Conversation

Phone Conversation

Uraiyaadal – Iru Nanbarhalukku idaiyilaana Tholaipesi urayadal
உரையாடல் – இரு நண்பர்களுக்கு இடையிலான தொலைபேசி உரையாடல்

Phone Conversation between two friends

Malini: Hello Geetha! How are you?
Malini: Hello Geetha! Eppadi irukkae?
மாலினி: ஹலோ கீதா! எப்படி இருக்கே?

 

Geetha: I am fine Malini! How are you.
Geetha: Naan nallaa irukkaen Malini. Nee nallaa irukkiya?
கீதா: நான் நல்லா இருக்கேன் மாலினி. நீ நல்லா இருக்கியா.

 

Malini: I am fine Geetha. But, our friend Kevin is not feeling well?
Malini: Naan nallaa irukkaen Geetha. Aanaa namma friend Kevin-kkuthaan udambu sariyilla?
மாலினி: நான் நல்லா இருக்கேன் கீதா. ஆனா, நம்ம ஃப்ரெண்ட் கெவின்-க்குதான் உடம்பு சரியில்ல?

 

Geetha: What happened to him?
Geetha: Avanukku enna aachu.
கீதா: அவனுக்கு என்ன ஆச்சு.

 

Malini: He was having severe fever and admitted in the hospital.
Malini: Avanukku payangara kaaychal. Avan Hospital la admit aagi irukkaan.
மாலினி: அவனுக்கு பயங்கர காய்ச்சல். அவன் ஆஸ்பத்திரியில (மருத்துவமனை) அட்மிட் (அனுமதி) ஆகி இருக்கான்.

 

Geetha: Oh, I do not know that. How is he now? Did you see him?
Geetha: Oh, enakku theriyaathae. Ippa avan eppadi irukkaan? Nee avana paarththiyaa?
கீதா:  ஓ எனக்குத் தெரியாதே. இப்ப அவன் எப்படி இருக்கான்? நீ அவன பார்த்தியா?

 

Malini: No, I could not see him. But, I talked to him over phone?
Malini: Illa avana paakka mudiyala. Aaanaa avankitta phone (tholaipaesi azhaippu) panni paesinaen?
மாலினி: இல்ல அவன பார்க்க முடியல. ஆனா அவன்கிட்ட ஃபோன் (தொலைபேசி
அழைப்பு) பண்ணி பேசினேன்?

 

Geetha: Did he return from the hospital?
Geetha: Avan hospital la irunthu vandhuttaanaa?
கீதா: அவன் ஆஸ்பத்திரியில இருந்து வந்துட்டானா?

 

Malini:  Yes, yesterday only he returned home from the hospital.
Malini:  Aamaa, naeththu dhaan hospital-la (aaspaththiri) irundhu veettukku vandhurukkaan.
மாலினி: ஆமா, நேத்துதான் ஹாஸ்பிட்டல்ல (ஆஸ்பத்திரி) இருந்து வீட்டுக்கு வந்துருக்கான்.

 

Geetha: Can we go and see him?
Geetha: Naama poy avana paaththuttu varalaamaa?
கீதா:  நாம போய் அவன பாத்துட்டு வரலாமா?

 

Malini: Sure, that’s why I called you.
Malini: Nichayama. Adhukku dhaan naan call (azhaippu) pannunaen.
மாலினி: நிச்சயமா. அதுக்குதான் நான் கால் (அழைப்பு) பண்ணுனேன்.

 

Geetha: Good Malini, we will go and see him. Did he say anything?
Geetha: Nallathu Malini. Naama poy avana paakkalaam. Avan vera ethachum sonnaanaa?
கீதா: நல்லது மாலினி. நாம போய் அவன பாக்கலாம். அவன் வேற எதாச்சும் சொன்னானா?

 

Malini: He said he is okay now. But, he feels little very tired.
Malini: Ippo health (aarokkiyam) paravaa illayaam but (aanaa) konjam tired-aa (soarvu)irukku-nnu sonnaan.
மாலினி: இப்போ ஹெல்த் (ஆரோக்கியம்) பரவாயில்லன்னு சொன்னான். பட் (ஆனா) கொஞ்சம் டயர்டா (சோர்வு) இருக்குன்னு சொன்னான்.

 

Geetha: It is nice to hear that he is fine. When will we go to see him?
Geetha: Avan sugama irukkan nu kekkirathu nalla irukku. Naama eppa avana paakka poagalaam?
கீதா: அவன் சுகமா இருக்கானு கேக்கிறது நல்லா இருக்கு. நாம எப்ப அவன பாக்க போகலாம்?

 

 

Malini: I have music class in the morning 9 to 10. Shall we go after that.
Malini: Naalai-kku morning (kaalai) 9-10 manikku enakku music class (isai vaguppu) irukku. Adhu mudinja udaney namma polaamaa.
மாலினி: நாளைக்கு மார்னிங் (காலை) 9-10 மணிக்கு எனக்கு ம்யூசிக் கிளாஸ் (இசை வகுப்பு) இருக்கு. அது முடிஞ்ச உடனே நாம போலாமா.

 

Geetha: Ok, we will go after your music class?
Geetha: OK (sari), un music class mudinja udanae naama poagalaam?
கீதா: ஓகே  உன் ம்யூசிக் கிளாஸ் (இசை வகுப்பு) முடிஞ்ச உடனே நாம போகலாம்?

 

Malini: Shall we buy something for him when we go?
Malini: Avana paakka pogumbodhu yaedhaachum vaangittu pogalaamaa?
மாலினி: அவன பாக்க போகும்போது ஏதாச்சும் வாங்கீட்டு போகலாமா?

 

Geetha: Definitely, we should buy something for him.
Geetha: Nichayama avanukku ethachum vaangittu poaganum.
கீதா: நிச்சயமா, அவனுக்கு எதாச்சும் வாங்கிட்டு போகணும்.

 

Malini: What shall we buy, Geetha.
Malini: Enna vaangalaam, Geetha.
மாலினி: என்ன வாங்கலாம், கீதா.

 

Geetha: Shall we buy some fruits?
Geetha: Naamma fruits (pazhangal) vaangittu pogalaamaa?
கீதா: நாம ப்ரூட்ஸ் (பழங்கள்) வாங்கீட்டு போகலாமா?

 

Malini: Okay, it is a good idea. We will buy apple for him.
Malini: Sari, adhu nalla idea (yosanai). Naama avanukku aapple vaangittu poagalaam.
மாலினி:சரி, அது நல்ல ஐடியா (யோசனை). நாம அவனுக்கு ஆப்பிள் வாங்கிட்டு போகலாம்.

 

Geetha: Nallathu Malini, Naamma naalai-kku meet pannalaaam.
Geetha:Nallathu Malini, Naamma naalai-kku meet pannalaaam.
கீதா: நல்லது மாலினி,  நாம நாளைக்கு மீட் பண்ணலாம்.

 

Malini: Okay Geetha. See you tomorrow. Bye.
Malini: Okay Geetha.Naaalakki paakkalaam. Bye.
மாலினி : ஓகே கீதா. நாளைக்கி பாக்கலாம். பை.

 

Geetha: Bye Malini.
Geetha: Bye Malini.
கீதா: பை மாலினி..
 
[ninja_tables id="239051"]

Conversation

32 Conversations in colloquial Tamil and English

Book a demo with Us

    × Want to join our classes?