2     4     6     8   9   10  11  12   13   14   15   16   17   18   19   20   21   22   23   24   25   26   27   28   29  30  31  32

 

CONVERSATION 27 – In the House

Uraiyaadal 27  – Veettil
உரையாடல் 27 – வீட்டில்

 

 

 

Conversation between David and his Mother

David-kkum avanudaiya ammaa-kkum nadaiperum uraiyaadal

டேவிட்க்கும் அவனுடைய அம்மாக்கும் நடைபெறும் உரையாடல்

 

SPOKEN TAMIL

 

David:Mummy! Mammy!!
David:  Ammaa! Ammaa!!
டேவிட்:அம்மா! அம்மா!!

 

Mother:What David?
Ammaa:Enna David.
அம்மா: என்ன டேவிட்?

 

David: Today evening I am going to a birthday function with my friends.
David:Innaikku evening (saayandhiram)naanga en friends (nanbargal) kooda saerndhu oru birthday (pirandhanaal) function-kku (nigazhchchi) poroam.
டேவிட்: இன்னைக்கு ஈவினிங் (சாயந்திரம்) என் ஃபிரண்ட்ஸ் (நண்பர்கள்) கூட சேர்ந்து ஒரு பர்த்டே (பிறந்த நாள்) ஃபங்சனுக்கு (நிகழ்ச்சி) போறேன்.

 

Mother:Whose birthday?
Ammaa:Yaaroada birthday?
அம்மா:யாரோட பர்த்டே?

 

David:To Vinith mummy.
David:Vinith-kku Ammaa.
டேவிட்:வினித்துக்கு அம்மா.

 

Mother: At what time is the function?
Ammaa:Function eththana manikku?
அம்மா:ஃபங்சன் எத்தன மணிக்கு?

 

David:6’O clock mummy.
David:Aaru manikkumaa.
டேவிட்:ஆறு மணிக்குமா.

 

Mother:Where will the function take place?
Ammaa:Function enga vachchi nadakka pogudhu?
அம்மா:ஃபங்சன் எங்க வச்சி நடக்க போகுது?

 

David:At his home.
David:Avan veetladhaan.
டேவிட்: அவன் வீட்ல தான்.

 

Mother:Who are all going?
Ammaa:Yaarellaam poreenga?
அம்மா:யாரெல்லாம் போறீங்க?

 

David:Myself, Vimal, Daniel, Anand, Deebu five of us go.
David:Naan, Vimal, Daniel, Anu, Deebu anju paerum poroam.
டேவிட்:நான், விமல், டேனியல், அனு, தீபு அஞ்சு பேரும் போறோம்.

 

Mother:What gift you are going to buy for him?
Ammaa:Avanukku enna gift (parisu) vaanga poreenga?
அம்மா:அவனுக்கு என்ன கிஃப்ட் (பரிசு) வாங்க போறீங்க?

 

David:Vinith likes parker pen very much. So, we are going to buy it for him.
David:Viniththu-kku parker pen-nunaa (paenaa) rumba pidikkum. Naanga adhayae vaanga poaroam.
டேவிட்:வினித்துக்கு பார்க்கர் பென்-னுன்னா (பேனா) ரொம்ப பிடிக்கும். நாங்க அதயே வாங்க போறோம்.

 

Mother:Good idea! It is useful.
Ammaa:Nalla yosanai! Useful-aa (ubayogam) irukkum.
அம்மா:நல்ல யோசனை! யூஸ்புல்லா (உபயோகம்) இருக்கும்.

 

David:Mummy! Can you please buy it for us?
David:Ammaa! Neengalae atha vaangi thareengalaa?
டேவிட்:அம்மா! நீங்களே அத வாங்கி தறீங்களா?

 

Mother:Sure, I will go and buy after you go to school?
Ammaa:Nee school-kku (pallikoodam) pona appuramaa poyi vaangeettu vaaraen.
அம்மா:நீ ஸ்கூலுக்கு (பள்ளிகூடம்) போன அப்புறமா போயி வாங்கீட்டு வாரேன்.

 

David:Ok mummy! Thank you.
David:Sarimmaa! Thank You (nanri).
டேவிட்:சரிம்மா! தேங்க் யு (நன்றி).

 

Mother:It’s time for the school. Get ready fast.
Ammaa:Naeramaachchu, school-kkukilambu.
அம்மா: நேரமாச்சு, ஸ்கூலுக்கு வேகமா கிளம்பு.

 

David:     Mummy! When you buy the pen buy it with ‘gift pack’.
David:  Ammaa! Pen vaangumbodhu ‘gift pack’ panni vaangunga.
டேவிட்:அம்மா! பென் வாங்கும்போது ‘கிஃப்ட் பேக்’பண்ணி வாங்குங்க.

 

Mother:Ok David.
Ammaa:Sari David.
அம்மா:சரி  டேவிட்.
× Have Questions?