We are proud to present the biggest collection of Tamil proverbs.(இ-வரிசை)
Here is the link for popular Proverbs : Popular Tamil Proverbs
 

938இகழ்ச்சியுடையோன் புகழ்ச்சியடையான்.
939இக்கரையில் பாகலைப் போட்டு அக்கரையில் கொழுகொம்பு நடுகிறான்.
940இங்கு இருந்த பாண்டம்போல.
941இச்சித்த காரியம் இரகசியம் அல்லவே.
942இஞ்சி தின்ற குரங்குபொல.
943இடக்கனுக்கு வழி எங்கே? கிடக்கிறவன் தலைமேலே.
944இடங்கொடுத்தால் மடம் பிடுங்குவான்.
945இடதுகைக்கு வலதுகை துணை வலதுகைக்கு இடதுகை துணை.
946இடம் வலம் தெரியாதவனோடு இணக்கம் பண்ணக்கூடாது.
947இடி ஒசை கேட்ட பாம்புபொல.
948இடிக்குக் குடை பிடிக்கலாமா?
949இடுகிற தெய்வம் எங்கும் இடும்.
950இடுப்பு வைத்த இடமெல்லாம் அடுப்பு வைத்தான்.
951இடுப்பு ஒடிந்த கோழிக்கு உரற்குழியே கதி.
952இடுப்கு செய்வார்க்கு இராப் பகல் நித்திரை இல்லை.
953இடுவது பிச்சை பெறுவது மோஷம்
954இடுவார் பிச்சையைக் கெடுவார் கெடுப்பார்.
955இடுவாள் இடுவாளென்று ஏக்கற்று இருந்தானாம், நாழி நெல்லுக் கொடுத்து நாலாசையும் தீர்த்தானாம்.
956இடைக்கணக்கன் செத்தான், இனிப் பிழைப்பான் நாட்டான்.
957இடை சாய்ந்த குடம் கிடை.
958இடைத்தெருவில் கோலம் வரும்போது குசத்தெரு எங்கே என்கிறாள்.
959இடைப்பிறப்பும் கடைப்பிறப்பும் ஆகாது.
960இடைப் புத்தி பிடரியிலே.
961இடையன் கெடுத்தது பாதி மடையன் கெடுத்தது பாதி.
962இடையன் கலியாணம் விடியும்பொழுது.
963இடையாண்டியும் குசத்தாதனும் இல்லை.
964இடையூறு சொய்தோன் மனையில் இருக்கலாது பேய்முதலாய்?
965இட்ட எழுத்திற்கு ஏற ஆசைப் பட்டால் கிடைக்குமா?
966இட்டதன் மேல் ஏற ஆசைப்படுகிறதா?
967இட்டவன் இடாவிட்டால் வெட்டுப்பகை.
968இட்டார்க்கு இடு, செத்தார்க்கு அழு.
969இட்டு வைத்தால் தின்னவும எடுத்து வைத்தால் சுமக்கவும் தெரியும்.
970இணங்காரோடு இணங்குவது இகழ்ச்சி.
971இது என்ன வெள்ளரிக்காய் விற்ற பட்டணமா?
972இத்தனை பெரியவன் கையைப் பிடித்தால் எப்படி மாட்டோம் என்கிறது?
973இத்தனை அத்தனை ஆனால் அத்தனை எத்தனை ஆகும்
974இந்த அடிக்கு எந்த நாயும் சாகும்.
975இந்த எலும்பைக் கடிப்பானேன் சொந்தப்பல்லுப் போவானேன்?
976இநத்க் கூழுக்கோ இத்தனை திருநாமம்?
977இந்தக் கூழுக்கா இருபத்தெட்டு நாமம்?
978இந்தக்கரிப்பிற செத்தால்? இன்னம் ஒரு கரிப்பு மயிரைப் பிடுங்குமா?
979இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்றாற்போல் இருக்கிறான்.
980இந்தப் பெருமையும் பந்தல் அழகும் பார்த்தையா பண்ணக்காரா?
981இந்த நாயை ஏன் இப்படிச் செய்கிறாய்?
982இந்திரனைச் சந்திரனை இலையாலே மறைப்பாள், எமதருமராஜனைக் கையாலே மறைப்பாள்.
983இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது.
984இயமன் ஒருவனைக் கொல்வான், ஏற்றம் மூவரைக் கொல்லும்.
985இயற்கை வாசனையோ செயற்கை வாசனiயோ?
986இரக்கம் இல்லாதான் நெஞ்சம் இரும்பிலும் கடிது.
987இரக்கப் போனாலும் சிறக்கப் போக வேண்டும்.
988இரங்காதவர் உண்டா? பெண் என்றால் பேயும் இரங்கும்.
