Tamil Proverbs – மெWe are proud to present the biggest collection of Tamil proverbs.(மெ-வரிசை)
Here is the link for popular Proverbs : Popular Tamil Proverbs
 

5406 மெத்தப் படித்தவருக்குச் சோறு வெல்லம்.
5407 மெத்தப் படித்தவன் பையித்தியக்காரன்.
5408 மெத்தப் பரிவாம் உள்ளே எரிவாம்.
5409 மெத்தெனப் படுத்தல் நித்திரைக்கு அழகு.
5410 மெய்கொண்டு விழிக்கிறது பொய்கொண்டு பொரிகிறது.
5411 மெய் சொல்லி வாழாதான் பொய் சொல்லி வாழ்வானா?
5412 மெய்த் தொழில் என்றும் மெய் பயக்கும்.
5413 மெய்பபொருள் கல்வியே கைப்பொருள்.
5414 மெய் மூன்றாம் பிறை, பொய் பூரண சந்திரன்.
5415 மெய்மை சாற்ற வையம் ஏற்றும்.
5416 மெய்யது நன்றி இடும்.
5417 மெய்யான சத்தியன் வேதவாசகன்.
5418 மெய்யுடை ஒருவன் சொல்லமாட்டாமையால் பொய்போலும்மே பொய்போலும்மே.
5419 மெலிந்தவளுக்கு மெத்தப் பெலன், மேனி மினுக்கு இட்டவளுக்கு மெத்தக் கசம்.
5420 மெல்லப பாயும் தண்ணீர் கல்லையும் குழியப் பாயும்.
5421 மெல்லியாடோள்சேர்.
5422 மெழுகின வீட்டிலே நாய் புகுந்தது போல.

Tamil Proverbs – மூWe are proud to present the biggest collection of Tamil proverbs.(மூ-வரிசை)
Here is the link for popular Proverbs : Popular Tamil Proverbs
 

5371 மூக்கிலிக்குக் கண்ணாடி காட்டினது போல.
5372 மூக்கறையனுக்கு வாழ்க்கைப்பட்டால் முன்னும் போகவிடான் பின்னும் போகவிடான்.
5373 மூக்கு அறுபட்ட கழுதை தூவானத்திற்கு அஞ்சாது.
5374 மூக்குப் புண்ணாளி அல்லவோ தாசரி ஆகவேண்டும்?
5375 மூக்கு மயிர் பிடுங்கினதுபோல வருத்தம் வரும்.
5376 மூக்கு மயிர் பீpடுங்கினால் ஆட்பாரம் குறையுமா?
5377 மூக்கைப் பிடித்தால் சீவன் போகிறது.
5378 மூக்கைப் பிடித்தால் வாய் ஆ வென்னத் தெரியாது?
5379 மூங்கிற் பாயும் முறட்டுப் பெண்டாட்டியும்.
5380 மூங்கில் இலைமேலே தூங்கு பனி நீரே.
5381 மூடரோடு ஆடிய நட்புக் கடுவழியிற் கட்டை ஊடாடிய கால்.
5382 மூடர் முன்பு மூர்க்கம் பேசாதே.
5383 மூடர்கள் சேர்க்கையால் தப்பாமல் கெடுதி வரும்.
5384 மூடர் கூட்டு உறவு முழுதும் அபாயம்.
5385 மூடனாய் இருக்கிற பிள்ளையினாலே எப்போதும் நஷ்டமே வரும்.
5386 மூடனுடைய பங்கு தரித்திரமும் இகழ்ச்சியும்.
5387 மூடன் சண்டை மூட்டுப் பிரிக்கும், மோர்க்கடன் வீட்டைத் தொடும்.
5388 மூடின முத்து மூன்று லோகம் பெறும், மூடாத முத்து முக்காற் காசும் பெறாது.
5389 மூட்டைக்காரனுக்கு முழங்காலிலே புத்தி.
5390 மூத்தது மோழை இளையது காளை.
5391 மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்.
5392 மூப்பிலும் தருமம் செய்தல் முயற்சிதான்.
5393 மூப்பு ஏன் பிடிப்பது, மூதேவி வாசத்துக்கு அடையாளம்.
5394 மூர்க்கனும் முதலையும் சரி.
5395 மூர்க்கன் முகத்தில் மூதேவி குடி இருப்பாள்.
5396 மூர்க்னைச் சோந்தவன் வாழான், மூடனைச் சேர்நதவன் படியான.
5397 மூர்க்கம் உள்ள ராஜாவும் மூட மந்திரியும் அழிவார்கள்.
5398 மூர்க்கரோடு இணங்கேல்.
5399 மூலிகை அறிந்தால் மூன்று உலகமும் ஆளலாம்.
5400 மூன்றாம் கட்டு அவிழ்த்தால் தெரியும்.
5401 மூன்று முழமும் ஒரு சுற்று, முப்பது முழமும் ஒரு சுற்று.
5402 மூன்று வீட்டுக்கு முக்காலி நாலு வீட்டுக்கு நாற்காலி.
5403 மூன்று பெயர் வழக்குத் துணை, இரண்டு பெயர் பிணையால் மாடு, ஒருவன் போனால் பரதேசி.
5404 மூன்று பொருளையும் தேடு முதிர்வயதில் ஊன்றுகொல் ஆகும்.
5405 மூன்றே முக்கால் நாழிகைக்குள் முத்து மழை பெய்தது, வாரி எடுக்குமுன்னே மண்மாரி பெய்தது.

