2     4     6     8   9   10  11  12   13   14   15   16   17   18   19   20   21   22   23   24   25   26   27   28   29  30  31  32

 

CONVERSATION 4 – KAVIN’S LEAVE LETTER

con3

Uraiyaadal 4– Kavinin Viduppuk Kadidham
உரையாடல் 4 – கவினின் விடுப்புக் கடிதம்

 

Conversation between Kavin And Ajay

 

SPOKEN TAMIL

 

Kavin: Ajay! Ajay!!!
Kavin: Ajay! Ajay!!!
கவின்: அஜய்! அஜய்!!!

 

Ajay: Ennadaa Kavin?
Ajay: What’s wrong, Kavin?
அஜய்: என்னடா கவின்?

 

Kavin: Oru help (udhavi) vaenum. Ennoda leave letter-a (vidumura kadidham) teacher-kitta (aasiriyar) kudukka mudiyumaa?
Kavin: Do me a favor. Can you hand over my leave letter to our Teacher?
கவின்: ஒரு ஹெல்ப் (உதவி) வேணும். என்னோட லீவ் லெட்டர (விடுமுற கடிதம்) டீச்சர்-கிட்ட (ஆசிரியர்) குடுக்க முடியுமா?

 

Ajay: Yaendaa leave? Udambu sariyillaiyaa?
Ajay: Why are you taking leave? Are you not well?
அஜய்: ஏண்டா லீவ்? உடம்பு சரியில்லையா?

 

Kavin: Enakku illadaa, ammaa-kku. Naeththu raaththiri-la irundhu fever-aa (kaaichchalaa) irukku. Ammaa-va paaththaa paavamaa irukku.
Kavin: Not I, but Mom. She’s been running a fever since last night. She looks pitiful.
கவின்: எனக்கு இல்லடா, அம்மா–க்கு. நேத்து ராத்திரி-ல இருந்து ஃபீவரா (காய்ச்சல்) இருக்கு. அம்மா-வ பாத்தா பாவமா இருக்கு.

 

Ajay: Unga appaa illayaadaa ?
Ajay: Isn’t your dad around?
அஜய்: உங்க அப்பா இல்லயாடா?

 

Kavin: Appaa office (aluvalagam) vaelayaa veliyoor poyirukkaanga. Vara oru vaaramaagum.
Kavin: Dad has gone out of town on official duty. He will take one week to return.
கவின்: அப்பா ஆஃபிஸ் (அலுவலகம்) வேலயா வெளியூர் போயிருக்காங்க. வர ஒரு வாரமாகும்.

 

Ajay: Appo, nee dhaan ammaa-va gavanikkanum…
Ajay: Then you certainly need to take care of your mom..
அஜய்: அப்போ நீ தான் அம்மா-வ கவனிக்கனும்…

 

Kavin: Aamadaa. Ammaa-kku paththu mani-kku Doctor-kitta (maruththuvar) appointment (sandhikka kuriththa naeram) irukku. Naan palli-kku vandhuttaa avanga thaniyaa poganum. Adhanaala dhaan naan leave edukkuraen.
Kavin: Yes, I do. Mom has an appointment with the Doctor at 10 o’clock. If I come to school, she’ll have to go by herself. That’s why I’m taking leave.
கவின்: ஆமாடா. அம்மா-க்கு பத்து மணி-க்கு டாக்டர்-கிட்ட (மருத்துவர்) அப்பாய்ண்ட்மென்ட் (சந்திக்க குறித்த நேரம்) இருக்கு. நான் பள்ளி-க்கு வந்துட்டா அவங்க தனியா போகணும். அதனால தான் நான் லீவ் எடுக்கிறேன்.

 

Ajay: Hospital-kku (aaspaththiri) eppadi poveenga?
Ajay: How will you go to the Hospital?
அஜய்: ஹாஸ்பிடல்-க்கு (ஆஸ்பத்திரி) எப்படி போவீங்க?

 

Kavin: Call taxi-ya (vaadaga vandi) vara solli poga poroam. Saridaa naan kilamburaen. Saayandhiram vandhu homework (veettu paadam) ennaannu kaettukkuraen. Illannaa ammaa-oda WhatsApp-la irundhu message (seidhi) panraen.
Kavin: We’ll book a call-taxi. Alright, lemme say goodbye for now. In the evening, I’ll come over and check with you about our homework; or else I’ll message you from mom’s WhatsApp.
கவின்: கால் டாக்ஸி-ய (வாடக வண்டி) வர சொல்லி போக போறோம். சரிடா நான் கிளம்புறேன். சாயந்திரம் வந்து ஹோம்வொர்க் (வீட்டு பாடம்) என்னான்னு கேட்டுக்குறேன். இல்லன்னா அம்மா-ஓட வாட்ஸ்ஆப்-ல இருந்து மெசேஜ் (செய்தி) பண்றேன்.

 

Ajay: Saridaa. Saappaattukku enna seyya poreenga?
Ajay: Sure. What are you going to do for meals?
அஜய்: சரிடா. சாப்பாட்டுக்கு என்ன செய்ய போறீங்க?

 

Kavin: Paatti enga-kooda dhaan irukkaanga. Avanga samaippaanga.
Kavin: Grandma is staying with us. She’ll cook.
கவின்: பாட்டி எங்க-கூட தான் இருக்காங்க. அவங்க சமைப்பாங்க.

 

Ajay: Paaththeeyaa! Periyavanga namma kooda irukkuradhu evvalavu udhaviyaa irukku!
Ajay: See how helpful it is when elders stay with us!
அஜய்: பாத்தீயா! பெரியவங்க நம்ம-கூட இருக்குறது எவ்வளவு உதவியா இருக்கு.
 
 
Kavin: Aamaandaa!
Kavin: Very true.
கவின்: ஆமாண்டா!

 

Ajay: Paatti-a amma-kooda hospital-kku poga sollalaamla. Nee yaen leave edukkura?
Ajay: Instead of taking leave, can’t you ask your grandma to accompany mom to the hospital?
அஜய்: பாட்டி-ய அம்மா-கூட ஹாஸ்பிடல்-க்கு போக சொல்லலாம்லா. நீ ஏன் லீவ் எடுக்குற?

 

Kavin: Avanga vayasaanavanga, avangalaala alaiya mudiyaadhu. Sari, Teacher-kitta leave letter-a marakkaama kuduththuttu, kaaranaththayum solleeru. Ippo kilamburaen..
Kavin: She’s old; she cannot move about easily. Ok, don’t forget to hand over my leave letter
to our Teacher and explain the reason too. I’ll see you later.
கவின்: அவங்க வயசானவங்க, அவங்களாள அலைய முடியாது. சரி, டீச்சர்-கிட்ட லீவ் லெட்டர மறக்காம குடுத்துட்டு காரணத்தயும் சொல்லிறு. இப்போ கிளம்புறேன்.

 

Ajay: Saridaa. Poyittu vaa. Ammaa-va paaththukko.
Ajay: Sure. See you. Take care of mom.
அஜய்: சரிடா. போயிட்டு வா. அம்மா-வ பாத்துக்கோ
× Have Questions?