Tamil Proverbs – பௌWe are proud to present the biggest collection of Tamil proverbs.(பௌ-வரிசை)
Here is the link for popular Proverbs : Popular Tamil Proverbs
 

5048 பௌவத்து எழில்கோள்.
5049 பௌவப் பெருமை தெய்வச் செயலே.
5050 பௌவம் உற்றது ஆக்கை, செவ்வை அற்றது வாழ்க்கை.
5051 மகதேவர் ஆடு இடித்துப் பேயும் ஆடுகிறது.
5052 மகளுக்குப் புத்தி சொல்லித் தாய் அவசாரி போனாளாம்.
5053 மகள் செத்தாள் தாய் திக்கு அற்றாள்.
5054 மகள் செத்தாற் பிணம் மகன் செத்தாற் சவம்.
5055 மகன் செத்தாலும் சாகட்டும் மருமகள் கொட்டம் அடங்கினாற் போதும்.
5056 மகாமகம் பன்னிரண்டு வருஷத்திற்கு ஒரு விசை.
5057 மகா மேருவைச் சேர்ந்த காகமும் பொன்னிறமாம்.
5058 மகா ராஜாவின் கல்யாணத்தில் நீராகாரம் நெய் பட்டபாடு.
5059 மகா லட்சமி பரதேசம் போனதுபோல.
5060 மகிமை சுந்தரி கதவை ஒஞ்சரி.
5061 மகிமைக்கு அஞ்சிய மருமகனே எருமைக் கன்றைக் கொல்லாதே.
5062 மகிமைடபட்டவனுக்கு மரணம், மாட்டுக்காரப்பையனுக்குச் சரணம்.
5063 மகிமையிலே ஒரு பெண் குவளையிலே வாழுகிறாள், அதில் ஒரு பெண் அறுத்துவிட்டு அழுகிறாள்.
5064 மக்கள் களவும் வரகு பதரும் சரி.
5065 மக்கள் சோறு தின்றால் மகிமை குறையும்.
5066 மக்காவுக்குப் போய்க் கொக்குப் பிடித்ததுபோல.
5067 மங்கமாரி வந்தார் தங்க மழை பெய்தது.
5068 மங்கும் காலம் மாங்காய் பொங்கும் காலம் புளியங்காய்.
5069 மங்கை தீட்டானால் கங்கையிலே முழுகுவாள் கங்கை தீட்டானால் எங்கே முழுகுவாள்?
5070 மச்ச்த்தின் குஞ்சுக்கு இப்படி என்றால், மாதாவுக்கு எப்படியோ?
5071 மச்சானைப் பார்க்க உதவும் இல்லை, மயிரைப் பார்க்கக் கறுப்பும் இல்லை.
5072 மச்சான் செத்தால் மயிர் போச்சு கம்பளி மெத்தை நமக்கு ஆச்சு.
5073 மச்சை அழித்தால் குச்சுக்கும் ஆகாது.
5074 மஞ்சனமும் மலரும் கொண்டு துதிக்காவிட்டாலும் நெஞ்சகத்தில் நினைப்பதே போதகம்.
5075 மடக்கிழவனிலும் புத்தி உள்ள வாலிபன் அதிகம்.
5076 மடக் கேழ்விக்கு மாறுத்தரம் இல்லை.
5077 மடப் பெருமையே தவிர நீராகாரத்துக்கும் வழி இல்லை.
5078 மடம் பிடுங்கிக் கொண்டு போகும் போது நந்தவனத்துக்கு வழி எங்கே என்கிறான்.
5079 மடி மாங்காய் போடடடுத் தலை வெட்டலாமா?
5080 மடியிலே கனம் இருந்தால் வழியிலே பயம்.
5081 மடியைப் பிடித்துக் கள்ளை வார்த்து மயிரைப் பிடித்துக் காசு வேண்டுகிறதா?
5082 மட்டான போசனம் மனதிற்கு மகிழ்ச்சி.
5083 மட்டி எருக்கலை மடல் மடலாய் பூத்தாலும், மருக்கொழுந்து வாசனை வருமா?
