தமிழ் சிறுகதையுலகில் மிக முக்கியமான ஆளுமைகளுள் ஒருவராக விளங்கியவர் எழுத்தாளர் அசோகமித்திரன். நான் மிகத் தாமதமாகவே இலக்கியச் சுழலுக்குள் இழுபட்ட தூசுஎனவே என் வாசிப்பு அனுபவம் மிகக் குறைவே. நான் அறிதலின் மிக ஆரம்ப கட்டத்தில் தான் இருக்கிறேன். இதனைச் சொல்லிக் கொள்வதில் எந்த வித தயக்கமும் எனக்கில்லை. வாசிப்பு அளவில் குறைந்ததெனினும் செறிவில் குறையாத வண்ணம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் எனக்கு உண்டு. எனவே மிக மெதுவாகவும், குறைவாகவும் வாசிப்பதே என் இயல்பாக மாறிப் போனது.

சமீபமாக அசோகமித்திரனின் மறைவிற்குப் பிறகு சக படைப்பாளிகளின் நினைவுகூறல்கள், அஞ்சலிக் கட்டுரைகள் என பலவற்றிலும் அவரது எளிமையும் அன்பும் குறித்து நிறைய தெரிந்து கொள்ளும் விதமாக பல பகிர்வுகளை வாசிக்க முடிந்தது. படைப்பாளியைப் பற்றிய பகிர்வில் அவரது படைப்புலகம் குறித்த சிலாகிப்புகள் இயல்பாகவே ஒட்டிக் கொள்ளும். படைப்புகளின் வழியே படைப்பாளி சிரஞ்சீவிதத்தை எய்துகிறார் என்பதேஎழுத்தின்தனித்துவம். நான் இதுவரையிலும் அசோகமித்திரனின் எழுத்தை வாசித்ததில்லை. பலரது பகிர்விலும், அவரது புனைவுலகம் சார்ந்த அல்லது எழுத்து நுட்பம் குறித்த பலரது நினைவிகூறல்களின் தவறாமல் இடம் பெற்ற ஒரு படைப்புபுலிக்கலைஞன்எனும் சிறுகதை. ஏறத்தாழ 272 சிறுகதைகளை தனது அறுபதாண்டு கால இலக்கிய வாழ்வில் அவர் எழுதியிருந்த போதிலும், இந்த ஒரு படைப்பு பலரையும் வசீகரித்திருந்ததை அவர்கள் பகிர்வுகளின் வழியே தெரிய வந்த பொழுது, அதன் மீதான ஆர்வமும் இயல்பாகவே ஒட்டி கொண்டது.
 
கதைச் சுருக்கம்
ஒரு சினிமா தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலகமே கதையில் களம். அங்கு முக்கியப் பொறுப்பில் இருக்கும் சர்மா என்பவரை வாய்ப்பு கேட்டு சந்திக்க வருகிற காதர் என்பவனைச் சுற்றி பின்னப்பட்டிருக்கிறது கதை. கதை சொல்லியாக நமக்கு நடப்பவை எல்லாவற்றையும் சொல்பவர் கதாபாத்திர தேர்வு இயக்குனரின் உதவியாளர்.
வழக்கமான ஒரு அன்றாடக் காலையில் வெள்ளை என்ற உதிரி நடிகர்களை (extras) கூட்டங்கூட்டமாய் படப்பிடிப்புகளின் தேவைக்கு ஏற்ப கூட்டி வருகிற ஏஜெண்ட் தன்னை சர்மாவைச் சந்திக்கச் சொன்னாதாகச் சொல்கிறான். துவக்கத்தில் அவனை மனம் நோகா வண்ணம் தட்டிக் கழிப்பது போலத்தான் சர்மாவின் அணுகுமுறை இருக்கிறது. தகவல்களை உதவியாளரிடம் கொடுத்து விட்டுப் போகுமாறு சொல்லி அவனைக் கிளப்பப் பார்க்கிறார். அவனோ விடாப்பிடியாக தனது தனித்திறமையை எடுத்துக் காட்டி எப்படியாவது ஒரு வாய்ப்பைப் பெறத் துடிக்கிறான்.
தான் புலிவேஷம் கட்டுவதில் சமர்த்தன் என்றும், தனது பெயரே டகர் பாயிட் காதர்தான் என்றும் சொல்லி தனது திறைமையை ஒரு தரம் பார்க்குமாறு வேண்கிறான். கண நேரத்தில் ஒரு புலியின் முகமூடியை அணிந்து கொண்டு புலியாகவே மாறுகிறான். தனது கர்ஜனையாலும், உடல் மொழியாலும் ஒரு நிஜப் புலியை அந்த அறையில் உலவ விடுகிறான். அவனது திறமையைப் பார்த்த அனைவரும் மெய்சிலிர்த்துப் போகின்றனர்.
தனது வறுமையை குறிப்பால் உணர்த்தும் காதர் எப்படியாவது தனக்கு ஒரு வாய்ப்புத் தருமாறு சர்மாவை வேண்டுகிறான். உண்மையிலேயே மனதார சர்மா அவனுக்கு உதவிட முயல்கிறார். ஆனால் அவன் உலவ விட்ட புலி அந்த அறைக்குள்ளேயே முடிந்து போகிற நிலையே வாய்க்கிறது.
 
