We are happy to provide you with the best Online Tamil to Tamil Dictionary/Translator.
For typing word in Tamil you can use our tool typing tool
Tamil Word | Tamil Meaning | English Meaning |
வக்கடை | நீர் பாய்வதற்காக வயல் வரப்பில் வெட்டிவிடப்படும் ஓடை | streamlet in between the ridges of paddy-field |
வக்கணை | (சமைத்த உணவு) விரும்பி உண்ணும் வகையில் உள்ளது | tasty |
வக்கரி | வக்கிரம் அல்லது விகாரம் அடைதல் | be perverse |
வக்காலத்து | ஒரு கட்சிக்காரர் வழக்கறிஞரை வழக்கில் தனக்குப் பதிலாக நீதிமன்றத்தில் ஆஜராகவும் விண்ணப்பிக்கவும் நியமிக்கும் எழுத்துமூலமான சான்று | power of attorney given to an advocate by a party to a suit |
வக்காலத்து வாங்கு | ஒருவர் மற்றொருவருக்காகப் பரிந்துகொண்டு வருதல் | hold a brief for |
வக்கிரம் | (ஒருவருடைய மனப்போக்கு, சிந்தனை, உணர்ச்சி முதலியவை) சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒழுங்கு, நியாயம், நியதி முதலியவற்றிலிருந்து திரிந்த நிலை | perversity |
வக்கீல் | வழக்கறிஞர் | advocate |
வக்கு | (பெரும்பாலும் எதிர்மறைச் சொற்களோடு) (ஒன்றைச் செய்வதற்குத் தேவையான) சக்தி | means |
வகி1 | நிர்வகித்தல் | manage |
வகு | ஏற்படுத்துதல் | frame |
வகுத்தல் | ஓர் எண்ணை மற்றொரு எண்ணால் வகுக்கும் முறை | division |
வகுப்பு | (கல்வி முறையில் மாணவர்கள் படித்துக் கடந்து வர வேண்டியதாக அமைக்கப்பட்டிருக்கும்) படிப்படியான பல பிரிவுகளுள் ஒன்று | (in schools) standard |
வகுப்புவாதம் | சாதி அல்லது மத அடிப்படையில் மக்களைப் பிரிக்க எண்ணும் போக்கு | sectarianism |
வகை | பொதுவான அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு ஏற்படுத்திக்கொள்ளும் பிரிவு | class |
வகைசெய் | (உரிய) ஏற்பாடுசெய்தல் | devise a method |
வகைப்பாடு | வகைவகையாகப் பிரிக்கப்பட்டது | classification |
வகையறா | (குறிப்பிடப்படுவதோடு) தொடர்புடைய மற்றவை | and the rest |
வகையாக | வசமாக | inescapably |
வங்கி | மக்கள் சேமிக்க உதவுவது, மக்களுக்குத் தேவைப்படும் கடன் தருவது முதலிய செயல்களை மேற்கொள்ளும் நிதி நிறுவனம் | (commercial) bank |
வங்கியியல் | வங்கியின் செயல்முறைகளை விவரிக்கும் துறை | banking |
வங்கு | காய்ந்து வறண்ட செதிள்களைப் போல மேல்தோலை மாறச்செய்து வெடிப்பு ஏற்படுத்தும் சரும நோய் | a kind of skin disease marked by dryness of the skin and cuts |
வசதி | செல்வமும் பொருளும் ஏற்படுத்தித் தரும் வாய்ப்பான நிலை | means |
வசந்த காலம் | செடி, கொடி, மரம் ஆகியவை பூக்கத் தொடங்கும் பருவம் | spring season |
வசப்படு | (குறிப்பிட்ட உணர்ச்சிக்கு அல்லது மனநிலைக்கு) ஆட்படுதல் | be in the grip of |
வசம்பு | (மருந்தாகப் பயன்படும்) முறுக்கினாற்போல் அமைந்திருக்கும் ஒரு பூண்டின் வழுவழுப்பான வேர் | sweet flag (used as a medicine) |
வசமாக | தப்பிக்க எந்த வித வாய்ப்பும் இல்லாத வகையில் | inescapably |
