We are proud to present the biggest collection of Tamil proverbs.(எ-வரிசை)
Here is the link for popular Proverbs : Popular Tamil Proverbs
 

1481 எங்களால் ஒன்றும் இல்லை எல்லாம் உங்கள் கர்மம்.
1482 எங்கும் மடமாய் இருக்கிறது இருக்கத்தான் இடம் இல்லை.
1483 எங்கே அடித்தாலும் நாய் காலைத் தூக்கும்.
1484 எங்கே புகை உண்டோ அங்கே நெருப்பு உண்டு.
1485 எச்சிலைத் தின்று ஏப்பம் இட்டாற்போல.
1486 எச்சிலைத் தின்று பசி தீருமா?
1487 எச்சிற்கல்லைக்கு மண்ணாங்கட்டி ஆதரவு மண்ணாங்கட்டிக்கு எச்சிற்கல்லை ஆதரவு.
1488 எச்சில் இரக்க அடிக்கும், பற்று பறக்க அடிக்கும்.
1489 எச்சிற்கையால் காக்கை ஓட்டமாட்டான்.
1490 எச்சில் எடுக்கச் சொன்னார்களா எத்தனைபோ சாப்பிட்டதென்று கணக்குப்பார்க்கச சொன்னார்களா?
1491 எச்சில் தின்றாலும் வயிறு நிறைத் தின்னவேண்டும், எச்சுக் கேட்டாலும் பொழுது விடிகிறம்ட்டும் கேட்கவேண்டும்.
1492 எச்சில் இலைக்கு நாய் அடித்துக்கொண்டு நிற்கிறதுபோல.
1493 எச்சிலைக் கழுவி உன் சுத்தத்திலே வார்.
1494 எடுக்கமுன்னம் கழுதை இடுப்பு ஒடிந்து விழுந்ததாம்.
1495 எடுக்கப் போன சீமாட்டி இடுப்பு ஒடிந்து விழுந்தாளாம்.
1496 எடுத்தாலும் பங்காருப் பெட்டியை எடுக்கவேண்டும் இருந்தாலும் சிங்காரக்கழுவில் இருக்கவேண்டும்.
1497 எடுத்த சுமை சுமந்தல்லோ இறக்கவேண்டும்?
1498 எடுத்து ஆளாத பொருள் உதவாது.
1499 எடுத்த அடி மடங்குமா?
1500 எடுத்துவிட்ட எருது எத்தனை நாள் உழும்?
1501 எடுப்பது பிச்சை ஏறுவது பல்லக்கு.
1502 எடுப்பாரும் பிடிப்பாரும் உண்டானால் இளைப்பும் தவிப்பும் உண்டு.
1503 எடுப்பார் கைக் குழந்தை.
1504 எடுப்பார் மழுவைத் தடுப்பார் புலியைக் கொடுப்பார் அருமை.
1505 எடுப்புண்ட கல்ப்பை இருந்து உழுமா?
1506 எட்டாப் பழத்தைப் பார்த்துக் கொட்டாவி விட்டதுபோல.
1507 எட்டாப் பூ தேவர்க்கு எட்டும பூ தங்களுக்கு.
1508 எட்டிக் குட்டி இறங்கிக் காலைப் பிடித்துக்கொள்ளுகிறதா?
1509 எட்டி பழுத்து என்ன, ஈயாதார் வாழ்ந்து என்ன?
1510 எட்டி மரமானாலும் பச்சென்று இருக்க வேண்டும்.
1511 எட்டிமரமானாலும் வைத்த மரத்தை வெட்டாதே.
1512 எட்டிக்குப் பால்வார்த்து வளர்த்தாலும் தித்திப்பு உண்டாகுமா?
1513 எட்டியிலே கட்டுமாம்பழம் உண்டாமோ?
1514 எட்டியுடனே சேர்ந்த இலவும் தீப்படும்.
1515 எட்டினால் குடுமியைப் பிடிக்கிறது எட்டாவிட்டால் காலைப் பிடிக்கிறது.
1516 எட்டி எட்டிப் பார்த்துக் குட்டிச்சுவரிலே முட்டிக்கொள்ளலாமா?
