Warning: Parameter 1 to wp_default_scripts() expected to be a reference, value given in /home/ilearnal/public_html/ilearntamil.com/blog/wp-includes/plugin.php on line 600

Warning: Parameter 1 to wp_default_styles() expected to be a reference, value given in /home/ilearnal/public_html/ilearntamil.com/blog/wp-includes/plugin.php on line 600

Author: ommuruga

நீட் தேர்வு குழப்பங்கள்: ஒரு பார்வை – பகுதி I

தமிழக மாணவர்கள் மட்டுமல்லாமல், எல்லா இந்திய மாநிலங்களிலும் உள்ள மாணவர்களையும் அவர் தம் பெற்றோரையும் குழப்பத்தில் தவிக்க விட்டிருக்கிறது மருத்துவக் கல்விக்கான நீட் நுழைவுத் தேர்வு. தேர்வுகள் நடைபெறுகிற விதத்திலும், தேர்வுகளுக்குக் கேட்கப்படுகிற  கேள்விகளில் மாநிலங்கள் சார்ந்து பாரபட்சம் இருப்பதாகவும் எழுந்த புகார்கள் அனைவரும் அறிந்ததே. மருத்துவப்ப் படிப்புகளுக்கு மட்டுமல்லாமல் (AIPMT தேர்வு), பொறியியல் படிப்புகளுக்கும் கூட (AIEEE) தேசிய அளவிலான தேர்வுகள் பல காலமாக நடந்தே வருகின்றன. இவை அல்லாமல் நாட்டின் மிக உயரிய கல்வி நிலையங்களாக மதிக்கப்படும் IIT – களில் மாணவர்கள் சேர்க்கைக்கேன பிரத்தியேகமான தேர்வுகள் (IIT-JEE) நுழைவுத் தேர்வுகள் என பல தேசிய தேர்வுகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இருப்பினும் மேற்சொன்ன தேர்வுகள் போல் அல்லாமல், ஏன் நீட் தேர்வு தொடர்பாக மட்டும் இத்தனை குழப்பங்கள், எனும் கேள்வி மனதில் எழுவது இயல்பே.     இதர தேசிய நுழைவுத் தேர்வுகளில் இருந்து நீட் தேர்வு எவ்விதத்தில் மாறுபடுகிறது என்பதில் முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படையான செய்தி நீட் தேர்வு ‘கட்டாயமானது’ என்பதையே. தேசிய அளவில் மருத்துவக் கனவுகளோடு இருக்கிற எந்த ஒரு மாணவரும் இனி நீட் தேர்வை எதிர்கொள்ளாமல் மருத்துவக் கல்லூரிகளுக்குள் நுழைவது சாத்தியமில்லை எனும் சூழல் இத்தேர்வால் உருவாகி உள்ளது. மேற்சொன்ன எல்லா தேர்வுகளும் வருடந்தோறும் நடைபெறுகின்றன எனும் போதிலும் அவை வருப்பத்தின் பேரில் மாணவர்கள் எதிர்கொள்ளும் தேர்வுகளாக மட்டுமே இருக்கின்றன என்பதையும் இவ்விடத்தில் குறிப்பிட்டே ஆக வேண்டும். நீட் தேர்விற்கான கேள்விகள் மத்திய பாடத்திட்டமான CBSE பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே தயாரிக்கப் படுகின்றன என்பது மிக முக்கியமான, ஆனால் சர்ச்சைகுரிய அம்சம். ஏன் என்பதற்கு ஒரு சிறிய விளக்கம். இவ்வருடம் மார்ச் 2017 பொதுத் தேர்வுகளில் பங்குகேற்ற CBSE பாடத்திட்டத்தின் கீழ் பயின்ற மாணவர்களின் எண்ணிக்கை, ஏறத்தாழ பத்து இலட்சம். (துல்லியமாகச் சொல்வதென்றால் 10,98,891 [இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளம், மார்ச் 9,2017] மாணவ மாணவியர் பங்கேற்றனர்.) இந்த மாணவ எண்ணிக்கை மொத்த தேசத்திற்கும் ஒட்டுமொத்தமானது என்பதே இதில் கவனிக்கப்பட வேண்டியது. அதாவது நாடெங்கிலும் பனிரெண்டாம் வகுப்பு பயிலும் கோடிக்கணக்கான மாணவர்களுள், வெறும் பத்து இலட்சம் மாணவர்கள் மட்டுமே பயிலும் CBSE பாடத் திட்டத்தின்...