5084 மட்டு இல்லாமற் கொடுத்தாலும் திட்டுக் கேட்கல் ஆகாது.
5085 மட்டைக் கரியையும் மடப்பள்ளியாரையும் நம்பப்படாது.
5086 மணலின்மேல் விழுந்த மழைத்துளி உடனே மறையும், அது போல, பொல்லாதவர்களுக்குச் செய்த உபகாரம் மறைந்து போம்.
5087 மணற் சோற்றில் கல் ஆய்வதுபோல.
5088 மணி நா அசையாமல் இராச்சியபாரம் பண்ணுகிறது.
5089 மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கலாமா?
5090 மண்டைக்குத் தகுந்த கொண்டை போட வேண்டும்.
5091 மண்டையில் எழுதி மயிரால் மறைத்தது போல.
5092 மண்டை உள்ளவரையில் சளி போகாது?
5093 மண்ணாயினும் மனை ஆயினும் காப்பாற்றினவர்களுக்கு உண்டு.
5094 மண்ணாங்கட்டி மாப்பிள்ளைக்கு எருமுட்டைப் பணிகாரம்.
5095 மண்ணால் ஆனாய் மண்ணாய் இருக்கிறாய்.
5096 மண்ணின்மேல் நின்று பெண் ஒரம் சொல்லாதே.
5097 மண்ணைத் தின்றாலும் மறையத் தின்.
5098 மண்ணோடே பிறக்கலாம் உன்னோடே பிறந்ததில்.
5099 மண் பறித்து உண்ணேல்.
5100 மண்பிள்ளை ஆனாலும் தன் பிள்ளை.
5101 மண் பூனை ஆனாலும் எலிப் பிடித்தால் சரி
5102 மண்வெட்டி கூதல் அறியுமா?
5103 மண்வேலையோ புணவேலையோ?
5104 மதலைக்கு இல்லைக் கீதமும் அறிவும்.
5105 மதன மலைக்கு ஒப்பிடலாம்.
5106 மதாபிமானம் சுசாதிமானம் தேசாபிமானம்.
5107 மதியாத வாசலில் மிதியாதிருப்பதே உத்தமம்.
5108 மதியும் உமது விதியும் உமது.
5109 மதியை மீன் சூழ்ந்தது போல.
5110 மதில்மேல் இருக்கிற பூனைபோல் இருக்கிறான்.
5111 மது பிந்து கலகம் போல் இருக்கிறது.
5112 மதுரைக்கு வழி வாயில் இருக்கிறது.
5113 மந்திரம் கால் மதி முக்கால்.
5114 மந்திரத்தில் மாங்காய் விழுமா?
5115 மந்திரம் இல்லான் பூசை அந்தி படுமளவும்.
5116 மந்திரிக்கு அழகு வரும் பொருள் உரைத்தல்.
5117 மந்திரி இல்லா யோசனையும் ஆயதம் இல்லாச் சேனையும் கெடும்.
5118 மந்தையிலும் பால் வீட்டிலும் தயிரா?
5119 மயிர் உள்ள சீமாட்டி வாரி முடிக்கிறாள்.
5120 மயிர் ஊடாடாதார் நட்புச் சிறிதுபொருள் ஊடாடக் கெடும்.
5121 மயிர் சுட்டுக் கரியாகிறதா?
5122 மயிர் பிளக்க வகைதேடினாற்போல.
5123 மயிலாப்பூர் ஏரி உடைத்துப்போகிறது என்றால், வருகிற கமிட்டிக்கு ஆகட்டும் என்றாற்போல.
5124 மயிலே மயிலே என்றால் இறகு கொடுக்குமா?
5125 மயிற் கண்ணிக்கு மசக்கை, மாப்பிள்ளைக்கு அவஸ்தை.
5126 மரணத்திலும் கெட்ட மார்க்கத்துக்குப் பயப்படு.
5127 மரணத்திற்கு வழி மட்டில்லை.
5128 மரத்தில் இருந்து விழுந்தவனை மாடு மிதித்ததுபோல.
5129 மரத்துப் பழம் மரத்து அடியிலே விழும்.