1517 எட்டி எட்டிப் பார்ப்பாரும் ஏணி வைத்துப் பார்ப்பாரும் குட்டிச்சுவராலே குனிந்து நின்று பார்ப்பாரும் உண்டு.
1518 எட்டிமரமானாலும் வைத்தவர்க்குப் பஷம்.
1519 எட்டிப்பழத்தை இச்சிக்கிறதா?
1520 எட்டுக் கிழவரும் ஒரு மொட்டைக்கிழவியைக் கட்டிக் கொண்டார்கள்.
1521 எட்டுக் குஞ்சு அடித்தாலும் சட்டிக்கறி ஆகாது.
1522 எட்டு வருஷத்து எருமைக்கடா ஏரிக்குப் போக வழி தேடுகின்றது.
1523 எண்சாண் உடம்பும் ஒரு சாணனேன்.
1524 எண்சாண் உடம்பிலே எள்ளதத்னை நாணம் இல்லை.
1525 எண்சாண் உடம்பிற்கும் சிரசே பிரதானம்.
1526 எண்ணம் எல்லாம் பொய் எமன் ஓலை மெய்.
1527 எண்ணம் எல்லாம் பொய் எளிதம் மெய்.
1528 எண்ணறக்கற்று எழுத்தற வாசித்தாலும் பெண் புத்தி பின் புத்தியே.
1529 எண்ணப்பட்ட குதிரை எல்லாம் மண்ணைப் போட்டுக்கொள்ள, தட்டுவாணிக்குதிரை வந்து கொள்ளுக்கு அழுகிறதாம்.
1530 எண்ணம் அற்ற இராசன் பன்றிவேட்டை ஆடினாற்போல்.
1531 எண்ணம் எல்லம் பொய் எழுதிய எழுத்து மெய்.
1532 எண் இல்லாதவ் கண் இல்லாதவர், எழுத்து இல்லாதவர் கழுத்து இல்லாதவர்.
1533 எண்ணிச் செய்கிறவன் செட்டி எண்ணுமற் செய்கிறவன் மட்டி.
1534 எண்ணிச் செய்வது செட்டு எண்ணாமல் செய்வது வேளாண்மை.
1535 எண்ணிய எண்ணம் என்னடி அண்ணா என்று அழைத்த முறை என்னடி?
1536 எண்ணித் துணிவது கருமம், துணிந்தபின் எண்ணுவது இழுக்கு.
1537 எண்ணிய குடிக்கு ஒரு மின்னிய முடி.
1538 எண்ணெய முந்துகிறதோ திரி முந்துகிறதோ?
1539 எண்ணெய் போக முழுகினாலும் எழுத்துப் போகத் தேய்பார் உண்டா?
1540 எண்ணெய் செலவொழிய பிள்ளை பிழைத்தபாடு இல்லை.
1541 எண்ணெய் குடத்தைச் சுற்றும் எறும்புபொல.
1542 எண்ணெய் பிள்ளையோ வண்ணப் பிள்ளையோ?
1543 எண் மிகுத்தவனே திண் மிகுத்தவனே.
1544 எதாகுதல பேசினால் அகப்பைச் சூனியம் வைப்பேன்
1545 எதார்த்வாதி வெகு சன விரோதி.
1546 எதிரி இளைப்பமானால் கோபம் சண்டப்பிரசண்டம்.
1547 எதிரிக்கு இளக்காரமாய் சொல்லுகிறதா?
1548 எதிர்த்த வீடு ஏகாலி வீடு, அடுத்த வீடு அம்பட்டன் வீடு.
1549 எதிர் வீடு ஏகாலி வீடு, பக்கத்து வீடு பணிசெய்பவன் வீடு, அடுத்த வீடு அம்பட்டன் வீடு.
1550 எதிர்த்தவன் ஏழை என்றால் கோபம் சண்டாளம்.
1551 எது எப்படிப் போனாலும் தன் காரியம் தனக்கு.
1552 எத்தனைதான் துலக்கினாலும் பித்தளை நாற்றம் போகுமா?
