413 ஊணன் கருமம இழந்தான், உலுத்தன் பெயர் இழந்தான்.
1414 ஊணிணால் உறவு பூணிணால் அழகு.
1415 ஊணிணால் புத்தி பூணிணால் சாதி.
1416 ஊணுக்கு முந்தவேண்டும் கோளுக்குப் பிந்த வேண்டும்.
1417 ஊணும் இல்லை உறக்கமும் இல்லை.
1418 ஊண் அற்றபோதே உறவு அற்றுப்போம்.
1419 ஊண்பாக்கு ஒழிய வீண்பாக்கு ஆகாது.
1420 ஊத அறிந்தவன் வாதி உப்பு அறிந்தவன் யோகி.
1421 உதாரிக்குப் பொன்னும் துரும்பு.
1422 ஊதினாற்போம் உறிஞ்சினால் வரும்.
1423 ஊதுகிற சங்கு ஊதினால் விடிகிறபோது விடிகிறது.
1424 ஊத்தைவாயன் தேட நாற்றவாயன் தின்ன.
1425 ஊத்தை திரண்டு அச்சாணி ஆகுமா?
1426 ஊத்தைவாயன் தேடக் கர்ப்பூரவாயன் தின்ன.
1427 ஊத்தை போகக் குளித்தவனும் இல்லை பசிபோகத் தின்றவனும் இல்லை.
1428 ஊமை ஊரைக் கெடுக்கும் ஆமை கிணற்றைக் கெடுக்கும்.
1429 ஊமை ஊரைக் கெடுக்கும் பெருச்சாளி வீட்டைக் கெடுக்கும்.
1430 ஊமை கண்ட கனாப்போல் இருக்கிறது.
1431 ஊமைக்கு உளறுவாயன் உற்பாதபிண்டம்.
1432 ஊமையன் பேச்சு பழகின பேருக்குத் தெரியும்.
1433 ஊமையிருந்தால் செவிடும் உண்டு.
1434 ஊமையம் ஊமையும் மூக்கைச் சொறிந்தாற்போல.
1435 ஊமையும் அல்ல செவிடும் அல்ல.
1436 ஊராரைப் பகைத்து உயிரோடு இருந்தவர் இல்லை.
1437 ஊரார் கணக்கு உடையவன் பிடரியிலே.
1438 ஊரார் உடைமைக்குப் பேயாய் பறக்கிறான்.
1439 ஊரார் எருமை பால் கறக்கிறது நீயும் ஊட்டு நானும் உண்ணுகிறேன்.
1440 ஊரிலே கல்யாணம் மார்பிலே சந்தனம்.
1441 ஊரில் ஒருவனே தோழன் ஆரம் அற்றதே தாரம்.
1442 ஊரில் எளியாரை வண்ணான் அறிவான் சாதிப்பெண் பூண்டாரைத தட்டான் அறிவான்.
1443 ஊருக்கெல்லம் ஒரு வழி உனக்கு ஒரு வழியா?
1444 ஊருக்குப் பால்வார்த்து உண்ணுகிறாயா உடம்புக்குப் பால்வார்த்து உண்ணுகிறாயா.
1445 ஊருக்கெல்லாம் சாஸ்திரம் சொல்லுகிற பல்லி கூழ்ப்பானையில் விழுந்தாற்போல.
1446 ஊருக்கு ஆகாதவன் வீட்டுக்கும் ஆகான்.
1447 ஊருக்கு ஆகாத பிள்ளை தாய்க்கு ஆகுமா?
1448 ஊரக்கு ஒமல் வீட்டுக்கு வயிற்றெரிச்சல்.
1449 ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி.
1450 ஊரடன் பகைக்கில் வேருடன் கெடும்.
1451 ஊரெங்கும் பேர் வீடு பட்டினி.
1452 ஊரெல்லாம் வாழ்கிறதென்று வீடெல்லாம் புரண்டு அழுதால் வருமா?
1453 ஊரெல்லாம் சுற்றி எனக்கு என்ன புத்தி என்கிறான்.
1454 ஊரெல்லாம் உற்றார் அந்திபட்டால் பொதி சந்தியிலே.
1455 ஊரென்று இருந்தால் பறைச்சேரியும் இருக்கும்.
1456 ஊரை உழக்கால் அனைக்கிறாள் நாட்டை நாழியால் அளக்கிறாள்.
1457 ஊரைப் பார்க்கச் சொன்னால் பறைச்சேரியை பார்க்கிறான்.
1458 ஊரைப் பிடித்த சனி பிள்ளையாரையும் பிடித்தது.
1459 ஊரை வளைத்தாலும் உற்ற துணை இல்லை, நாட்டை வளைத்தாலும் நல்ல துணை இல்லை.
1460 ஊரொட ஒக்க ஓடு நாடோட நடு ஓடு.
1461 ஊரோச்சம் வீடு பட்டினி.
1462 ஊர் ஆளுகிறவன் பெண்டு பிடித்தால் ஆரடன் சொல்லி முறையிடுகிறது?
1463 ஊர் இருக்கிறது ஓடு இருக்கிறது.
1464 ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்.
1465 ஊர் இளப்பம் வண்ணானுக்குத் தெரியும்.
1466 ஊர் உண்டு பிச்சைக்கு, குளம் உண்டு தண்ணீருக்கு.
1467 ஊர் ஒரத்திற் கொல்லை உழுதவனுக்குப் பயிர் இல்லை.
1468 ஊர் கூடிச் செக்குத் தள்ளினாற்போல.
1469 ஊர்க்குருவிமேல் ராமபாணம் தொடுக்கிறதா?
1470 ஊர்க்கோழியும் நாட்டுக்கோழியும் கூடி உரவிற் புழுங்கல் அரிசிக்குச் சேதம்.
1471 ஊர் நஷ்டம் ஊரிலே தேர் நஷடம் தெருவிலே.
1472 ஊர் நல்லதோ வாய் நல்லதோ?
1473 ஊர்ப்பிள்ளையை முத்தமிட்டால், உதட்டுக்குக் கேடு.
1474 ஊர்வாயைப் படலிட்டு மூடலாமா?
1475 ஊர் வாழந்தால் ஒட்டுப்பிச்சைக்கும் வழி இருக்கும்.
1476 ஊழக்காய்ச்சல் அதிகம் ஆனால் சூனியக்காரன் கொள்ளை.
1477 ஊழி பேரினும் ஊக்கமது கைவிடேல்.
1478 ஊழிற் பெருவலி ஒன்று உண்டோ?
1479 ஊழம் உற்சாகமும் ஒத்துக்கொள்ள வேண்டும்.
1480 ஊன்றக் கொடுத்த தடி உச்சியை உடைக்கிறது.