We are proud to present the biggest collection of Tamil proverbs.(ஆ-வரிசை)
Here is the link for popular Proverbs : Popular Tamil Proverbs
 

565ஆகடியக்காரன் போகடியாய்ப் போவான்
566ஆகாத நாளையில் பிள்ளை பிறந்தால், அண்டை வீட்டுக்காரனை என்ன செய்யம்?
567ஆகாத பஞ்சாங்கத்துக்கு அறுபது நாழிகையும் தியாச்சியம்.
568ஆகாதவன் குடியை அடுத்துக் கெடுக்கவேண்டும்.
569ஆகாதவற்றை ஏற்றால் ஆராய்ந்து ஏற்றுக்கொள்.
570ஆகாத்தியக்காரனுக்குப் பிரமகத்திக்காரன் சாட்சியா?
571ஆகாயத்துக்கு மையம் காட்டுகிறது போல.
572ஆகாயத்தைப் பருந்து எடுத்துக்கொண்டு போகுமா?
573ஆகாயத்தில் பறக்க உபதேசிப்பேன், என்னைத் தூக்;கி ஆற்றுக்கு அப்பால் விடு என்கிறாள் குரு.
574ஆகாய வல்லிடி அதிர இடிக்கும்.
575ஆகாயமட்டும் அளக்கும் இருப்புத்துணைச் செல்லரிக்குமா?
576ஆகாயம் பார்க்கப்போயும் இடுமுடுக்கா?
577ஆகாயத்தை வடுப்படக் கடிக்கலாமா?
578ஆகாயம் பெற்றது, பூமி தாங்கினது.
579ஆகிறகாலத்தில அவிழ்தம் பலிக்கும்.
580ஆகுங்காலத்தில் அடியாளும் பெண் பெறுவாள்.
581ஆகுங்காய் பிஞ்சிலே தெரியும்.
582ஆகுங்காலம் ஆகும், போகுங்காலம் போகும்.
583ஆக்;கப் பொறுத்தவன் ஆறப் பொறானா?
584ஆக்கிற் குழைப்பேன், அரிசியாய் இறக்குவேன்.
585ஆக்கினையும் செங்கோலும் அற்றது அரை நாழிகையில்.
586ஆக்குகிறவள் சலித்தால் அடுப்புப் பாழ்
587ஆங்காரிகளுக்கு அதிகாரி.
588ஆங்காலம் எல்லாம் அவசாரி ஆடிச் சாங்காலம் சங்கரா சங்கரா என்கிறாள்.
589ஆசரித்த தெய்வம் எல்லாம் அடியோடே மாண்டது.
590ஆசாரம் இல்லா அசடருடன் கூடிப் பாசாங்கு பேசிப் பதி இழந்துபோனேன்.
591ஆசீர்வாதமும் சாபமும் அறவோர்க்கு இல்லை.
592ஆசை அவள் மேலே ஆதரவு பாய் மேலே.
593ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள், தொண்ணூறு நாளும்; போனால் துடைப்பக்கட்டை.
594ஆசை அண்டாதாகில், அழுகையும் அண்டாது.
595ஆசை உண்டானால் பூசை உண்டு.
596ஆசை உள்ளளவும் அலைச்சலும் உண்டு.
597ஆசை கொண்;ட பேருக்கு ரோசம் இல்லை.
598ஆசைக்கு அளவில்லை.
599ஆசை சொல்லி மோசம் செய்கிறதா?
600ஆசை நோவுக்கு அவிழ்தம் ஏது?
601ஆசை பெருக அலைச்;சலும் பெருகும்.
602ஆசை பெரிதோ, மலை பெரிதோ?
603ஆசைப்பட்டது ஊசிப்போயிற்று.
604ஆசையெல்லம் தீர அடித்தாள் முறத்தாலே.
605ஆசை வெட்கம் அறியாது.
606ஆசை வைத்தால் நாசம்.
607ஆச்சி ஆச்சி மெத்தப் படித்துப் பேசாதே.
608ஆடப் பாடத் தெரியாது இரண்டு பங்கு உண்டு.
609ஆடமாட்டாத தேவடியாள் கூடம் போதாது என்றாள்.
610ஆடவிட்டு நாடகம் பார்க்கிறதா?
611ஆடாஜாதி கூடாஜாதியா?
612ஆடாது எல்லம் ஆடி அவரைக்காயும் அறுத்தாச்சுது.
613ஆடி அறவெட்டை அகவிலை நெல்விலை.
614ஆடி அமர்ந்தது கூத்து ஒரு நாழிகையில்.
