1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25
LESSON 5 – HOME AND FAMILY
Paadam 5 – Veedum Kudumbamum
பாடம் 5 – வீடும் குடும்பமும்
1.WHO
Yaar
யார்
2.ABOUT THE FAMILY
Kudumbaththaip Pattri
குடும்பத்தைப் பற்றி
3.CONVERSATION: BIRTHDAY PARTY
Uraiyaadal: Pirandhanaal Virundhu
உரையாடல்: பிறந்தநாள் விருந்து
4.NEW WORDS
Pudhu Vaarththaigal
புது வார்த்தைகள்
5.PLACES IN AND AROUND THE HOUSE
Veettai Suttriyulla Idangal
வீட்டை சுற்றியுள்ள இடங்கள்
6.THINGS IN AND AROUND THE HOUSE
Veettil Ulla Porutgal
வீட்டில் உள்ள பொருட்கள்
7.EXERCISES
Payirchigal
பயிற்சிகள்
Some Instructions for Students of ILearnTamil.com
- As in many foreign languages, in Tamil too, there are letters which have sounds that are not available in the English language. One of them is – ழ– which is often denoted by “Zh”. It is pronounced like the letter “L” but with the rolling of the tongue. For example, the word “Tamil” is transliterated as Thamizh(starting with a “Th” sound and ending with a tonguIrolling of the letter “L”). Mind you, there are 2 other letters in Tamil – ல and ள– which are pronounced very much like the normal “L” in English.
- Another letter you are likely to come across is – ஞ– which is often denoted by “Gn” and pronounced more like “nj”. For example, this letter is used in Aaranju, which is the Tamil translation of the word “Orange” and sounds similar too. The “nj” part of Aaranju is what you will need when you see words beginning with “Gn”. It may be difficult initially, but with some practice, you will surely master it!
- Spoken Tamil is often different from Formal/ Written Tamil, and in order to differentiate the two, we have used the blue color to indicate Spoken Tamil Transliteration (Tamil words written using the English alphabet) and Spoken Tamil Script.
- Throughout the lesson plan, the following sequencing has been used:Word/ Phrase/ Sentence in English
- a.Word/ Phrase/ Sentence in English
- b.Spoken Tamil Transliteration in English
- c.Spoken Tamil Script
- d.Formal Tamil Transliteration in English
- e.Formal Tamil Script
1.WHO
Yaar / யார்
ABOUT THE FAMILY
Kudumbaththaip Pattri
குடும்பத்தைப் பற்றி
I | Enakku | எனக்கு | Enakku | எனக்கு |
MY | En / Ennoda | என் / என்னோட | Ennudaiya | என்னுடைய |
OUR (less respect) | Enga | எங்க | Engal | எங்கள் |
OUR (more respect) | Engaloda | எங்களோட | Engaludaiya | எங்களுடைய |
YOUR (less respect) | Unga | உங்க | Ungal | உங்கள் |
YOUR (more respect) | Ungaloda | உங்களோட | Ungaludaiya | உங்களுடைய |
HE / HIS (less respect) | Avan (far) | அவன் | Avan | அவன் |
Avanukku (far) | அவனுக்கு | Avanukku | அவனுக்கு | |
Ivan (near) | இவன் | Ivan | இவன் | |
Ivanukku (near) | இவனுக்கு | Ivanukku | இவனுக்கு | |
HE / HIS (more respect) | Avar (far) | அவர் | Avar | அவர் |
Avarukku (far) | அவருக்கு | Avarukku | அவருக்கு | |
Ivar / Ivaru (near) | இவர் / இவரு | Ivar | இவர் | |
Ivarukku (near) | இவருக்கு | Ivarukku | இவருக்கு | |
SHE / HER (less respect) | Aval (far) | அவள் | Aval | அவள் |
Avalukku (far) | அவளுக்கு | Avalukku | அவளுக்கு | |
Ival (near) | இவள் | Ival | இவள் | |
Ivalukku (near) | இவளுக்கு | Ivalukku | இவளுக்கு | |
SHE / HER / THEY (more respect) | Avanga (far) | அவங்க | Avargal | அவர்கள் |
Ivanga (near) | இவங்க | Ivargal | இவர்கள் |
MY FAMILY.