வசவு | திட்டு | abuse |
வசனகர்த்தா | (திரைப்படம், நாடகம் ஆகியவற்றுக்கு) வசனம் எழுதுபவர் | script-writer (of a film, etc.) |
வசனம் | (திரைப்படம், நாடகம் முதலியவற்றில்) ஒவ்வொரு கதாபாத்திரமும் பேசுவதற்காக எழுதப்பட்டது | the lines assigned to a character in a play or film |
வசி | (மனிதர் ஓர் இடத்தில்) தங்கி வாழ்தல் | live/dwell |
வசிப்பிடம் | குடியிருக்கிற அல்லது தங்கியிருக்கிற இடம் | residence |
வசியம் | (மந்திரத்தால் அல்லது சக்தி வாய்ந்த பேச்சால் ஒருவரை) சுய விருப்பப்படி செயல்படவிடாமல் செய்து தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருதல் | laying a spell |
வசீகரம் | (அழகு, இனிமை முதலியவற்றால்) கவர்ந்து தன்வசப்படுத்தும் தன்மை | attraction |
வசீகரி | (அழகு, இனிமை முதலியவற்றால்) கவர்தல் | allure |
வசூல் | (கடன், வரி, கட்டணம், நன்கொடை என) வசூலித்தல் அல்லது வசூலிக்கப்படுவது | collection (of taxes, payments, donations, etc.) |
வசூலி | (கடன், வரி, கட்டணம், நன்கொடை என) பணம் பெறுதல் அல்லது சேகரித்தல் | raise (funds) |
வசை | இழிவுபடுத்தும் அல்லது குறைகூறும் வகையிலான பேச்சு | abuse |
வசைபாடு | இழிவுபடுத்தும் அல்லது குறைகூறும் வகையில் பேசுதல் | abuse |
வஞ்சகம் | (நம்பச்செய்து, தீங்கு விளைவித்துப் பயன் அடைய முற்படும்) நியாயமற்ற தந்திரம் | deceit |
வஞ்சப்புகழ்ச்சி | (ஒருவரை அல்லது ஒன்றை) இகழ்வது போல் புகழ்வது அல்லது புகழ்வது போல் இகழ்வது | apparent praise or censure suggesting the opposite |
வஞ்சம் தீர் | பழி தீர்த்தல் | take revenge |
வஞ்சனை | வஞ்சகம் | deceit |
வஞ்சி | நம்பச்செய்து கைவிடுதல் | betray |
வஞ்சிப்பா | நான்கு வகையான தமிழ்ச் செய்யுள்களுள் ஒன்று | one of the major metres of Tamil prosody |
வட்டம்1 | மையப் புள்ளியிலிருந்து எல்லாப் பக்கங்களிலும் சம தூரத்தில் வளைவான கோட்டால் அமைந்த வடிவம் | circle |
வட்டம்2 | அரசின் வருவாய் நிர்வாக அமைப்பில் பிர்க்காவைவிடப் பெரிய நிர்வாகப் பிரிவு | taluk (a unit of a revenue division) |
வட்டா | டபரா | a saucer-like vessel |
வட்டாட்சியர் | தாசில்தார் | tahsildar |
வட்டாரம் | குறிப்பிடப்படும் இடமும் அதைச் சுற்றிய பகுதியும் | region |
வட்டாரமொழி | பொது மொழியிலிருந்து ஒலிப்பு முறையாலும் சொற்களாலும் இலக்கண அமைப்பாலும் சற்றே வேறுபாடு உடையதும் நாட்டில் ஒரு குறிப்பிட்ட நிலப் பகுதியைச் சார்ந்தவர்களால் மட்டும் பேசப்படுவதுமான மொழி வகை | language variety (spoken by the people of a region of a country or by a class of its people) |
வட்டாரவழக்கு | வட்டார மொழியில் உள்ள சொல் வழக்கு | usage in a language variety or dialect |
வட்டி | கடன் தொகைக்கு அல்லது முதலீடு செய்த தொகைக்குக் குறிப்பிட்ட காலத்திற்கு இவ்வளவு என்கிற விகிதத்தில் கூடுதலாகப் பெறப்படும் தொகை | interest (on loan, investment, etc.) |