615ஆடி ஒய்ந்த பம்பரம்.
616ஆடிக்கரு அழிந்தால் மழை குறைந்துபோம்.
617ஆடிக்கறக்கிற மாட்டை ஆடிக் கறக்கவேண்டும், பாடிக் கறக்கிற மாட்டைப் பாடிக் கறக்கவேண்டும்.
618ஆடிக்காற்றில் உதிரும் சருகுபோல.
619ஆடிக்காற்றில் எச்சிற் கல்லைக்கு வழியா?
620ஆடிக்காற்றிலே இலவம்;பஞ்சு பறந்ததுபோல.
621ஆடிக்கு அழைக்கால மாமியாரைத் தேடி மயிரைப் பிடித்துச் செருப்பால் அடி.
622ஆடி மாசத்தில் குத்தின குத்து ஆவணி மாசத்தில் உளவு எடுத்ததாம்.
623ஆடிய காலும் பாடிய மிடறும்.
624ஆடி விதை தேடிப்போடு.
625ஆடு இருக்க இடையனை விழுங்குமா?
626ஆடு எடுத்த கள்ளனைப்போலே விழிக்கிறான்.
627ஆடு கடிக்கிறதென்று இடையன் உறியேறிப் பதுங்குகிறான்.
628ஆடு காற்பணம் வால் முக்காற்பணம்.
629ஆடு கிடந்த இடத்திலே மயிர்தானும் கிடையாமற் போயிற்று.
630ஆடு கிடந்த இடமும் அகம்படியான் இருந்த இடமும் உருப்படாது.
631ஆடகிடந்த இடத்தில் பழுப்புத்தானும் கிடையாது.
632ஆடு கொழுக்கிறது எல்லாம் இடையனுக்கு லாபம்.
633ஆடு கொண்டவன் ஆடித்திரிவான், கோழி கொண்டவன் கூவித் திரிவான்.
634ஆடு கொடாத இடையன் ஆவைக் கொடுப்பானா?
635ஆடு கோனான்றித் தானாய் போகுமா?
636ஆடுங்காலம் தலைகீழாய் விழுந்தாலும் கூடும்புசிப்புத்தான் கூடும்.
637ஆடுங்காலத்துத் தலைகீழாக விழுந்தால் ஒடும் க்பபரையம் உடையவன் ஆவான்.
638ஆடுதவுமா குருக்களே என்றால், கொம்பும் குளம்பும் தவிரச் சமூலமும் ஆகம் என்கிறார்.
639ஆடு தழை தின்பது போலே.
640ஆடு நனைகிறதென்று கோனாய் அழுகிறதாம்.
641ஆடு நினைத்த இடத்தில் பட்டி போடுகிறதா?
642ஆடு பிழைத்தால் மயிர்தானும் கொடான்.
643ஆடு வீட்டிலே ஆட்டுக்குட்டி காட்டிலே.
644ஆடை இல்லாதவன் அரை மனிதன்.
645ஆடையைத் தின்றால் வெண்ணெய் உண்டா?
646ஆட்காட்டி சொந்தகாரனையும் திருடனையும் காட்டிக்கொடுக்கும்.
647ஆட்;காட்டி தெரியாமல் திருடப்போகிறவன் கெட்டிக்காரனே அவன் அறியாமல் அவன் காலடி பிடித்துப் போகிறவன் கெட்டிக்காரனே?
648ஆட்டாளுக்கு ஒரு மோட்டான்.
649ஆட்டில் ஆயிரம், மாட்டில் ஆயிரம், வீட்டிலே கரண்டி பால் இல்லை.
650ஆட்டுக்கு வால் அளவறுத்து வைத்திருக்கிறது.
651ஆட்டுக்கும் மாட்டுக்கும் இரண்டு கொம்பு, ஐயம்பிடாரிக்கு மூன்று கொம்பு.
652ஆட்டுக்குத் தோற்குமா கிழப்புலி?
653ஆட்டுக்கும் மாட்டுக்கு முறையா, காட்டுக்கும் பாட்டுக்கும் வரையா?
654ஆட்டுக்கிடையிலே கோனாய் புகுந்ததுபோல.
655ஆட்டுக்குத் தீர்ந்தபடி குட்டிக்கும் ஆகிறது.
656ஆடடுத்தலைக்கு வண்ணான் பறக்கிறது போல.
657ஆட்டு வெண்ணெய் ஆட்டு மூளைக்கும் காணாது.
658ஆட்டுவித்துப் பம்பை கொட்டுகிறான்.
659ஆட்டுக் குட்டிமேல் ஆயிரம் பொன்னா?