Tamil Proverbs – முWe are proud to present the biggest collection of Tamil proverbs.(மு-வரிசை)
Here is the link for popular Proverbs : Popular Tamil Proverbs
 

5282 முகக் கோணலுக்குக் கண்ணாடி பார்த்தால் தீருமா?
5283 முகத்துக்கு முகம் கண்ணாடி.
5284 முகத்துக்கு அஞ்சி மூத்தாரோடு போனால் குல்த்துக்கு எல்லாம் ஈனமாம்.
5285 முகம் ஆகாதிருநதால் கண்ணாடி என்ன செய்யும்?
5286 முகம் சந்திர பிம்பம், அகம் பாம்பின் விஷம்.
5287 முக்காட்டுக்குள் சமுதாடா?
5288 முக்காட்டுக்குள் கைகாட்டா?
5289 முக்காதம் சமந்தாலும் முசல் கைத்தூக்குத்தான்.
5290 முக்காலம் காகம் முழுகிக் குளித்தாலும் கொக்கு ஆகாது.
5291 முக்காலம் காகம் முழுகிக் குளித்தாலும் கொக்கு ஆகுமா?
5292 முக்கூட்டுச் சிக்கு அறாது.
5293 முசலை எழுப்பி விட்டு, நாய் பதுங்கினது போல.
5294 முடப்புல் முக்கல நீரைத் தடுக்கும்.
5295 முடவனுக்கு நொண்டி சண்டப்பிரசண்டன்.
5296 முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டதுபோல.
5297 முடவன் சந்தைக்குப் போனாற்போல.
5298 முடிககாதவனே படிக்காதவன்.
5299 முடிச்சுப் போனதும் அல்லாமல இளித்தவாய்ப்ட்டமும் கூடக்கிடைத்தது.
5300 முடிய முடிய நட்டால் கோட்டை கோட்டையாய விளையுமா?
5301 முடியம் வகை யோசியாமல் முயற்சி கொள்ளாதே.
5302 முடி வைத்த தலைக்குச் சுழிசுத்தம் பார்க்கிறது, கொண்டு குலம் பேசுகிறதுபோல் இருக்கிறது.
5303 முடட நனைந்தவனுக்கு ஈரம் இல்லை, முழுதும் கெட்டவனுககுத் துக்கம் இல்லை.
5304 முட்டரோடாடிய நட்புக் கருங்காலிக் கட்டை ஊடாடிய கால்.
5305 முட்டற்ற பெண்ணுக்கு இரட்டைப் பரியமா?
5306 முட்டாளுக்கு இரண்டு ஆள்.
5307 முட்டாளுக்குக் கோபம் மூக்கின்மேலே.
5308 முட்டிகைபோல முனியாது வைகலும், கொட்டி உண்பாரும் குறடுபோற் கைவிடுவார்.
5309 முடடி ஊட்டின கன்று முதர்க் கன்று.
5310 முட்டுக்கு முட்டல்ல மூடக் கதவும் அல்ல, சன்னிதிவாசலுக்குச் சார்த்தக் கதவும் அல்ல.
5311 முட்டுப்பட்டும் ஜெயம் வருமானால் குட்டுப்பட்டாற் குறை என்ன?
5312 முதலில எடுத்துச் செலவிடாதே.
5313 முதலிலே கெட்டிக்காரன் முடிவிலே சோம்பேற.
5314 முதலுக்கு மோசமாக இருக்கிறது இலாபத்துக்குச் சண்டை போடுகிறதா?
5315 முதலே துர்ப்பலை அதிலே கர்ப்பிணி.
5316 முதலைக்கு இல்லை நீச்சும் நிலையும்.
5317 முதலை தன் இடத்து, மலை ஒத்த ஆனையையும் இழுத்துச் செல்லும்.
5318 முதலை வைத்துப் பெருக்காத வணிகரைப்போல.
5319 முதல் இல்லாருக்கு ஊதியம் இல்லை, மதலையாம் சார்பில்லாருக்கு நிலை இல்லை.
5320 முதல் இல்லாருக்கு ஊதியம் இல்லை.
5321 முதல் எடுக்கும்போதே தப்பட்டைக்காரன் செத்தான்.
5322 முதல் எழுத்திலே வெள்ளெழுத்தா?
5323 முதற் கோணல் முற்றம் கோணல்.
5324 முதுகிலே புண் உண்டானால் செடியிலே நுழையப் பயம்.