1553 எத்தனை புடம் இட்டாலும் இரும்பு பசும்பொன் ஆகாது.
1554 எத்தனை ஏழை ஆனாலும் எலுமிச்சங்காய் அத்தனை பொன் இல்லாமற்போமா?
1555 எத்தாற் பிழைக்கலாம் ஒத்தாற் பிழைக்கலாம்.
1556 எத்திலே பிள்ளை பெற்று இரவலிலே தாலாட்டுகிறது.
1557 எத்தேச காலமும் வற்றாப் பெருஞ் சமுத்திரம்.
1558 எந்த ஆயுதமும் தீட்டத்தீட்டக் கூரும்.
1559 எந்த இலை உதிர்ந்தாலும் ஈச்சம் இலை உதிராது.
1560 எந்தப் புற்றிலே எந்தப் பாம்பு இருக்கிறதோ தெரியாது.
1561 எந்த வாக்குப் பொய்த்தாலும் சந்தவாக்குப் பொய்யாது.
1562 எந்நேரமும் அவள்பேரில் கண்ணாப் இருக்கிறான்.
1563 எமனுக்கு வழிகாட்டுவான்.
1564 எமன் பிள்ளையைப் பேய் பிடிக்குமா?
1565 எய்கிறவன் எய்தால் அம்பு என்ன செய்யும்?
1566 எய்தவன் இருக்க அம்பை நோவானேன்?
1567 எரிகிற கொள்ளியை ஏறத் தள்ளினது போல.
1568 எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி?
1569 எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.
1570 எரிகிற நெருப்பை எண்ணெய் விட்டு அவிக்கலாமா?
1571 எரிகிற நெருப்பிலே நெய் விட்டது போல.
1572 எரிகிற வீட்டை அவிக்கக் கிணறு வெட்ட நாள் பார்த்தது போல.
1573 எரிகிற வீட்டிற் பிடுங்குகிறது லாபம்.
1574 எருதின் புண்ணிற்குச் சாம்பல் மருந்து.
1575 எருதுக்கும் தன் புண் அழற்சி காக்கைக்கும் தன் பசி அழற்சி.
1576 எருது கொழுத்தால் தொழுவத்தில் இராது, பறையன் கொழுத்தால் பாயில் இரான்.
1577 எருது நோயை நினைக்கும், காக்கை பசியை நினைக்கும்.
1578 எருது நோய் காக்கைக்குத் தெரியுமா?
1579 எருது ஈன்றது என்றால் தோழத்திலே கட்டு என்கிறது.
1580 எருது கெட்டார்ககும் எட்டே கடுக்காய், இளம் பிள்ளைத்தாய்சிக்கும் எட்டே கடுக்காய்.
1581 எருது வாங்குமுன்னே புன்செய்க்கு உழு என்கிறாய்.
1582 எருது நினைத்த இடத்திலே தோழம் கட்டுகிறதா?
1583 எருது கோபங்கொண்டு பரதேசம் போனது போல.
1584 எருது மறைவிற் புல்லுத் தின்கிறாயா?
1585 எருதுக்கு நோய் வந்தால் கொட்டாயைச் சுடுகிறதா?
1586 எருதும் வண்டியும் ஒத்தால் மேடு பள்ளம் ஏது?
1587 எருமைக்கடா என்றாலும் குழந்தைக்குப் பால் ஒரு பீர் இல்லையா என்கிறாய்.
1588 எருமை வாங்குமுன் நெய்வில்லை கூறுகிறாய்.
1589 எருமைக் கொம்பு நனைகிறதற்கு முன்னே எழுபது தரம் மழை வருகிறது.
1590 எருமைக் கோமயம் எக்கியத்திற்கு ஆகுமா?
1591 எருமை மாட்டின் மேல் மழை பெய்தது போல.
1592 எருமை மாட்டின் மேல எத்தனை சூடு இருந்தாலும் தெரியாது, பசுமாட்டில் ஒரு சூடு இருந்தாலும் தெரியும்.
1593 எருமை இருந்தல்லோ பால் கறக்கவேண்டும்?