989இரண்டு ஆடடிலே ஊட்ட விட்ட குட்டிபோல.
990இரண்டு பட்ட ஊரில் குரங்கும் குடி இராது.
991இரண்டு தோணியில் கால் வைக்கிறதா?
992இரண்டு பெண்டாட்டிக்காரன் வீட்டில் நெருப்பேன்?
993இரண்டு வீட்டிலும் கவியாணம் இடையிலே செத்ததாம் நாய்க்குட்டி.
994இரண்டு நாய்க்கு ஒரு எலும்பு போட்டது போல.
995இரந்தும் பரத்துக்கு இடு.
996இரந்தோர்க்கு ஈவது உடையார் கடன்.
997இரப்பவனுக்கு வெண்சோறு பஞ்சமா?
998இரப்பவனுக்கு எங்கும் பஞ்சம் இல்லை.
999இரவல் உடைமை இசைவாய் இருக்கிறது, என் பிள்ளை ஆனை நான் கொடுக்கமாட்டேன்.
1000இரவல் சதமா, திருடன் உறவா?
1001இரவற் சோறு பஞ்சம் தாங்குமா?
1002இரவற் சீலையை நம்பி இடுப்புக் கந்தையை எறிந்தாளாம்.
1003இராகு திசையில் வாழ்ந்தவனும் இல்லை, ராஜ திசையிற் கெட்டவனும் இல்லை.
1004இராக்; கண்ட சன மிடாப்போல வீங்கின கதை.
1005இராசன் ஏறிய குதிரையைப்போல.
1006இராசமுகத்துக்கு எலுமிச்சம் பழம்போல.
1007இராச கீரியைக் காவுகிறது போல.
1008இராசன் ஆனாலும் தன் தாய்க்கு மகனே.
1009இராசன் செய்கோல் தன் நாடுவரையில்
1010இராசா மகள் ஆனாலும் கொண்டவனுக்குப் பெண்டுதான்
1011இராசாளியைக் கண்ட கொக்குப் போல.
1012இராசா கடன்படப் புளுக்கை காடித்தண்ணீர் குடித்ததுபோல.
1013இராப்பட்டினி கிடந்தவன் உரித்த வாழைப்பழம் விற்கிறதா என்று விசாரித்தானாம்.
1014இராப்பட்டினி கிடப்பவன் அகவிலை கேட்பானே?
1015இராப்பட்டினி பாயோடே.
1016இராப்பகல் கண்ணிலே.
1017இராமர் இருந்த இடம் அயோத்தி
1018இராமன் மங்கையோடு இணங்கியது அவம்.
1019இராமiனாப் போல ராஜா இருந்தால் அனுமானைப் போலச் சேவகனும் இருப்பான்.
1020இரா முழுதும் ராமாயணம் கேட்டுச் சீதைக்கு ராமன் என்ன என்ற கதை.
1021இராமேசுரத்துக்குப் போயும் சனீசுரன் தொலையவில்லை.
1022இராவணன் குடிக்கு மகோதரன் போலும், சுயொதனன் குடிக்குச் சகுனி போலும்.
1023இராவண சந்நியாசிபோல் இருக்கிறான்.
1024இராவுத்தனைத் தள்ளினதும் அல்லாமல் குழியும் பறித்ததாம் குதிரை
1025இருக்கிற அனை;றைக்கு எருமைமாடு தின்றாற்போல.
1026இருக்கிறவன் செவ்வையாய் இருந்தால் சிரைக்கிறவன் செவ்வையாய் சிரைப்பான்.
1027இருக்க வேண்டும் என்றால் இரும்பைத் தின்
1028இருக்க இருக்க எல்லாம் இசைவாகும்.
1029இருக்கும் இடம் ஏவுமா?
1030இருசி உடைமை இராத்தங்கல் ஆகாது.
1031இரு சுழி, இருந்து உண்டாலும் உண்ணும், இரந்து உண்டாலும் உண்ணும்.
1032இருட்டு வேலையோ குருட்டு வேலையோ?
1033இருட்டு வீட்டுக்குள் போனால் திருட்டுக்கை நிற்குமா?
1034இருட்டுக் குடிவாழ்க்கைத் திருட்டுக்கு அடையாளம்.
1035இருதலை மணியன் பாம்பைப்போல.
1036இருதலைக்கொள்ளி எறும்புபொல் ஆனேன்.
1037இருந்தல்லோ படுக்கவேண்டும்?
1038இருந்த நாள் எல்லாம் இருந்துவிட்டு ஊர்ப்பறையனுக்குத் தாரைவார்த்த கதை.
1039இருந்தவன் தலைமேலே இடி விழுந்ததுபோல.
