Tamil Proverbs – வா


We are proud to present the biggest collection of Tamil proverbs.(வா-வரிசை)
Here is the link for popular Proverbs : Popular Tamil Proverbs
 

5605 வாகனம் உள்ளவன் நடைக்கு அஞ்சான், பால் உண்டான் பந்திக்கு அஞ்சான்.
5606 வாகை இளம்பிஞ்சு கண்டவர்கள் இல்லை, வாகான தென்னம் பிள்ளை கண்டவர்கள் இல்லை.
5607 வாகை இளம் பிஞ்சு கண்டவர்கள் உண்டோ?
5608 வாக்கினால் கெட்ட கழுதையைப் போக்கிலே விடுங்கள்.
5609 வாங்கின கடனைக் கொடாத வல்லாளகண்டன்.
5610 வாசற்படி இட்டு விடிகிறதோ மகாதேவர் இட்டு விடிகிறதோ?
5611 வாணாளுக்கு ஏற்ற வயிற்று எரிச்சல்.
5612 வாணாள் உடையான் வலுப்பட்டுச் சாகான்.
5613 வாணிபம் செய்யிற் காணியும் குறி.
5614 வாணியக்கட்டை வயிரக் கட்டை தேயத்தேயத் துடைப்பக்கட்டை.
5615 வாணியன் ஆசை கோணியும் கொள்ளாது.
5616 வாணியர்கள் ஆடும் செக்கை வளைய வரும் எருதுகள்போல.
5617 வாதத்து இயல்பு எடேல்.
5618 வாதம் கெடுத்தது பாதி வண்ணான் கெடுத்தது பாதி.
5619 வாதம் ஊத அறி, வேதம் ஒதி அறி.
5620 வாதி கண்ணுக்கு மட்டம் எட்டு மாற்று.
5621 வாதுக்கு ஆடின தேவடியாள் வயது சென்றால் கழுதை மேய்ப்பாள்.
5622 வாதுமுற் கூறேல்.
5623 வாயாடி வார்த்தை மட்டில்லா ரவை.
5624 வாயாலே தின்று வாயாலே கக்கும் வெளவாலைப்போல.
5625 வாயாலே கேட்டால் வாழைக்காய்ப் பிஞ்சும் கொடான், தாய் புருஷன் வந்தால் தாரோடே கொண்டு போவான்.
5626 வாயாலே கேட்டால் வாழைப் பிஞ்சும் கொடான் தண்டித்துக் கேட்டால் தாரோடே கொண்டு போவான்.
5627 வாயிலே உறவு மனதிலே பகை.
5628 வாயிலே உண்டு வழி.
5629 வாயைப் பார்த்து ஆளை ஏய்த்தான்.
5630 வாய் இருந்தால் வங்காளம் போகலாம்.
5631 வாய் இல்லா விட்டால் நாய் கொண்டு போய்விடும்.
5632 வாய் இல்லாவிட்டால் நாய் கொண்டு போய்விடும்.
5633 வாய் இருந்தால் பிள்ளை பிழைக்கும்.
5634 வாய் உள்ள பெட்டிக்குத் தூர் இல்லை.
5635 வாய் காய்ந்த புலி ஆள்மேலே விழுந்ததுபோல.
5636 வாய்க்கொழுப்புச் சீலையில் வடிகிறது.
5637 வாய்க்கு உண்டோ வாதம்?
5638 வாய் சர்க்கரை கை கொக்கரை.
5639 வாய் சொல்லும் பிடரி கும்பிடும்.
5640 வாய்தான் இருக்கின்றது வாய்க்கு அரிசிக்கு வழி இல்லை.
5641 வாய் திறக்கப் பொய் திறக்கும்.
5642 வாய்த் தவிடும் போய் அடுப்பு நெருப்பும் போனதுபோல.