வாசகனின் குறிப்புகள்

சிறுகதை எழுதும் நுட்பத்தை பயில விரும்பும் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய மிக முக்கியமான கதைகளுள் ஒன்றாக என்றுமே புலிக்கலைஞன் எக்காலமும் இருக்குமென்பதில் ஐயமே இல்லை. ஒரு மிகச் சிறந்த எழுத்தின் நுட்பமே எழுதிய சொற்களுள் மட்டுமல்ல அதன் இடைவெளிகளுக்குள்ளும் அர்த்தம் பொதித்து வாசகனோடு உரையாட வல்லது என்பதே.
கனவுப்பட்டறையான திரைப்பட உலகில் வெல்லும் குதிரைகள் சிலவாகவும், அதன் மீது மோகித்து வீழ்ந்து மடியும் விட்டில்கள் பலவாகவும் இருப்பது வழமைதான். ஆனால் இக்கதை அதனைப் பற்றி பேசுவது போல இருப்பினும், இது உண்மையில் கலையின் மீது தனது உயிரை ஏற்றிய ஒரு உலகால் புறக்கணிக்கப்பட்ட ஒரு கலைஞனின் வலியையே முதன்மைப்படுத்துகிறது. அழியும் கலைகளின் ஒன்றை, சமூக மாற்றத்தின் காரணமாக மனிதர்கள் தாண்டிச் சென்று விட்ட பிறகும் அக்கலையின் மீதுள்ள காதலால் அதனோடே ஒட்டிக் கிடக்கும் ஒரு கலைஞனின் வாழ்வின் ஒரு விள்ளலை வாசகனுக்குத் எடுத்து தருகிறதுபுலிக்கலைஞன்’.
 
pulikali tiger dance

தனது வாழ்நாள் முழுவதையும் ஒரே கலையின் நுட்பத்தைக் கற்கச் செலவிட்டு விட்ட ஒரு கலைஞன், அக்கலை சமூக வெளியில் மறுதலிக்கப்படுகையில், கூடவே தனது ஒட்டு மொத்த வாழ்க்கையையும் சமூகம் சேர்த்தே தான் மறுதலித்துக் கடந்து விட்டது என்பதை அறிய வரும்பொழுது அவனுள் ஏற்படும் வலி வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. கலையின் மீது அழிக்க முடியாமல் படிந்து விட்ட தனது பித்தை விட்டு மீள முடியாமலும், அதே வேளையில் உலகியல் தேவைகளும் நெருக்கடிகளுக்களையும் சமாளிக்க முடியாமலும் திணறுகின்ற மனிதனாகவே ஒரு கலைஞன் தனது வாழ்நாளைக் கடத்துகிறான்.
ஒரு வகையில் காதர் இது போன்ற ஒட்டு மொத்த கலைஞர்களின் குறியீடுடாகவே தோன்றுகிறான். தனது கர்வம் துறந்து சர்மாவிடம் மிகுதியான பணிவுடன் வாய்ப்புக் கேட்கும் காதர் நமக்கு மனிதனின் முதல் எதிரியான பசி எய்த அம்பாகவே தென்படுகிறான். தனது கர்ஜனையால் நிசப் புலி தோற்றுவிக்கும் கிலிக்கு ஒப்பான ஒன்றை தனது நடிப்பால் கொணரும் காதர், பசியெனும் புலியின் முன்னே மறைமுகமாக மண்டியிட்டு விடுகிறான். பசியை விடவும், வறுமையை விடவும் பெரிய புலி இருக்கிறதா என்ன?

/”
எழுந்திருப்பா எழுந்திருப்பா காதர்என்று சர்மா பதறினார். நாங்கள் எழுந்து நின்றிருந்தோம். அவனும் எழுந்து கண்களைத் துடைத்துக் கொண்டான். ”நம்ம சம்சாரம் வீட்டுப் பக்கமே வராதேன்னு சொல்லியிருக்குங்க என்றான். அவன்தான் சில நிமிஷங்களுக்கு முன்பு புலியாக இருந்தான்./
இந்த இறுதி வரி தான் ஒரு அசாதாராண எழுத்தாளரை நமக்கு அடையாளங்காட்டும் வரி. முதன் முறை வாசிக்கும் போது இவ்வரியை விட்டு நகர முடியாமல் மீண்டும் மீண்டும் வாசித்தபடி இருந்தேன். வாசகர் பலரும் இவ்வரியை கதையின் ஓட்டத்தோடு பொருத்திப் பார்த்து ஆசிரியனின் பகடியாக புரிந்து கொள்ளும் வாய்ப்பே அதிகம் இருக்கிறது. தவறில்லை. இதனை பகடியாகவும் எடுத்துக் கொள்ளலாம். அவன் தான் சில நிமிஷங்களுக்கு முன்னால் புலியாக இருந்தான் என்ற வரியில்சில நிமிஷங்களுக்கு முன்என்ற சொற்கள் எனக்கு மிக முக்கியமாகப் படுகிறன. அந்த சொற்கள் ஒருவன் ஒரு நடிகனாகவும், மறு நிமிடம் தந்து கலையின் நிகழ்த்துதல் முடிந்த பின் சாதாரண மனிதனாகவும் உளவியல்பூர்வமாக உருமாறும் காலத்தினை பிரிக்கும் கோடு. இந்த ஒற்றை< /span> வரியில் ஒரே மனிதனுள், நடிப்புக்கும் நிசத்திற்கும் இடையே நிகழும் ஆளுமை மாற்றத்தை மிக நுட்பமாக சொல்லிச் சென்றுள்ளதே இக்கதையின் வெற்றி.
புலிக்கலைஞனின் அச்சமூட்டும் உறுமலுக்குள் அடங்கிப் போகிறது அவனது மனதின் பேரோலம், யார் செவிகளையும் எட்டாமலே.