5130 மரத்தை இலை காக்கும் மானத்தைப் பணம் காக்கும்.
5131 மரநாயிலே புழுகு வழிகிகாலமா?
5132 மரம் தன்னை வெட்டுகிறவனுக்கு நிழல் கொடுக்கும்.
5133 மரம் வெட்டுகிறவனுக்கு நிழலும், மண் தோண்டுகிறவனுக்கு இடமும் கொடுக்கும்.
5134 மரம் ஏறிக் கை விட்டவனும், கடன் வாங்கிக் கட்ன் கொடுத்தவனும் கெட்டான்.
5135 மரம் வைத்தவன் தண்ணீர் வார்ப்பான்.
5136 மரியாதை இல்லாதான் மகிமை அற்றான்.
5137 மரியாள் குடித்தனம் சரியாய்ப்போச்சு.
5138 மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
5139 மருத்து மாவுக்குச் சயிக்கினை, மடங்காக் குதிரைக்குச் சவுக்கடி.
5140 மருந்து கால் மதி முக்கால்.
5141 மருந்தும் விருந்தும் மூன்று நாள்.
5142 மருந்தே ஆயினும் விருந்தோடு உண்.
5143 மருமகனுக்கென்று சமைத்ததை மகனுக்கு இட்டு வயிறு எரிந்தாளாம்.
5144 மருவில் தின்ற சாப்பாட்டை லங்கணத்தில் நினைத்துக்கொண்டதுபோல.
5145 மலடிக்குத் தெரியுமா பிள்ளையப் பெற்ற அருமை?
5146 மலடி அறிவாளா பிள்ளை அருமை?
5147 மலடியைப் பிள்ளை பெறச் சொன்னால் பெறுவாளா?
5148 மலரில் மணமும், எள்ளில் எண்ணெயும், உடலில் உயிரும் கலந்ததுபோல.
5149 மலிந்த பண்டம் கடையிலே பரும்.
5150 மலை அத்தனை சுவாமிக்குத் தினை அத்தனை புஷபம்.
5151 மாலை அத்தனை சுவாமிக்குத் மாலை அத்தனை புஷபம் போடுகிறார்களா?
5152 மாலை இலக்கானால் குருடனும் எய்வான்.
5153 மலை உச்சியில் கல் ஏற்றுதல் அரிது.
5154 மலை ஏறினாலும் மைத்துன்னைக் கை விடாதே.
5155 மலைத்தேன் முடவனுக்கு வருமா?
5156 மலை நெல்லிக்காய்க்கும் கடல் உப்புக்கும் உறவு செய்தவர் ஆர்?
5157 மலைபோலப் பிராமணன் போகிறனாம், பின்குடுமிக்கு அழுகிறானாம்.
5158 மலைபோல வந்ததெல்லாம் பனிபோல நீங்கும்.
5159 மலை முழங்கிச் சுண்டெலி பெற்றதுபோல.
5160 மலைமேல் இருப்பாரைப் பன்றி பாய்வது உண்டா?
5161 மலையில் விளைந்தாலும் உரலில் மசியவேண்டும்.
5162 மலையே மண்ணாங்கட்டி ஆகிறபோது, மண்ணாங்கட்டி எப்படி ஆகும்ஃ
5163 மலையே விழுந்தாலும் தலையே தாங்கவேண்டும்.
5164 மலையைக் கல்லி எலி பிடித்ததுபோல.
5165 மலையைச் சுற்றி அடித்தவனைச் செடியைச் சுற்றி அடியேனா?
5166 மலையைத் துளைக்க சிற்றுளி போதாதா?
5167 மலையைத் துளைக்க வாச்சி உளி வந்தாற்போல.
5168 மலையைப் பார்த்து நாய் குலைத்தால் மலைக்குக் கேடோ நாய்க்கு கேடோ?
5169 மலையை மலை தாங்கும் மண்ணாங்கட்டி தாங்குமா?
5170 மலை விழுங்கி அம்மையாருக்குக் கதவு சுண்டாங்கியா?
5171 மலை விழுங்குதற்கு மண்ணாங்கட்டி பச்சடியா?
