Tamil Proverbs – யா


We are proud to present the biggest collection of Tamil proverbs.(யா-வரிசை)
Here is the link for popular Proverbs : Popular Tamil Proverbs
 

5467 யாதி முற்றினால் வியாதி.
5468 யானை கறுத்தால் ஆயிரம் பொன் பெறும், பூனை கறுத்தால் என்ன பெறும்?
5469 யானைக்கு அறுபது அடி, அருங் குள்ளனுக்கு எழுபது அடி.
5470 யானை தன் தலையில் மண்ணை வாரிக் கொட்டிக்கொள்கிறது போல.
5471 யானை தின்ற விளாங்கனிபோல.
5472 யானை மிதிக்கப் பிழைப்பார்களா?
5473 யானை முன்னே முயல் முக்கினதுபோல.
5474 யானை முதலான பெரிய ஜெந்துக்கள் தாழ விழுந்தால் பிழைக்கா, அதுபோல, பெரியோர் கீழே விழுந்தால் தேறமாட்டார்.
5475 யானையை ஆயிரம் பொன்னுக்கு வாங்கி இருப்பு அங்குசத்திற்கு ஏமாந்து நிற்பான் ஏன்?
5476 யானையைத் தேடக் குடத்துக்குட் கை வைத்ததுபோல.

Tamil Proverbs – மௌ


We are proud to present the biggest collection of Tamil proverbs.(மௌ-வரிசை)
Here is the link for popular Proverbs : Popular Tamil Proverbs
 

5465 மௌனம் கலக நாசம்.
5466 மௌனி குடியைக் கெடுப்பாள்.

Tamil Proverbs – மோ


We are proud to present the biggest collection of Tamil proverbs.(மோ-வரிசை)
Here is the link for popular Proverbs : Popular Tamil Proverbs
 

5456 மோகத்தை முனி.
5457 மோகம் முப்பது நாள் ஆசை அறுபது நாள்.
5458 மோகனக் கல் ஆனாலும் பறு ஏறினால் உடையாதா?
5459 மோசம் பாய் போட்டுத் தூங்குகிறது.
5460 மோந்துகொள்வதுபோல் கடிக்கிறது.
5461 மோருக்குப் போகிறவருக்கு முட்டி பிறகாலேயோ?
5462 மோருக்குப் போய் மொந்தையை ஒளிப்பான் ஏன்?
5463 மோரோ என்கிறவன் கழுத்தில் லிங்கம் கட்டினது போல.
5464 மோனம் என்பது ஞானவரம்பு.

Tamil Proverbs – மொ


We are proud to present the biggest collection of Tamil proverbs.(மொ-வரிசை)
Here is the link for popular Proverbs : Popular Tamil Proverbs
 

5441 மொட்தை தலைக்கும் முழங்காலுக்கும் முடி இட்டதுபோல.
5442 மொட்டைத் தலையில் பட்டம் கட்டி ஆள வந்தானோ?
5443 மொட்டைத் தலையில் பேன் சேருமா?
5444 மொட்டைத் தலையிற் பேய் வருமா?
5445 மொட்டைத் தலையிற் பேன் போல.
5446 மொட்டைத் தலையன் போருக்கு அஞ்சான்.
5447 மொட்டைத் தலைக்கு ஒரு கொட்டுக் கூடை, மோழைத் தலைக்கு ஒரு தாற்றுக் கூடை.
5448 மொட்டைத் தலையன் முழு மோசக்காரன்.
5449 மொட்டைச்சிக்குத் தகுந்த மூக்கறையன்.
5450 மொண்டு ஆளுகிற வீட்டில் கொண்டு ஆண்டால் நிறையுமா?
5451 மொத்தைச் சோற்றுக்கு மேளம் அடிக்கிறான்.
5452 மொழி தப்பினவன் வழி தப்பினவன்.
5453 மொழி தவறதான் வழி தவறாதான்.
5454 மொழிவது மறுக்கின், அழிவது கருமம்.
5455 மொழிவது அற மொழி.

Tamil Proverbs – மை



We are proud to present the biggest collection of Tamil proverbs.(மை-வரிசை)
Here is the link for popular Proverbs : Popular Tamil Proverbs
 

5438 மை கரையாமல் முதுகு ஆட்டு
5439 மைவிழயாடனைக் கையகன்றொழுகு.
5440 மைவிழியார் மனையகல்.

Tamil Proverbs – மே



We are proud to present the biggest collection of Tamil proverbs.(மே-வரிசை)
Here is the link for popular Proverbs : Popular Tamil Proverbs
 

5423 மேட்டிமைக்காரருக்கு எதிர்த்து நிற்கவேண்டும், மெத்தனக்காரருக் கிருபை அளிக்கவேண்டும்.
5424 மேட்டுக்காகப் பயமாம், வீதி வழியில் திகிலாம்.
5425 மேயப் போகிற மாடு கொம்பிலே புல்லைக் கட்டிக்கொண்டு போகிறதா?
5426 மேய்கிற மாட்டை நக்குகிற மாடு கெடுத்தாற்போல.
5427 மேய்கிற கழுதையைக் கூவுகிற கழுதை கெடுத்ததாம்.
5428 மேய்க்கும் மேய்ப்பனை வியக்கும் வாயன்.
5429 மேய்த்தால் மைத்துனியை மேய்ப்பேன் இல்லாவிட்டாற் பரதேசம் போவேன்.
5430 மேய்த்தாற் கழுதை மேய்ப்பேன் இல்லாவிட்டால் பரதேசம் போவேன்.
5431 மேலாம் மினுக்கியைக் கொண்டவன் கெட்டான், மேட்டிலே பயிரிட்டவன் கெட்டான்.
5432 மேலைக்கு வாழ்க்கைப்படுகிறேன் கழுத்தே சும்மா இரு.
5433 மேலைக்கு உழுவார் கூழுக்கு அழுவார்.
5434 மேழச் செல்வம் கோழைபடாது.
5435 மேனி ஒறுப்பே ஞானி நினைப்பு.
5436 மேன் மக்கள் சொற் கேள்.
5437 மேன்மையின் மேன்மையன் மேலாம் பதவியன்.