En / Ennoda Kudumbam.
என் / என்னோட குடும்பம்.
En / Ennudaiya Kudumbam.
என்னுடைய குடும்பம்.
This our family.
Idhu engaloda kudumbam.
இது எங்களோட குடும்பம்.
Idhu engaludaiya kudumbam.
இது எங்களுடைய குடும்பம்.
Our family is a happy family.
Engaloda kudumbam oru magizhchiyaana / sandhoshamaana kudumbam.
எங்களோட குடும்பம் ஒரு மகிழ்ச்சியான / சந்தோசமான குடும்பம்.
Engaludaiya kudumbam oru magizhchiyaana / sandhoshamaana kudumbam.
எங்களுடைய குடும்பம் ஒரு மகிழ்ச்சியான / சந்தோசமான குடும்பம்
There are ______ members in my family.
Engaloda kudumbaththula ______ paeru irukkoam.
எங்களோட குடும்பத்துல ______ பேரு இருக்கோம்.
Engaludaiya kudumbaththil ______ paer irukkiroam.
எங்களுடைய குடும்பத்தில் ______ பேர் இருக்கிறோம்
My family consists of my grandfather, grandmother, dad, mom, elder sister, elder brother, younger sister, younger brother, and me.
Enga kudumbathla thaaththaa, paatti, appaa, ammaa, akkaa, annan, thangachchi, thambi ennoda irukkaanga.
எங்க குடும்பத்ல தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, அக்கா, அண்ணன், தங்கச்சி, தம்பி என்னோட இருக்காங்க.
Engal kudumbaththil thaaththaa, paatti, appaa, ammaa, akkaa, annan, thangai, thambi ennudan irukkiraargal.
எங்கள் குடும்பத்தில் தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, அக்கா, அண்ணன், தங்கை, தம்பி என்னுடன் இருக்கிறார்கள்.
Tell me about your family!
Unga kudumbaththa paththi sollunga!
உங்க குடும்பத்த பத்தி சொல்லுங்க!
Ungal kudumbaththaip pattri sollungal!
உங்கள் குடும்பத்தைப் பற்றி சொல்லுங்கள்!
This is my dad. His name is ___________. Ivar / Ivaru en / ennoda appaa. Ivar paeru ___________. இவர் / இவரு என் / என்னோட அப்பா. இவர் பேரு ___________. Ivar ennudaiya appaa. Ivar peyar ___________. இவர் என்னுடைய அப்பா. இவர் பெயர் ___________. |
I like my dad very much. Enakku en / ennoda appaava romba pudikkum. எனக்கு என் / என்னோட அப்பாவ ரொம்ப புடிக்கும். Enakku ennudaiya appaavai migavum pidikkum. எனக்கு என்னுடைய அப்பாவை மிகவும் பிடிக்கும். |
He works in an office. Ivaru / Ivar office-la vaela seyyuraar. இவரு / இவர் ஆஃபிஸ்ல வேல செய்யுறார். Ivar aluvalakaththil vaelai seygiraar. இவர் அலுவலகத்தில் வேலை செய்கிறார். |
She is my mother. Ivanga en / ennoda ammaa. இவங்க என் / என்னோட அம்மா. Ivargal ennudaiya ammaa. இவர்கள் என்னுடைய அம்மா. |
Mom Cooks Really Well. Ammaa romba nallaa samaippaanga. அம்மா ரொம்ப நல்லா சமைப்பாங்க. Ammaa migavum nanraaga samaiyal seyvaargal. அம்மா மிகவும் நன்றாக சமையல் செய்வார்கள். |
She Teaches Me To Read. Avanga enakku padikka solli tharuvaanga. அவங்க எனக்கு படிக்க சொல்லி தருவாங்க. Avargal enakku padikka sollith tharuvaargal. அவர்கள் எனக்கு படிக்கச் சொல்லித் தருவார்கள். |
She Is My Best Friend. Avanga en / ennoda best friend. அவங்க என் / என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட். Avargal ennudaiya sirandha thozhi. அவர்கள் என்னுடைய சிறந்த தோழி. |
This is my elder sister. Ival en / ennoda akkaa. இவள் என் / என்னோட அக்கா. Ival ennudaiya akkaa. இவள் என்னுடைய அக்கா. |
She studies in ___________ grade. Ival ______ vakuppula padikkuraal. இவள் ______ வகுப்புல படிக்குறாள். Ival __________ vakuppil padikkiraal. இவள் ______ வகுப்பில் படிக்கிறாள். |
She likes poetry very much. Avalukku kavidha romba pudikkum. அவளுக்கு கவித ரொம்ப புடிக்கும். Avalukku kavidhai migavum pidikkum. அவளுக்கு கவிதை மிகவும் பிடிக்கும்.