5172 மல்லாந்து உமிழ்ந்தால் மார்மேலே.
5173 மவுனம் மலையைச்ச சாதிக்கும்.
5174 மவ் இடப் பவ் ஆயிற்று.
5175 மழைக்கால் இருட்டானாலும் மந்தி கொம்பு இழந்து பாயுமா?
5176 மழைக்குத் தண்ணீர் மொண்டு வார்பவர் ஆர்?
5177 மழைக்குப் படல் கட்டிச் சார்த்தலாமா?
5178 மழைக்கோ படல், இடிக்கோ படல்?
5179 மழை பெய்து நிறையாதது மொண்டு வார்த்தால் நிறையுமா?
5180 மழை முகம் காணாத பயிரும், தாய் முகம் காணாத பிள்ளையும்.
5181 மழையும் பிள்ளைப்பேறும் மகா தேவருக்கும் தெரியாது.
5182 மழை விட்டும் தூவான்ம் விட இல்லை.
5183 மறந்த உடைமை மக்களுக்கம் ஆகாது.
5184 மறந்து செத்தேன் பிராணன் வா என்றால் வருமா?
5185 மனக்கசடு அற மாயை நாடேல்.
5186 மனக் கவலை பலக்குறைவு.
5187 மனச்சாட்சி குற்றுமெல் மறுசாட்சி வேண்டாம்.
5188 மனதிலே பகை உதட்டிலே உறவு.
5189 மனதில் இருக்கும் ரகசியம் மதிகேடனுக்கு வாக்கிலே.
5190 மனதிற்கு மனதே சாட்சி, மற்றதற்குத் தெய்வம் சாட்சி.
5191 மனது அறியாப் பொய் உண்டா?
5192 மனத்துயர் அற்றேன் தினச்செபம் உற்றேன்.
5193 மனம் கொண்டது மாளிகை.
5194 மனம் தடுமாறேல்.
5195 மனம் இருந்தும் சற்று வகை அற்றுப்போவான்.
5196 மனிதர் காணும் பொழுது மவுனம், இராதபொழுதில் உருத்தி ராஷப்பூனை.
5197 மனிதன் மறப்பானக், குறைபடுவான், மாறுவான், போவான்.
5198 மனுஷன் தலையை மான் தலை ஆக்குகிறான் மான் தலையை மனுஷன் தலை ஆக்குகிறான்.
5199 மனையாள் விடியுமுன் எழுந்து வீட்டுப் பண் செய்வாள்.
5200 மனையாளுக்கு உற்றது ஒன்றும் சொல்லவேண்டாம, மாற்றானை ஒரு நாளும் நமப்வேண்டாம்.
5201 மனோ வியாதிக்கு மருந்து உண்டா?
5202 மன்னவர்ககள் செத்தார்கள், மந்திரிகள் செத்தார்கள் முன் இருந்தோர் எல்லாம் முடிந்தார்கள்.
5203 மன்னவர்கள் ஆண்டது எல்லாம் மந்திரிகள் ஆண்மை.
5204 மன்னவருக்கு அழகு செங்கோன் முறைமை.

Tamil Proverbs – போWe are proud to present the biggest collection of Tamil proverbs.(போ-வரிசை)
Here is the link for popular Proverbs : Popular Tamil Proverbs
 

5029 போக ஊரக்கு வழி கேள்.
5030 போகாத இடத்திலே போனால் வராத சொட்டு வரும்.
5031 போக்கணம் கெட்டவன் ராஜாவிலும் பெரியவன்.
5032 போக்கு அற்ற நாய்க்கு போனது எல்லாம் வழி.
5033 போசனம் சிறுத்தாலும் ஆசனம் பெருக்க வேண்டும்.
5034 போதகர் சொல்லைத் தட்டாதே, பாதகர் இல்லைக் கிட்டாதே.
5035 போதகருக்கே சோதனை மிஞ்சும்.
5036 போதும் என்ற மனமே பொன் செய்யம் மருந்து.
5037 போரில் ஊசி தேடின சம்பந்தம்.
5038 போரைக்கட்டிவைத்துப்போட்டுப் பிச்சைக்குப் போவானேன்?