வட்டில் | (சாப்பிடப் பயன்படுத்தும்) தட்டு | plate (to hold food) |
வட்டெழுத்து | தமிழ் மொழிக்கு (கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டுவரை) வழங்கிவந்த சற்று வட்ட வடிவில் அமைந்த வரிவடிவம் | a script slightly circular in form which was used (till twelfth century A.D.) for Tamil language. |
வட்டை | வண்டிச் சக்கரத்தின் ஆரக்கால்கள் இணைக்கப்பட்டிருக்கும் மரத்தாலான வெளிப்பகுதி | wooden rim of the wheel (of a cart) |
வட | வடக்கு என்பதன் பெயரடை | adjective of வடக்கு |
வடக்கத்திய | வடக்கிலுள்ள | northern |
வடக்கு | தெற்குக்கு எதிர்த்திசை | north |
வடகிழக்குப் பருவக்காற்று | (இந்தியாவில்) குறிப்பிட்ட மாதங்களில் மழையைப் பெய்விக்கும் வகையில் வடகிழக்குத் திசையிலிருந்து வீசும் காற்று | north-east monsoon (in India) |
வடநாடு | (பெரும்பாலும் ஆந்திரம், தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம் ஆகிய நான்கு தென் மாநிலங்கள் தவிர்ந்த இந்தியாவின்) வட பகுதி | northern part (of India) |
வடம் | (கோயில் தேரை இழுக்கப் பயன்படுத்தும்) கனமான பருத்த முறுக்குக் கயிறு | thick twisted rope (to haul a heavy object like a temple car) |
வடமொழி | சமஸ்கிருதம் | sanskrit |
வடி1 | (திரவம்) கோடாக அல்லது சொட்டுச்சொட்டாக வெளியேறுதல் | (of liquid) drip |
வடி2 | (தாவரத்திலிருந்து பிசின், பால் போன்றவற்றை) சொட்டுச்சொட்டாக வெளியேறச்செய்து சேகரித்தல்/(சாற்றை) கொஞ்சம்கொஞ்சமாக இறங்கச்செய்தல் | tap |
வடிகட்டி | திரவத்தை மட்டும் செல்ல விடுவதற்கு ஏற்ற வகையில் வலை அமைத்துச் செய்யப்பட்ட சாதனம் | strainer |
வடிகட்டின | வேறு எதுவும் கலந்திராத | downright |
வடிகட்டு | (வடிகட்டியால்) கழிவு நீக்கிச் சுத்தம்செய்தல்(ஒன்றிலிருந்து நீரை) வெளியேற்றுதல் | filter |
வடிகால் | நீர் ஒரு பரப்பில் தேங்கிநிற்காமல் செல்வதற்காக அமைக்கப்படும் கால்வாய் | outlet |
வடிதட்டு | சாதத்திலிருந்து கஞ்சியை வடித்தெடுக்க உதவும் முறையில் பாதிப் பரப்பில் மட்டும் ஓட்டைகளைக் கொண்ட தட்டு | a shallow metal plate with perforation used as strainer |
வடிவகணிதம் | வடிவங்களையும் உருவங்களையும் உருவாக்கும் கோடுகள், கோணங்கள் முதலியவற்றைக் கணித அடிப்படையில் விளக்கும் பிரிவு | geometry |
வடிவம் | புற உருவ அமைப்பு | form |
வடிவமை | (சிலை, கட்டடம் போன்றவற்றுக்குக் குறிப்பிட்ட) வடிவம் கிடைக்கும்படிசெய்தல் | design |
வடிவமைப்பு | உருவாக்கப்பட்ட வடிவம் அல்லது தோற்றம் | design |
வடு1 | புண் ஆறிய பின் அல்லது அடிபட்ட இடத்தில் ஏற்படும் தடயம் | scar |
வடுமாங்காய் | மாவடுக்களை உப்புப் போட்டு ஊறவைத்துத் தயாரிக்கும் ஒரு வகை ஊறுகாய் | a pickled preparation of tender mangoes |
வடை | கெட்டியாக அரைத்த உளுத்தம்பருப்பை அல்லது கடலைப் பருப்பை வட்டமாகத் தட்டி எண்ணெய்யில் வேகவைத்து எடுக்கப்படும் தின்பண்டம் | cutlet-like snack made of lentil or chick-pea paste and fried in oil |
