Tamil Proverbs – தூ



We are proud to present the biggest collection of Tamil proverbs.(தூ-வரிசை)
Here is the link for popular Proverbs : Popular Tamil Proverbs
 

3911 தூக்கணங்குரவி குரங்கிற்குப் புத்தி சொனனாற்போல்.
3912 தூக்கி நினைத்து நோக்கிப்பேசு.
3913 தூக்கி வளர்த்த பிள்ளையம் துடையில் வைத்துத் தைத்த இலையும் உருப்படாது.
3914 தூக்கி நிறுத்தடா பிணக்காடாய் வெட்டுகிறேன்.
3915 தூக்கி வினைசெய்.
3916 தூக்கு உண்டானால் நோக்கு உண்டு.
3917 தூங்காதவேனே நீங்காதவன்.
3918 தூங்காதவனுக்குச் சுகம் இல்லை.
3919 தூங்கினவனது கடாக்குட்டி, விழித்திருந்தவனது ஊட்டுக் குட்டி.
3920 தூங்கினவன் கன்று கடாக்கன்று.
3921 தூங்கினவன் சாகிறதில்லை, வீங்கினவன் பிழைக்கிறதில்லை.
3922 தூண்டிற்காரனுககுக் க்ண எங்கே மிதப்பில் அல்லவோ?
3923 தூமத் தீயைப் பார்க்கிலும் காமத் தீ கொடிது.
3924 தூர இருந்தால் சேர உறவு.
3925 தூரத்தப் பச்சை கண்ணுக்குக் குளிர்ச்சி.
3926 துரத்துப் பார்வைக்கு மலை மழமழப்பு, கிட்டப்போனால் கல்லும் கறடும்.
3927 தூரத்துத் தண்ணீர் ஆபத்துக்கு உதவாது.
3928 தூரப போகவேண்டுமோ கீரைப் பாத்தியிற் கை வைக்க?
3929 தூர்ந்த கிணற்றைத் துரவாக்காதே.
3930 தூறான குடி நீராகும்.
3931 தூற்றர் என்போர் சொல் எழுத்து உணரார்.
3932 தூற்றித் திரியேல்.
3933 தூற்றும் பெண்டீர் கூற்று எனத்தகும்

Tamil Proverbs – து



We are proud to present the biggest collection of Tamil proverbs.(து-வரிசை)
Here is the link for popular Proverbs : Popular Tamil Proverbs
 

3866 துக்கம் உள்ள மனதிற்குத் துன்பம் ஏன் வேறு?
3867 துஞ்சி நின்றான் மிஞ்சி உண்ணான்.
3868 துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு.
3869 துடுப்பு இருக்கக் கை வேவானேன்?
3870 துடைப்பக் கட்டைக்குப் பட்டுக்குஞ்சம் கட்டினதுபோல.
3871 துஷ்ட நிக்கிரகம் சிஷட பரிபாலனம்.
3872 துஷ்டப் பிள்ளைக்கு ஊரார் புத்தி சொல்வார்கள்.
3873 துட்டுக்கு ஒரு குட்டி விற்றாலும் துலக்கக்குட்டி மாத்திரம் ஆகாது.
3874 துணிகிறவளுக்கு வெட்கம் இல்லை, அழுகிறவளுக்குத் துக்கம் இல்லை.
3875 துணிந்தாருக்குத் துக்கம் உண்டா பணிந்தாருக்குப் பாடு உண்டா?
3876 துணிந்தவனுக்குத் துக்கம் இல்லை, அழுதவனுக்கு அகங்காரம் இல்லை.
3877 துணைப் போனாலும் பிணைபோகாதே.
3878 துணையோடல்லது வழிபோகாதே.
3879 துப்பாக்கி வயிற்றில் பீரங்கி பிறந்தது போல.
3880 தும்பர் அம்பலம்.
3881 துயரப்பட்டால் ஆறதல் உண்டு, துன்பப்பட்டால் தேறுதல் உண்டு.
3882 துரியோதனன் குடிக்குச் சகுனிபோல.
3883 துருக்க தெருவிலே திருவெம்பாவையா ஒதுகிறது?
3884 துரும்பும் கலத்தண்ணீர் தேக்கும்.
3885 துரம்பு நுழைய இடம் இருந்தால் ஆணையைக் கட்டுவான்.
3886 துரும்பு முற்றின கோபம் விசும்பு முட்டத்தீரும்.
3887 துரும்பு தூண் ஆனால் தூண் எவ்வளவு ஆகவேண்டும்?
3888 துரும்பைத் தூணாக்குகிறதா?
3889 துரை சித்தம் கன சித்தம்.
3890 துரொகத்தால் கொண்ட துதைதனம், குடிகளை வருத்தும் கொடுங்கோல.
3891 துரொபதையத் துகில் உரிந்தது போல.
3892 துர்ச்சனைகை கண்டால் தூர நில்.
3893 துலக்காத ஆயதம் துருப்பிடிக்கும்.
3894 துலாத்தில் வெள்ளி இருப்பதினால் உலாவிப் பெய்யும் மழை.
3895 துலக்க தெருவிலே தேவாரம் ஒதினது போல.
3896 துவிநாக்கு இடறும்.
3897 துழாவிக் காய்ச்சாதது கஞ்சியும் அல்ல, வினாவிக் கட்டாதது கல்யாணமும் அல்ல.
3898 துளசிக்கு வாசமும் முள்ளுக்குக் கூர்மையும் முளைக்கிறபோதே உண்டு.
3899 துள்ளாதே துள்ளாதே குள்ளா, பக்கத்திலே பள்ளம் அடா,
3900 துள்ளாதே துள்ளாதே ஆட்டுக்குட்டி என் கையில் இருக்கிறது சூரிக்கத்தி.
3901 துள்ளின மாடு பொதி சுமக்கும்.
3902 துள்ளித் துள்ளிக் குதித்தாலும் வெள்ளிப்பணமும் கிடையாக் காலத்தில் கிடையாது.
3903 துள்ளித் துள்ளித் தொப்பென்று விழுகிறாய்.
3904 துள்ளுமான்குட்டி துரவில் விழுந்தது.
3905 துறட்டுக்கு எட்டாதது கைக்கு எட்டுமா?
3906 துறவறம் இல்லறம் மனதிலே.
3907 துறவிக்கு வேந்தன் துரும்பு.
3908 துன்பம் தருகிற காக்கையினது சத்தத்தினால் அதை விரட்டுவார்கள், இன்பம் தருகின்ற குயிலை விரட்டார்கள்.
3909 துன்பத்திற்கு இடம் கொடேல்.
3910 துன்பம் முந்தி இன்பம் பிந்தி.

