We are happy to provide you with the best Online Tamil to Tamil Dictionary/Translator.
For typing word in Tamil you can use our tool typing tool
Tamil Word | Tamil Meaning | English Meaning |
சக்கரக்கல் | பெருமாள் கோயில்களுக்கு மானியமாகக் கொடுக்கப்பட்ட நிலங்களின் எல்லையைக் குறிக்கும் கல் | boundary stone in lands dedicated to Vishnu temples |
சக்கர நாற்காலி | நடக்க முடியாதவர்கள் இடம்விட்டு இடம் செல்லப் பயன்படுத்தும் சக்கரங்கள் பொருத்தப்பட்ட நாற்காலி போன்ற சாதனம் | wheelchair |
சக்கரம் | (வண்டி, இயந்திரம் முதலியவற்றின் இயக்கத்திற்குப் பயன்படும்) அச்சில் சுழலக்கூடிய வட்டமான உறுப்பு | (of a cart, machine, etc.) wheel |
சக்கரவர்த்தி | பேரரசன் | emperor |
சக்கரவாகம் | இணையைப் பிரிந்து இரவில் வருந்துவதாகக் கூறப்படும் பறவை | a bird in separation said to be pining for its mate during the night, mentioned in classical Indian literature |
சக்களத்தி | (முதல் மனைவி இருக்கும்போதே) கணவன் திருமணம் செய்துகொண்ட மற்றொரு பெண் | woman taken as wife while the first wife is living |
சக்கை1 | (கரும்பு முதலியவற்றிலிருந்து) பயன் உள்ள பொருளைப் பிரித்து அல்லது பிழிந்து எடுத்த பின் எஞ்சியிருப்பது | anything squeezed dry |
சக்கை2 | (மரச் சாமான்களில் துளைகளை அடைப்பதற்கு அல்லது பகுதியை இணைப்பதற்கு வைக்கும்) சிறு மரத் துண்டு | small wooden peg (used as a plug or nail) |
சக்கைப்போடுபோடு | சிறப்பாக நடைபெறுதல் | (of a film, play, etc.) perform |
சக1 | எந்தப் பணியில் அல்லது நிலையில் இருக்கிறோமோ அந்தப் பணியில் அல்லது நிலையில் இருக்கிற மற்றொரு | co- |
சக2 | (கணிதத்தில்) கூட்டல் குறி | (in arithmetic) plus sign |
சகட்டுமேனிக்கு | எந்த வித வித்தியாசமும் பார்க்காமல் | without any discretion or discrimination |
சகடை | (கிணற்றில் தண்ணீர் இறைக்கப் பயன்படுத்தும்) கப்பி | roller-pulley (to draw water) |
சகதர்மிணி | மனைவி | wife |
சகதி | சேறு | slush |
சகலகலாவல்லவன் | பல துறைகளிலும் தேர்ச்சி பெற்றவன் | one who is versatile |
சகலம் | எல்லாம் | all |
சகலரும் | எல்லோரும் | all |
சகவாசம் | (ஒருவர் மற்றொருவரோடு கொள்ளும்) பழக்கம் | association |
சகஜம் | எப்போதும் போல் உள்ளது | what is usual or normal or natural |
சகஸ்ரநாமம் | (வழிபாட்டின்போது கூறும்) கடவுளின் ஆயிரம் பெயர்கள் | the thousand names of a deity (chanted during worship) |
சகா | சக ஊழியர் | co-worker |
சகாப்தம் | (வரலாற்றில் குறிப்பிட்ட நிகழ்ச்சி ஒன்றைத் தொடக்கமாகக் கொண்டு கணக்கிடப்படும்) ஆண்டு முறை | era |
சகாயம்1 | உதவி | help |
சகாயம்2 | (விலை) மலிவு | cheapness |
சகி1 | பொறுத்தல் | bear |
சகிதம்/-ஆக | (ஒருவர்) துணையாக | together with (person mentioned) |
சகிப்புத்தன்மை | பொறுத்துக்கொள்ளும் குணம் | tolerance |
சகுனத்தடை | தடையாக ஏற்படும் சகுனம் | obstruction in the form of an omen |
சகுனம் | மேற்கொள்ளும் செயல் நல்லபடியாக முடியும் அல்லது தடைபட்டுவிடும் என்பதை முன்கூட்டியே தெரிந்துகொள்ளும்படி நிகழ்வதாக நம்பப்படும் அறிகுறி | omen |
சகோதர | சக | fellow (being) |
சகோதரத்துவம் | ஏற்றத்தாழ்வு, வேறுபாடு முதலியவற்றைப் பார்க்காமல் சகோதரர்களாகப் பாவித்துச் செயல்படும் பாங்கு | brotherhood |
சகோதரன் | உடன் பிறந்தவன் | brother |
சகோதரி | உடன் பிறந்தவள் | sister |