5325 முத்தல் நத்தை பெருமைப்படும், மூடர் எத்தாலும் பெருமைப்படார்.
5326 முத்திலும் சொத்தை உண்டு, பவழத்திலும் பழுது உண்டு.
5327 முந்தி வந்த செவியைப் பிந்தி வந்த கொம்பு மறைத்ததாம்.
5328 முந்தினோர் பிந்தினோர் ஆவர் பிந்தினோர் முந்தினோர் ஆவர்.
5329 முந்தின சோத்தைத் தட்டினால் பிந்தின சோறு பீயும் சோறும்.
5330 முந்நாழி கறக்கிற பசுவானாலும் இறப்பைப் பிடுங்கிற பசு ஆகாது.
5331 முப்பதிலே மூர்க்கம், நாற்பதிலே நாகரீகம்.
5332 முப்பது பணம் கொடுத்தாலும் மூளிப்பட்டம் போகாது.
5333 முப்பதிலே வாழ்ந்தவன் மூடன், முன்னும் பின்னும் தெரியாதவன் குருடன்.
5334 முப்பணி இட்ட பெண்ணுக்குக் கொப்பு ஒன்றுதான் குறை.
5335 முப்பது வருஷம் வாழ்ந்தவனும் இல்லை, முப்பது வருஷம் தாழ்ந்தவனும் இல்லை.
5336 முப்பொருள் ஆதி மூலமானவன்.
5337 முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.
5338 முரட்டுப் பெண்ணும் சுருட்டுப் பாயும்.
5339 முருக்குப் பருத்து என்ன தூணாகப் போகிறதா?
5340 முருங்கைக்காய் என்றால் பத்தியம் முறியுமா?
5341 முலைகொடுத்து வளர்த்தவள் மூதேவி, மூன்றானை போட்டவள் சீதேவி.
5342 முலைக் குத்துச் சவலைப் பிள்ளைக்குத் தெரியுமா?
5343 முழங்கையிற் பட்ட சுகம்போல.
5344 முழுகி முப்பது நாளாச்சு, இறங்கி உப்பு அள்ளக்கூட இல்லை என்கிறான்.
5345 முழுக்கட்டி பெயர்க்கிற பன்றிக்குக் கொழுக் கட்டி விட்டது போல.
5346 முழச் சோம்பேறி முள்ளு உள்ள வேலி.
5347 முழுப் பங்குக்காரனுக்கு முந்திரிப் பங்குக்காரன் மிண்டன்.
5348 முழுப் பூசணிக்காயைச் சோற்றிலே மறைக்கிறாப்போல.
5349 முழு மணிப் பூணுக்குப் பூண் வேண்டுமா?
5350 முளைத்த மயிர் மூன்று அதிலும் இரண்டு புழவெட்டு.
5351 முளையில் கிள்ளாததை முற்றினால் கோடரிகொண்டு வெட்ட வேண்டும.
5352 முள்ளாலே முள்ளை எடுக்கவேண்டும்.
5353 முள்ளுக்குக் கூர்மையும் துளசிக்கு வாசனையும் இயற்கை.
5354 முள்ளுக்கு முனை சீவி விடுவார்களா?
5355 முள்ளுமெல் சீலை போட்டால் மௌள மௌள வாங்கவேண்டும்.
5356 முறத்தடி பட்டாலும் முகத்தடி படலாகாது.
5357 முற்பகல் செய்யிற் பிற்பகல் விளையும்.
5358 முற்றும் நனைந்தவர்களுக்கு ஈரம் ஏது?
5359 முனை முகத்து நில்லேல்.
5360 முன் அளந்த நாழி பின் அளக்கும்.
5361 முன் ஓன்று ஓதிப் பின் ஒன்று ஆடேல்.
5362 முன் கை நீண்டால் முழங்கை நீளும்.
5363 முன் கோபம் பின் இரக்கம்.
5364 முன் விட்டுப் பின் நின்று கழுத்து அறுக்கலாமா?
5365 முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ?
5366 முன்னேபோனால் கடிக்கிறது பின்னே போனால் உதைக்கிறது.
5367 முன்னே பார் பின்னே பார் உன்னைப் பார் என்னைப் பார்.
5368 முன்னே போனால் சிசுவத்தி பின்னே போனால் பிரமத்தி.
5369 முன்னேரம் கப்பற்காரன் பின்னேரம் பிச்சைக்காரன்.
5370 முன்னே வந்த காதைப்பார்க்கிலும் பின்னே வந்த கொம்பு பலம்.