1040இருந்த கால் மூதேவி நடந்த கால் சீதேவி.
1041இருந்தவனு;க்குப் போனவன் குணம்.
1042இருந்தவன் எழுந்திருக்கிறதற்குள்ளே நின்றவன ஒரு காதம் போவான்.
1043இருந்தால் பூனை, பாய்ந்தால் புலி.
1044இருந்தால் இருப்பீர், எழுந்திருந்தால் நிற்பீர்.
1045இருந்து பணம் கொடுத்து நடந்து வாங்கவேண்டியதாய் இருக்கிறது.
1046இருபத்தொரு மழையும் எண்ணி ஊற்றியது.
1047இருப்புக் கதவு இடித்துத் தவிட்டுக் கொழுக்கட்டை எடுக்கிறதா?
1048இருப்புச் சலாகையை விழுங்கிப்போட்டு இஞ்சிச்சாறு குடித்தால் தீருமா?
1049இருப்புக்; கோட்டையும் கற்கதவும்போல.
1050இரு மனது மங்கையோடு இணங்குவது அவம்.
1051இரும்பு செம்பானால் துரும்பும் தூணாம்.
1052இரும்புத துணைச் செல் அறிக்குமா?
1053இரும்பு செம்பானால் திரும்பிpப் பொன் ஆகும்.
1054இரும்புக்;கட்டியைக் காற்றாடிக்கிறபோது இலவம்பஞ்சு எனக்கு என்ன புத்தி என்கிறதாம்.
1055இரும்புக்கட்டி பறக்கிறதுபோது இலவம்; பஞ்சுக்கு இருப்பிடம் எங்கே?
1056இரும்பு அடிக்கிற இடத்தில் நாய்க்கு என்ன வேலை?
1057இரும்பு பிடித்த கையும் சிரங்கு பிடித்த கையும் சும்மா இராது.
1058இரும்பு அடிக்கிற இடத்தில் நாய்க்கு என்ன கிடைக்கும்?
1059இரும்புத் துணை எறும்பு அரித்தாற்போல.
1060இரும்பு துறட்டுக்கு அசையாத புளியங்காய் திருப்பாட்டுக்கு அசையுமா?
1061இரும்பை எறும்பு அரிக்குமா?
1062இரும்பை எலி தின்னுமா?
1063இரும்பை எலி க்வவிற்று என்கிறான் படுக்காளி.
1064இரும்பைக் கறையான அரித்தால் பிள்ளையைப் பருந்து கொண்டு போகாதா?
1065இருவரும் ஒத்தால் இணக்குவார் ஏன்?
1066இருவராலே ஆகாத காரியம் ஒருவராலே ஆகுமா?
1067இருவர் நட்புக்கு ஒருவர் பொறுமை.
1068இருளன் பிள்ளைக்கு எலிக்குஞ்சு பஞ்சமா?
1069இருளன் ராஜவிழி விழிப்பானா?
1070இருளம் ஒரு காலம் நிலவும் ஒரு காலம்.
1071இரெட்டியாரே இரெட்டியாரே என்றால், கலப்பையைத் திட்டென்று போட்ட கதை.
1072இலக்கணம் கற்றவன் கலக்கம் அற மன்னர் சபை காண்பான்.
1073இலஷணம் அவலஷணம் முகத்திலே.
1074இலங்கணம் பரம ஒளஷதம்.
1075இலங்கையில் பிறந்தவன் எல்லாம் இராவணன் ஆவானா?
1076இலங்கையைச் சுட்ட குரங்கு.
1077இலவு காத்த கிளி ஆனேன்.
1078இலுப்பைப்பூவைத் தீருப்பினால் இருபுறமும் பொத்தல்.
1079இலை தின்னி காய் அறியான்.
1080இலையும் பழுப்பும் எங்கும் உண்டு.
1081இலௌகீகம் வைதீகம் இரண்டும் வேண்டும்.
1082இல்லது வாராது உள்ளது போகாது.
1083இல்லறம் பெரிது துறவறம் சிறிது.
1084இல்லறம் பெரிது துறவறம் பழிப்பு.
1085இல்லாதவன் பொல்லாதவன்.
1086இல்லாதது பிறவாது அள்ளாதது குறையாது.
1087இல்லாது சொல்லி அல்லற் படுதல்.
1088இல்லாளை விட்டு வல்லாண்மைக பேசுகிறதா?
1089இல்லாதும் இல்லன் இருப்பதும் இல்லன்.
1090இல்லாதவன் பெண்சாதி எல்லாருக்கும் தோழியா?
1091இல்லை என்ற வீட்டில் பல்லியும் சேராது.
