We are proud to present the biggest collection of Tamil proverbs.(உ-வரிசை)
Here is the link for popular Proverbs : Popular Tamil Proverbs
 

1184 உகமுடிய மழை பெய்தாலும் ஒட்டாங்கிளிஞ்சில் பயிர் ஆகுமா?
1185 உகிர்ச்சுற்றின் மேல் அம்மி விழுந்தது போல்.
1186 உங்கள் உறவிலே வேகிறதைப்பார்க்கிலும் ஒரு கட்டு விறகிலே வேகிறது நல்லது.
1187 உங்கள் பெண்டுகள் கொண்டல் அடித்தால் கண்கள் கொள்ளாது.
1188 உங்களை கடலிலே கைகழுவினேன்.
1189 உசு பிடி என்றால் நீ பிடி என்கிறதாம் நாய்.
1190 உச்சந்தலையில் செருப்பால் அடித்தாலும் உச்சி குளிருமா?
1191 உடம்பு எல்லாம் புழத்தவன் அம்மன கோவிலை கெடுத்த கதை.
1192 உடம்பு அளந்த கழுதை உப்புகள்த்pற்குப் போனது போல.
1193 உடம்பு எடுத்தவன எல்லாம் ஓடு எடுத்தான்.
1194 உடம்பு தேற்றிக்கொண்டு அல்லவா யோகத்தில் போகவேண்டும்?
1195 உடம்பு எங்கும் சுடுகிற தழலை மடியிலே கட்டுகிறாய்
1196 உடம்பு முழுதும் நனைந்தவருக்குக் கூதல் என்ன?
1197 உடலுக்கோ பால் வார்த்து உண்பது, ஊரக்கோ பால் வார்த்து உண்பது?
1198 உடல் இரண்டு உயிர் ஒன்று.
1199 உடல் ஒருவனுக்குப் பிறந்தது நா பலருக்குப் பிறந்தது.
1200 உடல் உள்ளவரைக்கும் கடல் கொள்ளாத கவலை.
1201 உடன்பிறப்பு இல்லா உடம்பு பாழ்.
1202 உடாப்புடைவை பூச்சிக்கு இரை.
1203 உடுத்த புடைவைதானே பாம்பாய் கடிக்கிறது.
1204 உடும்பு போனாலும் போகிறது கையைவிட்டால் போதும்.
1205 உடும்புக்கு இரண்டு நாக்கு மனிதனுக்கு ஒரு நாக்கு.
1206 உடும்புக்கு இரண்டு நாக்கு உண்டு, மனிதனுக்கு இரண்டு நாக்கு உண்டா?
1207 உடைமுள்ளுக்கு எதிரே உதைக்கலாமா?
1208 உடைமை என்பது கல்வியுடைமை.
1209 உடைமையும் வறுமையும் ஒரு வழி நில்லா.
1210 உடைமையும் கொடுத்து அருமையும் குலைகிறதா?
1211 உடையவன் பாராப் பயிர் உருப்படுமா?
1212 உடையவன் சொற்படி உரலைசுற்றிக் களைபறி.
1213 உயைவனிற் கைப்பற்றினவன மிடுக்கன்.
1214 உடையவன் சொற்படி கமுகடி களைபறி.
1215 உடையவன் இல்லாச் சேலை ஒரு முழம் கட்டை.
1216 உடையார் வீட்டு மோருக்கு அகப்பைக் கணக்கு என்ன?
1217 உட்காந்து அல்லவோ படுக்கவேண்டும்?
1218 உட்காந்தவனைக் கட்ட மாட்டாதவன் ஒடுகிறவனை கட்டுவானா?
1219 உட்சுவர் இருக்கப் புறச்சுவர் பூசலாமா?
1220 உட்சுவர் தீற்றிப் புறச்சுவர் தீற்று.
1221 உட்புறத்துக்கு வெளிப்புறம் கண்ணாடி.
1222 உணர்வில்லாக் கருவியம் உப்பில்லாச் சோறும் சரி.
1223 உண்கிற சோற்றிலே நஞ்சைக் கலக்கிறதா?
1224 உண்ட உடம்பிற்கு உறுதி, உழுத புலத்தில் நெல்லு.
1225 உண்ட பிள்ளை உரஞ்செய்யும்.