1594 எருமையிலும் வெள்ளாடு ஏறக்கறக்குமா?
1595 எருவுக்குப் போனவன் இளையானைக் கைப்பிடித்தாற்போல.
1596 எருவுக்குப் போனவன் எலுமிச்சம்பழம் எடுத்ததுபோல.
1597 எலி அம்மணத்தோடே போகின்றது என்கிறான்.
1598 எலி அழுதால் பூனை விடுமா?
1599 எலி அழுது புலம்பினாலும் பூனை பிடித்தது விடாது.
1600 எலி அறுக்கும் தூக்கமாட்டாது.
1601 எலி இருக்கிற இடத்தில் பாம்பு இருக்கும்.
1602 எலிக்குப் பயந்து வீட்டைச் சுட்டது போல.
1603 எலிக்குப் பிராணாவஸ்தை பூனைக்குக் கொண்டாட்டம்.
1604 எலிக்கு அனுகூலம் பாம்பு பிடாரனுக்கு அஞ்சுதல், எளியாருக்கு அனுகூலம் வலியார் இராசனுக்கு அஞ்சுதல்.
1605 எலிக்கு மணியம் சுவரை அறுக்கிறதுதான்.
1606 எலி தலையிலே கோடாலி விழுந்தது போல.
1607 எலி தலையிற் கோபுரம் இடிந்து விழுந்தாற் போல.
1608 எலி பூனையை வெல்லுமா?
1609 எலி பூனைக்குச சலாம்பண்ணுவது போல.
1610 எலிப்பிழுக்கை இறப்பில் இருந்து என்ன, வரப்பில் இருந்து என்ன?
1611 எலியும் பூனையும் போல இருக்கிறது.
1612 எலியும் பூனையும் இணைந்து விளையாடினது போல.
1613 எலியைக் கண்டு பூனை ஏக்கம் அடையுமா?
1614 எலியைக் கண்டு பூனை ஏங்கி ஏங்கிக் கிடக்குமோ?
1615 எலிவலை ஆனாலும் தனி வலை வேண்டும்.
1616 எலி வீடு கட்டப் பாம்பு குடிகொள்ளும்.
1617 எலிவேட்டைக்குத் தவில் அடிப்பாரா?
1618 எலுமிச்சங்காய்க்குப் புளி ஏற்றுகிது போல.
1619 எலுமிச்சஞ்செடிக்கு எருப் போட்டாற் போல.
1620 எலும்பு கடிக்கிற நாய்க்குப் பருப்புச் சோறு ஏன்?
1621 எலும்பு கடிக்கிற நாய் இரும்பு கடிக்குமா?
1622 எலும்பு இல்லா நா எல்லாம் பேசும்.
1623 எல்லாம் அறிந்தவனும் இல்லை, ஒன்றும் அறியாதவனும் இல்லை.
1624 எல்லர்ம் இருக்கிறது பெட்டியிலே இலைக்கறி கடையச் சட்டி இல்லை.
1625 எல்லாத் தலையிலும் எட்டு எழுத்து, என் தலையிலே பத்து எழுத்து.
1626 எல்லாருக்கும் சொல்லுமாம் பல்லி, தான் போய் காடிப்பானையில் விழுமாம்.
1627 எல்லா மசகமும் சாயந்தரத்திற்றான் வருகிறது.
1628 எல்லாருக்கும் சனி துரும்பு போல, எனக்குச் சனி மலைபோல.
1629 எல்லாரும் பாக்கு இவன் ஒரு தோப்பு.
1630 எல்லாரும் தடுக்கின் கீழ் நுழைந்தால் அவன் கோலத்தின கீழ் நுழைவான்.
1631 எல்லாத் தாட்டோட்டும் குல்லாவுக்குள்ளே இருக்கிறது.
1632 எல்ல ஒட்டும் குல்லாவிலே.
1633 எல்லாரும் நல்லாரா, கல் எல்லாம் மாணிக்கமா?
1634 எல்லா வேலையும் செய்வான், செத்தால் பிழைக்கமாட்டான்.
1635 எல்லாரும் கப்பல் ஏறியாயிற்று இனி அம்மானார் பொற்பட்டம் கட்டப்போகிறார்.