Read More

மதில்கள் – சொல்லில் தளைக்கும் மனிதநேயம்

  மதிலுகள் (குறுநாவல்) | 1965 | மலையாள மூலம் : வைக்கம் முகம்மது பஷிர் | தமிழில்: சுகுமாரன்     பெரியன சொல்லல் எத்துணை கடினமோ, போலவே எளியன சொல்லலும். வைக்கம் முகமது பஷிர், கேரள இலக்கியப்பரப்பில் மட்டுமல்ல, இந்திய இலக்கிய வரைபடத்திலேயே தவிர்க்க இயலாத ஆளுமை. தன் வாழ்நாளில் பெரும்பகுதி ஒரு கலகக்காரராகவே வாழ்ந்துவிட்ட பஷிரின் எழுத்துகள் இயக்கும் களமும், தளமும் வேறு மாதிரியாக இயக்குவது ஆச்சரியமே. அவர் ஒரு அற்புதமான கதை சொல்லி என இலக்கிய வட்ட நண்பர்கள் பலர் சொல்லி கேட்டதுண்டு. இருப்பினும் சுயானுபவமாக பஷீரை வாசித்தது ‘மதில்கள்’ மூலமாகத் தான். அசாதாரணமான ஒரு கதைசொல்லியின் விரல்வழி மொக்கவிழும் எழுத்துக்கள் ஒரு புனைவுப் பிரபஞ்சத்தை வெகு இயல்பாக சித்தரித்துச் செல்கின்றது. வரையப்பட்ட சித்திரத்திற்குள் வரைந்தவனும் இருக்கிறான்.     பஷிர், எழுத்தாளர் பஷிராகவே வருகின்றார் நாவலுக்குள்ளும். பல முறை சிறைக்கு வெவ்வேறு காரணங்களுக்காக வந்திருந்த போதிலும் இம்முறை அவர் சிறை நுழைவது ராஜதுரோக குற்றத்திற்காக. அரசியல் கைதியாக வந்த அந்த முதல் நாளின் மாலைப் பொழுதில் இருந்தே பஷிர் சகல வசதிகளுடன் தான் வாழ்கிறார். சிறை வாழ்க்கை குறித்து எந்த புகாரும் அவரிடத்தில் இல்லை. பெண்ணின் அருகாமை இல்லையெனும் குறை தவிர அவருக்கு வேறொன்றும் குறையில்லை. புகர்களே இன்றி செல்கிறது அவரது சிறைவாசம். அதிகாரிகளின் கரிசனமும், சக கைதிகளின் நட்புறவும் அவருக்கு சார்பாகவே இருக்கின்றன. அவருக்கு எதிரானதென்று எதுவுமில்லை. பஷிருக்கு சிறையில் தங்கள் பகுதிக்கு அப்பால் இருக்கும் பெண்களுக்கான சிறை வளாகம் மிகுந்த வசீகரமான இடமாகிப் போகிறது. அங்கிருந்து வருகின்ற ஏதாவதொரு குரலுக்காகவும், எங்கோ அலையும் காற்று இழுத்து வருகின்ற பெண்ணின் வாசனைக்காவும் அவர் ஏங்கிக் கிடக்கிறார். இருப்பினும் அது பெரிய தேடலை அவருக்குள் விதைக்கவில்லை. ஆனால் திடீரென ஒரு நாள் அவருடன் இருந்த பிற அரசியல் கைதிகள் (பதினேழு பேர்) விடுதலையாகி இவர் மட்டும் தனித்து விடப்படுகிறார். தான் மட்டும் நிற்கதியாய் விடப்பட்டது இவருக்கு பய உணர்வையே தோற்றுவிக்கிறது. சிறையில் இருந்து தப்பிக்கக் கூட மனதிற்குள் திட்டம் தீட்டுகிறார். தனிமை இம்சிக்கிறது. ஏறத்தாழ தன் கதை சொல்லல் பாணியில் செல்லும் மென்மையான பகடி நிரம்பிய மொழிநடை, மதிலுக்கு...