1226 உண்ட வயிற்றுக்குச் சோறும் மொட்டைத்தலைக்கு எண்ணெயுமா?
1227 உண்டது தான் ஏப்பம் வரும்.
1228 உண்ட வீட்டுக்கு இரண்டகம் பண்ணலாமா?
1229 உண்ட உடம்பு உருகும் தின்ற பாக்குச் சிவக்கும்.
1230 உண்ட சுற்றம் உருகும்.
1231 உண்டார் மேனி கண்டால் தெரியும்.
1232 உண்டால் தீரும் பசி, கண்டால் தீருமா?
1233 உண்டால் தின்றால் உறவு, கொண்டால் கொடுத்தால் உறவு.
1234 உண்டாலும் உறுதிப்பட உண்ண வேண்டும்.
1235 உண்டாற் கொல்லும் விஷம்
1236 உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு.
1237 உண்டு தின்று உள்ளே இருவென்றால் உயர எழும்பி ஏன் குதிக்கிறாய்
1238 உண்டு உறியில் இரு என்றால் உருண்டு தரையில் விழுகிறாய்.
1239 உண்டு கொழுத்தால் நண்டு வளையில் இராது.
1240 உண்டு தின்று உயரம் ஆனால் ஊரிலே காரியம் என்ன?
1241 உண்ணக் கை சலித்து இருக்கிறான்.
1242 உண்ண வா என்றால் குத்த வருகிறாய்.
1243 உண்ணாக்கை அறுத்துச் சுண்ணாம்புக்குறி இடுவேன்.
1244 உண்ணாச் சொத்து மண்ணாய் போகும்.
1245 உண்ணாமல் ஊர் எல்லாம் திரியலாம் உடுக்காமல் ஒரு வீட்டுக்கும் போகலாகாது.
1246 உண்ணாமல் ஒன்பது வீடு போகலாம், உடுக்காமல் ஒரு வீடும் போகல் ஆகாது.
1247 உண்ணும் கீரையிலே நண்ணும் புல்லுரவி.
1248 உண்பது இருக்க ஒரு கருமம் செய்யேல்.
1249 உண்பான் தின்பான் சிவப்பிராமணன், குத்துக்கு நிற்பான் வீரமுஷ்டி.
1250 உண்பாரைப் பார்த்தாலும் உழுவாரைப் பார்க்கல் ஆகாது.
1251 உண்மை சொல்லிக் கெட்டாரும் பொய் சொல்லி வாழ்ந்தாரும் இல்லை.
1252 உதடு மன்றாடப் போய உள்ளிருந்த பல்லும் போனாற்போ.
1253 உதட்டிலே உள்ள வாழைப்பழத்தை உள்ளே தள்ளுவார் உண்டோ?
1254 உதட்டுக்கு மிஞ்சின பல்லும் திருட்டுக்கு மிஞ்சின கையும் ஆகாது.
1255 உதட்டிலே புண் ஆனால் பால் கறக்காதா?
1256 உதட்டுத் துரும்பு ஊதப் போகாது?
1257 உதர நிமித்தம் வெகு கிர்தவேஷம்.
1258 உதவாப் பழங்கலமே ஒசை இல்லா வெண்கலமே
1259 உதவாத செட்டிக்குச் சீட்டு எழுதினது போல.
1260 உதவி செய்வார்க்கு இடையூறு ஏது?
1261 உதறுகாலி வந்தாள் உள்ளதும் கெடுத்தர்ள்.
1262 உதாரிக்குப் பொன்னும் துரும்பு.
1263 உதிரத்துக்கு அல்லோ உருக்கம் இருக்கும்?
1264 உதைத்த கால் புழுக்கிறபோது அல்லவோ புழுக்கும்?
1265 உதைத்த கால் புழுக்கிறதற்கு முன்னே அடிவயிறு சீழ்கட்டுகிறது.
1266 உதைப்பானுக்கு வெளுப்பான் சாதிவண்ணான்.
1267 உத்தமனுக்கும் தப்பிலிக்கும் உடன்படிக்கை வேண்டாம.
1268 உத்தமச் சேவகன் பெற்றதாய்க்கு அதிகம்.
1269 உத்தமனுக்கு எத்தாலும் கேடு இல்லை.