660ஆட்டுக்குட்டிக்கு ஆனையைக் காவுகொடு.
661ஆட்டுக்குட்டியைத் தோளிலே வைத்துக் காடெங்கும் தேடின கதை.
662ஆட்டைக் காட்டி வேங்கை பிடிக்கப் பார்க்கிறான்.
663ஆட்டைத் தேடி அயலாள் கையிற் கொடுப்பதைப் பார்க்க, வீட்டை கட்டி நெருப்பு வைப்பது நல்லது.
664ஆட்டைக்கொருமுறை காணச் சோட்டை இல்லையோ?
665ஆணமும் கறியும் அடுக்கோடே வேண்டும்.
666ஆணவத்தால் அழியாதே
667ஆணிக்கு இணங்கின பொன்னும் மாமிக்கு இணங்கின பெண்ணும் அருமை.
668ஆணுக்கு அவகேடு செய்தாலும் பெண்ணுக்குப் பிழைகேடு செய்யலாகாது.
669ஆணை அடித்;து வளர், பெண்ணணைப் போற்றி வளர்.
670ஆணையும் வேண்டாம் சத்தியமும் வேண்டாம் துணியைப் போட்டுத் தாண்டு.
671ஆண்ட பொருளை அறியாதார் செய்த தவம் மாண்ட மரத்துக்கு அணைத்த மண்.
672ஆண்டாருக்குக் கொணடக்கிறையோ சுரைக்குடுக்கைக்குக் கொடுக்கிறையோ?
673ஆண்டார் இருக்குமட்டும் ஆட்டும் கூத்தும்.
674ஆண்டிகள் கூடி மடம் கட்டினாற்போல.
675ஆண்டி கிடப்பான் மடத்திலே சோளி கிடக்கும் தெருவிலே.
676ஆண்டிக்கு இடச்சொன்னால் தாதனுக்கு இடச்சொல்லுகிறான்.
677ஆண்டிக்கு வாய்ப்பேச்சு பார்ப்பானுக்கு அதுவும் இல்லை.
678ஆண்டிச்சி பெற்ற அஞ்சம் அவம்.
679ஆண்டி மகன் ஆண்டியானால் நேரம் அறிந்து சங்கு ஊதுவான்.
680ஆண்டியை அடித்தானாம் குடவையை உடைத்தானாம்.
681ஆண்டியும் தாதனும் தோண்டியும் கயிறும்.
682ஆண்டியைக் கண்டால் லிங்கன் என்கிறான், தாதனைக் கண்டால் ரங்கன் என்கிறான்.
683ஆண்டியம் ஆண்டியும் கட்டிக்கொண்டால் சாம்பலும் சாம்பலும் ஒட்டிக்கொள்ளும்.
684ஆண்டி வேஷம்போட்டும் அலைச்சல் தீரவில்லை.
685ஆண்டி குண்;டியைத் தட்டினால் பறப்பது சாம்பல்.
686ஆண்டு மாறின காரும் அன்று அறுத்த சம்பாவும் ஆளன் கண்ணுக்கு அரிது.
687ஆண்டு மறுத்தால் தோட்டியும் கும்பிடான்.
688ஆண்டைமேற் கோபம் கடாவின்மேல் ஆறினான்.
689ஆண்பிள்ளைகள் ஆயிரம் ஒத்தியிருப்பார்கள், அக்காள் தங்கைச்சி ஒத்திரார்கள்.
690ஆண்மையற்ற வீரன் ஆயதத்ததின்மேற் குறைசொல்லுவான்.
691ஆதரவற்ற வார்த்தையும் ஆணிகிடாவாத கைமரமும் பலன் செய்யாது.
692ஆதாயமில்லாத செட்டி ஆற்றோடே போவானா?
693ஆதாயமில்லாத செட்டி ஆற்றைக் கட்டி இறைப்பானா?
694ஆதீனக்காரனுக்குச் சாதனம் வேண்டுமா?
695ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.
696ஆத்திரக்காரன் கோத்திரம் அறிவானா?
697ஆத்திரப்பட்டவனுக்கு அப்போது இன்பம்.
698ஆத்தை படுகிற பாட்டுக்குள்ளே மகன் மோருக்கு அழுகிறான்.
699ஆஸ்தியில்லாதவன் அரைமனிதன்.
700ஆஸ்தியுள்ளவன் ஆஸ்திக்கு அடிமை.
701ஆஸ்தியுள்ளவனுக்கு நாசம் இல்லை.
702ஆந்தை சிறிது கீச்சுப் பெரிது.
