Conversation
Buying a shirt
Conversation between David and Virpanaiyaalar
CONVERSATION 24
Buying a shirt
Conversation between David and Virpanaiyaalar
Virpanaiyaalar: Good evening (maalai vanakkam) Sir.
Salesman: Good evening sir.
விற்பனையாளர்: குட் ஈவினிங் (மாலை வணக்கம்) சார்.
David: Good evening.
David: Good evening.
டேவிட்: குட் ஈவினிங்.
Virpanaiyaalar: Ungalukku enna vaenum Sir?
Salesman: What do you want sir?
விற்பனையாளர்: உங்களுக்கு என்ன வேணும் சார்?
David: Enakku formal shirt vaenum.
David: I need formal shirts.
டேவிட்: எனக்கு ஃபார்மல் ஷர்ட் வேணும்.
Virpanaiyaalar: Irukku, en kooda vaanga. Enna function (nigazhchchi) Sir?
Salesman: You come with me, I shall show you. What is the function sir?
விற்பனையாளர்: இருக்கு, என் கூட வாங்க. என்ன ஃபங்சன் (நிகழ்ச்சி) சார்?
David: Enakku naalai-kku interview (naer kaanal) irukku. Adhukku dhaan pudhu sattai edukka vandhu irukkaen.
David: I have an interview tomorrow. That’s why I came to buy a new shirt.
டேவிட்: எனக்கு நாளைக்கு இண்டர்வியூ (நேர் காணல்) இருக்கு. அதுக்கு தான் புது
சட்டை எடுக்க வந்துருக்கேன்.
Virpanaiyaalar: Appadiya! Interview-kku poagavaa! Adhukku ungalukku light color-la koadu potta sattai romba nallaa irukkum.
Salesman: Oh! For Interview! For that, light colored striped shirt will look good for you.
விற்பனையாளர்: அப்படியா! இண்டர்வியூக்கு போகவா! அதுக்கு உங்களுக்கு லைட் கலர்ல கோடு போட்ட சட்டை ரொம்ப நல்லா இருக்கும்.
David: Sari, kaattunga.
David: Ok, show it.
டேவிட்: சரி காட்டுங்க.
Virpanaiyaalar: Unga size (alavu) enna Sir.
Salesman: What is your size, sir?
விற்பனையாளர்: உங்க சைஸ் (அளவு) என்ன சார்?
David: Size 38. Adhula slim fit irundhaa kaattunga.
David: Size is 38. Show me the slim fit model if available.
டேவிட்: சைஸ் 38. அதுல ஸ்லிம் பிட் இருந்தா காட்டுங்க.
Virpanaiyaalar: Ungalukku pidichcha color enna?
Salesman: What color you like?
விற்பனையாளர்: உங்களுக்கு பிடிச்ச கலர் என்ன?
David: Enakku pidichchadhu white (vellai) color-la blue line (neela koadu) irukkaannu paarunga.
David: I like white colored blue striped shirt, see if it is there.
டேவிட்: எனக்கு பிடிச்சது ஒயிட் (வெள்ளை) கலர்ல ப்ளூ லைன்(நீல
கோடு)இருக்கான்னு பாருங்க.
Virpanaiyaalar: Indha sattai-ya paarunga, idhu ungalukku pidikkumnu ninaikkuraen.
Salesman: See this shirt, I think you will like this shirt.
விற்பனையாளர்: இந்த சட்டைய பாருங்க, இது உங்களுக்கு பிடிக்கும்னு நினைக்குறேன்.
David: Idhu nallaa dhaan irukku. 100% cotton-la (paruththi) idhae design irukkaannu paarunga.
David: It’s good. Look for the same design with 100% cotton.
டேவிட்: இது நல்லாதான் இருக்கு. 100% காட்டன்ல (பருத்தி) இதே டிசைன்
இருக்கான்னு பாருங்க.
Virpanaiyaalar: Idha paarunga Sir.
Salesman: See this sir.
விற்பனையாளர்: இத பாருங்க சார்.
David: Indha sattai enakku romba pidichchu irukku. Idhae 100% cotton-la vaera koadu poatta model irukkaa?
David: I like this shirt very much. Is any other striped shirt available with 100%
cotton?
டேவிட்: இந்த சட்டை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. இதே 100% காட்டன்ல வேற
கோடு போட்ட மாடல் இருக்கா?
Virpanaiyaalar: Anju model irukku Sir.
Salesman: Five models are there.
விற்பனையாளர்: அஞ்சு மாடல் இருக்கு சார்.
David: Adhayum kaattunga.
David: Show me those shirts also.
டேவிட்: அதையும் காட்டுங்க.
Virpanaiyaalar: Idhula ungalukku endha sattai pidichchu irukku?
Salesman: Among this, which one do you like?
விற்பனையாளர்: இதுல உங்களுக்கு எந்த சட்டை பிடிச்சிருக்கு?
David: Modhalla kaattuna sattayae eduththukkuraen, Vilai evvalavu?
David: I will select the shirt which was shown first. What is the price?
டேவிட்: முதல்ல காட்டுன சட்டையே எடுத்துக்குறேன். விலை எவ்வளவு?
Virpanaiyaalar: Aayiraththi ennooru ruvaa sir.
Salesman: Rs.1800.
விற்பனையாளர்: ஆயிரத்தி எண்ணூறு ருவா சார்.
David: Vilai adhigamaa irukku. Korachchu kuduppeenga-la?
David: Price is high. Will you reduce the price?
டேவிட்: விலை அதிகமா இருக்கு. குறைச்சு குடுப்பீங்களா?
Virpanaiyaalar: Neenga engaloada regular customer (vazhakkamaana vaadikkaiyaalar). adhunaala ungalukku 20% discount (thallupadi) kudukkuroam. Final-aa (irudhi) aayiraththi naanooththi naappadhu ruvaa varum.
Salesman: You are our regular customer. So, we give you 20% discount. Finally, the
price is Rs.1440.
விற்பனையாளர்: நீங்க எங்களோட ரெகுலர் கஸ்டமர் (வழக்கமான வாடிக்கையாளர்). அதுனால உங்களுக்கு 20% டிஸ்கௌண்ட் (தள்ளுபடி) குடுக்குறோம். ஃபைனலா (இறுதி) ஆயிரத்தி நானூத்தி நாப்பது ருவா வரும்.
David: Sari, bill (raseedhu) poadunga. Naan card-la pay pannuraen.
David: Okay. Prepare the bill. I will pay through card.
டேவிட்: சரி, பில் (ரசீது) போடுங்க. நான் கார்ட்ல பே பண்ணுறேன்.
Virpanaiyaalar: Indhaanga Sir, unga bill-um, card-um. Delivery counter-la unga shirt-a vaangikkonga.
Salesman: Sir, this is your bill and card. You can get the shirt in the delivery counter.
விற்பனையாளர்: இந்தாங்க சார், உங்க பில்லும், கார்டும். டெலிவரி கவுண்ட்டர்ல உங்க சட்டை வாங்கிக்கோங்க.
David: Sari. Thank you.
David: Okay. Thank you.
டேவிட்: சரி. தேங்க் யு.