Read More

கூட்டுக் குடும்ப வாழ்வியல் – பாதகங்கள்

  கூட்டுக் குடும்ப வாழ்வியல் என்பது பல சாதகங்களைக் கொண்டுள்ளது எனும் போதிலும், அவ்வமைப்பிலும் சில அடிப்படையான நெருடல்கள் இருக்கவே செய்கின்றன. அவற்றுள் இரு முக்கியமான அம்சங்களை மட்டும் இக்கட்டுரையில் அவதானிப்போம். மனித இனம் வெவ்வேறு காலகட்டங்களில் பற்பல மாற்றங்களைக் கண்டுள்ளது. பலநெடுங்காலம் கழிந்து மிக மிக சமீபமாகத்தான் பாலின சமத்துவத்தினைப் பற்றி அதிகமாக பேசப்படக் கூடிய சூழல் உருவாகி இருக்கிறது. தமிழ் சூழலைப் பொருத்தவரை நாம் நிச்சயமாக பெண் விடுதலை கருத்தியலை அரசியல் தளத்தில் வைத்து பேசிய பெரியாரை இவ்விடத்தில் நிச்சயம் நினைவு கூர்ந்தே ஆக வேண்டும். இவ்விசயத்தில் அவரது பங்களிப்பு அளப்பரியது. பல காலமாக பெண் தனது வீட்டிற்குள்ளேயே சம உரிமையற்று ஆணின் தேவைகளையும், அவனைத் தாண்டி தனது குடும்பத்தவரது தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கான ஒரு இயந்திரமாக மட்டுமே பாவிக்கப்பட்டாள். அவளது வாழ்நாள் இலட்சியமாக இதுவே திணிக்கப்பட்டது. கூட்டுக் குடும்பத்தில் ஒரு பெண்ணிற்கான இடம் என்னவாக இருந்தது என்பதை நாம் நிச்சயம் கவனத்தில் கொள்ள வேண்டும். குடும்ப அமைப்பில், அது கூட்டுக் குடும்பமோ அல்லது தனிக்குடும்பமோ, பெண்ணின் தலையாய கடமைகளுள் ஒன்றாக சுட்டப்படுவது குடும்பத்தினரின் பசியாற்றுவது. சமையல் என்பது இல்லத்தரிசியின் முதன்மையான பொறுப்புகளுள் ஒன்றாக இருந்து வருகின்றது. அதே வேளையில் ஆணுக்கு பொருளீட்டல் பொறுப்பு தரப்பட்டது. உத்தியோகம் புருஷ இலட்சணம் போன்ற சொலவடைகள் இவற்றை உறுதி செய்கின்றன.     கூட்டுக் குடும்ப வாழ்வியலில், குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகம் என்ற காரணத்தினால், இயல்பாகவே ஒரு பெண் அதிக நேரத்தை சமையலறையில் செலவிட நேர்கிறது. இது அப்பெண்ணிற்கான தனிப்பட்ட நேரத்தினை வெகுவாக திருடி விடுகிறது. அவள் ஒரு வேளை பல்வேறு தனித்திறமை உடையவளாக இருக்கலாம். ஆனால் அதையெல்லாம் வளர்த்திடுக்கவும், அதற்கென நேரம் செலவிடவும் வாய்ப்பற்றுப் போகிறது. ஒரு பல்துறை திறமை பெற்ற ஒரு பெண், அடுத்த வேளைக்கு என்ன உணவு தயாரிப்பது என்ற சிந்தனையிலும், அதற்கான முன் தயாரிப்புகளிலுமே நேரம் செலவிட்டுக் கொண்டிருக்க நிர்பந்திக்கப் படுகிறாள். இதுவே அவளது நேரம் வாழ்வின் பெரும்பகுதியை விழுங்கி விடுகிறது. நாளடைவில் அவளது பிர திறமைகள் மழுங்கடிக்கப்பட்டு, சிந்தனை ஓட்டமும் மட்டுப்படுகிறது. ஆண்கள் பெண்கள் கட்டுப்பெட்டித்தனமானவர்கள் என்று குறைபட்டுக் கொள்வது வாடிக்கை. ஆனால் அப்படி ஒரு சூழலை...