Tamil Proverbs – தீ



We are proud to present the biggest collection of Tamil proverbs.(தீ-வரிசை)
Here is the link for popular Proverbs : Popular Tamil Proverbs
 

3845 தீக் காய்ந்தாற்போல் இருக்கவேண்டும்.
3846 தீக்குக் காற்று உதவியானது போல.
3847 தீங்கரும்பனுக்கு மாங்குயிற் கிளவி.
3848 தீட்டின மரத்தில் கூர்பார்க்கிறதா?
3849 தீதுறும் பாவச் செய்கை அற்றவகை தேவன்.
3850 தீபத்தில் ஏற்றிய தீவட்டி.
3851 தீப்பட்ட வீட்டிலே கரிக்கட்டை பஞ்சமா?
3852 தீப்புண் ஆறும் வாய்ப்புண் ஆறாது.
3853 தீ மிஞ்ச வைத்தாலும் பகை மிஞ்ச வைக்கலாகாது.
3854 தீமையை மெச்சுகிறவன் தீமையாளிதான்.
3855 தீயாரைச் சேர்ந்து ஒழுகல் தீது, தீயார் பண் செய்வனவும் தீது.
3856 தீயோரை விடுதலை ஆக்குகிறவன் நல்லோருக்கு நஷ்டம் செய்வான்.
3857 தீரக் கற்றவன் தேசிகன் ஆவான்.
3858 தீராக் கோபம் பாடாய் முடியும்.
3859 தீராக் கோபம் போராய் முடியும்.
3860 தீராச் சந்தேகம் போருக்கு எத்தனம்.
3861 தீராச் செய்கை சீராகாது.
3862 தீராத நெஞ்சுக்குத் தெய்வமே சாட்சி.
3863 தீரா வழக்குக்குத் தெய்வமே சாட்சி.
3864 தீரா வழக்கு நேராகாது.
3865 தீவினை செய்யில் பேய்வினை செய்யும்.

Tamil Proverbs – தி



We are proud to present the biggest collection of Tamil proverbs.(தி-வரிசை)
Here is the link for popular Proverbs : Popular Tamil Proverbs
 