1270 உத்தியோகம் புருஷ லட்சணம்.
1271 உத்தியோகத்துக்குத் தக்க சுகம்.
1272 உபகாரத்துக்கு அபகாரம் வருவது துரதிஷ்டம்.
1273 உபசரியாத வீட்டிலே உண்ணாதிருப்பதே ஒரு கோடி தனம்.
1274 உபசாரம் செய்தவர்க்கு அபசாரம் பண்ணுகிறதா?
1275 உபசார வார்த்தை காசாகுமா, உண்டாலொழியப் பசி தீருமா?
1276 உபாயத்தால் ஆகிறது பராக்கிரமத்தால் ஆகுமா?
1277 உப்பு இருந்த பாண்டமும் உபாயம் இருந்த நெஞசமும் தட்டி உடையாமல் தானே உடையும்.
1278 உப்பு இருந்த பாண்டமும் உண்மை இல்லா நெஞ்சும் தட்டி உடையாமல் தானே உடையும்.
1279 உப்பு இல்லாப் பண்டம் குப்பையிலே.
1280 உப்பு இட்டவர்களை உள்ளளவும் நினை.
1281 உப்பு முதல் கர்ப்பூரம் வரைக்கும் வேண்டும்.
1282 உப்புத் தின்றவன் தண்ணீரைக் குடிப்பான்.
1283 உப்புக்கண்டம் பறிகொடுத்த பார்ப்பாத்திபோல விழிக்கிறாய.
1284 உப்பு வாணிகன் அறிவானா கர்ப்பூர விலை?
1285 உப்புக் கட்டினால் லோகம் கட்டும்.
1286 உப்பும் கர்ப்பூரமும் ஒன்றாய் வழங்குமா?
1287 உப்பு நீர் மேகம் உண்டால் உலகிற் பிரவாகம்.
1288 உப்புத் தண்ணீருக்கு இலாமிச்சம் வேர் போட வேண்டுமா?
1289 உப்பு மிஞ்சினால் தண்ணீர், தண்ணீர் மிஞ்சினால் உப்பு.
1290 உப்பைச் சிந்தினையோ துப்பைச் சிந்தினையோ?
1291 உப்பைத்தொட்டு உப்பைத் தின்னாதே.
1292 உப்பதை தொட்டுக்கொண்டு உரலை விழுங்கலாம்.
1293 உபபோடு ஒன்பதும் பருப்போடு பத்தும் வேண்டும்.
1294 உமக்கு என்ன, வயதுக்கு நரைத்ததோ மயிருக்கு நரைத்ததோ.
1295 உமியைக் குற்றிக் கைசலித்தது போல.
1296 உயரப் பறந்தாலும் ஊர்க்குரவி கருடன் ஆகுமா?
1297 உயிரும் உடலும் போல.
1298 உயிரை வைத்திருக்கிறதிலும் செத்தாற் குணம்.
1299 உயிரோடு திரும்பிப் பாராதவர் செத்தால் முத்தம் கொடுப்பாரா?
1300 உயிரோடு ஒரு முத்தம் தராதவள் செத்தால் உடன் கட்டை ஏறுவாளா?
1301 உயிர் இருந்தால் உப்புமாறித் தின்னலாம்.
1302 உரலில் அகப்பட்டது உலக்கைகுத் தப்புமா?
1303 உரலிலே தலையை மாட்டிக்கொண்டு உலக்கைக்குப் பயப்பட்டால் தீருமா?
1304 உரலுக்கு ஒரு பக்கம் இடி மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி.
1305 உரல் பஞ்சம் அறியுமா?
1306 உரல் போய் மத்தளத்தோடே முறையிட்டதுபோல
1307 உரு ஏறத் திரு ஏறும்
1308 உருக்கம் உள்ள சிற்றத்தை ஒதுக்கில் வாடி கட்டி அழ.
1309 உருசி கண் பூனை உறியைத் தாவும்.
1310 உருட்டப் புரட்ட உள்ளதும் உள்ளுக்கு வாங்கும்.
1311 உருட்டும் புரட்டும் ஒடுக்கும் சிறப்பை.
1312 உருட்டும் புரட்டும் மிரட்டும் சொல்லும்.
1313 உருத்திராஷப் பூனை ஒன்றும் தெரியாது போல் இருக்கும்.