703ஆபத்திற் காத்தவன் ஆண்டவன் ஆவான்.
704ஆபத்தும் சம்பத்தும் ஆருக்கும் உண்டு.
705ஆபத்துக்குப் பாவம் இல்லை.
706ஆபத்துக்கு உதவினவனே பந்து.
707ஆப்பாத்தாள் கல்யாணம் போய்ப்பார்த்தால் தெரியும்.
708ஆப்பைப் பிடுங்கின குரங்கு நாசம் அடைந்தது போல.
709ஆமணக்கு விதைத்தால் ஆச்சா முளைக்குமா?
710ஆமணக்கு முத்து ஆணிமுத்தாமா?
711ஆமணக்கும் பருத்தியும் அடர விதைப்பானா?
712ஆமை கிணற்றிலே அணில் கொம்பிலே.
713ஆமை பிடிப்பார் மல்லாத்துவார் நாம் அது சொன்னாற் பாவம்.
714ஆமடையானைக் கொன்ற அறநீவி.
715ஆமுடையான் செத்தபின்பு அறுதவிக்குப் புத்தி வந்தது.
716ஆமுடையானுக்கு அழுதவளுக்கு அந்துக்கண்ணன் வந்து வாய்த்தான்.
717ஆமடையான் அடித்ததற்கு அழவில்லை, ச்ககளத்தி சிரிப்பாளேன்று அழுகிறான்.
718ஆமடையான் செத்து அவதிப்படுகிறபோது, அண்டைவீட்டுக்காரான் வந்து அக்குளில்; குத்தினானாம்.
719ஆமடையான் கோப்பில்லாக் கூத்தும், குருவில்லா ஞானமும் போல் இருக்கிறான்.
720ஆமுடையான் வட்டமாய் ஒடினாலும் வாசலால் வரவேண்டும்.
721ஆமுடையானுக்குப் பொய் சொன்னாலும் அடுப்புக்குப் பொய் சொல்லலாமா?
722ஆமடையானை வைத்துக்கொண்டல்லோ அவசாரியாடவேண்டும்?
723ஆமடையான் செத்தவளுக்கு மருத்துவிச்சி தயவேன்?
724ஆமுடையான் பலம் இருந்தால் குப்பை ஏறிச் சண்டை செய்யலாம்
725ஆமை திடரில் ஏறினாற்போல.
726ஆமையுடனே முயல் முட்டையிடப்போய்க் கண்பிதுங்கிச் செத்ததாம்.
727ஆய உபாயம் அறிந்தவன் அரிதல்ல வெலவது.
728ஆயக்காரனுக்குப் பிரமகத்திக்காரன் சாட்சி.
729ஆயக்காரன் அஞ்சு பணம் கேட்பான் அதாவெட்டுக்காரன் ஐம்பது பணம் கேட்பான்.
730ஆயத்திலும் நியாயம் வேண்டும்.
731ஆயத்துக்குக் குதிரை கீயத்துக்குக் குட்டி.
732ஆயத்துக்குப் பயந்து ஆற்றில் நீந்தினதுபோல.
733ஆயத்துறையில் அநியாயம் செய்யாதே.
734ஆயிரக்கலம் நெல்லுக்கு ஓர் அந்துப்பூச்ச போதும்.
735ஆயிரம் காக்கைக்குள் ஒரு அன்னம் அகப்பட்டதுபோல.
736ஆயிரம் காக்கைக்கு ஒரு கல்லுப்போல.
737ஆயிரம் கட்டு அண்டத்தைக் தாங்குமா.
738ஆயிரம் கட்டு ஆணைப்பலம்.
739ஆயிரம் சொன்னாலும் அவசாரி சமுசாரியாகான்.
740ஆயிரத்திலே பிறந்து ஐந்நூற்றிலே கால் நீட்டினதுபோல.
741ஆயிரத்தில் ஒருவனே அலங்காரபுருஷன்
742ஆயிரம் நட்சத்திரம் கூடினாலும் ஒரு சந்திரன் ஆகாது.
743ஆயிரம் மாகாணி அறுபத்திரண்டரை.
744ஆயிரம் உடையார் அமர்ந்திருப்பார் துணபொறுக்கி தொந்தோம் தொந்தோம்.
745ஆயிரம் வந்தாலும் ஆயத்தொழில் ஆகாது.
746ஆயிரம் வருஷம் சென்று செத்தாலும் அநீதச்சா ஆகாது.
747ஆயிரம் வித்தைக்ள கற்றாலும் உலகத்தில் ஆடம்பரங்கள் வேண்டும்.
