We are proud to present the biggest collection of Tamil proverbs.(ஐ-வரிசை)
Here is the link for popular Proverbs : Popular Tamil Proverbs
 

1763ஐங்கலக் கப்பியில் நழுவின கப்பி இவன்.
1764ஐங்காதம் போனாலும் அகப்பே அரைக்காசு கிடையாதே.
1765ஐங்காதம் போனாலும் அகப்பை அரைக்காசு.
1766ஐங்காதம் போனாலும் அறிமுகம் வேண்டும்.
1767ஐங்காதம் போனாலும, தன் பாவம் தன்னோட.
1768ஐங்காயம் இட்ட காரம் இட்டாலும் தன் நாற்றம் போகாதாம் பேய்ச்சுiர்க்காய்க்கு.
1769ஐதது நெல், அடர்ந்தது சுற்றம்.
1770ஐந்து சிட்டுக்கு இரண்டு காசு விலை.
1771ஐப்பசி மாதம் அழுகைத் தூறல் கார்த்திகை மாதம் கன மழை.
1772ஐப்பசி மாதத்து வெய்யலில் அன்று உரித்த தோல் அன்று காயும்.
1773ஐப்பசிக்கும் கார்த்திகைக்கும் மழை இல்லாவிட்டால் அண்ணனுக்கும் சரி தம்பிக்கும் சரி.
1774ஐப்பசி மாதத்து எருமைக்கடாவும் மார்கழி மாதத்து நம்பியானும் சரி.
1775ஐம்பதிலே அறிவு, அறுபதிலே அடக்கம், அறுபதுக்கு மேல் ஒன்றுமில்லை.
1776ஐம்பது வயதானவனுக்கு ஐந்து வயதுப் பெண்ணா?
1777ஐயங்காரும் தொத்துக் கொடுப்பார்.
1778ஐயப்பட்டால் பைய நட.
1779ஐயப்பன் குதிரையை வையாளி விட்ட கதை.
1780ஐயமான காரியத்தைச் செயயல் ஆகாது.
1781ஐயம் ஏற்றும் அறிவே ஒது.
1782ஐயர் என்பவர் துய்யர் ஆவர்.
1783ஐயர் வருகிறவரையில் அமம்hவாசை நிற்குமா?
1784ஐயர் கதிர்போல அம்மாள் குதிhபோல.
1785ஐயனார் படையிற் குயவனார் பட்டது போல.
1786ஐயனார் கோவில் செங்கல் அத்தனையும் தெய்வம்.
1787ஐயனார் கோவில் மண்னை மிதித்தவர் அத்தனையும் பிடாரி.
1788ஐயனாரே வாரும் கடாவைக் கைக்கொள்ளும்.
1789ஐயன் அமைப்பை ஆராலும் தள்ளக்கூடாது.
1790ஐயnர் என்றால் இவனுக்கு ஆறு மாசத்துப் பாவம் சுற்றும்.