1636 எல்லாரும் ஏறி இளைத்த குதிரையில் சாஸ்திரியார் ஏறிச் சறுக்கி விழுந்தார்.
1637 எல்லாம் அறிந்தும், கழுநீர்ப்பானையில் கையிடுகிறதா?
1638 எல்லை பாழ்பட்டாலும் கொல்லைக்கடமை விடார்.
1639 எவன் ஆகிலும் தான் சாக மருந்து உண்பானா?
1640 எழுதாக் கடனுக்கு அழுதால் தீருமா?
1641 எழுதி வழங்கான் வாழ்க்கை கழுதை புரண்ட களம்.
1642 எழுதிய விதி அழுதால் தீருமா?
1643 எழுதுவது அருமை எழுதிதைப் பழுதற வாசிப்பது அருமை.
1644 எழுதுகிறது பெரிது அல்ல, இனம் அறிந்து சேர்க்கிறது பெரிது.
1645 எழுத்து அறிந்த வண்ணான் குறித்து எறிந்தான் ஒலை.
1646 எழுத்து அறிந்த மன்னன் கிழித்து எறிந்தான் ஓலையை.
1647 எழுத்துக்குப் பால்மாறின கணக்கனும் உடுக்கைக்குப் பால்மாறின தாசியும் வருத்தம் அடைவார்.
1648 எழுந்திருப்பான் கால் இல்லை.
1649 எழுபது சென்றாலும் பறை ஏவினற்றான் செய்யும்.
1650 எழுபது பேரைக் கொன்ற படுநீவி.
1651 ஏழைக்கும் பேழைக்கும் காடுகாள் அம்மை.
1652 எள்pயவன் பிள்ளை ஆனாலும் செய்யும் சடங்கு செய்ய வேண்டும்.
1653 எளியவனை அடித்துப் புளியங்காள் பறித்தாற் போல.
1654 எளியவனுக்குப் பெண்டாய் இருக்கிறதிலும் வலியவனுக்கு அடிமை ஆகிறது நல்லது.
1655 எள்pயவனைக் கண்டு வாயால் ஏய்க்கிறான்.
1656 எளியவன் பெண்டாட்டி எல்லாருக்கும் மைத்துனிச்சி.
1657 எளியாரை வலியார் அடித்தால் வலியாரைத் தெய்வம் அடிக்கும்.
1658 எளியாரை எதிர் இட்டுக் கொண்டால் பிராணஹானி.
1659 எள் அத்தனையை மலை அத்தனை ஆக்குகிறது.
1660 எள்ளுக்காய் பிளந்த விவகாரம்.
1661 எள்ளுக்காய் பிளந்தாற்போலப் பேச வேண்டும்.
1662 எள்ளுக்குத் தக்க எண்ணெய், எள்ளுக்குத் தக்க பிண்ணாக்கு.
1663 எள்ளுக்குப் புள்ளு வரும் எச்சிற்கு எறும்பு வரும்.
1664 எள்ளுக்குள் எண்ணெய்போல.
1665 எள்ளுக்குள் எண்ணெய்போல் எங்கும் நிறைந்திருக்கும்.
1666 எள்ளுக்கு ஏழு உழவு கொள்ளுக்கு ஒர் உழவு.
1667 எள்ளுத்தான் எண்ணெய்க்கு உலருகிறது, எலிப்பிழுக்கை என்னத்துக்கு உலருகிறது.
1668 எள்ளும் ப்சசை அரிசியும் போல இருக்க வேண்டும்.
1669 எள்ளும் கரும்பும் இறுக்கினால் பயன் தரும்.
1670 எள்ளுக்கு ஏழு உழவு உழுகிறவேலை வெள்ளாளா கொள்ளுக்கு ஒர் உழவு உழுது பயிர் செய்.
1671 எறிகிறது முயலுக்குப் படுகிறது பற்றைக்கு.
1672 எறிவானேன் சொறிவானேன்?
1673 எறும்பு கடிக்கப் பொறுக்காதா?