1314 உருத்திராஷப் பூனை உபதேசம் பண்ணினது போல.
1315 உருப்படத் திருப்படும்.
1316 உருவத்தை அல்ல குணத்தைப்பார், பணத்தையல்ல சனத்தைப்பார்.
1317 உருவத்தினால் அல்ல, இன்பப் பேச்சினால் கிளி நன்குமதிக்கப்படும்.
1318 உருவிய வாளை உறையில் இடாத வீரன்.
1319 உலகத்துக்கு ஞானம் பேய், ஞானத்துக்கு உலகம் பேய்.
1320 உலகம் பல விதம்.
1321 உலகிலே கள்ளனுக்கு ஊரார் யாவரும் பகை.
1322 உலக்கைப்பூசைக்கு அசையாதது திருப்பாட்டுக்கு அசையுமா?
1323 உலக்கைதேய்ந்து உளிப்பிடி ஆயிற்று.
1324 உலக்கை பொருத்து உத்திரம் ஆயிற்று.
1325 உலுத்தன் விருந்திற்கு ஒப்பானது ஒன்றும் இல்லை.
1326 உலைவாயை மூடினாலும் ஊர்வாயை மூடலாமா?
1327 உலோபிக்கு இரு செலவு.
1328 உல்லாசநடை மெலுக்குக்கேடு மினுக்கு எண்ணெய் தலைக்குக் கேடு.
1329 உழக்குளிர் அடித்தால் நாற்றுப்பிடுங்கப்படாதா?
1330 உழக்கு உற்றாருக்குப் பதக்குப் பரதேசிக்கு.
1331 உழக்கிலே கிழக்கு மேற்கா?
1332 உழக்கிலே வழக்கு.
1333 உழக்கு மிளகு கொடுப்பான் ஏன், ஒளித்திருந்து மிளகுநீர்குடிப்பான் ஏன்?
1334 உழவிற்கு ஏற்ற கொழு.
1335 உழவின் மிகுந்த ஊதியம் இல்லை.
1336 உழவு ஒழிந்த மாடு பட்டிப்புறத்திலே.
1337 உழவு மாடு ஆனால் ஊருக்குள்ளே விலைப்படாதா?
1338 உழவுக்கு ஒரு சுற்றம் வராது, ஊணுக்கு முன்னே வரும்.
1339 உழவுக்குப் பிணைத்துவிடுகிற மாடும், கூட்டுக்கு பிடித்துவிடுகிற ஆளும் உதவாது.
1340 உழுகிறதைவிட்டு நழுவுகிறவன் தெய்வம் ஆடினாற்போல.
1341 உழுகிற நாளையில் ஊருக்குப் போய், அறுக்கிற நாளையில் அரிவாள் கொண்டுவந்தாற்போல.
1342 உழுகிறமாடு பரதேசம் போனால், அங்கு ஒருவன் கட்டி உழுவான் இங்கு ஒருவன் கட்டி உழுவான்.
1343 உழுகிற மாட்டை நுகத்தால் அடித்தாற்போல.
1344 உழுகிற மாட்டை எருது நக்கினதுபோல.
1345 உழுகிறவன் இளப்பமானால் எருது மச்சினமுறை கொண்டாடும்.
1346 உழுதவனுக்கு ஊர்க்கணக்குப்பண்ணத் தெரியாது.
1347 உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கேனும் மிஞ்சாது.
1348 உளவன் இல்லாமல் ஊர் அழியுமா?
1349 உளவு இல்லாமல் களவு இல்லை.
1350 உலைவழியும், அடைமழையம், பொதி எருதும்ஈ ஒருவனுமாய் அலைகிறான்.
1351 உள்வீட்டுக் கடனும், உள்ளங்கைச் சிரங்கும் கெட்டது.
1352 உள்ள பிள்ளை உரலை நக்கிக்கொண்டிருக்க, மற்றொரு பிள்ளைக்குத் திருப்பதிக்கு நடக்கிறாள்.
1353 உள்ளங்கைப் பாற்சோற்றை விட்டுப் புறங்கை நக்கியது போல.
1354 உள்ளதைக் கொண்டு இல்லதைப் பாராட்டலாம்.
1355 உள்ளதைச் செர்னனால் உடம்பெல்லம் புண்ணாம்.