வடைக்குத்தி | எண்ணெய்யில் போட்ட வடைகளை ஒவ்வொன்றாகக் குத்தி எடுக்கப் பயன்படும் நீளமான கம்பி | needle-like pick to take out snacks such as வடை from the hot oil |
வடைகறி | வடைக்கு உரிய கடலை மாவை மசாலா சேர்த்துத் தாளித்து ஆவியில் வேகவைத்துத் தயாரிக்கும் ஒரு வகைத் தொடுகறி | a kind of side dish for இட்லி, etc using chickpea paste as in the preparation of வடை |
வடைப்பருப்பு | பாசிப்பருப்பை வேக வைத்துத் தாளித்துச் செய்யும் கார வகைத் தின்பண்டம் | spiced greengram served as a snack |
வடைவாரி | துளைகள் கொண்ட (வடை எடுக்கும்) கரண்டி | perforated ladle to take out வடை, etc from the hot oil |
வண்டல் | (ஆறு, வெள்ளம் முதலியவை அடித்துக்கொண்டு வந்து ஒதுக்கிய) வளமான மண் | silt |
வண்டவாளம் | பிறருக்குத் தெரிந்துவிடக் கூடாது என்று வைத்திருந்த (ஒருவருடைய) உள் விவகாரம் | unpleasant, discreditable facts (which one kept out of public notice) |
வண்டி1 | மாட்டாலோ குதிரையாலோ இழுக்கப்படும் அல்லது இயந்திரத்தால் இயங்கும் சக்கரங்களை உடைய வாகனம் | (generally) vehicle |
வண்டி2 | தொந்தி | pot-belly |
வண்டில் | இரட்டை மாட்டு வண்டி | cart drawn by a pair of bullocks |
வண்டு | சற்று மேல் எழும்பிய வளைவான உடலில் கண் முதலியவை கொண்ட, பறக்கக் கூடிய பல வகை உயிரினங்களின் பொதுப்பெயர் | general term for bees, moth, etc வண்டுகள் ரீங்காரமிட்டுப் பறந்துசென்றன |
வண்ணத்துப்பூச்சி | விதவிதமான நிறங்களில் அழகிய இறக்கைகளை உடைய ஒரு வகைப் பூச்சி | butterfly |
வண்ணம்1 | நிறம் | colour |
வண்ணம்2 | (பெயரெச்சத்தின் பின்) முறையில் | (after relative participles) so as |
வண்ணான் | சலவைத் தொழில் செய்பவர் | washerman |
வணங்காமுடி | யாருக்கும் பணியாமல் நடப்பவன் | recalcitrant person |
வணிக நோக்கு | (வியாபாரம் அல்லாத பிறவற்றிலும்) லாபத்தை எதிர்பார்க்கும் போக்கு | commercialism |
வணிகம் | வியாபாரம் | business |
வணிகவியல் | பொருள்களின் பரிமாற்றத்திற்கு இடையூறாக இருப்பவற்றை நீக்குவதற்கான வழிகளைப்பற்றியும் நிர்வாக வரவுசெலவுபற்றியும் மேற்கொள்ளும் படிப்பு | commerce (as a subject of study) |
வணிகன் | வியாபாரம் செய்பவன் | merchant |
வத்தல் | பதப்படுத்திக் காய வைத்த சில வகைக் காய்கறி/அரிசிக் கூழ், ஜவ்வரிசிக் கூழ் முதலியவற்றைப் பிழிந்து உலர்த்தி எடுத்த துண்டுகள் | dried vegetable pieces/rice or sago paste processed by drying |
வத்தல்குழம்பு | புளிக் கரைசலில் வத்தல் போட்டுச் செய்த குழம்பு | a sauce of thick tamarind solution with dried vegetable pieces |
வத்தலும்தொத்தலுமாக | உடல் வற்றி மெலிந்து | in a thin and emaciated condition |
வத்திப்பெட்டி | தீப்பெட்டி | matchbox |
வத்திவை | (சண்டையை ஆரம்பிக்கும் வகையில்) கோள்சொல்லுதல் | create misunderstanding |