Tamil Proverbs – மீWe are proud to present the biggest collection of Tamil proverbs.(மீ-வரிசை)
Here is the link for popular Proverbs : Popular Tamil Proverbs
 

5276 மீகாமன் இல்லா மரக்கலம் ஒடாது.
5277 மீதூண் விரும்பேல்.
5278 மீந்த சுண்ணாம்பையும் மெலிந்த ராஜாவையும் கைவிடல் ஆகாது.
5279 மீனை மீன் விழுங்கினாற்போல்.
5280 மீன் குஞ்சுக்கு நீச்சுப் பழக்குகிறதா?
5281 மீன் குழம்போ தேன் குழம்போ?

Tamil Proverbs – மிWe are proud to present the biggest collection of Tamil proverbs.(மி-வரிசை)
Here is the link for popular Proverbs : Popular Tamil Proverbs
 

5256 மிகுதி ஆசை அதிக ந்ஷ்டம்.
5257 மிகுதி உள்ளவனுக்கும் வஞ்சனைக்காரனுக்கும் பகை, வேதக்காரனுக்கும் உகைத்திற்கம் பகை.
5258 மிகுந்தும் குறைந்தும் நோய் செய்யும்.
5259 மிகைபடச் சொல்லேல்.
5260 மிஞ்சினது கொண்டு மேற்கே போகல் ஆகாது.
5261 மிஞ்சிய கருமம் அஞ்சச் செய்யம்.
5262 மிடி இதயங்கொள் மீளாக் கதி தொடா.
5263 மிடிமையிலும் படிமை நன்று.
5264 மிடுக்கன் சரக்கு இருக்க விலைப்படும்.
5265 மிதித்தாரைக் கடியாத பாம்பு உண்டா?
5266 மிருகங்களில் ஆனை பெரிது, அதிலும் சிங்கம் வலிது..
5267 மினுக்கு உள் அம்பு துன்பம் செய்யம், அதுபோல, அந்நதம் உள்ளவர்களும் துன்பத்தைத் தருவார்கள்.
5268 மினைக்கெட்ட அம்பட்டன் பூனையைச் சிரைத்தானாம்.
5269 மின்மினப்பூச்சி வெளிச்சத்துக்கு இருள்போமோ?
5270 மின்லைப்போல் பல்லை விளக்கானும், மினுக்கிக் கொள்வானும் பதர்.
5271 மின்னாமல் இடி விழுமா?
5272 மின்னாமல் மழை பெய்யுமா?
5273 மின்னாமல் முழங்காமல் இடி விழுந்ததுபோல.
5274 மின்னுவதெல்லாம் பொன் அல்ல.
5275 மின்னுக்கு எல்லாம் பின்னே மழை.