1356 உள்ளதை விற்று நல்லதைக் கொள்ளு.
1357 உள்ளனும் கள்ளனுமாய் இருக்கிறான்.
1358 உள்ளங்கையில் ஒன்பது கொண்டை முடிப்பேன்.
1359 உள்ளங்கையில் நெல்லிக்கனிபோல.
1360 உள்ளங்கையில் உரோமமுளைத்தாயின், அறிவிலான் அடங்குவான்.
1361 உள்ளனும் கள்ளனும் கூடினால் விடிகிறமட்டும் திருடலாம்.
1362 உள்ளதைச் சொன்னால் நொள்ளைகண்ணிக்கு நோப்பாளம்.
1363 உள்ளதை எல்லாம் கொடுத்து நொள்ளைக்கண்ணியைக் கொண்டானாம்.
1364 உள்ளவன் பிள்ளை உப்போடு உண்ணும், இல்லாதவன் பிள்ளை சர்க்கரையோடு உண்ணும்.
1365 உள்ளக்கருத்து வள்ளலுக்குத் தெரியும்.
1366 உள்ளதைச் சொன்னால் எல்லாருக்கும் பகை.
1367 உள்ளதையும் கெடுத்தான் கொள்ளிக் கண்ணன்.
1368 உள்ளதைச் சொன்னவன் ஊருக்குப் பொல்லாதவன்.
1369 உள்ளாளும் கள்ளாளும் கூட்டமா?
1370 உள்ளிருந்தாருக்குத் தெரியும் உள்வருத்தம்.
1371 உள்ளுர் மருமகனும் உழுகிற கடாவும் சரி.
1372 உள்ளே கொட்டின தேளே ஒரு மந்திரம் சொல்லுகிறேன் கேளே.
1373 உள்ளே பகையும் உதட்டிலே உறவுமா,
1374 உள்ளே வயிறெரிய உதடு பழம் சொரிய.
1375 உறவிலே நஞ்சு கலக்கிறதா?
1376 உறவுபோல இருந்து குளவிபோலக் கொட்டுகிறதா?
1377 உறவு உறவுதான் பறியிலே கை வைக்காதே.
1378 உறவுக்கும் பகைக்கும் பொருளே துணை.
1379 உறவுக்கு ஒன்பது படி ஊருக்குப் பத்துப் படி.
1380 உறி அற மூளிநாய்க்கு வேட்டை.
1381 உறியிலே தயிர் இருக்க ஊர் எங்கும் போனாற்போல்.
1382 உறியிலே வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவானேன்ஃ
1383 உறியிற் பணம் போய் தெருவிற சணலடயை இழுக்கிறது.
1384 உறுதியான காரியம் ஒருபோதும் கெடாது.
1385 உறுதீங்குக்கு உதவாதவன் உற்றவனா?
1386 உற்சாகம் செய்தால் மச்சைத் தாண்டுவான்.
1387 உற்ற சிநேகிதன உயிர்க்கு அமிர்தம்.
1388 உற்றது சொன்னால் அற்றது பொருந்தும்.
1389 உற்றது சொல்ல ஊரும் அல்ல, நல்லது சொல்ல நாடும் அல்ல.
1390 உற்றார் தின்றால் புற்றாய் விளையும், ஊரார் தின்றால் பேராய் விளையும்.
1391 உற்றாருக்கு ஒன்றும் கொடான், நமனருக்கு நாலும் கொடுப்பான்.
1392 உற்றார் உதவுவாரோ அன்னியர் உதவுவாரோ?
1393 உனக்கும் பேபே உன் அப்பனுக்கும் பேபே.
1394 உனக்கு யான் அபயம் எனக்கு நீ உபயம்.
1395 உன் சமர்த்திலே குண்டு பாயாது.
1396 உன் சொல்லிலே உப்பும் இல்லை புளியும் இல்லை.
1397 உன் முறுக்குத் திருக்கு எல்லாம் என் உடுப்புக்குள்ளே.
1398 உன்னை வஞ்சித்தவனை ஒரு போதும் நம்பாதே.
1399 உன்னை கொடுப்பேனோ சென்னைக் கூனி, நீ சுமை சுமந்தல்லோ கூனிப்போனாய்.