5643 வாய் நல்லதானால் ஊர் நல்லது.
5644 வாய் பார்த்தவள் வாழ்வு இழந்தாள் அம்பலம் பார்த்தவன் பெண்டு இழந்தான்.
5645 வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ?
5646 வாய் மதத்தால் வழக்கு இழந்தான்.
5647 வாய் மத்த்தால் வாழவை இழந்தான்.
5648 வாய் வாழைப்பழம் கை கருணைக்கிழங்கு.
5649 வார்த்தை இருந்துபோம், வழி தூர்ந்துபேர்ம.
5650 வாலிபத்திலே முதிர்ந்த புத்தி குறுகின வயதுக்கு அடையாளம்.
5651 வால் நீPண்ட கரிக்குருவி வலம் இருந்து இடம் போனால், கால் நடையாய்ப் போனவர்கள் கனக தண்டிகை ஏறுவார்கள். நுடையாய் போனவர்கள் ககை தண்டிகை ஏறுவார்கள்.
5652 வால் போனாலும் போகிறது எனக்குத் தோல் வேண்டும்.
5653 வாழாத பெண்ணுக்கு மை ஏண்டி, பொடடு ஏண்டி, மஞ்சள் குளி ஏண்டி?
5654 வாழுகிற வீட்டில் மரநாய் கட்டினது போல.
5655 வாழும் பிள்ளையை விளையாட்டில் தெரியும்.
5656 வாழை அடி வாழை.
5657 வாழைப்பழததில் ஊசி ஏறுவதுபோல.
5658 வாழைப்பழம் தின்னாத குரங்கு இல்லை.
5659 வாழைப்பழம் கொண்டுபோனவள் வாசலில் இருந்தாள், வாய் கொண்டுபோனவள் நடு வீட்டில் இருந்தால்.
5660 வாழை வடக்கு ஈனும் வான் கமுகு தெற்கு ஈனும்.
5661 வாழ்கிற பெண்ணைத் தயார் கெடுத்தது போல.
5662 வாழ்கிற வீட்டில் வன்குரங்கு வைத்ததுபோல.
5663 வாழ்கிற வீட்டுக்கு இது ஒரு ஒரு வன்குரங்கு.
5664 வாழ்கிற வீட்டுக்கு வாழை வைத்துப்பார்.
5665 வாழ்க்கை கொடுத்தவன் கையில் வாணாளும்.
5666 வாழ்ந்தது கெட்டால் வறு ஓட்டுக்கும் ஆகாது.
5667 வாழ்ந்தவன் வறியவனானால் வறை ஒட்டிற்கும் ஆகான்.
5668 வாழ்ந்த மகள் வந்தால் வண்ணத் தடுக்கு இடு, கெட்டமகள் வந்தால் கிழிந்த தடுக்கு இடு.
5669 வாழ்வாருக்குச் சீதேவி வாயிலே.
5670 வாழ்வும் சிலது காலம் தாழ்வும் சிலது காலம்.
5671 வாளுக்கு ஆயிரம் தோளுக்கு ஆயிரம் சம்பாதித்தாலும் மட்டாய்ச் செலவிடு.
5672 வாளுக்கு ஆயிரம் தோளுக்கு ஆயிரம்.
5673 வானத்துக்குக்கீழ் இருந்து மழைக்குப் பயப்படலாமா?
5674 வானமும் பூமியம் கொள்ளாதான் மரததிலும் கல்லிலும் இருப்பானா?
5675 வானமே ஈன்றது பூமியே தாங்கிற்று.
5676 வானம் பார்க்கப் போயும் இடைஞ்சலா?
5677 வானம் சுரக்கத் தானம் சிறக்கும்.
5678 வானம் சுருங்கிற்றானம் சுருங்கும்.
5679 வான் செய்த உதவிக்கு வையகம் என்ன செய்யும்?