3789 திகம்பர சந்நியாசிக்கு வண்ணான் உறவு ஏன்?
3790 திகைப்பூடு மிதித்தவன் போல் அலைகிறான்.
3791 திக்கு அற்றவனுக்குத் தெய்வம் துணை.
3792 திக்கு விஜயம் கொள்பவனுக்கு ஜெயம் அபஜெயகாலம் தெரியாது.
3793 திங்களும் சனியும் தெற்கே நோக்க வேண்டும்.
3794 திடமனப்படு தீம்பர்க்கருகில்.
3795 திண்ணைக்குத் தேள் கொட்டிற்று தண்ணீர் மிடாவுக்கு நெறி கட்டிற்று என்றாற்போல.
3796 திண்ணைக்கு விடிந்தால் வீட்டுக்கும் விடியம்.
3797 திரவியத்தில் அழுத்தமானவன் செத்தாலும் கொடான்.
3798 திரள் எலி வளை எடாது.
3799 திரித்தவரையிற் கயிறு திரியாதவரையிற் பழுதை.
3800 திரி மூர்த்திகளும் தேவரும் காணார்.
3801 திரு உண்டானால் திறமை உண்டாகும்.
3802 திருகாணிக்கு வலுவும் பழஞ்சாணிக்குப் புழுவும் உண்டு.
3803 திருக் கண்ட கணணுக்குத் தீங்கும் காணலாயிற்றே .
3804 திருக் கண்ட கணணுக்குத் தீங்கு இல்லை.
3805 திருக்காவணப் பந்தலுக்கு நிழல் உதவி வேண்டுமா?
3806 திருடனைத் தேள் கொட்டினதுபோல.
3807 திருடன் பெண்சாதி என்றைக்கும் கைம்பெண்சாதி.
3808 திருடனுக்குத் தெய்வமே சாட்சி.
3809 திருட்டுப் பயலுக்குத் திரட்டுப்பாலும் சோறும் விசுவாசக்காரனுக்கு வெந்நீரும் பருக்கையும்.
3810 திருட்டு நாய்க்குச் சலங்கை கட்டினாற் போல.
3811 திருட்டுப் பயல் கல்யாணத்தில் முடிச்சு அவிழ்க்கிற பயல் பெரியதனம்.
3812 திருட்டுப் பூனைக்குப் போடு திரட்டுப் பாலும் சோறும்.
3813 திருத்தி இல்லாத எசமான் வீண்.
3814 திருநாளும் முடிந்தது எடுபிடியும் கழிந்தது.
3815 திருநாளுக்கு போகிறையோ தின்னுதலுக்குப் போகிறையோ?
3816 திருநீற்றிலே ஒட்டாது கழற்சிக்காய்.
3817 திருந்த ஒதத் திரு உண்டாமே.
3818 திருப்பதிக்குப் போனாலும் துடைப்பம் ஒரு காசு.
3819 திருப்பதியில் மொட்டை அடித்ததும் பற்றாதா, ஸ்ரீரங்கத்தில் சிரிப்பாய்ச் சிரித்ததும் பற்றாதா?
3820 திருப்பதியில் மொட்டைத் தாதனைக் கண்டாயா?
3821 திருவன் கண்ட பச்சையாய்ப் போயிற்று.
3822 திரு வாசல் ஆண்டியும் ஒரு வேலைக்கு உதவுவான்.
3823 திருவாசத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்.
3824 திருவாக்குக்கு எதிhவாக்கு உண்டோ?
3825 திருவிளக்கு இல்லா வீட்டில் பேய் குடியிருக்கும்.
3826 திருவிளக்கு இட்டாரைத் தெய்வம் அறியும், நெய்வார்த்து உண்டாரை நெஞ்சு அறியும்.
3827 திரை கடல் ஒடியும் திரவியம் தேடு.
3828 தில்லுமுல்லும் திரியா வரமும்.
3829 திறந்த கதவுக்கு திறவுகோல் தேடுவானேன்?
3830 திறந்த வீட்டிலே நாய் நுழைந்தாற்போல.
3831 தினத்தவ நிலையில் மனத்தை நிறுத்து.
3832 தினவுக்குச் சொறிதல் இதம்.
3833 தினவு எடுத்தவன் சொறிந்துகொள்ள வேண்டும்.
3834 தினைப்பயறும் பாலும் தின்னாதிருந்தும், வினைப்பயனை வெல்லுவது அரிது.
3835 தினை விதைத்தவன் தினை அறுப்பான் வினை விதைத்தவன் வினை அறுப்பான்.
3836 தின்கிறதைத் தின்றும் தேவாங்குபொல் இருக்கிறான்.
3837 தின்பது கொஞ்சம் சீவனம் நிலை இல்லை.
3838 தின்ற மண்ணுக்குத் தக்க சோகை.
3839 தின்ற நஞ்சு கொல்லும் தின்னாத நஞ்சு கொல்லுமா?
3840 தின்று கொழுத்தால் சும்மா இருக்க ஒட்டாது.
3841 தின்று உமிழ்நத தம்பலத்தைத் தின்ன நினைப்பார்களா?
3842 தின்னத் தின்னக் கேட்குமாம் பிள்ளைப்பெற்ற வயிறு.
3843 தின்னத் தெரியாமல் தின்பானேன்?
3844 தின்ன வீட்டில் தின்னி.

Tamil Proverbs – தா


We are proud to present the biggest collection of Tamil proverbs.(தா-வரிசை)
Here is the link for popular Proverbs : Popular Tamil Proverbs
 