|
She is reading a poetry. Aval oru kavidha vaasikkuraal. அவள் ஒரு கவித வாசிக்குறாள். Aval oru kavidhai vasikkiraal. அவள் ஒரு கவிதை வாசிக்கிறாள். |
This is my elder brother. Ivan en / ennoda annaa. இவன் என் / என்னோட அண்ணா. Ivan ennudaiya annan. இவன் என்னுடைய அண்ணன். |
He likes (a lot) to play. Avanukku vilaiyaada romba pudikkum. அவனுக்கு விளையாட ரொம்ப புடிக்கும். Avanukku vilaiyaattu migavum pidikkum. அவனுக்கு விளையாட்டு மிகவும் பிடிக்கும். |
He and I play football. Naanum avanum football vilaiyaaduvoam. நானும் அவனும் ஃபுட்பால் விளையாடுவோம். Naanum avanum kaalpandhu vilaiyaaduvoam. நானும் அவனும் கால்பந்து விளையாடுவோம். |
This Is My Younger Sister. Ival en / ennoda thangachchi. இவள் என் / என்னோட தங்கச்சி. Ival ennudaiya thangai. இவள் என்னுடைய தங்கை. |
I Like My Sister Very Much. Enakku en / ennoda thangachchiya romba pudikkum. எனக்கு என் / என்னோட தங்கச்சிய ரொம்ப புடிக்கும். Enakku ennudaiya thangaiyai migavum pidikkum. எனக்கு என்னுடைய தங்கையை மிகவும் பிடிக்கும். |
She Also Loves Me. Avalukkum ennai romba pudikkum. அவளுக்கும் என்னை ரொம்ப புடிக்கும். Avalukkum ennai migavum pidikkum. அவளுக்கும் என்னை மிகவும் பிடிக்கும். |
She And I Go To School. Naanum avalum school-kku povoam. நானும் அவளும் ஸ்கூல்-க்கு போவோம். Naanum avalum pallikkup selvoam. நானும் அவளும் பள்ளிக்குச் செல்வோம். |
This is my younger brother. Ivan en / ennoda thambi. இவன் என் / என்னோட தம்பி. Ivan ennudaiya thambi. இவன் என்னுடைய தம்பி. |
I like my younger brother very much. Enakku en / ennoda thambiya romba pudikkum. எனக்கு என் / என்னோட தம்பிய ரொம்ப புடிக்கும். Enakku ennudaiya thambiyai migavum pidikkum. எனக்கு என்னுடைய தம்பியை மிகவும் பிடிக்கும். |
My brother and I are friends. Naanum en / ennoda thambiyum friends. நானும் என் / என்னோட தம்பியும் ஃபிரண்ட்ஸ். Naanum ennudaiya thambiyum nanbargal. நானும் என்னுடைய தம்பியும் நண்பர்கள். |
He and I ride the bicycle. Avanum naanum cycle otturoam. அவனும் நானும் சைக்கிள் ஓட்டுறோம். Avanum naanum midhivandi ottukiroam. அவனும் நானும் மிதிவண்டி ஓட்டுகிறோம். |
This is my grandfather. Ivaru en / ennoda thaaththaa. இவரு என் / என்னோட தாத்தா. Ivar ennudaiya thaaththaa. இவர் என்னுடைய தாத்தா. |
His name is _____________. Ivaru paeru _____________________. இவரு பேரு _____________________. Ivarudaiya peyar __________________. இவருடைய பெயர் _____________________ |