5039 போரோடு தின்கிற மாட்டுக்குப் பிடுங்கிப் போட்டுக் கட்டுமா?
5040 போர்த்தொழில் புரியேல்.
5041 போர் பிடுங்குகிறவர்கள் பூரக்களம் சாடுகிறவர்களை மாட்டுகிறார்களாம்.
5042 போலைக்கு ஒரு பொன்மணி கிடைத்ததாம், அதைத் தூக்கக் கண்ணில் தொட்டுத் தொட்டுப் பார்த்ததாம்.
5043 போலை பொறுக்கப் போச்சாம் பூனை குறுக்கே போச்சாம்.
5044 போனகம் என்பது தான் உழைத்து உண்டல்.
5045 போன சுரத்தைப் புளி இட்டு அழைத்ததுபோல.
5046 போனதை நினைக்கிறவன் புத்தி கெட்டவன்.
5047 போன மாட்டைத் தேடுவாரும் இல்லை, மேய்த்த கூலி கொடுப்பாரும் இல்லை.

Tamil Proverbs – பொWe are proud to present the biggest collection of Tamil proverbs.(பொ-வரிசை)
Here is the link for popular Proverbs : Popular Tamil Proverbs
 

4970 பொக்கவாய்ச்சி மெச்சினாளாம் பொரிமாவை.
4971 பொங்கும் காலம் புளி பூக்கும், மங்கும் காலம் மா பூக்கும்.
4972 பொதி அளக்கிறதற்கு முன்னே சத்தத்திற்கு அளக்கிறதா?
4973 பொதியை வைத்து விட்டுப் பிச்சைக்குப் போனான், அதையும் வைத்து விட்டுச் செத்துக் கிடந்தான்.
4974 பொதி வைக்கிறதற்கு முன்னே சத்தத்திற்கு அளக்கிறதா?
4975 பொத்தைச் சுரைக்காய்போலே.
4976 பொய் இருந்து புலம்பும் மெய் இருந்து விழிக்கும்.
4977 பொய் உடை ஒருவன் சொல் வன்மையினால் மெய்போலும்மே மெய்போலும்மே.
4978 பொய் சொன்ன வாய்க்குப் போசனம் கிடையாது.
4979 பொய் சொன்ன வாய்க்குப் பொரியும் கிடையாது.
4980 பொய் சொல்லி வாழ்ந்தவனும் இல்லை, மெய் சொல்லிக் கெட்டவனும் இல்லை.
4981 பொய் மெய்யை வெல்லுமா?
4982 பொய்யான பொருளாசை மெய்யான அருளாசையை விலக்குகிறது.
4983 பொய்யும் ஒரு பக்கம் பொறாமையும் ஒரு பக்கம்.
4984 பொய்யைச் சொன்னாலும் பொருந்தச் சொல்லவேண்டும்.
4985 பொருடனைப் போற்றிவாழ்.
4986 பொருளாசையும் மனச்சாட்சியும் பொருந்துமா?
4987 பொருளும் கொடுத்துப் பழியம் தேட.
4988 பொருளும் போகமும் கூடவராது புண்ணியமே கூடவரும்.
4989 பொருள் போன வழியே துக்கம் போம்.
4990 பொல்லாத மனம் கேளாது.
4991 பொல்லாங்கு என்பவை எல்லாம் தவிர்.
4992 பொல்லாத காலம் சொல்லாமல் வந்தது.
4993 பொல்லாதவர்க்ள சினப்ப்ட்டால் கல்லின் பிளவுபோல ராசியாகமாட்டார்கள்.
4994 பொல்லாத குணத்துக்கு மருந்து உண்டா?
4995 பொல்லாதவர்கள் சங்காத்தம் உப்பு மணலில் வீழந்த நீர் போல.
4996 பொல்லாப் பிள்ளையில் இல்லாப் பிள்ளை.
4997 பொழுது பட்ட இடம் விடுதி விட்ட இடம்.
4998 பொழுது விடிந்தது பாவம் தொலைந்தது.
4999 பொறி வென்றவனே அறிவின் குரவாம்.