748ஆயிரம் பெயரைக் கொண்றவன் அரைவைத்தியன்.
749ஆயிரம வந்தாலும் ஆத்திரம் ஆகாது.
750ஆயிரம் பெயர் கூடினாலும் ஒரு அந்துப் பூச்சியைக் கொல்லக்கூடாது.
751ஆயிரம் பொன் போட்டு யானை வாங்கி அரைப்பணத்து அங்கு சத்துக்குப் பால்மாறுகிறதா?
752ஆயிரம் அரைக்காற்பணம்.
753ஆயிரம் சொல்லுக்கு அரை எழுத்து.
754ஆயிரம் பசுக்களில் ஒரு பசு உதைத்துக் கொண்டால் நஷ்டமா?
755ஆயிரம் பனையுள்ள அப்பனுக்கு பிறந்தும் பலலுக குத்த ஒரு ஈர்க்கும் இல்லை.
756ஆயிரம் பாம்பினுள் ஒரு தேரை அகப்பட்டாற்போல
757ஆயிரம் பொன் பெற்ற குதிரைக்கு அரைப்பணத்துச் சவுக்கு.
758ஆயிரம் ந்ற்குணம் ஒரு லோபகுணத்தால் கெடும்.
759ஆயிரம் பொன்பெற்ற குதிரைக்கும் சவுக்கடி வேண்டும்.
760ஆயிரம் பொய் சொல்லிக் கோயிலைக் கட்டு.
761ஆயுதபரீடசை அறிந்தவன் நூற்றில் ஒருவன்.
762ஆயதம் இல்லாரை அடிக்கிறதா?
763ஆயொதன முகத்தில் ஆயதம் தேடுகிறதுபோல.
764ஆய்ச்சலாய்ச்சலாய் மழை பெய்கிறது.
765ஆய்ந்து பாராதான் காரியம் தான் சாந்துயரம் தரும்.
766ஆரக்கழுத்தி அரண்மனைக்கு ஆகாது.
767ஆரடா விட்டது மானியம் நானே விட்டுக்கொண்டேன்.
768ஆராகிலும் படியளந்து விட்டதா?
769ஆராருக்கு ஆளாவேன் ஆகாத உடம்பையும் புண்ணையும் கொண்டு.
770ஆராற் கெட்டேன் நாராற் கெட்டேன்.
771ஆரியக் கூத்தாடினாலும் காரியத்திற் கண் வேண்டும்.
772ஆருக்கும் அஞ்சான் ஆர்படைக்கும் தோலான்.
773ஆருக்கு ஆர் சதம்?
774ஆருக்குப் பிறந்து மோருக்கு அழுகிறாய்?
775ஆருக்காகிலும் துரொகம் செய்தால் ஐந்தாறு நாட்பொறுத்துக் கேட்கும், ஆத்துமத்துரொகம் செய்தால் அப்போதே கேட்கும்.
776ஆருமற்றதே தாரம் ஊரில் ஒருவனே தோழன்.
777ஆரும் ஆரம் உறவு? தாயும் பிள்ளையும் உறவு.
778ஆரம் இல்லாத ஊரிலே அசுவமேதயாகம் செய்தானாம்.
779ஆரை நம்பித் தோழா காருக்கு ஏற்றம் போட்டாய்?
780ஆரொ செத்தான் எவனோ அழுதான்.
781ஆர் ஆத்தாள் செத்ததும் பொழுது விடிந்தால் தெரியும்.
782ஆர் கடன் வைத்தாலும் மாரிகடன் வைக்கக்கூடாது.
783ஆர் குடியைக் கெடுக்க ஆண்டிவேஷம் போட்டாய்?
784ஆர் குத்தினாலும் அரிசியானால் சரி.
785ஆலகால விஷம் போன்றவன் அந்தரமானவன்.
786ஆலசியம் அமிர்தம் விஷம்
787ஆலமரம பழுத்ததென்று பறவைக்கு ஆர் சீட்டனுப்பினார்?
788ஆவின்மேற் புல்லுருவி.
789ஆலம் வேலும் பல்லுக்கு உறுதி நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி.
790ஆலைக் கரும்பம் வேலைத் துரும்புமானேன்.
791ஆலையம் அறியாது ஒதிய வேதம்.
792ஆலையில்லா ஊரிலே இலுப்பைப்பூச் சர்க்கரை.
793ஆலை விழுது தாங்குகிறாப்;போலே.
794ஆல் பழுத்தால் அங்கே அரசு பழுத்தால் இங்கே.
