We are proud to present the biggest collection of Tamil proverbs.(ஏ-வரிசை)
Here is the link for popular Proverbs : Popular Tamil Proverbs
 

1709ஏகாதசிக்கு மா இடித்தாற்போல.
1710ஏகாதசத் திருடியை ஏற்றடா ரதத்தின்மேலே.
1711ஏகாலி வாகனம் பொதி சுமந்தாற்போல.
1712ஏச்சிலும் பேச்சிலும் வல்லவனே.
1713ஏடா கூடக்காறனுக்கு வழி எங்கே என்றால், போகிறவன் தலை மேலாம்.
1714ஏடு அறியாதான் பீடு பெறதான்.
1715ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு ஆகுமா?
1716ஏணிக்கொம்புக்கு கோண்க்கொம்பு போடலாமா?
1717ஏணைக்கழிக்குக் கோணற்கழி வெட்டுகிறதா?
1718ஏண்டா தென்னமரத்தில் ஏறனாய் என்றால், கன்றுக்குடடிக்குப் புல் பிடுங்க என்றான்.
1719ஏண்டா கருடா சுகமா? இருக்கிற இடத்தில் இருந்தால் சுகம் தான்.
1720ஏண்டா பட்டப்பகலில் திருடுகிறாய்? என் அவசரம் உனக்குத் தெரியுமா?
1721ஏண்டா புளியமரத்தில் ஏறினாய்? பூனைக்குட்டிக்குப் புல் பறிக்க.
1722ஏண்டா முடிச்சு அவிழ்கிறாய்? என்பசி உனக்குத் தெரியுமா?
1723ஏண்டி சிறுக்கி புல்லு ஆச்சா? ஒரு நொடிக்குமுன் கட்டாச்சே.
1724ஏண்டி பெண்னே சோர்ந்திருக்கிறாய்? சோறு பத்தியம்.
1725ஏண்டி பெண்னே குந்தியிருக்கிறாய்? சோறு பறறாமல்.
1726ஏது பிரியம்? இல்லாதது பிரியம்.
1727ஏதும் அற்றவனுக்கு ஏன் இரண்டு பெண்டாட்டி?
1728ஏதென்று கேட்பாரும் இல்லை, எடுத்துப் பிடிப்பாரும் இல்லை.
1729ஏரி உடைகிறதற்கு முன்னே அணை போட வேண்டும்.
1730ஏரி நிறைந்தால் கரை கசியும்.
1731ஏரி பெருகில் எங்கும் பெருக்கு.
1732ஏரி மிதந்தால் இடையனை மதியாது.
1733ஏரியின் நீரைக் கட்டுதல் அரிது உடைத்தல் எளிது.
1734ஏரியின் தண்ணீர் இதோ சூரியதேவா?
1735ஏரியோடு பகைகொண்டு சவுசம் செய்யாதிருக்கிறதா?
1736ஏர் உழுகிற பிள்ளை இளைத்து போனால் போகிறது, பரியம் போட்ட பெண்ணைப் பார்த்து வளர்.
1737ஏர் பிடித்தவன் என்ன செய்வான் பானை பிடித்தவள் பாக்கியம்.
1738ஏலவே தொலைந்தது எங்களைத் தொட்ட கர்மம்.
1739ஏலெலம்! ஏலேலம்! எருமைச்சாணி காய்கிறது.
1740ஏலேலசிங்கன் பொருள் ஏழு கடலிற் போனாலும் திரும்பும்.
1741ஏவற்பேய் கூரையைப் பிடுங்கும்.
1742ஏவா மக்கள் மூவா மருந்து.
1743ஏவுகிறவனுக்கு வாய்சொல், செய்கிறவனுக்குத் தலைச்சுமை.
1744ஏழை அழுத கண்ணீர் கூரியவாளை ஒக்கும்.
1745ஏழை பாக்குத் தின்ன எட்டு வீடு அறிய வேண்டுமா?
1746ஏழை பேச்சு அரண்மனைக்கு ஏறுமா?
1747ஏழைப் பிள்ளைக்குத் தெய்வமே துணை.
1748ஏழைப் பிள்ளைக்கு எவர்களும் துணை.
1749ஏழையைக் கண்டால் மோழையும் பாயும்.
1750ஏறச் சொன்னால் எருதுக்குக் கோபம், இறங்கச் சொன்னால் நொண்டிக்குக் கோபம்.
1751ஏறப்படாத மரத்திலே எண்ணப்படாத மாங்காய்.
1752ஏற விட்டு ஏணியை வாங்குகிறதா?
1753ஏறின கொம்பால் இறங்க வேண்டும்.
1754ஏறுகிற குதிரையிலும் உழவுமாடு அதிக உத்தமம்.
1755ஏறுநெற்றி சூறுதலை எதிர்க்க வந்தால் ஆகாது.
1756ஏறமாறாய் பேசுகிறதா?
1757ஏறும் தேமல் இறங்கும் படர்தாமரை கூடும் புரவம் குடியைக் கெடுக்கும்.
1758ஏற்கவே மாமி பேய்க்கோலம் அதிலும் கொஞ்சம் மாக்கோலம்.
1759ஏற்கனவே வருகிற விக்கினங்களைத் தடுக்க வேண்டும்.
1760ஏற்றககோலுக்குப் பிடித்தால் அரிவாட்பிடிக்கு வரும்.
1761ஏற்றப்பாட்டுக்கு எதிர்ப்பாட்டா?
1762ஏன் கொழுக்கட்டை சவுக்கிட்டாய்? ஒரு காசு வெல்லம் இல்லாமற் சவுக்கிட்டேன்?