Read More

கிறிஸ்டி பிரவுனின் கதை

My Left Foot | 1989 | Dir: Jim Sheridan | 103 min   1932 ஆம் ஆண்டு ஐயர்லாந்தில், டூப்ளின் பிறந்த கிறிஸ்டி பிரவுன், பிறப்பிலேயே செரிப்ரல் பால்சி எனும் உடல் இயக்கம் தொடர்பான ஒருவித நிரந்தரமான குறைப்பாட்டோடு இருந்தார். ஏனைய குழந்தைகள் போல எதையுமே செய்ய முடியாத நிலைமை. அவரது குடும்பமோ மிக மிக சாதாரணமானது. அப்படிப்பட்ட சூழலில் தனது தாயின் தளராத ஊக்கத்தினை மட்டுமே தனது ஒரே ஊன்றுகோலாகக் கொண்டு சாதனையாளராக எழுந்த கதையே இப்படத்தின் வாயிலாக திரைவடிவம் பெற்றுள்ளது. தனது உடலில் இடது காலை மட்டுமே இயல்பாக இயக்கும் ஆற்றல் பெற்ற கிறிஸ்டி பின் நாட்களில் ஒரு ஓவியராகவும், கவிஞராகவும், தனது சுயசரிதையை எழுதியதன் வாயிலாக ஒரு எழுத்தாளராகவும் பரிணமித்தார். அவரது இருபத்தியிரண்டாவது வயதில், 1954 ஆம் ஆண்டு, வெளியான அவரது சுயசரிதையே My Left Foot. அப்புத்தகத்தை தழுவியே ஜிம் ஷெரிடன் இப்படத்தை இயக்கினார். கிறிஸ்டி பிரவுன் எனும் அசாத்தியமான தன்னம்பிக்கை தளும்பும் மனிதனின் வாழ்க்கைக் கதையை இப்படம் எடுத்துச் சொல்கிறது. இயற்கையே அவனது வஞ்சிப்பது போல பிறப்பிலேயே கிறிஸ்டியின் நோய் அவனை முடக்கிப் போடுகிறது. பிரவுன் குடும்பம் அப்படி ஒன்றும் சொல்லிக் கொள்கிற அளவிற்கு பெரிய அளவில் இல்லை. மிக சாதரணமான ஒரு ஐரிஷ்காரராக அவரது தகப்பனர் இருக்க, பல உடன் பிறப்புகளுடன் மிக சாதாரண வாழ்க்கையே அவருக்கு வாய்த்தது. அவரது தாயார் பிரிச்ஜட் பிரவுன் தான் உண்மையில் அந்த குடும்பத்தை தாங்கிய ஒரே தூண். தனது அசாத்தியமான தன்னம்பிக்கையே நிச்சயமாக கிறிஸ்டி அவரது தாயாரிடம் இருந்து தான் பெற்றிருக்க வேண்டும். பள்ளிக்குச் செல்லாமல் வீட்டினுள் முடங்கிக் கிடந்த கிறிஸ்டி தானே முயன்று கற்கிறார். உடன் பிறப்புகளும், சுற்றத்தவரும் அவரை ஒதுக்காமலும், ஏளனம் செய்யாமலும் அரவணைத்துக் கொண்டது மட்டுமே அவரது வாழ்வின் மிகப் பெரிய ஆறுதலாக இருந்தது. நோய் தன்னை முடக்கினாலும், தனது தளராத தன்னம்பிக்கையால் அவர் ஒரு இயல்பான மனிதன் வாழும் வாழ்க்கையையே வாழ முற்படுகிறார். எச்சூழலிலும் பிறரிடம் இருந்து இரக்கத்தை கிறிஸ்டி வேண்டுவதே இல்லை. பதின் வயதைக் கடக்கும் கிறிஸ்டி, அவ்வயதிற்கே உரிய கனவுகள் நிரம்பி இருக்கிறார். அவரது முதல் காதல்...