Grandpa likes to go for walk. Thaaththaa-kku walk poga pudikkum. தாத்தாக்கு வாக் போக புடிக்கும். Thaaththaavukku nadai payirchi selvadharkup pidikkum. தாத்தாவுக்கு நடை பயிற்சி செல்வதற்குப் பிடிக்கும். |
We go for a walk everyday. Naanga dhinamum walk povoam. நாங்க தினமும் வாக் போவோம். Naangal naaldhorum nadai payirchikku selvoam. நாங்கள் நாள்தோறும் நடை பயிற்சிக்குச் செல்வோம். |
She Is Our Grandmother. Avanga engaloda paatti. அவங்க எங்களோட பாட்டி. Avargal engaludaiya paatti. அவர்கள் எங்களுடைய பாட்டி. |
Her Name is _________________. Ivanga paeru _____________________. இவங்க பேரு _____________________. Ivargal peyar ________________________. இவர்கள் பெயர் _____________________. |
Our Grandmother Makes Rottis. Enga paatti rotti seyyuraanga. எங்க பாட்டி ரொட்டி செய்வாங்க. Engal paatti rotti seykiraargal. எங்கள் பாட்டி ரொட்டி செய்வார்கள். |
Our Favourite Snack is Our Granny’s Cookies. Avanga seyyura rotti enga viruppamaana thinpandam. அவங்க செய்யுற ரொட்டி எங்க விருப்பமான தின்பண்டம். Avargal seykinra rotti engal viruppamaana sittrundi. அவர்கள் செய்கின்ற ரொட்டி எங்கள் விருப்பமான சிற்றுண்டி |
This is Our Family. Now, Tell Me About Your Family! Avanga seyyura rotti enga viruppamaana thinpandam. அவங்க செய்யுற ரொட்டி எங்க விருப்பமான தின்பண்டம். Avargal seykinra rotti engal viruppamaana sittrundi. அவர்கள் செய்கின்ற ரொட்டி எங்கள் விருப்பமான சிற்றுண்டி |
2.CONVERSATION: BIRTHDAY PARTY!
Uraiyaadal: Pirandhanaal Virundhu!
உரையாடல்: பிறந்தநாள் விருந்து!
— CONVERSATION PARTICIPANTS — | ||
FRIEND (Kayal’s Mother). Thozhi (girl) தோழி ——————— Nanban (boy) நண்பன் | Birthday Girl – KAYAL Pirandhanaal Ponnu – Kayal பிறந்தநாள் பொண்ணு – கயல் Pirandhanaal Sirumi – Kayal பிறந்தநாள் சிறுமி – கயல்
| YOU. Nee நீ Neengal நீங்கள் |
—-WHEN YOU ARRIVE—- | ||
![]() | Hello! Welcome! Vanakkam! Vaanga Vaanga! வணக்கம்! வாங்க வாங்க! Vanakkam! Vaarungal Vaarungal! வணக்கம்! வாருங்கள் வாருங்கள்!
| |
![]() | Please Come In. Please ulla vaanga. ஃப்ளீஸ் உள்ள வாங்க. Dhayavu seydhu ulley vaarungal. தயவு செய்து உள்ளே வாருங்கள். | |
![]() | Be Seated Here. Please ulla vaanga. ஃப்ளீஸ் உள்ள வாங்க. Dhayavu seydhu ulley vaarungal. தயவு செய்து உள்ளே வாருங்கள். | |
Thank You Nanri. நன்றி. | ![]() | |
![]() | Are You Well? Neenga nallaa irukkeengalaa? நீங்க நல்லா இருக்கீங்களா? Neengal nalamaaga irukkireergalaa? நீங்கள் நலமாக இருக்கிறீர்களா?
| |
Yes, I’m Well. Aamaam, naan nallaa irukkaen. ஆமாம், நான் நல்லா இருக்கேன். Aam, naan nalamaaga irukkiraen. ஆம், நான் நலமாக இருக்கிறேன்
| ![]() | |
![]() | How Is Everybody At Home? Veetla ellaarum eppadi irukkaanga? வீட்ல எல்லாரும் எப்படி இருக்காங்க? Veettil anaivarum eppadi irukkiraargal? வீட்டில் அனைவரும் எப்படி இருக்கிறார்கள்? | |
They Are Fine. Avanga nallaa irukkaanga. அவங்க நல்லா இருக்காங்க. Avargal nanraaga irukkiraargal. அவர்கள் நன்றாக இருக்கிறார்கள். | ![]() | |
![]() | I’m Happy That You Came Home. Neenga en veettukku vandhadhu romba magizhchi / sandhosham. நீங்க என் வீட்டுக்கு வந்தது ரொம்ப மகிழ்ச்சி / சந்தோசம். Neengal en veettirku vandhadhu migavum magizhchi / sandhosham. நீங்கள் என் வீட்டிற்கு வந்தது மிகவும் மகிழ்ச்சி / சந்தோசம். | |
I’m Delighted Too. Enakkum romba magizhchi / sandhosham. எனக்கும் ரொம்ப மகிழ்ச்சி / சந்தோசம். Enakkum migavum magizhchi / sandhosham. எனக்கும் மிகவும் மகிழ்ச்சி / சந்தோசம். | ![]() | |
———THE BIRTHDAY GIRL ENTERS——– | ||
![]() | Hello Aunty. Vanakkam Aththai! வணக்கம் அத்தை! | |
Hello Kayal, Happy Birthday Wishes. Hello Kayal, Happy Birthday. ஹலோ கயல், ஹேப்பி பெர்த்ட. Vanakkam Kayal, iniya pirandhanaal vaazhththukkal. வணக்கம் கயல், இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். | ![]() | |
![]() | Thank You Aunty. Nanri Aththai. நன்றி அத்தை. | |
This is My Birthday Gift. Idhu en / ennoda birthday gift. இது என் / என்னோட பெர்த்டே கிஃப்ட். Idhu ennudaiya pirandhanaal parisu. இது என்னுடைய பிறந்த நாள் பரிசு. | ![]() | |
![]() | Thank You Aunty. Nanri Aththai. நன்றி அத்தை.
| |
—-BIRTHDAY SONG, CAKE CUTTING—- | ||
Okay, Come On, Let’s Sing The Birthday Song. Sari. Ippo vaanga, birthday song paadalaam. சரி. இப்போ வாங்க, பெர்த்டே சாங்க் பாடலாம். Sari. Ippozhudhu vaarungal, pirandhanaal vaazhththup paadal paadalaam. சரி. இப்பொழுது வாருங்கள், பிறந்தநாள் வாழ்த்துப் பாடல் பாடலாம். | ![]() | |
Yes, Let’s Sing. Sari, paadalaam. சரி, பாடலாம். | ![]() | |
![]() | Cut The Cake. Cake vettu! கேக் வெட்டு! Cakkai vettu! கேக்கை வெட்டு! | |
All Of You Clap Your Hands. Ellaarum kai thattunga. எல்லாரும் கை தட்டுங்க. Anaivarum kai thattungal. | ![]() | |
![]() | Can You Help Me? Neenga enakku udhavi seyya mudiyumaa? நீங்க எனக்கு உதவி செய்ய முடியுமா? Neengal Enakku udhavi seyya mudiyumaa? நீங்கள் எனக்கு உதவி செய்ய முடியுமா? | |
Definitely. Tell Me. Kattaayamaa. sollunga. கட்டாயமா. சொல்லுங்க. Nichchayamaaga. sollungal. நிச்சயமாக. சொல்லுங்கள். | ![]() | |
![]() | Give This Cake To Everybody. Indha cake-a ellaarukkum kudunga. இந்த கேக்க எல்லாருக்கும் குடுங்க. Indha cakkai anaivarukkum kodungal. இந்த கேக்கை அனைவருக்கும் கொடுங்கள். | |
Do You Need Anything Else? Ungalukku vaera yaedhaavadhu udhavi vaenumaa? உங்களுக்கு வேற ஏதாவது உதவி வேணுமா? Ungalukku vaeru yaedhaavadhu udhavi vaendumaa? உங்களுக்கு வேறு ஏதாவது உதவி வேண்டுமா? | ![]() | |
![]() | Yes, The Plates Are In The Kitchen, Can You Bring Them? Aamaam, samaiyalarai-la thattu irukku, eduththuttu vara mudiyumaa? ஆமாம், சமையலறைல தட்டு இருக்கு, எடுத்துட்டு வர முடியுமா? Aam, samaiyal araiyil thattugal irukkiradhu, kondu vara mudiyumaa? ஆம், சமையல் அறையில் தட்டுகள் இருக்கிறது, கொண்டு வர முடியுமா? | |
Thanks For Your Help. Unga udhavi-kku romba nanri. உங்க உதவிக்கு ரொம்ப நன்றி. Ungal udhavikku migavum nanri. உங்கள் உதவிக்கு மிகவும் நன்றி. | ![]() | |
![]() | I’m Happy That I Helped You. Ungalukku udhavi senjadhula enakku romba magizhchi / sandhosham. உங்களுக்கு உதவி செஞ்சதுல எனக்கு ரொம்ப மகிழ்ச்சி / சந்தோசம். Ungalukku udhavi seydhadhil enakku migavum magizhchi / sandhosham. உங்களுக்கு உதவி செய்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி / சந்தோசம் | |
Kayal, Do You Like The Gift? Kayal, unakku gift pudichchirukkaa? கயல், உனக்கு கிஃப்ட் புடிச்சிருக்கா? Kayal, unakku parisu pidiththirukkirathaa? கயல், உனக்கு பரிசு பிடித்திருக்கிறதா? | ![]() | |
![]() | Yes Aunty. Thank You. Aamaam Aththai. Nanri. ஆமாம் அத்தை. நன்றி. Aam Aththai. Nanri. ஆம் அத்தை. நன்றி.
| |
Okay, See You. Sari, naan varraen. சரி, நான் வர்றேன். Sari, Naan varugiraen. சரி, நான் வருகிறேன். | ![]() | |
![]() | Good, We Shall Meet Again. Nalladhu, thirumba / thirumbavum paakkalaam. நல்லது, திரும்ப / திரும்பவும் பாக்கலாம். Nalladhu, meendum paarkkalaam. நல்லது, மீண்டும் பார்க்கலாம். | |
Yes, Thank You. Bye. Sari, Nanri. Vanakkam. சரி, நன்றி. வணக்கம். | ![]() |
3.NEW WORDS.
Pudhu Vaarththaigal
புது வார்த்தைகள்
Family | Kudumbam | குடும்பம் | Kudumbam | குடும்பம் |
Also means Number of members | Paeru | பேரு | Paer | பேர் |
Elder sister | Akkaa | அக்கா | Akkaa | அக்கா |
Elder brother | Annaa | அண்ணா | Annan | அண்ணன் |
Younger sister | Thangachchi | தங்கச்சி | Thangai | தங்கை |
Younger brother | Thambi | தம்பி | Thambi | தம்பி |
Cooking | Samaiyal | சமையல் | Samaiyal | சமையல் |
Walking | Nadai payirchi | நடை பயிற்சி | Nadaip payirchi | நடைப் பயிற்சி |
Everyday / Daily | Dhinamum | தினமும் | Naaldhorum | நாள்தோறும் |
Favorite | Viruppamaana | விருப்பமான | Pidiththadhu | பிடித்தது |
Snack | Thinpandam | தின்பண்டம் | Sittrundi | சிற்றுண்டி |
Now | Ippo | இப்போ | Ippozhudhu | இப்பொழுது |
Happy birthday wishes | Iniya pirandhanaal vaazhththukkal | இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் | Iniya pirandhanaal vaazhththukkal | இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் |
Gift | Parisu | பரிசு | Parisu | பரிசு |
Greetings | Vaazhththu | வாழ்த்து | Vaazhththu | வாழ்த்து |
Song | Paattu | பாட்டு | Paadal | பாடல் |
Kitchen | Samaiyalarai | சமையலறை | Samaiyal arai | சமையல் அறை |
Plate | Thattu | தட்டு | Thattu | தட்டு |
Definitely, Surely | Kattaayamaa | கட்டாயமா | Nichchayamaaga | நிச்சயமாக |
Do you like? | Ungalukku Pudichchirukkaa / Pidichchirukkaa | உங்களுக்கு புடிச்சிருக்கா / பிடிச்சிருக்கா | Ungalukku Pidiththirukkiradhaa? | உங்களுக்கு பிடித்திருக்கிறதா? |
Teach | Solli thaa | சொல்லி தா | Sollith tharuvadhu | சொல்லித் தருவது |
Say | Sollu | சொல்லு | Sol | சொல் |
Go | Po | போ | Po | போ |
Do | Seyy | செய் | Seyy | செய் |
Sing | Paadu | பாடு | Paadu | பாடு |
Help | Udhavi | உதவி | Udhavi | உதவி |
Cut | Vettu | வெட்டு | Vettu | வெட்டு |
Give | Kudu | குடு | Kodu | கொடு |
See | Paakkalaam | பாக்கலாம் | Paarkkalaam | பார்க்கலாம் |
AKKU / UKKU when added to pronouns can also mean “FOR the person”, as shown below,
1.En + akku = Enakku means for me.
2.Avan + ukku = Avanukku means for him (less respect)
3.Avar + ukku = Avarukku means for him (more respect)
4.Aval + ukku = Avalukku means for her (less respect)
5.Avangal + ukku = Avangalukku means for her (more respect), and so on.
4.Places In and Around the House.
Veettai Suttriyulla Idangal
வீட்டை சுற்றியுள்ள இடங்கள்
Front Yard. Mun–muttram முன்-முற்றம் | Back Yard. Pin-muttram பின்–முற்றம் |
Main Entrance. Mun-vaasal முன்-வாசல் | Back Door. Pin-vaasal பின்-வாசல் |
Porch Vaakili. వాకిలి Thazhvaaram தாழ்வாரம் | Garage. Vandigal / Vaaganam Niruththum-idam வண்டிகள் / வாகனம் நிறுத்துமிடம் |
Balcony Maadi mukappu மாடி முகப்பு | Garden. Thottam தோட்டம் |
Compound Wall. Chuttru-chuvar சுற்று-சுவர் | Stairs. Maadip padi மாடிப் படி |
Open Terrace. Mottai maadi மொட்டை மாடி | Swimming Pool. Neechchal kulam நீச்சல் குளம் |
Neighbour. Andai / Pakkaththu Veettukaaranga அண்டை / பக்கத்து வீட்டுகாரங்க |
Play Area Vilaiyaadum idam விளையாடும் இடம் |
4.THINGS IN AND AROUND THE HOUSE.
Veettil Ulla Porulgal
வீட்டில் உள்ள பொருள்கள்
Kaal-midhi கால்-மிதி | LOCK Poottu பூட்டு
| KEY Saavi சாவி | HAND BAG Kai-pai கைப்பை |
Kooda கூட | BUCKET Vaali வாளி | DUST BIN Kuppa thotti குப்ப தொட்டி | BROOM STICK Thudappam துடப்பம் |
Kudai குடை | POST BOX Thabaal petti தபால் பெட்டி | CLOTHES Thuni / Aadai துணி / ஆடை |
Chekka Samaanu చెక్కసామాను |
Paaththirangal பாத்திரங்கள் |
Pazhangal பழங்கள் |
Kaay-karigal காய்கறிகள் |
Masaalaa porulgal மசாலா பொருள்கள் |
MUG Koppai / Kuvalai கோப்பை / குவளை | WATER BOTTLE Thanneer bottle தண்ணீர் பாட்டில் | CANDLE Mezhuguvaththi மெழுகுவத்தி | FLOWER VASE Poo jaadi பூ ஜாடி |
Revising Some Of The Words We Have Just Learned:
Floor mat | Kaal midhi | கால் மிதி | Midhiyadi | மிதியடி |
Lock | Poottu | பூட்டு | Poottu | பூட்டு |
Key | Saavi | சாவி | Saavi | சாவி |
Handbag | Kai-pai | கைபை | Kaippai | கைப்பை |
Basket | Kooda | கூட | Koodai | கூடை |
Bucket | Vaali | வாளி | Vaali | வாளி |
Dustbin | Kuppa thotti | குப்ப தொட்டி | Kuppaith-thotti | குப்பைத் தொட்டி |
Broomstick | Thudappam | துடப்பம் | Thudaippam | துடைப்பம் |
Umbrella | Kudai | குடை | Kudai | குடை |
Postbox | Thabaalpetti | தபால்பெட்டி | Thabaalpetti | தபால்பெட்டி |
Clothe | Thuni | துணி | Thuni | துணி |
Dress | Udai | உடை | Aadai | ஆடை |
Wooden furniture | Mara-saamaangal | மர சாமான்கள் | Mara-saamaangal | மரச்சாமான்கள் |
Vessels | Paaththirangal | பாத்திரங்கள் | Paaththirangal | பாத்திரங்கள் |
Fruits | Pazhangal | பழங்கள் | Pazhangal | பழங்கள் |
Vegetable | Kaaikarigal | காய்கறிகள் | Kaaikarigal | காய்கறிகள் |
Spices | Masaalaa porulgal | மசாலா பொருள்கள் | Masaalaa porutgal | மாசாலா பொருட்கள் |
Mug | Koppai | கோப்பை | Kuvalai | குவளை |
Water bottle | Thanneer bottle | தண்ணீர் பாட்டில் | Thanneer kuduvai | தண்ணீர் குடுவை |
Candle | Mezhuguvaththi | மெழுகுவத்தி | Mezhuguvarththi | மெழுகுவர்த்தி |
Flower vase | Poo jaadi | பூ ஜாடி | Poochchaadi | பூச்சாடி |
6. ABHYAASAM.
Payirchigal
பயிற்சிகள்
Try To Frame Sentence In Telugu Using The Following
Keezhey irukkum sorkalaik kondu Thamizhil thodargalai uruvaakkuga:
கீழே இருக்கும் சொற்களைக் கொண்டு தமிழில் தொடர்களை உருவாக்குக:
Example – Eduththukkaattu – எடுத்துக்காட்டு:
Kudumbam (குடும்பம்) – Idhu engal kudumbam. . .
1.Sandhosham (சந்தோசம்) – ___________________________________________________
2.Parisu (பரிசு) – ______________________________________________________________
3.Pirandhanaal (பிறந்தநாள்) – ___________________________________________________
4.Thaevai (தேவை) – ___________________________________________________________
5.Udai (உடை) – _______________________________________________________________
6.Udhavi (உதவி) – _____________________________________________________________
7.Koodai (கூடை) – _____________________________________________________________
8.Pazhangal (பழங்கள்) – ________________________________________________________
Write and Say about the Pictures Below in Tamil:
Keezhey irukkum padangalaip paarththu adhaip pattri Thamizhil ezhudhuga, solluga:
கீழே இருக்கும் படங்களைப் பார்த்து அதைப் பற்றி தமிழில் எழுதுக, சொல்லுக:
Very easy to learn