சங்ககாலம் | (தமிழ் இலக்கிய வரலாற்றில்) ஏறத்தாழ கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரையான (அக, புற இலக்கியங்கள் தோன்றிய) காலம் | (in the literary history) the period approximately up to third century A.D. |
சங்கடம் | (ஒரு நிகழ்ச்சியால் மனம் அடையும்) பாதிப்பு | uneasiness (on account of an incident or act) |
சங்கதி1 | நடைபெறும் அல்லது நடைபெற்ற செயல் | happening |
சங்கதி2 | இசைத் தன்மையை வெளிப்படுத்த பாட்டின் ஒரு வரியைப் பல விதமாகப் பாடிக்காட்டுவது | the various ways of rendering a line (of a musical composition) to bring out its musical potential |
சங்கநாதம் | (உணர்ச்சி மிக்க) முழக்கம் | oration |
சங்கப்பலகை | (முற்காலத்தில்) தகுதி அறிவதற்கும் தகுதி உடையதை ஏற்பதற்குமான இடம் | (in olden times) a platform for scrutinizing the value and worth of s |
சங்கம் | (ஏதேனும் ஒரு நோக்கத்திற்காக) ஒன்றாகச் சேர்ந்து ஏற்படுத்தும் கூட்டமைப்பு | association |
சங்கமம் | ஆறு போன்றவை மற்றொரு ஆற்றுடன் அல்லது பெரும் நீர்ப்பரப்பில் இணைவது | confluence |
சங்கமி | சங்கமமாதல் | flow together |
சங்கமுகம் | கழிமுகம் | estuary |
சங்கராந்தி | (பொங்கல் திருநாள் கொண்டாடும்) தை மாதம் முதல் தேதி | first day of the month of தை (when பொங்கல் is celebrated) |
சங்கல்பம்/சங்கற்பம் | (மனத்தில் கொள்ளும்) தீர்மானம் | (mental) resolve |
சங்காத்தம் | (ஒருவருடன்) தொடர்பு | contact |
சங்கிரகம் | (நூல்) சுருக்கம் | abridgement (of a book) |
சங்கீதம் | இசை | music |
சங்கு1 | கடலில் வாழும் உயிரினத்தின், குவிந்த முனையையும் உட்புறமாக வளைந்து மடிந்த இடைப்பகுதியையும் உடைய ஓடு | (conch) shell (of various sizes) |
சங்கு2 | (தொழிற்சாலை முதலியவற்றில் நேரத்தை அறிவிப்பதற்காகப் பயன்படுகிற) நீண்ட உரத்த ஒலியை எழுப்பக் கூடிய சாதனம் | siren |
சங்குகுளி | (கடலில்) சங்கு எடுக்க மூழ்குதல் | dive for (conch) shell |
சங்குச்சுண்ணாம்பு | சங்குகளைச் சுட்டுப் பெறும் சுண்ணாம்பு | shell lime |
சங்குசக்கரம் | பற்றவைத்தால் தீப்பொறி சிந்தித் தரையிலோ கம்பியிலோ சுழலக் கூடிய சுருள் வடிவிலான ஒரு வகைப் பட்டாசு | cracker that either spins on the floor or rotates on a metal wire when lit |
சங்கேதம் | (பேச்சு, செய்கை, குறியீடு போன்றவற்றைக் குறித்து வருகையில்) குறிப்பிட்டோருக்கு மட்டும் புரியக் கூடிய விதத்தில் இருப்பது | code |
சங்கோஜம் | கூச்சம், வெட்கம் கலந்த தயக்கம் | shyness |
சங்கோஜி | கூச்சம் நிறைந்த நபர் | shy person |
சச்சதுரம் | சரி சதுரம் | perfect square |
சச்சரவு | தகராறு | squabble |
சஞ்சரி | (கட்டுப்பாடு இல்லாமல் பரந்த இடத்தில்) சுற்றிவருதல் | wander |
சஞ்சலம் | நிம்மதி இழந்த நிலை | disturbed state or restlessness (of mind) |
சஞ்சாரம் | நடமாட்டம் | (of human beings) movement |
சஞ்சிகை | (வார, மாத) பத்திரிகை | journal |
சட்-என்று | (கவனத்தில், உணர்வில் பட்டதும்) உடனடியாக(சொன்னதும்) விரைவாக | at once |
சட்டகம் | சட்டம் | frame |
சட்டத்தரணி | வழக்கறிஞர் | lawyer |
சட்டதிட்டம் | சட்ட ஒழுங்கு நெறிமுறை | rules and regulations |
சட்டப்பேரவை | மாநிலத்துக்கான சட்டங்களை இயற்றும் (மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட) உறுப்பினர்களைக் கொண்ட அவை | legislative Assembly (of a state) |