Tamil Proverbs – வ


We are proud to present the biggest collection of Tamil proverbs.(வ-வரிசை)
Here is the link for popular Proverbs : Popular Tamil Proverbs
 

5481 வங்கணக்காரன் புளுகு வாசற்படி மட்டும்.
5482 வங்கம் தின்றால் தங்கம், வங்கம் கெட்டால் பங்கம்.
5483 வங்கிஷம் வார்த்தைக்கு அஞ்சும், புழுக்கை உதைக்கு அஞ்சும்.
5484 வசனம் பண்ண உபாயம் காரணம்.
5485 வச்சநாபியிலே புழுத்த புழு.
5486 வச்சநாபியை உப்புப் பார்க்கலாமா?
5487 வச்சத்துக்கு மேலே வழி இல்லை, பிச்சைக்குப் போகச் சுரைக்குடுக்கை இல்லை.
5488 வஞ்சகருக்கு என்ன நேசம் காட்டினாலும் நெஞ்சு நேசம் கொள்ளார்.
5489 வஞ்சர் உறவை வழுவி விலகு.
5490 வஞ்சர் பால் ஊட்டினாலும் நஞ்சாய்விடும்.
5491 வஞ்சித்து நெடும் காவம் வாழ்தலில் மரணம் அடைவதே நலம்.
5492 வடகாற்று அடிக்க வந்தது மழையே.
5493 வடக்கத்தியானையும் வயிற்று வலியையும் நம்பல் ஆகாது.
5494 வடக்கே கறுத்தால் மழை வரும்.
5495 வடக்குப் பார்த்த மச்சுவீட்டைப் பார்க்கிலும் தெற்புப் பார்த்த தெருத்திண்ணை நல்லது.
5496 வடலியை வெட்டி ஆள், எருமையைக் கட்டி ஆள்.
5497 வடலி வளர்த்துக் கள்ளைக் குடிக்கிறதா?
5498 வடுகனும் தமிழனும் கூட்டுப் பயிர் இட்ட கதை.
5499 வடுகன் தமிழ் அறியான் வைக்கோலைக் கசு என்பான்.
5500 வடுகு கொழுத்தால் வறை ஒட்டிற்கும் ஆகாது.
5501 வடுகு பொடுகாச்சு வைக்கோற் போர் நெல் ஆச்சு.
5502 வடையைத் தின்னச் சொன்னாளா துளையை எண்ணச் சொன்னாளா?
5503 வட்டம் சுற்றுpயம் வழிக்கு வரவேண்டும்.
5504 வட்டி ஆசை முதலைக் கெடுத்தது.
5505 வட்டிக்கு வட்டி எதிர் வட்டியா?
5506 வட்டி ஒட்டம் விழ ஒட்டத்திலும் அதிகம்.
5507 வட்டுவத்தின் மேல் கொட்டுப் போட்டால் வட்டுவத்திற்கு மாத்ரமா படும்?
5508 வணங்கின வில் தீங்கை விளைக்கும்.
5509 வணங்கின முள் தைக்காது.
5510 வணிகருக்கு அழகு வாணியம் செய்தல்.
5511 வண்டி ஒடத்தின் பெயரில் ஒடம் வண்டியின் பெயரில்.
5512 வண்டு தூரத்திலே பூவின் வாசனைய அறியும், அதுபோல, கற்றோர் தூரத்திலேயே ஒருவன் நடத்தையை அறிந்து கொள்வார்கள்.
5513 வண்டு ஏறாத மரம் இல்லை.
5514 வண்ணத்துக்குக் கிண்ணம் பாடுகிறான்.
5515 வண்ணானுக்கு நோய் வந்தால் கல்லோடே.
5516 வண்ணானுக்கும் நிருவாணிக்கும் உறவு என்ன?
5517 வண்ணானுக்கு வண்ணாத்திமேல் ஆசை, வண்ணாத்திக்குக் கழுதைமேல் ஆசை.
5518 வண்ணான் கையில் மாற்றுச் சும்மா.
5519 வண்ணான் கையில் சேலையைப் போட்டுக் கொக்கின் பின்னே போகிறதா?
5520 வண்ணான் பிள்ளை செத்தால் அம்பட்டனுக்கு மயிர் போயிற்று.
5521 வண்ணான் துறையில் முயல்போல.
5522 வண்ணானுக்குப் போனான் வண்ணாத்திக்கு வந்தான்.
5523 வதுவை செய்து வாழ்.
5524 வஸ்திராபரணம் விசேஷமோ, அன்னம் விசேஷமோ?
5525 வந்த காலோடு பந்தற் காலைக் கட்டிக்கொண்டு இருக்கிறாய்.