795ஆல்போல் விழுதுவிட்டு, அறுகுபோல் வேரோடி மூங்கில்போற் சுற்றம் முசியாமல் வாழ்ந்திருக்க.
796ஆவணிமாதம் அழுகல் தூற்றல்.
797ஆவத்தை அடரான் பாவத்தை தொடரான்.
798ஆவல்மாத்திரம் இருந்தால் என்ன, அன்னம் இறங்கினால் அல்லவோ பிழைப்பான்?
799ஆவாரை இலையும் ஆபத்துக்குதவம்
800ஆவென்று போனபிறகு அள்ளி இடுகிறது ஆர்?
801ஆவேறு நிறமானாலும், பால்வேறு நிறமாமோ?
802ஆழமறியும் ஒங்கில் மேளம் அறியும் அரவம்.
803ஆழம் அறியாமல் காலை இடாதே.
804ஆழாக்கு அரிசி மூழாக்குப்பானை முதலியார் வருகிற வீறாப்பைப் பாரும்.
805ஆழியெல்லாம் வயலானால் என்ன அவனயெல்லாம் அன்னமயமானால் என்ன?
806ஆளமாட்டாதவனுக்குப் பெண்டேன்?
807ஆளனில்லாத் துக்கம் அழுதாலுந்தீராது.
808ஆளன் இல்லாதவன் ஆற்று மணலுக்குச் சரி.
809ஆளான ஆடகளுக்கு அவிழ் அக்ப்படா காலத்திலே காகா பிசாசு கஞ்சிக்கு அழுகிறது.
810ஆளுக்கு ஒரு குட்டுக் குட்டினாலும் அவனுக்கு புத்திவராது.
811ஆளுக்கு ஒரு குட்டுக் குட்ட அடியேன் தலை மிடாப்போல.
812ஆளுக்குள்ளே ஆளாயிருப்பான்.
813ஆளை அறிந்துதான் அறுக்கிறான்.
814ஆளை ஆள் அறிய வேண்டும் மீனைப் புளியங்காய் அறியவேண்டும்.
815ஆளை ஆள் குத்தும் ஆள்யிடுக்குப் பத்துப் பேரைக் குத்தும்.
816ஆளைச் சுற்றிப்பாராமல் அளக்கிறதா?
817ஆளைப் பார் முகத்தைப் பார்.
818ஆளைப் பார்;த்து வாயால் எய்த்தான்.
819ஆள் ஆளைக் குத்தும், பகடம் பத்துப் பேரைக் குத்தும்.
820ஆள் இல்லாமல் ஆயதம் வெட்டுமா?
821ஆள் இருக்கக் கொலை சாயுமா?
822ஆள் இல்லாப் படை அம்பலம்.
823ஆள் இளந்தலை கண்டால் தோணி மிதக்கப் பாயும்.
824ஆள் ஏற நீர் ஏறும்.
825ஆள் கொஞ்சமாகிலும் ஆயதம் மிடுக்கு.
826ஆள் மெத்தக் கூடினால் மீன் மெத்தப் பிடிக்கலாம்.
827ஆறல்ல நூறல்ல ஆகிறது ஆகட்டும்.
828ஆறும் பேறு பெண்ணாய்ப் பிறந்தால் ஆறான குடித்தனம் நீராய்விடும்.
829ஆறிலும் சாவு நூறிலும் சாவு.
830ஆறின கஞ்சி பழங்கஞ்சி
831ஆறின புண்ணிலும் அசடு நிற்கும்.
832ஆறினால் அச்சிலே வார் ஆறாவிட்டால் மிடாவிலே வார்.
833ஆறு கடக்குமளவும் அண்ணன் தம்பியெனில், ஆறு கடந்தால் நீயார் நானார்.
834ஆறு கலியாணம் மூன்று பெண்கள் மாரோடு மார் தள்ளுகிறது.
835ஆறு காதம் என்கிறபோதே கோவணத்தை அவிழ்ப்பானேன்ஃ
836ஆறு கெட நாணல் இடு ஊர்கெட நூலை இடு.
837ஆறு கொண்டது பாதி தூறு கொண்டது பாதி.
838ஆறு நிறையச் சலம் போனாலும் பாய்கிறது கொஞ்சம் சாய்கிறது கொஞ்சம்.
839ஆறு நிறையப் போனாலும் நாய்க்கு நக்குத் தண்ணீh.
840ஆறு நீந்தின எனக்குக் குளம் நீந்துவது அரிதோ?
841ஆறு நீந்;தினவனுக்கு வாய்க்கால் எவ்வளவு?
842ஆறு நேராய்ப் போகாது.
843ஆறு நேரான ஊர் நிலை நில்லாது.