சட்டப்பேரவைத் தலைவர் | சட்டப்பேரவையின் நடவடிக்கைகளை விதிகளுக்கு இணங்க நடத்தும் தலைமைப் பொறுப்புக்கு அவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர் | speaker (of the legislative assembly) |
சட்டம்1 | அரசின் அதிகாரங்களையும் மக்களின் உரிமைகளையும் கடமைகளையும் வரையறுத்து ஏற்படுத்தப்பட்டிருக்கும் விதி | law |
சட்டம்2 | (கண்ணாடி, கதவு முதலியவை பொருந்துமாறு) கட்டைகளை இணைத்துச் செய்யப்படும் சதுர அல்லது செவ்வக வடிவ அமைப்பு | frame |
சட்டமன்றம் | மாநிலத்துக்கான சட்டங்களை இயற்றும் சட்டப்பேரவை உள்ளிட்ட அவை | legislature |
சட்டமாக்கு | (ஒரு தீர்மானத்தை எல்லோரும் பின்பற்ற வேண்டிய விதியாக) சட்டமன்றம் அங்கீகாரம் அளித்தல் | enact |
சட்ட மூலம் | மசோதா | bill (in a parliament) |
சட்டவிரோதம் | சட்டத்துக்கு எதிரானது அல்லது புறம்பானது | violation of law |
சட்டாம்பிள்ளை | ஆசிரியர் இல்லாத நேரத்தில் வகுப்பு அறையில் மாணவர்கள் அமைதியாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள நியமிக்கப்பட்ட மாணவன் | (formerly) a pupil who monitors a class of students |
சட்டி | அகன்ற வாயுடைய உயரக்குறைவான (மண்) பாத்திரம் | a small pot |
சட்டுவம் | தோசைத் திருப்பி | a kind of spatula |
சட்டை1 | (பொதுவாக, ஆண்கள் அணியும்) வெளிப்பக்கமாக மடியும் கழுத்துப்பட்டியும் முன்பக்கத்தில் பித்தான்களும் வைத்துத் தைக்கப்பட்ட, இடுப்புவரையிலான மேல் உடை | shirt |
சட்டை2 | (பாம்பும் வேறு சில உயிரினங்களும்) உடலிலிருந்து கழித்து நீக்கும் மெல்லிய மேல் தோல் | slough |
சட்டைக்காரன் | ஐரோப்பியருக்கும் இந்தியருக்கும் பிறந்து இந்தியாவில் வாழ்பவன் | anglo-Indian |
சட்டைக்காரி | சட்டைக்காரன் என்பதன் பெண்பால் | feminine of சட்டைக்காரன் |
சட்டைசெய் | (எதிர்மறையில் அல்லது எதிர்மறைத் தொனியில்) மதித்தல் | mind |
சட்னி | சில காய்களை அல்லது கடலையை அரைத்து நீர் ஊற்றித் தாளித்துச் செய்யப்படும் (இட்லி போன்ற சிற்றுண்டிக்கான) காரச் சுவையுடைய தொடுகறி | a side dish in liquid state seasoned with spices (for food items such as இட்லி) |
சடங்காகு | (பெண்) பருவம் எய்துதல் | (of girls) come of age |
சடங்கு | சாஸ்திரம் விதிப்பதால் அல்லது வழக்கம் காரணமாக (பிறப்பு, இறப்பு, திருமணம் போன்ற முக்கிய நிகழ்ச்சிகளில்) மேற்கொள்ளும் புனிதச் செயல் | ceremony (on occasions like birth, death, marriage, etc.) |
சடங்கு கழி | பெண் பருவம் அடைந்ததை முன்னிட்டு நீராட்டிச் சடங்கு நடத்துதல் | perform the purificatory ceremony for a girl who has come of age |
சடலம் | உயிரற்ற உடல் | corpse |
சடார்-என்று | சட்டென்று | swiftly |
சடுகுடு | கபடி | kabadi |
சடுதியாக/சடுதியில் | சீக்கிரமாக | quickly |
சடை1 | தலைமுடி ஒன்றோடொன்று சேர்ந்து திரளுதல் | (of hair) get matted |
சடை2 | (பெண்களின்) பின்னப்பட்ட தலைமுடி | plaited hair (of women) |
சடைவிழு | தலைமுடி ஒன்றோடொன்று சேர்ந்து திரண்ட முடிக்கற்றை ஏற்படுதல் | (of hair) get matted or knotted |
சண்டமாருதம் | பெரும் காற்று | whirlwind |
சண்டாள | பெரும் பாதகம் செய்கிற | wretched |
சண்டாளன் | (பெரும்பாலும் வசைச் சொல்லாக) பெரும் பாதகம் செய்பவன் | (a term of abuse) one who commits heinous crime |
சண்டாளி | சண்டாளன் என்பதன் பெண்பால் | female of சண்டாளன் |
சண்டி | கட்டளைக்குக் கீழ்ப்படிய மறுக்கும் ஒருவர் அல்லது ஒன்று | that which shows obstinacy |
சண்டியர் | சண்டை வளர்ப்பவன் | rowdy |