5526 வந்த சண்டையை விடுவதும் இல்லை வலியச் சண்டைக்குப் போவதும் இல்லை.
5527 வந்தவர் எல்லாம் சந்தையில் குடியா?
5528 வந்த வினை யோகாது வாரா வினை வாராது.
5529 வந்த அளவிலே சிறுக்க பந்தடித்தாள், வரவரச் சிறுக்pக சேர்ந்து போனாள்.
5530 வந்தாரை வாழ வைக்கும், மண்ணில் பிறந்தாரைத் தூங்க வைக்கும்.
5531 வந்தாலும் சரி, போனாலும் சரி.
5532 வந்தாற் சும்மா வரும் வராமற்போனால் ஒன்றும் வராது.
5533 வம்பான வார்த்தை மனதுக்கு அருவருப்பு.
5534 வம்புத் துரைத்தனத்தாரைக் கும்பிடத் தகுமோ?
5535 வயதுக்கோ நரைத்தது மயிருக்கோ நரைத்தது.
5536 வயல் முயற்சியில் தானியம் உண்டாம்.
5537 வயித்தியன் தலைமாட்டில் இருந்து அழுததுபோல.
5538 வயித்தியன் கையைப் பார்த்து வாக்கிட்டது போல.
5539 வயித்தியன் கைவிட்டது போல.
5540 வயித்தியனுக்கு மோஷம் இல்லை, உவாத்திக்கு மோஷ வழி உண்டு.
5541 வயிராக்கியத்துக்கு அம்பட்டக் கத்தியை விழுங்குகிறதா?
5542 வயிறாரப் போசனமும் அரையாறப் புடைவையும் இல்லை.
5543 வயிறு நிரம்பினால் பானை மூடாள்.
5544 வயிற்றைக் கீறிக் காண்பித்தாலும் மா இந்திர ஜாலம் என்பார்.
5545 வயிற்றுச் சோற்றுக்காக வயித்தீசுவரன் கோவில்மட்டும் நடப்பான்.
5546 வயிற்றுக் குடலைக் காட்டினாலும் வாழை நார் என்கிறான்.
5547 வயிற்றுப் பிள்ளையை நம்பி மாடு மேய்க்கிற பிள்ளையைப் பறி கொடுத்தாற்போல.
5548 வயிற்றுப் பாம்புக்குக் கடுகும், வளைப் பாம்புக்கு வெந்நீரும் இடு.
5549 வரப்போ தலைக்கு அணை வாய்க்காலேர பஞ்சு மெத்தை.
5550 வரம்பு உயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயரக்குடி உயரும், குடி உயர உயரும்.
5551 வரம்பு உயர்ந்தால் நெல் உயரும், நெல் உயர்ந்தால் சொல் உயரும்.
5552 வரவர மாமியார் கழுதைபோல் ஆனாள்.
5553 வரவுக்குத் தகுந்த செலவு.
5554 வரவு கொஞ்சம் வலிப்பு மெத்த.
5555 வரி போடேல் கேட்டைத் தேடேல்.
5556 வரிசையும் இல்லை, அரிசியும் இல்லை.
5557 வருகிறபோது எல்லாம் வலிய வரும், வந்தபின் போகிறபோது எல்லாம் போம்.
5558 வருணன் சிலரை வகுத்துப் பெய்யுமொ?
5559 வருந்தினால் வராதது ஒன்று இல்லை.
5560 வருந்தி வருந்திப் பார்த்தாலும் வருகிறபொழுதுதான் வரும்.
5561 வருமுன் காப்பவன் சொன்ன புத்தியை வந்தபின் காப்பவன் தள்ளினது போல.
5562 வருவது சொன்னேன் படுவது படு.
5563 வருவது வந்தது என்றால் படுவது படவேண்டும்.
5564 வருவான் குரடன் விழுவான் கிணற்றிலே.
5565 வலிமைக்கு வழக்கு இல்லை.
5566 வலியப் பெண் கொடுக்கிறோம் என்றால் குலம் என்ன கோத்திரம் என்ன என்பார்க்ள.
5567 வலிய வந்த சீதேவியைக் காலால் உதைத்துத் தள்ளலாமா?
5568 வலியவன் எடுத்தது வழி.
5569 வலிய உறவாடி வாசலிலே வந்தாலும், பொய் உறவாடிப் போய் வா என்று சொல்லுகிறான்.
5570 வலியவன் வெட்டினதே வாய்க்கர்ல்.
5571 வலையிற் சிக்கிக்கொண்ட மான்.
5572 வல்லடி வழக்கைச் சொல்லடி மாமி.