844ஆறு பார்க்கப் போக ஆய்ச்சிக்குப் பிடித்தது சலுப்பு.
845ஆறு போவதே போக்கு அரசன் சொல்வதே தீர்ப்பு.
846ஆறு மாசப் பயணம் அஞ்சி நடந்தால் முடியுமா?
847ஆறு மாதம் காட்டிலே, ஆறு மாதம் வீடடிலே.
848ஆறு மாதத்துக்குச் சனியன் பிடித்தாற் போல.
849ஆறும் கடன் நூறும் கடன் பெருக்கச் சுடெடா பணிகாரத்தை.
850ஆறு வடிவீpலேயும் கரிப்புத் தெளிவிலேயும் வருத்தம்.
851ஆறெல்லாம் கண்ணீர் அடி எல்லாம் செங்குரதி.
852ஆற்றித் தூற்றி அம்பலத்தில் வைக்கப் பார்க்கிறான்.
853ஆற்றிலே போகிற தண்ணீரை அப்பா குடி, ஐயா குடி
854ஆற்றிலே ஒரு காலும் சேற்றிலே ஒரு காலுமாய் இருக்கிறான்.
855ஆற்றிலே போட்டாலும் அளந்துபோட வேண்டும்.
856ஆற்றிலே கணுக்கால் தண்ணீரிலும் அஞ்சி நடப்பது உண்டு.
857ஆற்றிலே ஊருகிறது மணலிலே சுவறுகிறது.
858ஆற்றிலே விட்ட தெர்ப்பைபோல் தவிக்கிறேன்.
859ஆற்றிற் கரைத்த புளியும் அங்காடிக்கிட்ட பதருமாயிற்று.
860ஆற்றிற் பெருவெள்ளம் நாய்கென்ன சளப்புத் தண்ணீர்.
861ஆற்றுக்குப் பார்ப்பான் துணையா, சோற்றுக்குப் பயற்றங்காய் கறியா?
862ஆற்றுக்கும் பயம் காற்றுக்கம் பயம்.
863ஆற்றுக்குப் போனதும் இல்லை செருப்பு கழற்றினதும் இல்லை.
864ஆற்றுப்பெருக்கும் அரசும் அரை நாழி.
865ஆற்று மணலை அளவிடக்கூடாது.
866ஆற்றுநீரை நாய் நக்கிக குடிக்குமோ எடுத்துக் குடிக்குமோ?
867ஆற்றைக் கடந்தல்லோ அக்கரை ஏறவேண்டும்?
868ஆற்றைக் கடந்தால் ஒடக்காரனுக்கு ஒரு சொட்டு.
869ஆற்றைக் கடத்திவிடு ஆகாசத்திற் பறக்கக் குளிகை தருகிறேன் என்கிறான்.
870ஆனதல்லாமல் ஆவதறிவாரோ?
871ஆன தெய்வத்தை ஆறு கொண்டுபோகிறது அனுமந்தராயனுக்குத் தெப்பத்திருவிழாவா?
872ஆனமட்டும் ஆதாளியடித்துப்போட்டு, ஆந்தைபோல் விழிக்கிறான்.
873ஆனமுதலை அழித்தவ் மானம் இழப்பது அரிதல்ல.
874ஆனவன் ஆகாதவன் எல்லாத்திலும் உண்டு.
875ஆனால் அச்சிலே வார்க்Pறேன் ஆகாவிட்டால் மிடாவிலே வார்க்கிறேன்.
876ஆனி அடியிடாN கூனி குடிபோகாதே.
877ஆனி அரை ஆறு, ஆவணி முழு ஆறு.
878ஆனி ஆனை வாலொத்த கரும்பு.
879ஆனை அசைந்து தின்னும் வீடு அசையாமல் தின்னும்.
880ஆனை ஆசாரவாசலைக் காக்கும், பூனை புழத்த மீனைக் காக்கும்.
881ஆனை ஆயிரம் பெற்றால் அடியம் ஆயிரம் பெறுமா?
882ஆனை இருந்து அரசாண்ட இடத்திலே பூனை இருந்து புலம்பி அழுகிறது.
883ஆனை இலக்கமி பூனை பொரிக்கறி.
884ஆனை உண்ட விளாங்கனி போல.
885ஆனை ஏறியும் சந்துவழி நுழைவானேன்?
886ஆனை ஏறத் திட்டிவாயில் நுழைவாரா?
887ஆனை ஒரு குட்டிபோட்டும் பலன், பன்றி பல குட்டிபோட்டும் பயன் இல்லை.