Tamil Proverbs – மாWe are proud to present the biggest collection of Tamil proverbs.(மா-வரிசை)
Here is the link for popular Proverbs : Popular Tamil Proverbs
 

5205 மா இருக்கிற மணத்தைப்போல் அல்லவோ கூழ் இருக்கிற குணம்.
5206 மா உண்டானால் பணிகாரம் சுடலாம்.
5207 மா ஏற மலை ஏறும்.
5208 மாடு திருப்பினவன் அர்ச்சுனன்.
5209 மாடு தின்னிக்கு வாக்குச் சுத்தம் உண்டா?
5210 மாடு முக்கிவர வீடு நக்கிவரும்.
5211 மாடு மேய்க்காமற் கெட்டது, பயிர் பார்க்காமற் கெட்டது.
5212 மாட்டின் வாழ்க்கை மூட்டையிலே.
5213 மாட்டுக்குப் பெயர் பெரிய கடா என்று.
5214 மாட்டைப் புல் உள்ள தலத்திலும், மனுஷனைச் சோறு உள்ள தல்ததிலும் இருக்க ஒட்டாது.
5215 மாட்டை மேய்த்தானாம் கோலைப் போட்டனாம்.
5216 மாணிக்கக் காலுக்கு மாற்றுக்கால் இருக்கிறது.
5217 மாதம் காதவழி மானாகத் துள்ளுவான்.
5218 மாதா செய்தது மக்களுக்கு.
5219 மாதா மனம் எரிய வாழாள் ஒரு நாளும்.
5220 மாத்திi தப்ப மிதிததால், கோத்திரம் கூறப்படும்.
5221 மாப் புளிககிறது எல்லாம் பணிகாரத்துக்கு நலம்.
5222 மாப் பொன் இருக்க மக்களைச் சாவக் கொடுப்பேனா,
5223 மா மறந்த கூழுக்கு உப்பு ஒரு கேடா?
5224 மாமி ஒட்டினாலும் பானை ஒட்டாது.
5225 மாமியார் உடை குலைந்தால் வாயாலும் சொல்லக்கூடாது, கையாலும் காட்டக்கூடாது.
5226 மாமியார் உடைத்தால் மண்கலம், மருமகள் உடைத்தால் பொன்கலம்.
5227 மாமியாரைக் கண்டு மருமகன் நாணுகிறது போல.
5228 மாமியார் செத்த ஆறாம் மாதம் மருமகள் கண்ணில் கண்ணீர் வந்ததாம்.
5229 மாமியார் செத்து மருமகள் அழுகிறதுபோல.
5230 மாமியாரும் சாகாளோ மனக்கவலையும் தீராதோ?
5231 மாமியார் வீடு மகா சௌக்கியம்.
5232 மாயக்காரர் எல்லாம் பாதகர், மாறுபாட்டுகாரர் எல்லாம் சாதகர்.
5233 மாயக்காரன் பேயிற் கடையே.
5234 மாரி அல்லது காரியம் இல்லை.
5235 மாரி காலத்தில் பதின் கல மோரும், கோடை காலத்தில் ஒரு படி நீரும் சரி.
5236 மார் அடித்த கூலி மடிமேலே.
5237 மார்பு சரிந்தால் வயிறு தாங்க வேண்டும்.
5238 மார்பைத் தட்டி மனதிலே வை.
5239 மாலை குளித்து மனையில் புகும், தன் மனையில் ஆரையும் சேர்க்காது.
5240 மாலை சுற்றிப் பெண் பிறந்தால் மாமனுக்கு ஆகாது.
5241 மாலை சுற்றிப பிறந்த பிள்ளை மாமனுக்கு ஆகாது.
5242 மாவிலும் ஒட்டலாம் மாங்காயிலும் ஒட்டலாம்.
5243 மாவுக்கு தக்க பணிகாரம்.
5244 மாவைத் தின்றால் அப்பம் இல்லை.
5245 மாற்றிலே வளைவது மரத்திலே வளையுமா?
5246 மாற்றானுக்கு இடம் கொடேல்.
5247 மானத்தின் மேலே கண்ணும் மாப்பிள்ளை மேலே சிந்தையும்.
5248 மானத்தை வில்லாய் வளைப்பான் மணலைக் கயிறாய்த் திரிப்பான்.
5249 மானம் அழியில் உயிர் காவலா?
5250 மானம் பெரிதோ, சீன் பெரிதோ?
5251 மானிலம் சிலரைத் தாங்ககேன் என்னுமோ?
5252 மானுக்கு ஒரு புள்ளி ஏறி என்ன, குறைந்து என்ன?
5253 மானுஷியம இல்லாதவன் மனுஷப்பதர்.
5254 மான் கண்ணிலும் அழகு விரைவிலும் விரைவு.
5255 மான் கூட்டத்தில் புலி புகுந்ததுபோல.