1092இல்லோர் இரப்பது இயல்பு.
1093இவள் விலைமோரில் வெண்ணெய் எடுத்துத் தலைமகனுக்குக் கல்யாணம் பண்ணுவாள்.
1094இவனுக்கும் அவனுக்கும் ஏழாம் பொருத்தம்.
1095இவனுக்குச் சொல்லும் புத்தி கடலிற் பெருங்காயம் கரைத்தது போல் இருக்கிறது.
1096இவன் ஊராருக்குப் பிள்ளை.
1097இவன் மகா பொயி கள்ளன், காலாலே முடிந்தைக் கையாலே அவிழ்க்கிறது அரிது.
1098இவன் கல்லாது கற்றவன், உள்ளங்கையில் வைகுண்டம் காட்டுவான்.
1099இவன் புத்தி உலக்கைக்கொழுந்து.
1100இழவுக்கு வந்தவள் தாலி அறுப்பாளா?
1101இழுக்குடைய பாட்டிற்கு இசை நன்று.
1102இழுவை கண்டால் அடி பார்ப்பானேன்?
1103இழை ஆயிரம் பொன் பெற்ற இந்திரவர்ணப்பட்டு.
1104இழையத் தீட்டிக் குழைய வடித்தல்.
1105இளகின இரும்பைக் கண்டாற் கொல்லன் குண்டியை தூக்கி அடிப்பான்.
1106இளங்கன்று பயம் அறியுமா?
1107இளமையிற் சோம்பல் முதமையின் மிடிமை.
1108இளமையில் முயற்சி முதமையிற் காக்கும்.
1109இளமையிற் பழக்கம் எப்போதும் மறவாது.
1110இளமையும் முதுமையும் சரியான வயதல்ல.
1111இளவெயில் காயாத நீயா தீ பாயப்போகிறாய்?
1112இளைஞன்; ஆனாலும் ஆடுவான் மூப்பு.
1113இளைத்தவள் தலையில் ஈரும் பேனும்.
1114இளைத்தவன் சினேகிதனைச் சேர்.
1115இளைத்தவனே எள்ளை விதை.
1116இளையாள் இலைதின்னி மூத்தாள் காய் அறிவாள்.
1117இளையாளே வாடி மலையாளம் போவோம், மூத்தாளளே வாடி முட்டிக் கொண்டு சாவோம்.
1118இறகு முற்றிப் பறவை ஆனால், எல்லாம் தன் வயிற்றைத் தான் பார்ககும்.
1119இறக்கும் காலம் வந்தால் பிறக்கும் ஈசலுக்குச் சிறகு.
1120இறக்கும் காலம் வராமல் பிறக்குமா ஈசலுக்குச் சிறகு?
1121இறங்கும் துறையிலே நீததானால, இந்த ஆற்றை எப்படிக் கடக்கிறது?
1122இறங்கு பொழுதிலே மருந்து குடி.
1123இறந்தவன் இருப்பவனுக்கு வழிகாட்டி.
1124இறந்தவன் பிள்ளை இருந்தவன் அடைக்கலம்.
1125இறந்தவனுக்கு எள்ளும் தண்ணீரும்.
1126இறுத்த குடிக்கு அனர்த்தம் இல்லை.
1127இறுப்பானுக்குப் பணமும் கிடையாது, உழைப்பானுக்குப் பெண்ணும் கிடையாது.
1128இறைச்சி தின்;கிறவர் கடுப்புக்கு மருந்து அறிவார்.
1129இறைச்சி தின்றாலும் எலும்பைக் கோத்துப் போட்டுக் கொள்ளலாமா?
1130இறைத்த கிணறு ஊறும், இறையாத கிணறு நாறும்.
1131இறைத்த கிணறு சுரக்கும்.
1132இனம் பிரிந்த மான் போல.
1133இன்மேல் ஒரு தெய்வத்தைக் கையெடுக்கிறதா?
1134இனிமேல் எமலோகபரியந்தம் சாதிக்கலாம்.
1135இன்பமும் துன்பமும் பொறுமையிலே.
1136இன்பத்தில் ஆசை எவர்க்கும் உண்டு.
1137இன்பமும் துன்பமும் எடுத்த உடலுக்கு.
1138இன்று இருப்பார் நாளைக்கு இல்லை.
1139இன்றைக்கு இல்லை அறுத்தவன் நாளைக்குக் குலை அறுப்பான்.
1140இன்றைக்கு ஆகிறது நாளைக்கு ஆகட்டும்.
1141இன்றைக்குச்; செத்தால் நாளைக்கு இரண்டு நாள்.
1142இன்றை என்பதும் நாளை என்பதும் இல்லை என்பதற்கு அடையாளம்.