We are proud to present the biggest collection of Tamil proverbs.(ஓ-வரிசை) Please write to us if you wish to have the meaning in English.

1890 ஓ கொடுப்பானுக்கு வாழ்க்கைப் பட்டு ஒட்டம் ஒழியää நடை இல்லை.
1891 ஓங்கில் அறியும் உயர் கடலின் ஆழம்ää பாங்கி அறிவான் தன் பத்தாவின் வலிமை.
1892 ஓசை காட்டிப் பூசை செய்.
1893 ஓசை பெறும் வெண்கலம்ää ஓசை பெற மடகலம்.
1894 ஓடம் விட்டு இறங்கினால் ஓடக்காரனுக்கு ஒரு சொட்டு.
1895 ஓடம் விட்ட ஆறும் அடி சுடும்.
1896 ஓடம் கட்டின தூலம்.
1897 ஓடம் கடந்தால் ஓடக்காரனுக்கு ஒரு சொட்டு.
1898 ஓடம் வண்டியிலும் வண்டி ஓடத்திலும் காணவும்படும்.
1899 ஓடம் விட்ட இடம் அடி சுடும் அடி சுட்ட இடம் ஓடம் விடப்படும்.
1900 ஓடவும் மாட்டான் பிடிக்கவும் மாட்டான்ää ஓயாமல் பேசுவான்.
1901 ஓடவும் மாட்டேன் பிடிக்கவும் மாடN;டன்.
1902 ஓடி ஒரு கோடி தேடுவதிலும் இருந்து ஒரு காசு தேடுவது நலம்.
1903 ஓடி ஒன்பது பணம் சம்பாதிப்பதிலும் உட்காந்திருந்து ஒரு பணம் சம்பாதிப்பது நன்று.
1904 ஒடி ஒடி உள்ளங்காலும் வெளுத்தது.
1905 ஒடிப்போன புருஷன் வந்து மூடிக்கொண்டான்ää உடைமைமேல் உடைமை போட்டு மினுக்கிக் கொண்டாள்.
1906 ஓடிப்போன ஊரில் ஆதரித்தவன் கவுண்டன்.
1907 ஓடிப்போகிறவன் பாடிப் போகிறான்.
1908 ஓடிய முயல் பெரிய முயல் அல்லவோ?
1909 ஓடியம் ஆகிலும் ஊடுருவக் கேள்.
1910 ஓடியும் கிழவிக்குப் பிறகேயா?
1911 ஓடுகிற பாம்பைப் பிடிக்கிற பருவம்.
1912 ஓடகிறவனைக் கண்டால் துரத்துகிறவனுக்கு இலேசு.
1913 ஓடுகிற வெள்ளம் அனையில் நிற்குமா?
1914 ஓட்டைச் சட்டி ஆனாலும் கொழுக்கட்டை வெந்தாற் சரி.
1915 ஓட்டை நாழிக்குப் பூண் கட்டினது போல.
1916 ஓட்டைப் பானையிலே சர்க்கரை இருக்கும்.
1917 ஓட்டைப் பானைச் சர்;க்காரை கசக்குமா?
1918 ஓட்டை மணி ஆனாலும் ஓசை நீங்குமா?
1919 ஓணான் விழுங்கிய கதை போல.
1920 ஓதாதாருக்கு இல்லை உணர்வோடு ஒழுக்கம்.
1921 ஓதுவன் எல்லாம் உழுவான் தலைக்கடையில்
1922 ஓதுவானுக்கு ஊரம் உழுவானுக்கு நிலமும் இல்லையா?
1923 ஓதுவாருக்கு உதவு.
1924 ஓந்தி வேலிக்கு இழுக்கின்றதுää தவளை தண்ணீருக்கு இழுக்கின்றது.
1925 ஓமபிண்டத்தை நாய் இச்சித்தாற்போலே.
1926 ஓயா மழையும் ஒழியாக் காற்றும்.
1927 ஓய்வில நேசமே யோலமே சரணம்.
1928 ஓரம் சொன்னவன் ஆருக்கு ஆவான்?
1929 ஓரம் சொன்னவன் குடித்தனம்போல.
1930 ஓர் ஆண்டி பசித்;திருக்க உலகம் எல்லாம் கிறுகிறென்று சுற்றுகிறதா?
1931 ஓர் ஆறு தாண்ட மாட்டாதவன் ஒன்பது ஆறு தாண்டுவானா?
1932 ஓர் ஊருக்குப் பேச்சு மற்றோர் ஊருக்கு ஏச்சு.
1933 ஓர் ஊருக்கு ஒரு பேரிட்டுக் கொள்ளலாமா?