3697 தாங்கித் தாங்கிப பார்த்தால் தலைமேலே ஏறுகிறான்.
3698 தாசரி தப்பு தண்டவாளத்துக்குச் சரி.
3699 தாடிக்குப் பூச் சூடலாமா?
3700 தாடி பற்றி எரியும்போது சுருட்டுப் பற்றவைக்க நெருப்புக்கேட்டது போல்.
3701 தாட்சிணியம் தனநாசம்.
3702 தாட்டோட்டக்காரனுக்குத் தயிரும் சோறும், விசுவாசக்காரனுக்கு வெந்Pநீரும் பருக்கையும்.
3703 தாட்டோட்டக்காரரைக் கூடுவதிலும் தனியே இருப்பது நலம்.
3704 தாட்டோட்டக்காரனுககு கூடுவதிலும் தயிரும் சோறும் கூட்டாட்டக்காரனுக்குக் கூழும் தண்ணீரும்.
3705 தாதனும் பறையனும் போல.
3706 தாதன் கரத்தில் அகப்பட்ட குரங்கைப்போல் அலைகிறான்.
3707 தாது அறியாதான் பேதை வைத்தியன்.
3708 தாதும் இல்லைப் பிராதும் இல்லை.
3709 தாபரம் இல்ல இளங்கொடி போல.
3710 தாமதம் தாழ்வுக்கு ஏது.
3711 தாமரை இலைத் தண்ணீர் போல் ததும்புகிறான்.
3712 தாம்பு அறுதல் தோண்டியும் பொத்தல்.
3713 தாயும் தகப்பனும் தள்ள்pவிட்ட காலத்தில் வா என்று அழைதத வங்காரவாசி.
3714 தாயும் பிள்ளையும் ஆனாலும் வாயும் வயிறும் வேறே.
3715 தாயைக் கொன்றவனுக்கு ஊரிலே வாதி.
3716 தாயைச் சேர்ந்த உறவு ஆனாலும் அறுத்துத்தான் உறவு ஆட வேண்டும்.
3717 தாயைப்பார்த்துப் பெண்ணைக் கொள்ளு பாலைப் பார்த்துப் பசுவைக் கொள்ளு.
3718 தாயைப்போற் பிள்ளை நூலைப்போற் சீலை.
3719 தாயைப் பழித்து மகள் அபசாரி ஆடுகிறான்.
3720 தாயைப் பார்த்து மகளைக் கொள்.
3721 தாய் அறியாச் சூல் உண்டோ?
3722 தாய இல்லாப் ப்pள்ளையைத் தலையிலே தட்டலாமா?
3723 தாய் உறவோ நாய் உறவோ.
3724 தாய ஏழடி பாய்ந்தால் மகள் எட்டு அடி பாய்வாள்.
3725 தாய் ஒரு பாக்கு, தான் கமுகந்தோப்பு என்கிறாள்.
3726 தாய் கேட்டுப்பட்டி தகப்பன் காவடிப்பட்டி தங்கை மோருப்பட்டி தமக்கை சாதப்பட்டி.
3727 தாய் கையில் இருக்கிற தனத்தைப் பார்க்கிலும் தன் கைத் தவிடே மேல்.
3728 தாய்க்கு உள்ளது மகளுக்கு.
3729 தாய்க்குப்பின் தாரம்.
3730 தாய்க்கு ஒளித்த சூலும் உண்டோ?
3731 தாய்க்கு விளைந்தாலும் தனக்கும் விளைய வேண்டும்.
3732 தாய்க்குச் சோறு இடுகிறது ஊருக்குப் புகழ்ச்சியா?
3733 தாய்க்கு மூத்துத் தகப்பனுக்கு விளக்கு பிடிக்கிறான்.
3734 தாய் செத்தால் மணம் மகள் செத்தால் பிணம்.
3735 தாய் செத்தாள், மகள் திக்கற்றாள்.
3736 தாய் சொல் துறந்தால் வாசகம் இல்லை.
3737 தாய் தவிட்டுக்கு அழுகையில் பிள்ளை இஞ்சிப் பச்சடி கேட்கின்றது.
3738 தாய்தனக்கு ஆகாத மகள் ஆர்தனக்கு நல்லவள் ஆவாள்?
3739 தாய் தூற்றினால் ஊர் தூற்றும், கொண்டவன் தூற்றினால் கண்டவன் தூற்றுவான்.
3740 தாய் முகம் காணாத பிள்ளையும் மழை முகம் காணாத பயிரும் செவ்வைப்படமாட்டாது.
3741 தாய் முலைப்பாலுக்குப் பால்மாறினது போல.
3742 தாய் வார்த்தை கேளாத பிள்ளை நாய் வாயிற் சீலை.
3743 தாரமும் குருவும் தலையில் விதி.