5573 வல்ல்வன் ஆட்டிய பம்பரம் மணலிலும் ஆடும்.
5574 வல்லமை பேசேல்.
5575 வல்லவனுக்குப் புல்லும் ஆயதம்.
5576 வல்லவனுக்குப் புல் ஆயதம்.
5577 வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு.
5578 வல்லார் இனைத்தால் வந்து இளைப்பாறும் என்று சொல்லாதிரார்கள் சுத்த வீரர்கள்.
5579 வல்லார் கொள்ளை வாழைப்பழம் ஆகும்.
5580 வல்விலைக் கூறையம் மெல்விலைக் காளையும் ஆகாது.
5581 வவ்வால் வீட்டுக்கு வவ்வால் வந்தால் நீயும் தொங்கு நானும் தொங்கு.
5582 வழகட்டிப் பறிக்கிறவன் திருடன், வரதராஜலு ஏறுகிறதே கருடன்.
5583 வழிநடை வார்த்தை வாகனம் போல.
5584 வழியிலே கண்ட குதிரைக்கு வைக்கோற் பழுதை கடிவாளம்.
5585 வழியிலே கிடக்கிற கோடாலியை எடுத்துக்காலின்மேல் போட்டுக்கொள்வானேன்?
5586 வழியே ஏறுக வழியே மீளுக.
5587 வழியே போய் வழியே வந்தால் அதிகாரி செங்கோல் என்ன செய்யும்?
5588 வழியே போகிற சனியனை வாரத்துக்கு வாங்கினாற்போல.
5589 வழி வழியாய்ப் போகும் போது விதி விதியாய் வருகிறது.
5590 வழுக்கி விழாத குதிரை வளமான குதிரை.
5591 வழுவழுத்த உறவைப் பார்க்கிலும் வைரம் பற்றிய பகை நன்று.
5592 வளரும் காய் பிஞ்சிலே தெரியும்.
5593 வளர்த்த கடா மார்பிற் பாய்ந்தது போல.
5594 வளர்த்த நாய் முகத்தைப் பார்க்கிறதுபோல.
5595 வளர்ப்பு வக்கணை அறியாது.
5596 வளவன் ஆயினும் அளவு அறிந்து அளித்து உண்.
5597 வளைந்த மூங்கில் அரசன் முடிமேல், வளையாத மூங்கில் கழைக்கூத்தர் காலின் கீழ்.
5598 வறியோருக்கு அழகு வறுமையிற் கேண்மை.
5599 வறுத்த பயறு முளைக்குமா?
5600 வறுமை கண்டவர் வையத்தில் அநேகர்.
5601 வறுமை வந்தால் பத்தும் பறந்துபோம்.
5602 வறுமைக்கு மூதேவியும் செல்வத்திற்குச் சீதேவியும்.
5603 வனந்தரத்து நுழைநரிகள் இடையர்களின் தீர்க்க விரோதிகள்.
5604 வன் சொல் வணக்கத்திலும் இன்சொல் வணங்காமை நலம்.

Tamil Proverbs – லோ


We are proud to present the biggest collection of Tamil proverbs.(லோ-வரிசை)
Here is the link for popular Proverbs : Popular Tamil Proverbs
 

5480 லோபிக்கு இரு செலவு.

Tamil Proverbs – ல


We are proud to present the biggest collection of Tamil proverbs.(ல-வரிசை)
Here is the link for popular Proverbs : Popular Tamil Proverbs
 

5479 லங்கணம் பரம ஒளஷதம்.

Tamil Proverbs – ர


We are proud to present the biggest collection of Tamil proverbs.(ர-வரிசை)
Here is the link for popular Proverbs : Popular Tamil Proverbs
 

5478 ரண்டாட்டில் ஊட்டின குட்டியாய்த் தீர்ந்தது.

Tamil Proverbs – யு


We are proud to present the biggest collection of Tamil proverbs.(யு-வரிசை)
Here is the link for popular Proverbs : Popular Tamil Proverbs
 

5477 யுகமுடிய மழை பெய்தாலும் ஒட்டாங்கிளிஞ்சில் கரையுமா?