5000 பொறுதி என்பது கடலினும் பெரிது.
5001 பொறுத்தல் கசப்பாய் இருந்தாலும் பொறுக்கப் பொறுக்கத் தித்திப்பு.
5002 பொறுத்தார் பூமி ஆள்வார்.
5003 பொறுத்தார் அரசாள்வார் பொங்கினார் காடாள்வார்.
5004 பொறுமை புண்ணியதத்pற்கு வேர் பொருளாசை பாவத்திற்குவேர்.
5005 பொற்கலம் ஒலிக்காது வெண்கலம் ஒலிக்கும்.
5006 பொற்காப்புக்கு ஆசைப்பட்டுப் புலியின் கையில் அகப்பட்டது போல.
5007 பொற் பூவின் வாசனையும் முருக்கம் பூவின் வாசனையும் சரி.
5008 பொற் பூ வாசிக்குமா?
5009 பொன் ஆபரணத்தைப் பார்க்கிலும் புகழ் ஆபரணமே பெரிது.
5010 பொன் இரவல் உண்டு, பூ இரவல் உண்டா?
5011 பொன் என்றால் பிணமும் வாய் திறக்கும்.
5012 பொன்கத்தி என்று கழுத்து அறுத்துக்கொள்ளலாமா?
5013 பொன் காத்த பூதம்போலே.
5014 பொன்செருப்பு ஆனாலும் காலுக்குத்தான் போடவேண்டும்.
5015 பொன்மணி அற்றவளை அம்மணி என்பானேன்?
5016 பொன்முடி அல்லது சடை முடி வேண்டும்.
5017 பொன்னம்பலம் உண்டானால் என்ன அம்பலம் கிடையாது
5018 பொன்னம்பலத்துக்கும் புவனகிரிப் பட்டணத்துக்கும் என்றைக்கும் உண்டான இழவு.
5019 பொன்னாங்காணிக்குப் புளி விட்டு ஆக்கினால் உண்ணாக்கு எல்லாம் தித்திக்கும்.
5020 பொன்னாங்காணிக்குப் புளி விட்டு ஆக்கினால் உண்ணாக்கு எல்லாம் தித்திக்கும்.
5021 பொன்னான மனதைப் புண்ணாக்குகிறான்.
5022 பொன்னாலே கலம் உண்டானாலும் மண்ணாலே சுவர் வேண்டும்.
5023 பொன்னாலே மருமகளானாலும் மண்ணாலே ஒரு மாமி வேண்டும்.
5024 பொன்னின் கலப்பை வரகுக்கு உழப் போனதாம் வரகு சேருக்கு வரகு பட்டதாம்.
5025 பொன்னின் குடத்திற்குப் பொட்டு இட்டுப் பார்க்க வேண்டுமா?
5026 பொன்னின் குடம் உடைந்தாற் பொன் ஆகும் என்ன ஆகும் மண்ணின் குடம் உடைந்தாக்கால்?
5027 பொன்னை வைக்கிற கோயிலிலே பூவையாவது வைக்கவேண்டும்.
5028 பொன்னை எறிந்தாலும் பொடிக் கீரையை எறியலாமா?

Tamil Proverbs – பைWe are proud to present the biggest collection of Tamil proverbs.(பை-வரிசை)
Here is the link for popular Proverbs : Popular Tamil Proverbs
 

4964 பைசாசைப் பணியேல்.
4965 பைந்தமிழ்ப் புலவோர் பாட்டுக்கு ஏற்றவன்.
4966 பையச் சென்றால் வையம் தாங்கும்.
4967 பைய மிதித்தது வேடன் அடி, பதறி மிதித்தது பன்றி அடி.
4968 பைய மென்றால் பனையையும் மெல்லலாம்.
4969 iயிற் கட்டிவைத்த பொருள் பிறகொடுக்கப்பட்டது.

Tamil Proverbs – பேWe are proud to present the biggest collection of Tamil proverbs.(பே-வரிசை)
Here is the link for popular Proverbs : Popular Tamil Proverbs
 

4938 பேசப் பேச எந்தப் பாஷையும் வரும்.