3744 தாராப் பெட்டைபோல.
3745 தாராரளந்தான் நெய், தண்ணீர் பந்தலில், நீர்ச்சோற்றுத் தண்ணீர் நெய்பட்ட பாடு.
3746 தாலி அறுத்தவளுக்கு மருத்துவிச்சி தயவு ஏன்?
3747 தாலி அறுத்தவள் ஏன் இருக்கிறாள்? தூரம் தப்பினவனுக்குப் பொங்கியிட.
3748 தாவத் தஞ்சம் இல்லா இளங்கொடி போல் தவிக்கிறாள்.
3749 தாழிபோல் வயிறும் ஊசிபோல் மிடறும்.
3750 தாழ் குலத்திற் பிறந்தாலும் புத்தியினால் அலரிப்பூவைப் போல் பிரயோசனப்படுவார்.
3751 தாழ்ந்து நின்றால் வாழ்ந்து நிற்பாய்.
3752 தாழ்ந்தது தங்கம் உயர்ந்தது பித்தளை.
3753 தாழ்ந்து பணிதலே தலைமை ஆகும்.
3754 தாழ்மை இல்லாத வாலிபன் வீண்.
3755 தாழ்விலே பெருமையும் வாழ்விலே தாழ்மையும் வேண்டும்.
3756 தானத்தனத்தான் சகல சம்பத்தன்.
3757 தானமது விரும்பு.
3758 தானாகலந்த சீதேவியைக் காலால் உதைத்துத் தள்ளலாமா?
3759 தானும் உண்ணான் பிறருக்கும் கொடான்.
3760 தானே கனியாத பழத்தைத் தடிகொண்டு அடித்தால் கனியுமா?
3761 தானே தான் குருக்கள் என்பார் தனங்கள் வாங்கச் சதாசிவன் பேர் பூசை செய்வார்.
3762 தானே வளர்ந்து தவத்தால் கொடி எடுத்தவன்.
3763 தானே வாழவேண்டும் தலைமகளை அறுக்கவேண்டும் என்கிறாள்.
3764 தான் அடங்கத் தன் குலம் அடங்கும்.
3765 தான் அறியாச் சிங்களம் தன் பிடரிக்குச் சேதம்.
3766 தான் உள்ள போது உலகம்.
3767 தான் ஒன்று நினைத்தால் தெய்வம் ஒன்று நினைக்கும்.
3768 தான் கள்வன் பிறரை நம்பான்.
3769 தான் கற்ற ஒன்றைத் தரிக்க உரை.
3770 தான கெடுத்தது பாதி, தம்பிரான் கெடுத்தது பாதி.
3771 தான் சம்பாதித்தால் தன்க்கு உதவும், ஊர் சம்பாதித்தால் உதவமாட்டாது.
3772 தான் சாக மருந்து உண்பார் இல்லை.
3773 தான் செத்தபின் உலகம் கவிழ்ந்து என்ன நிமிhந்து என்ன?
3774 தான் தளம்பல் பிறருக்கு ஊன்று கோல்.
3775 தான் திருடி அயல் வீட்டை நம்பாள்.
3776 தான் தின்கிற நஞ்சு தன்னைத்hன் சொல்லும்.
3777 தான் தின்னத் தவிடு இல்லை வாரத்துக்குப் பனறிக் குட்டியா?
3778 தான் தின்னித் தம்பிரானாய் இருக்கிறான்.
3779 தான் தின்னி பிள்ளை வளர்க்கான், தவிடு தின்னி கோழி வளர்க்காள்.
3780 தான் திருட்டுக் கொடுத்ததும் அல்லாமல் பயித்தியக்காரப் பட்டமும் கேட்டான்.
3781 தான் தேடாப் பொன்னுக்கு மாற்றும் இல்லை உரையும் இல்லை.
3782 தான பத்தினி ஆனால் தேவடியாள் தெருவிலும் குடி இருக்கலாம்.
3783 தான் பிடித்த முசலுக்கு மூன்றே கால் என்கிறான்.
3784 தான் போனால் தாகத்துக்குக் கிடையாது, எழுதடா ஒலை நூறு குடம் தயிருக்கு என்கிறான்.
3785 தான் போகிற காரியத்துக்கு ஆட்போனால் ஒரு சொட்டு.
3786 தான் போய் மோர் இல்லாமல் வந்தவன் தயிருக்குச் சீட்டு எழுதினானாம்.
3787 தான் போக வழியைக் காணாத மூஞ்சூறு விளக்கு மாற்றையும் கவ்விக்கொண்டு போனதாம்.
3788 தான்றிக் காயில் சனியன் புகுந்தது போல.

Tamil Proverbs – த



We are proud to present the biggest collection of Tamil proverbs.(த-வரிசை)
Here is the link for popular Proverbs : Popular Tamil Proverbs
 

3521 தகப்பன் வெட்டின கிணறென்று தலைகீழாய் விழுவார்களா?
3522 தகப்பனுக்கு இட்டது தலைச்சனுக்கு.
3523 தகப்பனுக்குக் கட்டக் கோவணத்துக்கு வழி இல்லை, மகன் தஞ்சாவூர் மட்டும் நடைப்பாவாடை போடச் சொன்னானாம்.
3524 தகப்பனைக் கொன்ற பாவம் மாமியார் வீட்டில் ஆறு மாசம் இருந்தால் போகும்.
3525 தகப்பன் பட்டம் பிள்ளைக்கு அல்லவா?
3526 தகப்பன் தேடக் கர்த்தன், பிள்ளை அழிக்கக் கர்த்தன்.
3527 தகப்பன் பட்டத்தைப் பிள்ளைக்குக் கட்டினால் தகப்பன் சாஷடாங்கதண்டம் செய்யவேண்டும் அல்லவோ?
3528 தக்கோன் எனத்திரி.
3529 தங்கமுடி சூட்டினாலும் தங்கள் குணம் விடார் கசடர்.
3530 தங்கச் சூரிக்கத்தியென்று அறுத்துக் கொள்ளலாமா?
3531 தங்கத்தைக் குவிக்கிறேன் என்றாலும், தன் புத்தி விடுகிறது இல்லை.
3532 தங்கத்தூள் அகப்பட்டாலும் செங்கற்றூள் அகப்படாது.
3533 தங்கத்தை உருக்கி விட்டது போல.
3534 தங்கம் தரையிலே தவிடு பானையிலே.
3535 தங்கம் புடத்தில் வைக்கப்பட்டாலும் தன் நிறம் போகாது.
3536 தங்கம் தரையிலே, ஒரு காசு நாரத்தங்காய் உறியிலே.
3537 தங்கம் எல்லாம் தவிட்டுக்கு மாறுகிறது.
3538 தங்கைச்சி பிள்ளை தன் பிள்ளை ஆனால் தவத்துக்குப் போவான் ஏன்?
3539 தசை கண்டு கத்தி நாட வேண்டும்.
3540 தச்சன் பெண்சாத்p தரையிலே, கொல்லன் பெண்சாதி கொம்பிலே.
3541 தச்சன் பெண்சாத்p அறுத்தல் என்ன, கொல்லன் பெண்சாதி கூலிக்கு அறுத்தால் எனன்?
3542 தச்சன் வீட்டிலே தயிரும் எச்சன் வீட்டிலே சோறும் எப்படிச்சேரும்?
3543 தச்சன் வீட்டில் பாற்சோற்றை நத்தாதே வெள்ளாளா.
3544 தச்சன் அடித்த தலைவாசல் எல்லாம் உச்சியில் இடிக்க உலா வித்திரிந்தேன்.
3545 தஞ்சம் என்று வந்தவனை வஞ்சிக்கல் ஆகாது.
3546 தடவிப் பிடிக்க மயிர் இல்லை அவள் பெயர் கூந்தலழகி.
3547 தடவிப் பிடிக்க கை இல்லை அவள் பெயர் சௌரியப் பெருமாள்.
3548 தடி எடுத்தால் எல்லம் வேட்டைக்காரர்.
3549 தடிக்கு மிஞ்சின மிடா.
3550 தடிக்கு அஞ்சிக் குரங்கு ஆடினதுபோல.
3551 தடிக்கு மிகுந்த மிடாவானால் என்ன செய்யலாம்?
3552 தட்டான் தாய்ப் பொன்னிலும் மரப்பொன் எடுப்பான்.
3553 தட்டானும் செட்டியும் கண் சட்டியம் பானையும் மண்.
3554 தட்டானும் செட்டியும் போல.
3555 தட்டானைச் சேர்ந்த தறுதலை.
3556 தட்டான் தாழப் பறந்தால் தப்பாமல் மழை வரும்.
3557 தட்டாரச் சித்து தறிச்சித்து வண்ணாரச் சித்துக்கு வராது.
3558 தட்டானிடத்தில் இருக்கிறது, அல்லது கும்பிடுசட்டியில் இருக்கிறது.
3559 தட்டிப பேசுவார் இல்லாவிட்டால் தம்p சண்டப் பிரசண்டன்.
3560 தணிந்த வில்லுத்தான் தைக்கும்.
3561 தண்டிலே போனால் இரண்டில் ஒன்று.
3562 தண்டிற் போனால் இரட்டிப்புச் சம்பளம்.
3563 தண்டு ஒன்று இலை மூன்று ஆரை அடா மந்திரி.
3564 தண்ணீரில் இருக்கிற தவளை குடித்ததைக் கண்டதார் குடியாததைக் கண்டதார்?
3565 தண்ணீர் வெந்நீரானாலும் நெருப்பை அவிக்கும்.
3566 தண்ணீரிலே விளைந்த உப்புத் தண்ணீரிலே கரையவேண்டும்.
3567 தண்ணீரில் அமுங்கின முட்டை உப்புப் போடக் கிளம்பும்.
3568 தண்ணீரும் மூன்று பிழை பொறுக்கும்.
3569 தண்ணீர் குடித்த வயிறும் தென்னேலே இட்ட காதும் சரி.
3570 தண்ணீரையும் தாயையும் பழிக்கலாமா?
3571 தண்ணீரில் இறங்கினால் தவளை கடிக்கும் என்கிறான்.
3572 தண்ணீரில் இருக்கிற தவளையைத் தரையில் எடுத்து விட்டது போல.
3573 தண்ணீரில் இறந்தவரிலும் சாராயத்தில் இறந்தவர் அதிகம்.
3574 தண்ணீரும் கோபமும் தாழ்நத் இடத்திலே.
3575 தத்துவம் அறிந்தவன் தவசி.
3576 தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.
3577 தப்பில் ஆனவனை உப்பிலே போடு.
3578 தப்பை அடிததவன் தாதன, சங்கு ஊதினவன் ஆண்டி.
3579 தமிழுக்கு இருவர் தவத்துக்கு ஒருவர் ஆகும்.
3580 தம் இனம் தம்மைக் காக்கும் வேலி பயிரைக் காக்கும்.
3581 தம்பி கால் நடையிலே பேச்சுப் பல்லக்கிலே.
3582 தம்பி பேச்சைத் தண்ணீரிலே எழுத வேண்டும்.
3583 தம்பி பிடித்த முயலுக்கு மூன்றே கால்.
3584 தம்பி மொண்டது சமுத்திரம் போல.
3585 தம்பி உழுவான் மேழி எட்டாது.
3586 தம்பி பிறக்கத் தரைமட்டம் ஆயிற்று.
3587 தம்பி சமர்த்தன் உப்பில்லாக் கஞ்சி கலம் குடிப்பான்.
3588 தம்பி சோற்றுக்குச் சூறாவளி வேலைக்கு வாராவழி.
3589 தயிருக்குச் சட்டடி ஆதாரம் சட்டிக்குத் தயிர் ஆதாரம்.
3590 தயிர்ப் பானையை உடைத்துக் காகத்துக்கு அமுது இட்டாற் போல.
3591 தரத்தர வாங்கிக் கொள்ளுகிறாயா, தலையை முழுகிப்போட்டு போகட்டுமா?
3592 தருமத்தைப் பாபம் வெல்லாது.
3593 தருமம் தலைகாக்கும் தலையை மயிர் காக்கும்.
3594 தர்மமே தலைகாக்கும்.
3595 தலை அளவும் வேண்டாம் அடி அளவும் வேண்டாம் குறுக்கே அள அடா படியை.
3596 தலை இருக்கிற இடத்தில் கழுத்து வரட்டும் பார்த்துக் கொள்வோம்.
3597 தலை இருக்க வால் ஆடுமா?
3598 தலை இடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும்.
3599 தலை இடியும் சங்கடமும் தனக்கு வந்தபின் தெரியும்.
3600 தலை எழுத்துத் தலையை சிரைத்தாற் போகுமா?
3601 தலை எழதுத்தை அரியென்று சொல்லுவார் அதல்ல.
3602 தலை கீழாய் இருந்து தபசு செய்தாலும் கூடுகிற காலந்தான் வந்து கூட வேண்டும்.
3603 தலைக்கு மேற்பட்ட தண்ணீர் சாண் ஒடி என்ன முழம் ஒடி என்ன?
3604 தலைக்கு தலை பெரியதனம் உலைக்கு அரிசி இல்லை.
3605 தலைக்குத் தலை நாயகம்.
3606 தலைக்கு முடியோ காலுக்கு முடியோ?
3607 தலைக்கு ஏறினால் தனக்குத் தெரியும்.
3608 தலை சொறியக் கொள்ளி தானே தேடிக்கொண்டாய்.
3609 தலைச்சன் பிள்ளைக்காரிக்கு இடைச்சன் பிள்ளைக்காரி மருத்துவிச்சி.
3610 தலைச்சன் பிள்ளைக்காh இடைச்சன் பிள்ளைக்காரிக்குப் புத்தி சொன்னாளாம்.
3611 தலைமாட்டிற்குக் கொள்ளி தானே தேடிக்கொண்டாய்.
3612 தலைமுறை தலைமுறையாய் மொட்டை, அவள் பெயர் கூந்தலழகி.
3613 தலை மேலே அம்பு பறந்தாலும் நிலையிற் பிரியல் ஆகாது.
3614 தலை மேலே தலை இருக்கிறதாஃ
3615 தலை மேலே இடித்தாலும் தான் குனியான்.
3616 தலையாலே மலை பிளப்பான்.
3617 தலையில் எழுதி இருக்கத் தந்திரத்தால் வெல்லலாமாஃ
3618 தலையில் வரும் மயக்கம் சருவ மயக்கம்.
3619 தலையில் இடித்தால் தாழக் குனிவான்.
3620 தலையும் தலையும் பொருந்தினால் மலையும் வந்து பொறுக்கும்.
3621 தலையை நனைத்து ஆச்சுது, கத்தியும் வைத்து ஆச்சுது.
3622 தலையோடு போகிறது தலைப்பாகையோடு போயிற்று.
3623 தலைவன் நிற்கத் தண்டு நிற்கும், தலைவன் மயங்கச் சர்வமும் மயங்கும்.
3624 தலை வலிக்குத் தலை அணையைத் தானே மாற்றிப் போட்டாற் போல.
3625 தலைவன் சொற் கேள், நன்னெறி தவறேல்.
3626 தலைவெட்டிச் சமுததிரமேற் போடலாமா?
3627 தவசே அணிகலன், தாழ்மையே மேன்மை.
3628 தவளை தாமரைக்குச் சமீபமாக இருந்தும் அதின் தேனை உண்ணாது. அதுபோல, அறிவீனர் கிட்ட இருந்தாலும் கற்றுக் கொள்ளார்கள்.
3629 தவளை தன் வாயாற் கெடும்.
3630 தவிடு தின்பவனை அமுது தின்னச் சொன்னாற்போல.
3631 தவிட தின்பவனை எக்காளம் ஊதக் சொன்னாற் போல.
3632 தவிட்டை ந்ம்pப் போக்ச் சம்பர் அரிசியை நாய் கொண்டு போயிற்று.
3633 தவிட்டுக்கு வந்த கை தனத்துக்கும் வரும்.
3634 தழைத்த மரத்துக்கு நிழல் உண்டு, பிள்ளை பெற்றவளுக்குப் பால் உண்டு.
3635 தள்ளத் தள்ளத தாழ்ப்பாளை, மௌள மௌள திறப்பான் ஏன்?
3636 தனக்குப் பிறந்தபிள்ளை தவிட்டுக்கு அழுகிறதாம் ஊரார் பிள்ளைக்குக் கூட்டுக் கல்யாணம் செய்கிறானாம்.
3637 தனக்குச் சந்தேகம் அடைப்கைக்காரனுக்கு இரட்டைப் படியாம்.
3638 தனக்கு அழகு மொட்டை பிறருக்கு அழகு கொண்டை.
3639 தனக்கு மிஞ்சினது தர்மம்.
3640 தனக்கு என்னவென்று இருக்கல் ஆகாது நாய்க்கு சோறு இல்லையாயின்.
3641 தனக்கென்னச் சொனன்hல் நாய் வெடுக்கென்னப பாயும்.
3642 தனக்கு மூக்குப் போனாலும் எதிரிக்குச் சகுனப்பிழை வேண்டும்.
3643 தனக்கு என்றால் பிள்ளையும களைவெட்டும்.
3644 தனக்குத் தகாத காரியத்திற் பிரவேசிக்கிறவன் குரங்கு பட்டப்பாடு படுவான்.
3645 தனக்கு என்றால் புழுக்கை கலம் கழுவி உண்ணாது.
3646 தனக்குத் தகாத காரியம் செய்தால் ஆருக்கும் பிராண சேதத்துக்கு வரும்.
3647 தனக்கு ஆகாத பானை உடைந்தால் என்ன இருந்தால் என்ன?
3648 தனக்கு பின்னால் அகம் இருந்து என்ன கவிழ்ந்து என்ன?
3649 தனக்கு என்று ஒருத்தி இருந்தால் தலைமாட்டில் இருந்து அழுவாள்.
3650 தனக்குத் தவிடு இடிக்கத் தள்ளாது ஊருக்கு இரும்பு அடிக்கத் தள்ளும்.
3651 தனக்கு என்று அடுப்பு மூட்டித் தான வாழும் காலத்தில் வயிறும் சிறுக்கும் மதியும் பெருகும்.
3652 தனி வழியே போனவளைத் தாரமென்று எண்ணாதே.
3653 தன் இச்சையை அடக்காவிட்டால் அது தன்னையே வருத்தும்.
3654 தன் உயிரைப்போல மன் உயிருக்கு இரங்கு.
3655 தன் உயிரைத் தான் தின்கிறான்.
3656 தன் ஊருக்கு அன்னம் பிற ஊருக்குக் காகம்.
3657 தன் ஊர்ச் சுடுகாட்டுக்கும் அயல் ஊர் ஆற்றுக்கும் அஞ்ச வேண்டும்.
3658 தன் ஊருக்கு ஆனை அயல் ஊருக்குப் பூனை.
3659 தன் ஊருக்கு காளை அயல் ஊருக்குப் பூனை.
3660 தன் காரியதுரந்தரன் பிறர் காரியம் வழவழவென்று விடுகிறவன்.
3661 தன் காரியம் என்றால் தன் சீலையும் பதைக்கம்.
3662 தன் காரியம் பாராதவன் சதைக்கு ஒரு புழு புழுப்பான்.
3663 தன் காரியப் புலி.
3664 தன் கீர்த்தியை விரும்பாதவளைத் தள்ளிவிடு.
3665 தன் குற்றம் பார்பப்வர் இங்கு இல்லை.
3666 தன் குற்றம் இருக்கப் பிறர் குற்றம் பார்க்கிறதா?
3667 தன் குஞ்சென்று வளர்க்கமாம குயிற் குஞ்சைக் காகம்.
3668 தன் சோறு தன் புடைவை கடடி வீண் சொல் கேட்க விதியா?
3669 தன் நிலத்தில் இருந்தால் முயல் தந்தியிலும் வலிது.
3670 தன் நோய்க்கு தானே மருந்து.
3671 தன் பாலம் கண்டு அம்பலம் ஏறவேண்டும்.
3672 தன பணம் செல்லா விட்டால் தாதனைக் கட்டி அடிக்கிறது.
3673 தன் பல்லைப் பிடுங்கிப் பிறர் வாயில் வைக்கலாமா?
3674 தன் பல்லைக் குத்திப் பிறர் மூக்கில் வாசம் காட்டுகிறது போல.
3675 தன் பிள்ளைக்குப் பதைக்காதவள் சக்களத்தி பிள்ளைக்குப் பதைப்பாளா?
3676 தன் பிள்ளையைத் தான் அடிக்கத தலையாரியைச் சீட்டுக் கேடகிறது போல.
3677 தன் வாயாலே தான் கெட்டான்.
3678 தன் வாயாNலு தான் கெட்டதாம் ஆமை.
3679 தன் வாய்ச் சீதேவி முன்வாயிலே.
3680 தன் வினை தன்னைச் சுடும் ஒட்டப்பம் வீட்டைச் சுடும்.
3681 தன் வீட்டுக் கதவைப் பிடுங்கி அயல் வீட்டுக்கு வைத்தாற் போல.
3682 தன் வீட்டு விளக்கென்று முத்தம் இட்டாற் சுடாதா?
3683 தன் வீட தவிர அயல் வீட்டுக்கு மேட்டுவரி என்கிறான்.
3684 தன் வீட்டுக் கதவைப் பிடுங்கி அயல் வீட்டுக்கு வைத்து விட்டு விடிகிற மட்டும் நாய் ஒட்டினது போல.
3685 தன்னாலே தான் கெட்டால் அண்ணாவியார் என்ன செய்வார்?
3686 தன்னைப் புகழாத கம்மாளனும் இல்லை.
3687 தன்னை அறிந்தவன் தானே தலைவன்.
3688 தன்னை அறியாத சன்னதம் இல்லை.
3689 தன்னை அறிந்தவன் தலைவனை அறிவான்.
3690 தன்னைக் காக்கிற் கோபத்தைக் காக்க வேண்டும்.
3691 தன்னைக் கொல்ல வருகிற பசுவையும் கொல்.
3692 தன்னைச் சிரிப்பாரைத் தான் அறியான்.
3693 தன்னபை பெற்றவள் கொடும் பாவி, பெண்னைப் பெற்றவள் மகராசி.
3694 தன்னை அறிந்து பின்னைப் பேசு.
3695 தன்னைச் சிpரிப்பது அறியாதாம் பல்லாவரத்துக் குரங்கு.
3696 தன்னைத் தானே தான் பழிக்குமாம் தென்னமரத்திலே குரங்கு இருந்து.