1674 எறும்பின் கண் அதன் அளவுக்குப் பெரிது, ஆனையின் கண் அதன் அளவுக்குச் சிறிது.
1675 எறும்புக்குக் கொட்டாங்கச்சித் தண்ணீர் சமுத்திரம்.
1676 எறும்புப் புற்றில் பாம்பு குடிகொள்வது போல.
1677 எலும்புக்கும் தன் கையால் எண்சாண் உடம்பு.
1678 எறும்பு ஊரக் கல் தேயும்.
1679 எறும்பின் கண்ணுக்கு எருமை மூத்திரம் ஏக்ப்பெருவெள்ளம்.
1680 எறும்பு ஊரக் கல் குழியும்.
1681 எறும்பு ஊர இடங்கொடுத்தால் எருதும் பொதியும் உள்ளே செலுத்துவான்.
1682 எறும்பு எழுத்துப் போவதற்குத் தடி எடுத்து நிற்கிறது, பெரிய பூசனிக்காய் போகிறது தெரியாதா?
1683 எறும்பு முதல் எண்ணாயிரம் கோடிக்கும் தெரியம்.
1684 எறும்பு முட்டை கொண்டு திட்டை ஏறின் மழை பெய்யும்.
1685 எனக்கு அட்டமத்துச் சனி.
1686 எனக்கு ஊணும் இல்லை உறக்கமும் இல்லை.
1687 எனது நாட்கள் எல்லாம் ஊமை கண்ட கனாப்போல் ஆயின.
1688 என் ஈரலைக் கருக்கு அரிவாள் கொண்டு அறுக்கிறது.
1689 என் காரியம் எல்லாம் நந்தன் படைவிடாய்ப் போயிற்று.
1690 என் குடி கெட்டதும் உன் குடி கெட்டதும் பொழுது விடிந்தால் தெரியும்.
1691 என்பைத்தின்று சதையைக கொடுத்து வளர்த்தாள்.
1692 என் மகள் வாரத்தோடே வாரம் முழுகுவாள், என் மருமகன் தீபாவளிக்குத் தீபாவளி முழுகுவான்.
1693 என் மருமகனுக்கு வேப்பெண்ணெயாம் தூக்கெண்ணெய்.
1694 என் முகத்திற் கரிபூசனாயே.
1695 என் முதுகின் தோல் உனக்குச் செருப்பாய் இருக்கும்.
1696 என் வீட்டுக்கு வந்தால் என்ன கொண்டு வருகிறாய், உன் வீட்டுக்கு வந்தால் என்ன கொடுக்கிறாய்?
1697 என்றும் மறைந்திருப்பதிலும் எதிரே போதல் உத்தமம்.
1698 என்று நின்றும் பொன்றுவர் ஒர் நாள்.
1699 என்ன சொன்னாலும் என் புத்தி போகாது.
1700 என்னடா தாதா புரட்டாசிமாதம் முப்பதும் ஒரு கந்தாயம்.
1701 என்னடா குச்சுக் கட்டிப் பேசுகிறாய்.
1702 என்னமாய்ச் சொல்லி இதமாய் உரைத்தாலும் கழுதைக்கு உபதேசம் காதில் ஏறாது.
1703 என்ன மாயம் இடைச்சி மாயம், மோரோடு தண்ணீர் கலந்த மாயம்.
1704 என்னடா கெட்டுப் போகிறாய் என்றால், இன்னமும் கெட்டுப் போகிறேன் பந்தயம் போடு என்கிறான்.
1705 என்ன தின்றாலும் அதற்கு மேலே நாலு பேரீச்சம் பழம் தின்ன எல்லாம் அடிபடும்.
1706 என்னுடைய வீட்டிற்குப் பூவாய் வரப் பொன்னும் துரும்பாச்சு.
1707 என்னபைபோலக் குரலும் என் அக்காளைப் போல ஒயிலும் இல்லை என்கிறதாம் கழுதை.
1708 என்னைக் கண்டால் சணலுக்குள்ளே ஒளிக்கிறாய், என் பெண் சாதியைக் கண்டால் சட்டிக்குள்ளே ஒளிக்கிறாய்.