Read More

கூட்டுக் குடும்ப வாழ்வியல் – சாதகங்கள்

ஏறத்தாழ முப்பது முதல் நாற்பதாண்டுகளுக்கு முன்னர் நம்மிடையே குடும்ப அமைப்பு என்பதே கூட்டுக் குடும்ப அமைப்பாகவே இருந்தது. நவீனங்களும், வசதி வாய்ப்புகளும் நகர்புறங்களில் மட்டுமே இருப்பதாக நினைத்து பலரும் தமது பிரந்த மண்ணை விட்டு வெளியூர்களுக்கு பயணப்பட ஆரம்பித்தது முதல் கொஞ்சம் கொஞ்சமாக கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறை தேயத் தொடங்கியது. இன்று, ஒரு வகையில் சொல்லப் போனால், தனிக் குடும்பம் என்ற சொல்லே கேட்ட மாத்திரத்தில் நமக்கு விநோதமானதாக தோன்றிகிறது. ஏனெனில் குடும்பம் என்பதே தனிக்குடும்பங்களாய் போன ஒரு சமூகத்தில், அப்படி ஒரு சொல்லாடல் வித்தியாசமாய்த் தோன்றுவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. தனிக்குடும்பங்களின் அனுகூலங்கள் என நாம் பலவற்றை பட்டியலிட்டு நம்மைத் தேற்றிக் கொண்டாலும், உள்ளூற மனதிற்குள் நாம் இழந்தவை அதிகம் என்பதை நாமே அறிவோம். பொருளீட்டல் என்ற ஒற்றை நோக்கமே நம்மை நமது பிறந்த மண்ணில் இருந்து வெளியேறக் காரணமென்பதைச் சொல்லவும் தேவையில்லை. ஆனால் அதற்காக நாம் இழந்தவை நாம் செய்து கொண்டுள்ள சமரசங்கள் ஏராளம். இழந்தவை எண்ணற்றவை. கூட்டுக் குடும்ப வாழ்வு சிதைந்ததன் விழைவாக நாம் இழந்ததில் பெரிதென நான் கருதுவது, மூத்தோர் பகிரும், அவர்தம் அனுபவம் வழி கைக்கொண்ட, ஆலோசனைகள். உடல் நலன் சார்ந்த மருத்துவக் குறிப்புகள் ஆகட்டும், பாரம்பரிய உணவு தயாரிப்பு முறைகள் ஆகட்டும், வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைத் தீர்க்க அவர்கள் வழங்கிடும் அனுபவமிக்க வழிக்காட்டுதலாகட்டும்… எல்லாமே நாம் நமது அன்றாடங்களை அவ்வப்போது வருகிற சிறு ஏற்ற இறக்கங்கள் தான். அவற்றை மன அழுத்தங்களின்றி எதிர்கொள்ள ஒரு உற்ற துணையாக அவர்களது ஆலோசனைகள் இருந்தது என்பதை நாம் மறுக்கவியலாது. இருப்பதைப் பேணுவதைக் காட்டிலும் சவாலானது, புதியதாய் ஒன்றை உருவாக்குவது. நல்ல மாணக்கர்கள்/ குடிமக்கள் வேண்டுமானால் கல்விக் கூடங்களில் உருவாகலாம். ஆனால் நல்ல மனிதர்கள் உருவாவதற்கான முதல் விதை நிச்சயம் குடும்பத்திற்குள் தான் தூவப் படுகிறது. பணி நிமித்தமாக மணமான சில நாட்களிலேயே தனித்து அயலூருக்கு வருகின்ற ஒரு இளம் தம்பதிகள் மகிழ்ந்து குலாவிட வழிகள் பலவுண்டு, இடர்கள் ஏதுமில்லை. இருந்த போதிலும், அப்பெண் கருத்தாங்கும் போது, அவளுக்குள் நிகழும் உடலியல் மற்றும் உளவியல் மாற்றங்களைக் கண்டு மலைக்கையில் நிச்சயம் ஒரு அனுபவமிக்க முதிய கரத்தை அவள் இயல்பாகவே...

Read More

Count per Day

  • 123213Total reads:
  • 28Reads today:
  • 65Reads yesterday:
  • 521Reads last week:
  • 1603Reads per month:
  • 90168Total visitors:
  • 27Visitors today:
  • 55Visitors yesterday:
  • 58Visitors per day:
  • 0Visitors currently online: