[proverbs_links]
We are proud to present the biggest collection of Tamil proverbs.(அ-வரிசை)
Here is the link for popular Proverbs : Popular Tamil Proverbs
1 | அகங்கையிற் போட்டுப் புறங்கையை நக்கலாமா? |
2 | அகடவிகடமாய்ப் பேசுகிறேன். |
3 | அகதிக்கு ஆகாயம் துணை. |
4 | அகதிக்குத் தெய்வமே துணை. |
5 | அகதி சொல் அம்பலம் ஏறாது. |
6 | அகதி தலையிற் பொழுது விடிகிறது. |
7 | அகதி பெறுவது பெண்பிள்ளைஈ அதுவும் வெள்ளி பூராடம். |
8 | அகதியைப் பகுதி கேட்கிறதா? |
9 | அகத்தில் அழகு முகத்தில் தெரியும். |
10 | அகத்தி ஆயிரம் காய் காய்த்தாலும் புறத்தி புறத்தியே. |
11 | அகப்பட்டுக்கொள்வேன் என்றே கள்ளன் களவெடுக்கிறது? |
12 | அகப்பட்டவனுக்கு அஷ்டமத்துச்சனி, ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்து ராஜா. |
13 | அகப்பை பிடித்தவன் தன்னவனானால், அடிப்பந்தியில் இருந்தாலென்ன, கடைப்பந்தியில் இருந்தாலென்ன? |
14 | அகம் ஏறச் சுகம் ஏறும். |
15 | அகம் மலிந்தால் அஞ்சும் மலியும், அகம் குறைந்தால் அஞ்சும் குறையும். |
16 | அகம் மலிந்தால் எல்லாம் மலியும், அகம் குறைந்தால் எல்லாம் குறையும். |
17 | அகல இருந்தால் நீள உறவு, கிட்ட இருந்தால் முட்டப் பகை. |
18 | அகல இருந்தால் பகையும் உறவாம். |
19 | அகல இருந்தால் புகல உறவு. |
20 | அகல்வட்டம் பகல் மழை. |
21 | அகவிலை அறியாதவன் துக்கம் அறியான். |
22 | அகழிலே விழுந்த முதலைக்கு அதுவே வைகுண்டம். |
23 | அகா நாக்காய்ப பேசுகிறான் |
24 | அகிர்த்தியம் செய்கிறவன் முகத்தில் விழிக்கிறதா? |
25 | அகோர தபசி விபரீத சோரன். |
26 | அகோர தபசி, விபரீத நிபுணன். |
27 | அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை. |
28 | அக்காடு வெட்டிப் பருத்தி விதைக்கிறேன் என்றால், அப்பா எனக்கொரு துப்பட்டி என்கிறான் பிள்ளை. |
29 | அக்காடு வெட்டிப் பருத்தி விதைத்தால், அப்பா முழச்சிற்றாடை என்கிறதாம் பெண். |
30 | அக்காள் இருக்கிறவரையில் மச்சான் உறவு. |
31 | அக்காள் உண்டானால், மச்சான் உண்டு. |
32 | அக்காள் உடைமை அரிசி, தங்கைச்சி உடைமை தவிடா? |
33 | அக்காள் உறவும் மச்சான் பகையுமா? |
34 | அக்காளைக் கொண்டால், தங்கையை முறை கேட்பானேன்? |
35 | அககாளைப் பழித்துத் தங்கை அபசாரியானாள். |
36 | அக்காள்தான் கூடப்பிறந்தாள், மச்சானும் கூடப்பறிந்தானா? |
37 | அக்கிராரத்தில் பிறந்தாலும், நாய் வேதம் அறியுமா? |
38 | அக்கிராரத்துக்கு ஒரு ஆடு வந்தால், ஆளுக்கு ஒரு மயிர். |
39 | அக்கிராரத்து நாய் பிரதிஷ்டைக்கு வீpரும்பினதுபோல. |
40 | அக்கினி மலைபோல் கர்ப்பூரபாணம் பிரயோகித்ததுபோல. |
41 | அக்கினி தேவனுக்கு அபிஷேகம் செய்ததுபோல் இருக்கிறான். |
42 | அக்கினியாற் சுட்ட புண் விஷமிக்காது. |
43 | அக்குத்தொக்கு இல்லாதவனுக்குத் துக்கம் என்ன? |
44 | அங்கத்தை ஆற்றில் அலைசொன்னதா? |
45 | அங்கத்தை கொண்டுபொய் ஆற்றில் அலசினாலும், தோஷம் இல்லை. |
46 | அங்கத்தைக் கொன்று ஆற்றில் சேர்க்கவொண்ணாது. |
47 | அங்காங்கு வைபோகமாயிருக்கறான், இங்கே பார்த்தால் அரைக்காசு முதலும் இல்லை. |
48 | அங்காடி விலையை அதிர அடிக்காதே. |
49 | அங்காடிக்காரியைச் சங்கீதம் பாடச்சொன்னால், வெங்காயம் கருவேப்பிலை என்பாள். |
50 | அங்கிடுதொடுப்பிக்கு அங்கிரண்டு குட்டு, இங்கிரண்டு சொட்டு. |
51 | அங்;கு தப்பி இங்கும் தப்பி அகப்பட்டுக்கொண்டான் தும்மட்டிப்பட்டன். |
52 | அங்கும் இருப்பான் இங்கும் இருப்பான், ஆக்கின சோற்றுக்கும் பங்கும் இருப்பான். |
53 | அங்கேண்டி மகளே கஞ்சக்கு அழுகிறாய்? இங்கே வந்தால், காற்றாய் பறக்கலாம். |
54 | அசல் வாழ்ந்தால், ஐந்து நாள் பட்டினி கிடப்பாள். |
55 | அசல் வீடு வாழ்ந்தால் பரதேசம் போகிறதா? |
56 | அசலும் பிசலும் அறியாமல் அடுத்தவனைக் கெடுக்கப் பார்க்கிறான். |
57 | அசவாப் பயிரும் க்ணடதே உறவும். |
58 | அசைந்து தின்கிறது மாடு, அசையாமல் தின்கிறது வீடு. |
59 | அச்சம் இல்லாதவன் அம்பலம் ஏறுவான். |
60 | அச்;சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது. |
61 | அச்சிக்குப் போனாலும், அகப்பை அரைக்காசு. |
62 | அச்சியிலும் பிச்சைக்காரர் உண்டு. |
63 | அஞ்சனக்காரன் முதகில் வஞ்சனைக்காரன் ஏறினான். |
64 | அஞ்சலிவந்தனம் ஆரக்கும் நன்மை. |
65 | அஞ்சா நெஞ்சு படைத்தால் ஆருக்கு ஆவான்? |
66 | அஞ்சாவது பெண் கெஞ்சினாலும் கிடையாது. |
67 | அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா? |
68 | அஞ்சினவனைக் குஞ்சும் வெருட்டும். |
69 | அஞ்சில் அறியாதவன் ஐம்பதில் அறிவானா? |
70 | அஞ்சினவனைப் பேய் அடிக்கும். |
71 | அஞ்சி ஆண்மை செய். |
72 | அஞ்சினரைக் கெஞ்சுவிக்கும், அடித்தாரை வாழ்விக்கும். |
73 | அஞ்சினவன் கண்ணுக்கு ஆகாயமெல்லாம் பேய். |
74 | அஞ்சு காசுக்குக் குதிரையும் வேண்டும், அதுவும் ஆற்றைக் கடக்கபப் பாயவும் வேண்டும். |
75 | அஞ்சு குஞ்சும் கறியாமோ? அறியாப் பெண்ணும் பெண்டாமோ? |
76 | அஞ்சுக்கு இரண்டு பழுதில்லை. |
77 | அஞ்சு பணம் கொடுத்தாலும், இத்தனை ஆத்திரம் ஆகாது. |
78 | அஞ்சும் மூன்றும் உண்டானால், அறியாப் பெண்ணும் கறி சமைக்கும். |
79 | அஞ்சுருத்தாலி நெஞ்சுரவக் கட்டிக்கொண்டு வந்தாற்போல் வலக்காரமாய்ப் பேசுகிறாய். |
80 | அஞ்சு வயது ஆண்பிள்ளைக்கு ஐம்பது வயதுப் பெண் கால் முடக்கவேண்டும். |
81 | அஞ்சுவொரைக் கெஞ்சடிக்கப் பார்க்கிறான். |
82 | அஞ்சூர்ச்சண்டை சுண்டாங்கி, ஐங்கல அரிசி ஒரு கவம். |
83 | அஞ்செழுத்தும் பாவனையும் அவனைப்போல் இருக்கிறது. |
84 | அடக்கத்துப் பெண்ணுக்கு அழகேன்? |
85 | அடக்கமுடையார் அறிஞர், அடங்காதார் கல்லார். |
86 | அடக்கமே பெண்ணுக்கு அழகு. |
87 | அடக்குவாரற்ற கழுக்காணியும் கொட்டுவாரற்ற மேளமுமாய்த் திரிகிறான். |
88 | அடங்காத பாம்பிற்கு ராஜா மூங்கில்தடி. |
89 | அடங்காத பெண்சாதியினலே அத்தைக்கும் நமக்கும் பொல்லாப்பு. |
90 | அடங்காத மனைவியும் ஆங்கார புருஷனும் |
91 | அடங்கின பிடி பிடிக்கவேண்டும், அடங்காத பிடி பிடிக்கலாகாது. |
92 | அடம்பங்கொடியும் திரண்டால் மிடுக்கு. |
93 | அடா என்பான், வெளியே புறப்படான். |
94 | அடாது செய்தவர் படாது படுவார். |
95 | அடி அதிரசம் குத்துக் கொழுக்கட்டை. |
96 | அடி உதவுகிறதுபோல அண்ணன் தம்பி உதவுவார்களா? |
97 | அடிக்க அடிக்கப் பந்து விசைகொள்ளும். |
98 | அடிக்;கிற காற்றுக்கும் பெய்கிற மழைக்கும் பயப்படவேண்டும். |
99 | அடிக்கிற காற்று வெயிலுக்குப் பயப்படுமா? |
100 | அடிக்கும் காற்றிலே எடுத்துத் தூற்றவேண்டும். |
101 | அடிக்கும் ஒரு கை, அணைக்கும் ஒரு கை. |
102 | அடிச்சட்டிக்குள்ளே கரணம் போடலாமா? |
103 | அடித்த ஏருக்கும் குடித்த கூழுக்கும் சரி. |
104 | அடித்துப் பழுத்ததும் பழமா? |
105 | அடித்துப் பால் புகட்டுகிறதா? |
106 | அடித்து வளர்க்காத பிள்ளையும் முறுக்கி வளர்க்காத மீசையும் செவ்வையாகா. |
107 | அடித்துவிட்டவன் பின்னே போனாலும், பிடித்துவிட்டவன் பின்னே போகலாகாது. |
108 | அடிநாக்கிலே நஞ்சும் நுனிநாக்கிலே அமிர்தமுமா? |
109 | அடி நொச்சி நுனி ஆமணக்கா? |
110 | அடிப்பானேன் பிடிப்பானேன்? அடக்குகிற வழியில் அடக்குவோம். |
111 | அடிமேல் அடி அடித்தால், அம்மியும் நகரும். |
112 | அடிமை படைத்தால் ஆள்வது கடன். |
113 | அடியற்ற பனைபோல் விழுந்தான். |
114 | அடியற்ற மரம்போலே. |
115 | அடியற்றல் நுனி விழாமலிருக்குமா? |
116 | அடியா நாடு படியாது. |
117 | அடியாத மாடு படியாது. |
118 | அடியிலுள்ளது நடுவுக்கும் முடிவுக்கும் உண்டு. |
119 | அடியும் பட்டுப புளித்த மாங்காயா தின்னவேண்டும்? |
120 | அடியென்று அழைக்கப் பெண்டீர் இல்லை, ஆண் எத்தனை பெண் எத்தனை என்கிறது போல. |
121 | அடிவானம் கறுத்தால், ஆண்டை வீடு வறுக்கும். |
122 | அடுக்களைக் கிணற்றிலே அமுதம் எழுந்தாற்போல. |
123 | அடுக்களைக்கு ஒரு பெண்ணும் அம்பலத்துக்கு ஒரு ஆணும் இருக்கிறதென்கிறேன். |
124 | அடுக்கிற அருமை தெரியுமா உடைக்கிற நாய்ககு? |
125 | அடுத்த கூரை வேவுங்கால் தன் கூரைக்கு மோசம். |
126 | அடுத்தவனைக் கெடுக்கலாமா? |
127 | அடுத்தவன் வாழப் பகலே குடி எடுப்பான். |
128 | அடுத்தாரைக் கெடுத்து அன்னம் இட்டாரைக் கன்னம் இடுகிறேன். |
129 | அடுத்து அடுத்துத் சொன்னால் தொடுத்த காரியம் முடியும். |
130 | அடுத்துக் கெடுப்பான் கபடன், தொடுத்துக் கெடுப்பாள் வேசி. |
131 | அடுத்து வந்தவருக்கு ஆதரவு சொல்லுவோன் குரு. |
132 | அடுப்பருகில் வெண்ணெயை வைத்த கதை. |
133 | அடுப்புக் கட்டிக்கு அழகு வேண்டுமா? |
134 | அடுப்பு நெருப்பும் போய் வாய்த்தவிடும் போச்சுது. |
135 | அடுப்பு எரிந்தால் பொரி பொரியும். |
136 | அடைந்தோரை ஆதரி. |
137 | அடைப்பைப் பிடுங்கினால் பாம்பு கடிக்கும். |
138 | அடைமழைக்குள்ளே ஓர் ஆட்டுக்குட்டி செத்ததுபோல. |
139 | அடைமழை விட்டும் செடிமழை விடவில்லை. |
140 | அட்டமத்துச் சனி கிட்ட வந்தது போல. |
141 | அட்டமத்துச்; சனி நட்டம் வரச் செய்யும். |
142 | அட்டமத்துச் சனி பிடித்தது, அரைச் துணியும் உரிந்து கொண்டது. |
143 | அட்டமத்துச் சனியை வட்டிக்கு வாங்கினாற்போல. |
144 | அட்டைக்கும் திருத்தியில்லை, அக்கினிக்கும் திருத்தியில்லை. |
145 | அட்டையைப் பிடித்து மெத்தையில் வைத்ததுபோல. |
146 | அட்டையை எடுத்து மெத்தையில் வைத்தாலும் செத்தையையே நாடும். |
147 | அணில் ஏறிவிட்ட நாய் பார்ப்பதுபோல. |
148 | அணிற்பிள்ளைக்கு நுங்கு அரிதோ? ஆண்டிச்சி பிள்ளைக்குச் சோறு அரிதோ? |
149 | அணு மகாமேருவாமா? |
150 | அணுவும் மலையாச்சு, மலையும் அணுவாச்சு. |
151 | அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வருமா? |
152 | அணை கடந்த வெள்ளத்தை மறிப்பவர் ஆர்? |
153 | அண்டத்திற்கு உள்ளது பிண்டத்திற்கும் உண்டு. |
154 | அண்டத்தில் இல்லாததும் பிண்டத்தில் உண்டா? |
155 | அண்டத்தைச் சுமக்கிறவனுக்குச் சுண்டைக்காய் பாரமா? |
156 | அண்டமும் பிண்டமும் அந்தரங்கும் வெளியரங்கமும். |
157 | அண்டாத பிடாரி ஆருக்கு அடங்குவாள்? |
158 | அண்டை வீட்டுச் சண்டை கண்ணுக்குக் குளிர்ச்சி. |
159 | அண்டை வீடடுப் பார்ப்பான் சண்டை மூட்டித் தீர்ப்பான். |
160 | அண்டையிற் சமர்த்தன் இல்லாத ராஜாவுக்கு அபகீர்த்தி வரும். |
161 | அண்ணனார் அரண்மனையில் அள்ளி உண்ணப் போகிறாள். |
162 | அண்ணனிடத்தில் ஆறு மாதம் வாழ்ந்தாலும், அண்ணியிடத்தில் அரை நாழிகை வாழலாமா? |
163 | அண்ணனுக்குப் பெண் பிறந்தால், அத்தை அசல் நாட்டாள். |
164 | அண்ணனும் தம்பியும் சென்மப் பகைவர் |
165 | அண்ணனைக் கொன்ற பழி, சந்தையிலே தீhத்துக்கொள்ளுகிறது போல. |
166 | அண்ணன் பெரியவன, அப்பா நெருப்பு ஊது. |
167 | அண்ணன் கொம்பு பம்பழ பளாச்சு. |
168 | அண்ணன் உண்ணாதது எல்லாம் மைத்துனிக்கு லாபம். |
169 | அண்ணன் தம்பி வேண்டும் இன்னம் தம்பிரானே. |
170 | அண்ணாவியார் விழுந்தால் அடைவுமுறை. |
171 | அண்ணாவி பிள்ளைக்குப் பணம் பஞ்சமா, அம்பட்டன் பிள்ளைக்கு மயிர் பஞ்சமா? |
172 | அண்ணனுக்கும் தொண்டையும் அதிர அடைத்தது. |
173 | அண்ணாமலையார் அருளுண்டானால் மன்னர்சாமி மயிரைப் பிடுங்குமா? |
174 | அண்ணாமலையாருக்கு அறுபத்துநாலு பூசை, ஆண்டிகளுக்கு எழுபத்துநாலு பூசை. |
175 | அதிக ஆசை அதிக கஷடம். |
176 | அதிக ஆசை அஷ்டதரித்திரம். |
177 | அதிகாரியும் தலையாரியும் ஒன்றானால், விடியமட்டும் திருடலாம். |
178 | அதிகாரி வீட்டில் திருடித் தலையாரி வீட்டில் வைத்துதபோல. |
179 | அதிகாரி வீPட்டுக் கோழிமுட்டை குடியானவன் வீட்டு அம்மியை உடைக்கும். |
180 | அதிஷ்டம் தொட்ட கழுக்காணி. |
181 | அதிஷ்டம் ஆறாய் பெருகுகிறது. |
182 | அதிஷ்டம் இருந்தால் அரசு பண்ணலாம். |
183 | அதிஷ்டம் இல்லாதவனுக்குக் கலப்பால் வந்தாலும், அதையும் பூனை குடிக்கும். |
184 | அதிஷ்டவான் மண்ணைத் தொட்டாலும் பொன்னாகும். |
185 | அதிர அடித்தால், உதிர விளையும். |
186 | அதிலும் இது புதமை, இதிலும் அது புதமை. |
187 | அதிலே குறைச்சல் இல்லை ஆட்டடா பூசாரி. |
188 | அது அதற்கு ஒரு கவலை, ஐயாவுக்கு எட்டுக் கவலை. |
189 | அது எல்லாம் உ;ணடிட்டு வா என்பான். |
190 | அதுக்கு இட்ட காசு மினக்கெட்டு அரிவாள் மனைக்குச் சுறுக்கிட்டதா? |
191 | அதுவும் போதாதென்று அழலாமா இனி? |
192 | அதைரியமுள்ளவனை அஞ்சாத வீரன் என்றாற்போல. |
193 | அதைவிட்டாலும் கதியில்லை, அப்புறம் போனாலும் வழியில்லை. |
194 | அத்தம் மிகுதியினால் அல்லவோ அம்பட்டன் பெண் கேட்கிறான். |
195 | அத்தனையும் நேர்ந்தாள், உ;ப்பிட மறந்தாள். |
196 | அத்தான் செத்தான் மயிராச்சு, கம்பளி மெத்தை நமக்காச்சு. |
197 | அத்திக்காயைப் பிட்டுப்பார்த்தால், அங்கும் இங்கும் பொள்ளல். |
198 | அத்தி பூத்ததுபோல் இருக்கிறது அவன் வந்தது. |
199 | அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால், அத்தனையும் புழுத்தான். |
200 | அத்திப்பூவை ஆர் அறிவாhக்ள்? |
201 | அத்திப்பூவைக் கண்டவர்கள் உண்டா? ஆந்தைக் குஞ்சைப்பார்த்தவர்கள் உண்டா? |
202 | அத்திமரத்தில் தொத்திய கனிபோல. |
203 | அத்து மீறிப்போனான், பித்துக்கொள்ளி ஆனான். |
204 | அத்தைக்கு மீசை முளைத்தாற் சிற்றப்பா என்கலாம். |
205 | அந்தம் சிந்தினவனுக்கு அழகு ஒழுகமா? |
206 | அந்தணாக்குத் துணை வேதம். |
207 | அந்தணர் மனையிற் சந்தனம் மணக்கும். |
208 | அந்தரத்தில் கோல் எறிந்த அந்தகன்போல. |
209 | அந்தி ஈசல் பூத்தால், அடைமழை அதிகரிக்கும். |
210 | அந்தி மழை அழுதாலும் விடாது. |
211 | அந்தூது நெலலானேன். |
212 | அப்பச்சி குதம்பையைச் சூப்பப் பிள்ளை முற்றின தேங்காய்க்கு அழுகிறதுபோல. |
213 | அப்பச்ச கோவணத்தைப் பருந்து கொண்டோடுகிறது, பிள்ளை வீரவாளிப் பட்டுக்கு அழுகிறது. |
214 | அப்பத்தை எப்படிச் சுட்டீர்கள்? துpத்திப்பை எப்படி நுழைத்தீர்கள்? |
215 | அப்பம் சுட்டது சட்டியில், அவல் இடித்தது திட்டையில். |
216 | அப்பம் எனறாற் பிட்டுக்காட்ட வேண்டுமா? |
217 | அப்பன் அருமை அப்பன் மரண்டால் தெரியும், உப்பின் அருமை உப்புச் சமைந்தால் தெரியும். |
218 | அப்பன் சோற்றுக்கு அழுகிறான், பிள்ளை கும்;பகோணத்தில் கோதானம் செய்கிறான். |
219 | அப்பன் பெரியவன், சிற்றப்பா சுருட்டுக்கு நெருப்புக் கொண்டு வா என்கிறது போல. |
220 | அப்பா என்றால் உச்சி குளிருமா |
221 | அப்பியாசம் கூசாவித்தை |
222 | அப்பியாச வித்தைக்கு அழிவு இல்லை. |
223 | அமஞ்சி உண்டோ குப்புநாய்க்கரே என்பானேன்? |
224 | அமரபட்சம் பூர்வபட்சம், கிஷ்ணபட்சம் சுக்கிலபட்சம். |
225 | அமரிக்கை ஆயிரம் பெறும். |
226 | அமர்த்தனுக்கும் காணி வேண்டாம், சமர்த்தனுக்கும் காணி வேண்டாம். |
227 | அமாவாசைக் கருக்கலிலே பெருச்சாளி போனதெல்லாம் வழி. |
228 | அமாவாசைப் பருக்கை என்றைக்கும் அகப்படுமா? |
229 | அமுதம் உண்கிற வாயால் விஷம் உண்பார்களா? |
230 | அம்பட்டக்கிருதும் வண்ணார ஒயிலும். |
231 | அம்பட்டன் குப்பையைக் கிளறினால் மயிர் மயிராய்ப் புறப்படும். |
232 | அம்பட்டன் பிள்ளைக்கு மயிர் அருக்காணயியா? |
233 | அம்பலக்கழுதை அம்பலததிற் கிடந்தால் என்ன, அடுத்த திரு மாளிகையிற் கிடந்தால் என்ன? |
234 | அம்;பலத்தில் ஏறும் பேச்சை அமசடக்கம் பண்ணப் பார்க்கிறான்.. |
235 | அம்பலத்தில் கட்டுச்சசோறு அவிழ்க்கிறாபோல். |
236 | அம்பலத்தில் பொதி அவிழ்க்கல் ஆகாது. |
237 | அம்பானி தைத்ததுபோலப் பேசுகிறான். |
238 | அம்பிகொண்டு ஆறு கடப்போர், நம்பிக்கொண்டு நரிவால் கொள்ளுவார்களா? |
239 | அம்மணமும் இன்னலும் ஆயுசுபரியந்தமா? |
240 | அம்மா கெட்ட கேட்டுக்கு முக்காடு ஒன்று? |
241 | அம்மானும் மருமகனும் ஒரு வீட்டுக்கு ஆள் அடிமை. |
242 | அம்மான் மகளுக்கு முறையா? |
243 | அம்மான் வீட்டு வெள்ளாட்டியை அடிக்க அதிகாரியைக் கேட்க வேண்டுமா? |
244 | அம்மி மிடுக்கோ அரைப்பவள் மிடுக்கோ? |
245 | அம்மி மிதித்தது அருந்ததி பார்த்ததுபோல. |
246 | அம்மியிருந்து அரசனை அளிப்பாள். |
247 | அம்மியும் குழவியும் ஆகாயத்தில் பறக்கச்சே, எச்சிற்கல்லை எனக்கு என்ன புத்தி என்றாற்போல. |
248 | அம்முக்கள்ளி ஆடையைத் தின்றால் வெண்ணெய் உண்டா? |
249 | அம்மைக்கு அமர்க்களம் பொங்கிப் படையுங்கள். |
250 | அம்மையார் எப்பொழுது சாவாள்? கம்பளி எப்பொழுது நமக்கு மிச்சமாகும்? |
251 | அம்மையார் நூற்கிற நூலுக்கும், பேரன் கட்டுகிற அரைஞாட் கயிற்றுக்கும் சரி. |
252 | அம்;மையார் பெறுகிறது அரைக்காசு, தலை சிரைக்கிறது முக்காற் காசு. |
253 | அம்மையார்க்கு என்ன துக்கம், கந்தைத் துக்கம். |
254 | அம்மையாரே வாரும், கிழவனைச் கைக்கொள்ளும். |
255 | அயலார் உடமைக்குப் பேயாய்ப் பறககிறான். |
256 | அயலார் உடைமையில் அந்தகன் போல் இரு. |
257 | அயன் இட்ட கணக்கு ஆருக்கும் தப்பாது. |
258 | அயன் இட்ட எழுத்தில் அணுவளவும் தப்பாது. |
259 | அயிரையும் சற்றே அருக்குமாம பிட்டுக்குள் போட்டுப் பிசறாமல். |
260 | அயோக்கியர் அழுகு அபரஞ்சிச் சிமிழல் நஞ்சு. |
261 | அய்யன் அளந்தபடி. |
262 | அய்;யாவையர் கூழுக்கு அப்பையங்கார் தாதாவா? |
263 | ஹர ஹர என்பது பெரிதோ, ஆண்டிக்கு இடுவது பெரிதோ? |
264 | அரக்கன் ஆண்டால் என்ன, மனிதன் ஆண்டால் என்ன? |
265 | அரங்கின்றி வட்டாடலும், நூலறிவின்றிப் பேசலும் ஒன்று. |
266 | அரசன் அளவிற்கு ஏறிற்று. |
267 | அரசன் இல்லாத நாடு, புருஷன் இல்லாத வீடு. |
268 | அரசன் உடைமைக்கு ஆகாயம் சாட்சி |
269 | அரசன் அன்;று கொல்லும், தெய்வம் நின்று கொல்லும். |
270 | அரசன் கல்லின்மேல் கத்தரி காய்க்கிறது என்றால், கொத்து ஆயிரம் குலை ஆயிரம் என்பார்கள். |
271 | அரசன் எப்படியோ அப்படியோ குடிகள். |
272 | அரசன் எவ்வழி குடிகளும் அவ்வழி. |
273 | அரசன் வழிப்பட்டது அவனி. |
274 | அரசன் வழிப்படாதவன் இல்லை. |
275 | அரசனுக்கு ஒரு சொல் அடிமைக்குத் தலைச்சுமை. |
276 | அரசனுக்கு வலியார் அஞ்சுவது எளியார்க்கு அனுகூலமாயிருக்கிறது. |
277 | அரசனுக்குத் துணை வயவாள். |
278 | அரசனும் அரவும் சரி. |
279 | அரசனும் அழலும் சரி. |
280 | அரசனும் நெருப்பும் பாம்பும் சரி. |
281 | அரசனை நம்பிப் புருஷனைக் கைவிட்டதுபோல. |
282 | அரசுக்கு இல்லைச் சிறுமையும் பெருமையும். |
283 | அரசுடையானை ஆகாயம் காக்கும். |
284 | அரண்டவன் கண்ணுக்கு இருண்டது எல்லாம் பேய். |
285 | அரத்தை அரம் அறுக்கும், வயிரத்தை வயிரம் அறுக்கும். |
286 | அரபிக் குதிரையிலும் ஐயம்பேட்டைத் தட்டுவாணி நல்லது. |
287 | அரவத்தைக் கண்டால் கீரி விடுமா? |
288 | அரவுக்கு இல்லைச் சிறுமையும் பெருமையும். |
289 | அரன் அருளில்லாமல் அணுவும் அசையாது. |
290 | அரன்; அருள் அற்றல், அனைவரும் அற்றார். |
291 | அரி அரி என்றால், ராமா ராமா என்கிறான். |
292 | அரி என்கிற அஷரம் தெரிந்தால் அதிகாரம் பண்ணலாம். |
293 | அரி என்;கிற அஷரம் தெரிந்தால் அதிக்கிராமம் பண்ணலாமா? |
294 | அரி என்றால் ஆண்டிக்குக் கோபம், அர என்றால் தாதனுக்குக் கோபம். |
295 | அரிசி அள்ளின காக்காய்போல. |
296 | அரிசி ஆழாக்கானாலும், அடுப்புக்கட்டி மூன்று வேண்டும். |
297 | அரிசி உண்டானல் வரிசையும் உண்டு, அக்காள் உண்டானால் மச்சானும் உண்டு. |
298 | அரிச உழக்கானுலும் அடுப்பு மூன்று. |
299 | அரிசி என்று அள்ளிப் பாhப்பாரும் இல்லை, உமி என்று ஊதிப் பார்பாரும் இல்லை. |
300 | அரிசி கொண்டு உண்ண அக்காள் வீட்டுக்குப் போவானேன்? |
301 | அரிசிக்குத் தக்க உலையும் ஆமுடையானுக்குத் தக்க விருப்பும். |
302 | அரிசிப் பகையும் ஆமடையான் பகையும் உண்டா? |
303 | அரிசிப் பொதியுடன் திருவாரூர். |
304 | அரிசி மறந்த உலைக்கு உப்பு என்ன? |
305 | அரிச்சந்திரன் வீட்டுக்கு அடுத்த வீடு. |
306 | அரிது அரிது அஞ்செழுத்து உணர்தல். |
307 | அரித்து எரிக்கிற சுப்பிக்கு ஆயம் தீர்வை உண்டா? |
308 | அரிய சரீரம் அந்தரததெறிந்த கல். |
309 | அரியது செய்து எளியதுக்கு ஏமாந்து திரிகிறான். |
310 | அரியும் சிவனும் ஒன்று, அல்ல என்கிறவன் வாயில் மண். |
311 | அரிவாளும் அசைய வேண்டும், ஆண்டை குடியும் கெடவேண்டும். |
312 | அரிவாள் சூட்டைப்போலக் காய்ச்சல் மாற்றவோ? |
313 | அரிவாள் சுறுக்கே அரிவாள் முனை கருக்கே. |
314 | அரிவை மொழி கேட்டால் அபத்தன் ஆவான். |
315 | அருகாகப் பழுத்தாலும், விளாமரத்தில் வெளவால் சேராது. |
316 | அருக்காணி நாச்சியார் குரங்குப்பிள்ளைப் பெற்றலாம்;. |
317 | அருக்காணிமுத்துக் கரிக்கோலமானாள். |
318 | அருக்காமணியா முருக்கம்பூவா? |
319 | அருங்கோடைத் துரும்பு அற்றுப்போகுது. |
320 | அருட்செல்வம் ஆருக்கும் உண்டு, பொருட்செல்வம் ஆருக்கும் இல்லை. |
321 | அருணாம்;பரமே கருணாம்பரம். |
322 | அருமை அறியாதவன் ஆண்டு என்ன, மாண்டு என்ன? |
323 | அருமை மருமகன் தலைபோனாலும் போகட்டும், ஆதிகாலத்து உரல் போகல் ஆகாது. |
324 | அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிராது. |
325 | அரும் சுனை நீர் உண்டால், அப்பொழுதே ரோகம். |
326 | அருள் வேணும், பொருள் வேணும், அடக்கம் வேணும். |
327 | அரைக்காசுக்கு அழிந்த கற்பு ஆயிரம்பொன் கொடுத்தாலும் கிடையாது |
328 | அரைக்காசுக்குப் போன மானம் ஆயிரம் கொடுத்தாலும் வாராது. |
329 | அரைக்கினும் சந்தனம் அதன் மணம் ஆறாது |
330 | அரைக்குடம் ததும்பும் நிறைகுடம் ததும்பாது |
331 | அரைச்சல்லியை வைத்து எருக்கு இலையைக் கடந்ததுபோல |
332 | அரைச்சிலை சுட்டக் கைக்கு உபசாரமா? |
333 | அரைச்சொற் கொண்டு அம்பலம் ஏறலாமோ? |
334 | அரைச்சொற் கொண்டு அம்பலம் ஏறினால், அரைச்சொல் முழச் சொல்லாகும். |
335 | அரைத்த பயறு முளைத்தாற்போல |
336 | அரைத்து மீந்தது அம்மி சிரைத்து மீந்தது குடுமி. |
337 | அரைப்பணம் கொடுத்து அழச்சொல்லி ஒருபணம் கொடுத்து ஒயச்;சொல்லுவானேன். |
338 | அரைப்பணச் சேவகம் ஆனாலும் அரண்மனைச் சேவகம்போல் ஆகுமா? |
339 | அரைப்பணம் கொடுக்கப் பால்மாறி, ஐம்பது பொன் கொடுத்துச் சேர்வை செயத கதை. |
340 | அரையிற் புண்ணும் அண்டைவீட்டுக் கடனும் ஆகாது. |
341 | அரைவித்தை கொண்டு அம்பலம் ஏறினால் அரைவித்தை முழுவித்தை ஆகுமா? |
342 | அலுத்துப் பிலுத்து அக்காள் வீட்டுக்குப் போனால் அக்காள் இழுத்து மச்சானிடத்திற் போட்டாளாம். |
343 | அலை எப்பொழுது ஒழியம், தலை எப்பொழுது முழுகுகிறது? |
344 | அலை மோதும்போதே தலை முழுகுகிறது. |
345 | அலைவாய்த் துரும்புபொல. |
346 | அல்;லக்காட்டு நா பல்லைக் காட்டுகிறதுபோல. |
347 | அல்லவை தேய அறம் பெருகும். |
348 | அல்லற்பட்டு அழுத கண்ணீர் செல்வத்தைத் தேய்க்கும் படை |
349 | அல்லல் அற்ற படுக்கை அழகிலும் அழகு. |
350 | அல்லல் அருளாள்வார்க்கில்லை. |
351 | அல்லல் ஒரு காலம் செல்வம் ஒரு காலம். |
352 | அல்லாதவன் வாயில் கள்ளை வார். |
353 | அல்லாத வழியால் பொருள் ஈட்டல் காமம் துய்த்தல் இவை ஆகா. |
354 | அல்லும் பகலும் அழுக்கறக் கல் |
355 | அவகடம் உள்ளவன் அருமை அறியான் |
356 | அவகுணக்காரன் ஆகாசமாவான். |
357 | அவசரக்காரனுக்குப் புத்தி மட்டு |
358 | அவசரக்கோலம் அள்ளித் தெளிக்கிறேன். |
359 | அவசரத்தில் உபசாரமா? |
360 | அவசரத்திற்குப் பாவம் இல்லை. |
361 | அவசரமானால் அரிக்கன் சட்டியிலும் கை நுழையாது. |
362 | அவசாரிபோகவும் ஆசை இருக்கிறது அடிப்பான் என்று பயமும் இருக்கிறது. |
363 | அவசாரிக்கு வாய் பெரிது, அஞ்சு ஆறு அரிசிக்குக் கொதி பெரிது. |
364 | அவசாரிக்கு ஆணை இல்லை, திருடிக்குத் தெய்வம் இல்லை. |
365 | அவசாரி ஆடினாலும் அதிஷ்டம் வேண்டும் திருடப் போனாலும் திறமை வேண்டும். |
366 | அவசாரியென்று ஆணைமேல் ஏறலாம் திருடியென்று தெருவில் வரலாமா? |
367 | அவதந்திரம் தனக்கு அந்தரம். |
368 | அவதிக்குடிக்குத் தெய்வமே துணை. |
369 | அவத்தனுக்கும் சமர்த்தனுக்கும் காணி கவை இல்லை. |
370 | அவப்பொழுதிலும் தவப்பொழுது நல்லது. |
371 | அவமானம்பண்ணி வெகுமானம் பேசுகிறான். |
372 | அவரா சுறுக்கே அரிவாண்மணை கருக்கே. |
373 | அவருடைய சிறகு முறிந்துபொயிற்று. |
374 | அவர் அவர் மனசே அவர் அவருககுச் சாட்சி. |
375 | அவர் அவர் எண்ணத்தை ஆண்டவர் அறிவார். |
376 | அவலட்சணம் உள்ள குதிரைக்குச் சுழி சுத்தம் பார்ககிறதில்லை. |
377 | அவலமாய் வாழ்பவன் சவலமாய்ச் சாவான். |
378 | அவளை நினைத்து உரலை இடித்தாற்போல. |
379 | அவள் பாடுகிறது குயில் கூவுகிறதுபோல் இருக்கிறது. |
380 | அவள் சமர்த்துப் பானை சந்தியில் உடைந்தது. |
381 | அவனுக்கு இவன் எழுந்திருந்து உண்பான். |
382 | அவனுக்கு க்ப்படாவும் இல்லை வெட்டுக்கத்தியும் இல்லை. |
383 | அவனுக்குள்ளே அகப்பட்டிருக்கிறது என் பிழைப்பு. |
384 | அவனுக்குச் சுக்கிரதிசை அடிக்கிறது. |
385 | அவனுக்கம் இவனுக்கும் எருமைச்சங்காத்தம் |
386 | அவனுடைய பேச்சு காற்சொல்லும் அரைச்சொல்லும். |
387 | அவனுடைய வாழ்வு நண்டுக்குடவை உடைந்ததுபோல் இருக்கிறது. |
388 | அவனே இவனே என்பதைவிடச் சிவனே சிவனே என்கிறது நல்லது. |
389 | அவனே வெட்டவும் விடவும் கர்த்தன். |
390 | அவனை அவன் பேச்சிட்டுப் பேச்சு வாங்கி, ஆமை மல்லாத்துகிறப்போல் மல்லாத்திப்போட்டான். |
391 | அவனோடு இவனை எணிவைத்துப் பார்த்தாலும் காணாது. |
392 | அவன் நா அசைய நாடு அசையும். |
393 | அவன் அருள் அற்றல் அனைவரும் அற்றர், அவன் அருள் உற்றல் அனைவரும் உற்றர். |
394 | அவன் ஒரு குளிர்ந்த கொள்ளி. |
395 | அவன் மிதித்த இடத்தில் புல்லும் சாகாது. |
396 | அவன் மிதித்த இடம் பற்றியெரிகின்றது. |
397 | அவன் மெத்த அத்துமிஞ்சின பேச்சுக்காரன் |
398 | அவன் காலால் இட்ட வேலையைக் கையால் செய்வான். |
399 | அவன் சாதி எந்தப் புத்தி குலம் எந்த ஆசாரமோ அதுதான் வரும். |
400 | அவன் காலால் முடிந்ததைக் கையால் அவிழ்க்கக்கூடாது. |
401 | அவன் அசையாது அணுவும் அசையாது. |
402 | அவன் அவன் எண்ணத்தை ஆண்டவன் ஆக்கினாலும் ஆக்குவான், அழித்தாலும் அழிப்பான். |
403 | அவன் கழுத்துக்குக் கத்தி தீட்டுகிறான். |
404 | அவன் உள்ளெல்லாம் புண் உடம்பெல்லாம் கொப்புளம். |
405 | அவன் எனக்கு அட்டமத்துச்சனி |
406 | அவன் தொத்தி உறவாடித் தோலுக்கு மன்றாடுகிறான். |
407 | அவன் தன்னால தான் கெட்டால் அண்ணாவி என்ன செய்வான்? |
408 | அவன் காலால் கீறனதை நான் நாவால் அழிக்கிறேன். |
409 | அவன் உனக்குக் கிள்ளுக்கீரையோ? |
410 | அவன் கையைக்கொண்டே அவன் கண்ணில் குத்தினான். |
411 | அவன் சிறகில்லாப் பறவை. |
412 | அவன் என் தலைக்கு உலை வைக்கிறான். |
413 | அவன் அவன் செய்த வினை அவன் அவனுக்கே. |
414 | அவன் எனனை ஊதிப் பறக்கடிக்கப் பார்க்கிறான். |
415 | அவன் எரிபொரியென்று விழுகிறர்ன். |
416 | அவன் ஒடிப்பாடி நாடியில் அடங்கினான். |
417 | அவன் வல்லாளகண்டனை வாரிப்போரிட்டவன். |
418 | அவன் கொஞ்சப்புள்ளியா? |
419 | அவாந்தரத்தில் அக்கினி பற்றுமா? |
420 | அவித்த பயறு முளைத்த கதைபோல. |
421 | அவிவேகி உறவிலும், விவேகி பகையே நன்று. |
422 | அவிழ் என்ன செய்யும் அஞ்ச குணம் செய்யும் பொருள் என்ன செயயு;ம் பூவை வசம் செய்யும். |
423 | அவையிலும் ஒருவன் சவையிலும் ஒருவன். |
424 | அவ்வளவு இருந்தால் அடுக்கிவைத்து வழழேனே. |
425 | அழகிலே பிறந்த பவளக்கொடி அகத்திலே பிறந்த சாணிக்கூடை |
426 | அழகிற்கு மூக்கை அறுப்பார் உண்டா? |
427 | அழகு இருந்து அழும், அதிஷ்டம் இருந்து உண்ணும். |
428 | அழகுப் பெண்ணே காற்றாடி உன்னை அழைக்கிறாண்டி கூத்தாடி. |
429 | அழகுக்கு இட்டால் ஆபத்துக்கு உதவும். |
430 | அழச்சொல்லுகிறவர் தமர், சிரிக்கச்சொல்லுகிறவர் பிறர். |
431 | அழச்சொல்லுகிறவன் பிழைக்கச்சொல்லுவான், சிரிக்கச்சொல்லுகிறவன் கெடச்சொல்லுவான். |
432 | அழிக்கப்டுவானைக் கடவுள் அறிவீனன் ஆக்குவார். |
433 | அழிந்தவள் ஆரோடு போனால் என்ன? |
434 | அழிந்த நந்தவனத்தில் அசவம் மேய்ந்து என்ன, கழுதை மேய்ந்து என்ன? |
435 | அழிவழக்குச் சொன்னவன் பழிபொறுக்கும் மன்னவன். |
436 | அழுகள்ளர் தொழுகள்ளர் ஆசாரக்கள்ளர். |
437 | அழுகிற ஆணையும் சிரிக்கிற பெண்ணையும் நம்பக்கூடாது. |
438 | அழுகிற வீட்டில் இருந்தாலும் இருக்காலம், ஒழுகுகிற வீட்டில் இருக்கலாகாது. |
439 | அழுகிற பிள்ளைக்கு வாழைப்பழம் காடடுகிறதுபோல. |
440 | அழுகிற வேளை பார்த்து அக்குள் பாய்ச்சுகிறான். |
441 | அழுகிறதற்கு அரைப்பணம் கொடுத்து, ஒய்கிறதற்கு ஒரு பணம் கொடு. |
442 | அழுகையும் ஆங்காரமும் சிரிப்புக் கெலிப்போடா? |
443 | அழுக்குச் சீலைக்குள்ளே மாணிக்கம். |
444 | அழுக்கை அழுக்குக் கொல்லும் இழுக்கை இழுக்குக் கொல்லும். |
445 | அழுக்கைத் துடைத்து மடிமேல் வைத்தாலும் புழக்கைக் குணம் போகாது. |
446 | அழுத கண்ணும் சிந்திய மூக்கும். |
447 | அழுதவனுக்கு அகங்காரமில்லை. |
448 | அழுதபிள்ளை பால் குடிக்கும். |
449 | அழுத பிள்ளை உரம் பெறும். |
450 | அழுதும் பிள்ளை அவளே பெற வேண்டும். |
451 | அழுத்த நெஞ்சன் ஆருக்கும் உதவான், இளகின நெஞ்சன் எவர்க்கும் உதவுவான். |
452 | அழுவார் அற்ற பிணமும் ஆற்றுவார் அற்ற சுடலையும். |
453 | அழுவார் அழுவார் தம் தம் துக்கமே திருவன்பெண்டீரக்கு அழுவாரில்லை. |
454 | அழையா வீட்டிற்கு நுழையாச் சம்பந்தி |
455 | அளகாபுரியிலும் விறகுதலையன் உண்டு. |
456 | அளகாபுரி கொள்ளையானாலும், அதிஷ்ட ஈனனுக்கு ஒன்றும் இல்லை. |
457 | அளகேசன் ஆனாலும் அளவு அறிந்து செலவு செய்யவேண்டும். |
458 | அளக்கிற நாழி அகவிலை அறியுமா? |
459 | அளந்த நாழிகொண்டு அளப்பான். |
460 | அளந்தால் ஒரு சாணிலலை அரிந்தால் ஒரு சட்டிகாணது. |
461 | அளந்து அளந்த நாழி ஒழிந்து ஒழிந்து வரும். |
462 | அளவளாவில்லாதவன் வாழ்க்கை குளவளாக் கோடின்றி நீர் நிறைந்தற்று. |
463 | அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. |
464 | அள்ளாது குறையாது சொல்லாது பிறவாது. |
465 | அள்ளிக் கொடுத்தால் சும்மா அளந்துக் கொடுத்தால் கடன். |
466 | அள்ளிப் பால் வார்க்கையிலே சொல்லிப் பால் வார்த்திருக்குது. |
467 | அள்ளுகிறவன் இடத்தில் இருக்கல் ஆகாலு கிள்ளுகிறவன் இடத்தில் இருந்தாலும். |
468 | அள்ளுவது எல்லாம் நாய் தனக்கென்று எண்ணுமாம். |
469 | அறக்காத்தான் பெண்டிழந்தான் அறுகாதவழி சுமந்து அழுதான். |
470 | அறக்குழைத்தாலும் குழைப்பாள் அரிசியாய் இறக்கினாலும் இறக்குவான். |
471 | அறக்கூர்மை மழுமொட்டை |
472 | அறச்செட்டு முழுநஷ்டம் |
473 | அறணை அலகு திறவாது. |
474 | அறணை கடித்தால் மரணம். |
475 | அறத்தால் வருவதே இன்பம். |
476 | அறநனைத் தந்தவருக்குக் கூதல் என்ன? |
477 | அறப்பேசி உறவாட வேண்டும். |
478 | அறப்படித்தவர் அங்காடி போனால் விற்கவுமாட்டார் கொள்ளவு மாட்டார். |
479 | அறப்படித்தவர் கூழ்ப்பானையில் விழுந்தார். |
480 | அறப்பத்தினி ஆமடையானை அப்பா என்று அழைத்த கதை. |
481 | அறப்படிதத மூஞ்சூறு கழுநீர்ப்பானையில் விழுந்ததுபோல். |
482 | அறமுறுக்கினால் கொடுமுறுக்காகும். |
483 | அறமுறுக்கினால் அற்றுப்போகும். |
484 | அறமுறுக்குக் கொடும்புரி கொண்டு அற்றுவிடும். |
485 | அறம் பொருள் இன்பம் எல்லாருக்கும் இல்லை. |
486 | அறவடித்த முன்சோறு காடிப்பானையில் விழுந்தாற்போல. |
487 | அறவும் கொடுங்கோலரசன்கீழ் குடியிருப்பிற் குறவன்கீழ்க் குடியிருப்பு. |
488 | அறிஞர்க்கழகு அகத்துணர்ந்து அறிதல் |
489 | அறிந்த ஆண்டையென்று கும்பிடப் போனால், உங்கள் அப்பன் பத்துப் பணம் கொடுக்கவேண்டும் கொடு என்றான். |
490 | அறிந்;த பார்ப்பான் சிநேகிதன் ஆறு காசுக்கு மூன்று தோசையா? |
491 | அறிந்தும் கெட்டேன் அறியாமலும் கெட்டேன் சொறிந்து புண் ஆயிற்று. |
492 | அறிந்தவனென்று கும்பிட அடிமை வழக்கிட்ட கதை. |
493 | அறிய அறியக் கெடுவார் உண்டா? |
494 | அறியாத நாள் எல்லாம் பிறவாத நாள். |
495 | அறியாமல் தாடியை வளர்த்து அம்பட்டன் கையிற் கொடுக்கவா? |
496 | அறியாப் பிள்ளைப் புத்தியைப்போல. |
497 | அறிவிi;ன இடத்தில் புத்தி கேளாதே. |
498 | அறிவீPனர் தமக்கு ஆயிரம் உரைக்கினும் அவம். |
499 | அறிவு ஆர் அறிவார்? ஆய்ந்தார் அறிவார். |
500 | அறிவு இல்லாதவன் பெண்டுகளிடத்திலும் தாழ்வுபடுவான். |
501 | அறிவு இல்லாச் சயனம் அம்பரத்திலும் இல்லை. |
502 | அறிவு பெருத்தோன் நோய் பெருத்தோன். |
503 | அறிவு இல்லார்கு ஆண்மையும் இல்லை. |
504 | அறிவு புற்ம்போய உலண்டதுபோல. |
505 | அறிவுடன் ஞானம் அன்புடன் ஒழுக்கம். |
506 | அறிவு மனதை அரிக்கும். |
507 | அறிவு தரும் வாயும் அன்பு உரைக்கும் நாவும். |
508 | அறிவுடையாரை அரசனும் விரும்பும். |
509 | அறிவுடையாரை அடுத்தாற் போதும். |
510 | அறிவேன் அறிவேன் ஆவிலை புளியிலைபோல் இருக்கும். |
511 | அறுக்கமாட்டாதவன் அரையில் ஐம்பத்தெட்டு அரிவாள். |
512 | அறதவி மகனுக்கு அங்கம் எல்லம் சேட்டை. |
513 | அறுத்த கோழி துடிக்குமாப்போல |
514 | அறுத்தவன் ஆண்பிள்ளை பெற்ற கதை. |
515 | அறுபது நாளைக்கு எழுபது கந்தை. |
516 | அறுப்பத்துநாலு அடிக் கம்பத்தின்மேல் ஆடினாலும், கீPழே வந்து தியாகம் வாங்கவேண்டும். |
517 | அறுபத்தெட்டுக் கோரம்பலம். |
518 | அறுப்புக் காலத்தில் எலிக்கும் ஐந்து பெண்சாதி. |
519 | அறுவாய்க்கு வாய் பெரிது, அரிசிக்குக் கொதி பெரிது. |
520 | அறையில் ஆடி அல்லவோ அம்பலத்தில் ஆடவேண்டும்? |
521 | அறையில் இருக்கிறவர்களை அம்பலத்தில் ஏற்றுகிற புரட்டன் |
522 | அற்ப ஆசை கோடி தவத்தைக் கெடுக்கும். |
523 | அற்பத்திற்கு அழகு குலைகிறதா? |
524 | அற்பத் துடைப்பமானாலும் அகத்தூசியை அடக்கும். |
525 | அற்பர் சிநேகிதம் பிராண கண்டிதம். |
526 | அற்பர் சிநேகம் பிராண சங்கடம். |
527 | அற்பனுக்கு ஐஸ்வரியம் வந்தால் அர்த்தராத்திரியில் குடைபிடிப்பான். |
528 | அற்பன் பணம் படைத்தால் வைக்க வகை அறியான். |
529 | அற்றத்துக்கு உற்றதாய். |
530 | அனல் குளிர் வெதுவெதுப்பு இம்மூன்று காலமும் ஆறு காலத்திற்குள் அடக்கம். |
531 | அனுபோகம் தொலைந்தால் அற்ப அவிழ்தமும் பலிக்கும். |
532 | அன்பற்ற மாமியாருக்குக் கால் பட்டாலும் குற்றம், கைபட்டாலும் குற்றம். |
533 | அன்பற்ற மாமியாருக்குக் கும்பிடும் குற்றந்தான். |
534 | அன்பற்றார் வாசலிலே பின்பற்றிப் போகாதே. |
535 | அன்பான சிநேகிதனை ஆபத்திலே அறி. |
536 | அன்பில்லார் தமக்கு ஆதிக்கம் இல்லை. |
537 | அன்புள்ள குணம் அலையில்லா நதி. |
538 | அன்பு இருந்தால் ஆகாதும் ஆகும். |
539 | அன்புடையானைக் கொடுத்து அலையச்சே அசல் வீட்டுக்காரன் வந்து அழைத்த கதை. |
540 | அன்பே பிரதானம் அதுவே வெகுமானம். |
541 | அன்றற ஆயிரம் பொன்னிலும், நின்றற ஒரு காசு பெரிது. |
542 | அன்நிறுக்கலாம் நின்றிறுக்கலாகாது. |
543 | அன்று கண்ட மேனிக்கு அழிவு இல்லை. |
544 | அன்றும் இல்லைத் தையல், இன்றும் இல்லைப் பொத்தல். |
545 | அன்றுகொள், நின்றுகொள், என்றும் கொள்ளாதே. |
546 | அன்று தின்ற சோறு ஆறு மாதத்திற்கு ஆமா? |
547 | அன்று தின்ற ஊண் ஆறு மாசத்துப் பசியை அறுக்கும். |
548 | அன்று எழுதினவன் அழித்து எழுதுவானா? |
549 | அன்றைக்குக் கிடைக்கிற ஆயிரம் பொன்னிலும் இன்றைக்குக் கிடைத்த அரைக்காசு பெரிது. |
550 | அன்றைக்குத் தின்கிறே பலாக்காயைவிட இன்றைக்குத் தின்கிறகளாக்காய் பெரிது. |
551 | அன்னப்பிடி வெல்;லப் பிடி ஆச்சுது. |
552 | அன்ன மயம் பிராண மயம். |
553 | அன்ன மயம் இன்றிப் பின்னை மயம் இல்லை. |
554 | அன்னம் மிகக் கொள்வானும் ஆடை அழுக்கு ஆவானும் பதர். |
555 | அன்னம் இட்டார் வீட்டில் கன்னம் இடலாமா? |
556 | அன்னம் ஒடுங்கினால் அஞ்சம் ஒடுங்கும். |
557 | அன்ன நடை நடக்கபபோய்த் தன் நடையும் கெட்டாற்போல. |
558 | அன்னம் முட்டானால் எல்லாம் முட்டு. |
559 | அன்னப்பாலுக்குச் சிங்கியடித்தவள் ஆவின் பாலுக்குச் சர்க்கரை தேடுகிறாள். |
560 | அன்னதானத்திற்குச் சரி என்ன தானம் இருக்கிறது? |
561 | அன்னிய மாதர் அவதிக்கு உதவார். |
562 | அன்னைக்கு உதவாதான் ஆருக்கு உதவுவான்? |
563 | அஸ்த செம்மானம் அடைமழைக்கு லஷணம். |
564 | அஸ்திமசகாந்தரம் என்றதுபோல் இருக்கிறது. |