4939 பேசாதிருந்தால் பிழை ஒன்றும் இல்லை.
4940 பேசில் அபலம் பேசாக்கால் ஊமை.
4941 பேச்சுக் க்ற்ற நாய் வேட்டைக்கு ஆகாது.
4942 பேச்சுக்கு இராவணன் பின்பு கும்பகர்ணன்.
4943 பேச்சுக்குப் பேச்சுச் சிங்காரமா?
4944 பேச்சை விற்றுக் காய்ச்சிக் குடிக்கிறான்.
4945 பேடி கையில் இருந்த ஆயதம் போல.
4946 பேடி கையில் வாள் போலே.
4947 பேதம் அற்றவர் நீதம் உற்றவர்.
4948 பேதைகள் வெள்ளத்திலே நின்றும் தாகத்திற்குத் தண்ணீருக்கு அலைவார்கள்.
4949 பேதைமை என்பது மாதருக்கு அணிகலம்.
4950 பேயானாலும் தாய், நீரானாலும் மோர்.
4951 பேயும் சிலது ஞாயம் பகரும்.
4952 பேய் ஆடிய கம்பம்போல.
4953 பேய் கொண்டாலும் பெண் கொள்ளல் ஆகாது.
4954 பேய்க்கு கள் வார்த்தது போல.
4955 பேய்க்கு வேப்பிலை போலே.
4956 பேய்க்கு வேலை இட்டது போல.
4957 பேய்க்கூத்தும் ஆமணக்கும் ஆள்போனால் ஆள் தெரியாது.
4958 பேய் சிரித்தாலும் ஆகாது அழுதாலும் ஆகாது.
4959 பேய் பிடிக்கவும் பிள்ளை பிழைக்கவுமா?
4960 பேய் போய்ப் புளியமரத்தில் ஏறினது போல.
4961 பேராசைக்காரனைப் பெரும்புளகால் வெல்லவேண்டும்.
4962 பேராசை பெரிய நஷ்டம்.
4963 பேர் இல்லாச் சன்னிதி பாழ், பிள்ளை இல்லாச் செல்வம் பாழ்.

Tamil Proverbs – பெWe are proud to present the biggest collection of Tamil proverbs.(பெ-வரிசை)
Here is the link for popular Proverbs : Popular Tamil Proverbs
 

4881 பெட்டியிற் பாம்புபொல் அடங்கினான்.
4882 பெட்டி பீற்றல் வாய்க் கட்டுத் திறம்.
4883 பெட்டைக் கோழி கூவியோ விடிகிறது?
4884 பெட்டைக் கோழி தட்டிக் கூவுமா?
4885 பெண் என்றால் பேயும் இரங்கும்.
4886 பெண்ணாசை ஒரு பக்கம் மண்ணாசை ஒரு பக்கம்.
4887 பெண்சாதி இல்லாதவன் பேயைக் கட்டித் தழுவினது போல.
4888 பெண்சாதியைத் தாய் வீட்டில் விட்டவனுக்கு ஒரு சொட்டு.
4889 பெண்சாதி காற்கட்டு, பிள்ளை வாய்க்கட்டு.
4890 பெண்டாட்டி கொண்டதும் திண்டாட்டம் பட்டதும் போதும்.
4891 பெண்டிருக்கு அழகு போசாதிருத்தல்.
4892 பெண்டுகள் சூத்துக்குப் புரிமணை.
4893 பெண்டுகளுக்குப் பெற்றார் இடத்திலும் பிள்ளைகள் இடத்திலும் மூப்பு இல்லை
4894 பெண்டுகள் சோற்றுக்குத் தண்டம் இல்லை.
4895 பெண்ணரம்பைக் கூத்துக்குப் போய்ப் பேய்க்கூத்து ஆச்சுதே.
4896 பெண்ணின் குணம் அறிவேன் சம்பந்தி வாய் அறிவேன்.
4897 பெண்ணுக்குப் பொன் இட்டுப்பார், சுவருக்கு மண் இட்டுப்பார்.
4898 பெண்ணுக்கும் பொன்னுக்கும் தோற்பு உண்டா?