888ஆனை கட்டத் தூர் வானமுட்டப் போர்.
889ஆனை கண்ட பிறவிக்குரடர் அடித்துக்கொள்ளுகிறதுபோல.
890ஆனை கறுத்திருந்தும் ஆயிரம் பொன் பெறும்.
891ஆனை காணமாற்போனாற் குண்டுச்சட்டியில் தேடினால் அகப்படுமா?
892ஆனை குண்டுச் சட்டியினும் குழிசியினும் உண்டோ?
893ஆனை கேட்ட வாயால், ஆட்டுக் குட்டி கேட்கிறதா?
894ஆனை கொடுத்தும் அங்குசத்திற்குப் பிணக்கா?
895ஆனை கொடிற்றில் அடக்குகறிதுபோல எந்தமட்டும் அடக்குகிறது?
896ஆனைக் கவடும் பூனைத் திருடும்.
897ஆனைக்கு அறுபது முழம் அறக்குள்ளனுக்கு எழுபது முழம.
898ஆனைக்கும் பானைக்கும் சரி.
899ஆனைக்கம் புலிக்கும் நெருப்பைக் கண்டால் பயம்.
900ஆனைக்கும் அடி சறுக்கும்
901ஆனைக்குத் தீனியிடும் வீட்டில், ஆட்டுக்குட்டிக்குப் பஞ்சமா?
902ஆனைக் கூட்டத்திற் சிங்கம் புகுந்தது போல.
903ஆனைக்குத் தேனா ஊனா,
904ஆனைக்குத் துறடும் அன்னத்துக்கு மிளகாயும் வேண்டும்.
905ஆனைக்கு இல்லை கானலும் மழையும்.
906ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம்.
907ஆனை செத்தாலும் ஆயிரம் பொன்.
908ஆனை தழுவிய கையாலே ஆடு தழுவுகிறதோ?
909ஆனை தன் தலையில் தானே மண்னைப் போட்டுக்கொள்ளும்.
910ஆனை தன்னைக் கட்டச் சங்கிலியைத் தானே கொடுத்ததுபோல.
911ஆனை துரத்திவந்தாலும் ஆலயத்தில் நுழையலாகாது.
912ஆனை நிழலைப் பார்;க்த் தவளை கலங்கினாற்போலே.
913ஆனை படுத்தால் ஆள்மட்டம்.
914ஆனை படுத்தால் ஆட்டுக்குட்டிக்குத் தாழுமா?
915ஆனை பார்க்க வெள்ளெழுத்தா?
916ஆனை போன வீதி
917ஆனை மிதிக்கப் பிழைப்பார்களா?
918ஆனை முட்டத் தாள் வானமுட்டப் போர்;
919ஆனை மேயும் காட்டில் ஆட்டுக்குட்டி மேய இடம் இல்லையா?
920ஆனை மேலே போகிறவனைச் சுண்ணாம்பு கேட்டாற்போல.
921ஆனை மேல் இட்ட பாரம் பூனை மேல் இட்டாற்போல
922ஆனையும் அறுகம்புல்லினால் தடைபடும்.
923ஆனையும் ஆனையும் முட்டும் போது இடையில் அகப்பட்ட கொசுகுபோல.
924ஆனைகயை வித்துவானுக்கம் பூனையைக் குறவனுக்கும் கொடு.
925ஆனையைக் கொன்றவன் பூனையை வெல்லமாட்டானா?
926ஆனையை ஆயிரம் பொன்னுக்கு வாங்குp இருப்பு அங்குசத்திற்கு ஏமாந்து நிற்பானேன்?
927ஆனையைக் குத்திச் சுளகாலே மூடுவாள்.
928ஆனையைக் கட்டிச் சுளகாலே மறைப்பாள்.
929ஆனையைத்தேடக் குடத்துக்குள் கை வைத்ததுபோல
930ஆனையை விற்றுத துறட்டிக்கு மன்றாடுகிறான்.
931ஆனையைத் தண்ணீரில் இழுக்கிற முதலை, பூனையைத் தரையில் இழுக்குமா?
932ஆனை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே.
933ஆனை வால் பிடித்துக் கரையேறலாம் ஆட்டுக்குட்டியின் வால் பிடித்துக் கரையேறலாமா?
934ஆனை விழுந்தல் கொம்பு, புலி விழுந்தால் தோல்.
935ஆனை விழுங்கிய அம்மையாருக்குப் பூனை சுண்டாங்கி.
936ஆனை விழுந்தாற் குதிரை மட்டம்.
937ஆனை வேகம் அடங்கும் துறட்டியால்.