4899 பெண்ணுக்குப் போய்ப் பொன்னுக்குப் பின்வாங்கலாமா?
4900 பெண்ணுக்கு மாமியாரும், பிள்ளைக்கு வாத்தியாரும்.
4901 பெண்ணைக் கொடுத்தவளோ கண்ணைக் கொடுத்தவளோ?
4902 பெண்ணைப் பிழை பொறுக்கப் பெற்றதாய் வேண்டாமோ?
4903 பெண்ணைக் கொண்டு பையன் பேயானான், பிள்ளை பெற்றுச் சிறுக்கி நாயானாள்.
4904 பெண்ணை வேண்டும் என்றால் இனியம் கண்ணை நக்கு.
4905 பெண் புத்தி கேட்கிறவன் பேய.
4906 பெண் புத்தி பின்புத்தி.
4907 பெண் வளர்த்தி பீர்க்கங்கொடி.
4908 பெரியாரைத் துணைக்கொள்.
4909 பெரியோர் எல்லாம் பெரியரும் அல்லர்.
4910 பெரியோர்முன தாழந்து பேசில், நாணலைப்போல் நிமிர்ந்து கொள்வார்கள்.
4911 பெரியயோர் முன் தாழ்ந்து பேசில், நாணலைப்போல் நிமிர்ந்து கொள்வார்கள்.
4912 பெருங் கயிறு முடி அழுந்தாது.
4913 பெருங்காயம் இருந்த பாண்டம்.
4914 பெருங்காற்றில் பீளைப்பஞ்சு பறக்கிறதுபோல.
4915 பெருங் குலத்தில் பிறந்தாலும் புத்தி அற்றவன் கரும்புப் பூப்போல.
4916 பெருங் கொடை பிச்சைக்காரருக்குத் துணிவு.
4917 பெரு நெருப்புக்கு ஈரம் உண்டா?
4918 பெரு மரத்தைச் சுற்றிய வள்ளிக்கொடி போல.
4919 பெரு மழை விழுந்தாற குளிராது.
4920 பெருமாள் இருக்கிற வரையில் திருநாள் உண்டு.
4921 பெருமாள் என்கிற பெயரை மாற்றப் பெரிய பெருமாள் ஆச்சுது.
4922 பெருமாளைச் சேர்ந்தோருக்குப் பிறப்பு இல்லை, பிச்சைக்சோற்றிற்கு எச்சில் இல்லை.
4923 பெருமான் நினைத்தால் வாழ்வு குறைவா, பிரமா நினைத்தால் ஆயுசு குறைவா?
4924 பெருமைதான் அருமையை குலைக்கும்.
4925 பெருமையான தரித்திரன் வீண்.
4926 பெருமை ஒரு முறம் புடைத்து எடுததால் ஒன்றும் இல்லை.
4927 பெருமையும் சிறுமையும் வாயால் வரும்.
4928 பெருமைக்கு ஆட்டை அடித்துப் பிள்ளை கையில் காதைச் சுட்டுக் கொடுத்தான்.
4929 பெரு ரூபத்தை உடையவரும் பிரயோசனமாய் இருக்கமாட்டார். அதுபோல, பனை விதை பெரிதாய் இருந்தும் நிழல் கொடுக்கமாட்டாது.
4930 பெரு வயிறு கொண்டது அறியாமல் சீமந்தத்திறகு நாள் இட்டுக் கொண்டான்.
4931 பெற்ற தாய் இடத்திலோ கற்ற வித்தை காட்டுகிறாய்?
4932 பெற்ற தாய் செத்தால் பெற்ற அப்பன் சிற்றப்பன்.
4933 பெற்ற தாய் பசித்திருக்கப் பிராமண போஜனம் செய்தது போல.
4934 பெற்றது எல்லாம் பிள்ளையா இட்டது எல்லாம் பயிரா?
4935 பெற்றது எல்லாம் பிள்ளையோ வனைந்தது எல்லாம் குசக்கலமோ?
4936 பெற்ற மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு.
4937 பெற்றோருக்கு இல்லைச் சுற்றமும் சினமும்.