We are proud to present the biggest collection of Tamil proverbs.(வா-வரிசை)
Here is the link for popular Proverbs : Popular Tamil Proverbs
 

5605வாகனம் உள்ளவன் நடைக்கு அஞ்சான், பால் உண்டான் பந்திக்கு அஞ்சான்.
5606வாகை இளம்பிஞ்சு கண்டவர்கள் இல்லை, வாகான தென்னம் பிள்ளை கண்டவர்கள் இல்லை.
5607வாகை இளம் பிஞ்சு கண்டவர்கள் உண்டோ?
5608வாக்கினால் கெட்ட கழுதையைப் போக்கிலே விடுங்கள்.
5609வாங்கின கடனைக் கொடாத வல்லாளகண்டன்.
5610வாசற்படி இட்டு விடிகிறதோ மகாதேவர் இட்டு விடிகிறதோ?
5611வாணாளுக்கு ஏற்ற வயிற்று எரிச்சல்.
5612வாணாள் உடையான் வலுப்பட்டுச் சாகான்.
5613வாணிபம் செய்யிற் காணியும் குறி.
5614வாணியக்கட்டை வயிரக் கட்டை தேயத்தேயத் துடைப்பக்கட்டை.
5615வாணியன் ஆசை கோணியும் கொள்ளாது.
5616வாணியர்கள் ஆடும் செக்கை வளைய வரும் எருதுகள்போல.
5617வாதத்து இயல்பு எடேல்.
5618வாதம் கெடுத்தது பாதி வண்ணான் கெடுத்தது பாதி.
5619வாதம் ஊத அறி, வேதம் ஒதி அறி.
5620வாதி கண்ணுக்கு மட்டம் எட்டு மாற்று.
5621வாதுக்கு ஆடின தேவடியாள் வயது சென்றால் கழுதை மேய்ப்பாள்.
5622வாதுமுற் கூறேல்.
5623வாயாடி வார்த்தை மட்டில்லா ரவை.
5624வாயாலே தின்று வாயாலே கக்கும் வெளவாலைப்போல.
5625வாயாலே கேட்டால் வாழைக்காய்ப் பிஞ்சும் கொடான், தாய் புருஷன் வந்தால் தாரோடே கொண்டு போவான்.
5626வாயாலே கேட்டால் வாழைப் பிஞ்சும் கொடான் தண்டித்துக் கேட்டால் தாரோடே கொண்டு போவான்.
5627வாயிலே உறவு மனதிலே பகை.
5628வாயிலே உண்டு வழி.
5629வாயைப் பார்த்து ஆளை ஏய்த்தான்.
5630வாய் இருந்தால் வங்காளம் போகலாம்.
5631வாய் இல்லா விட்டால் நாய் கொண்டு போய்விடும்.
5632வாய் இல்லாவிட்டால் நாய் கொண்டு போய்விடும்.
5633வாய் இருந்தால் பிள்ளை பிழைக்கும்.
5634வாய் உள்ள பெட்டிக்குத் தூர் இல்லை.
5635வாய் காய்ந்த புலி ஆள்மேலே விழுந்ததுபோல.
5636வாய்க்கொழுப்புச் சீலையில் வடிகிறது.
5637வாய்க்கு உண்டோ வாதம்?
5638வாய் சர்க்கரை கை கொக்கரை.
5639வாய் சொல்லும் பிடரி கும்பிடும்.
5640வாய்தான் இருக்கின்றது வாய்க்கு அரிசிக்கு வழி இல்லை.
5641வாய் திறக்கப் பொய் திறக்கும்.
5642வாய்த் தவிடும் போய் அடுப்பு நெருப்பும் போனதுபோல.
5643வாய் நல்லதானால் ஊர் நல்லது.
5644வாய் பார்த்தவள் வாழ்வு இழந்தாள் அம்பலம் பார்த்தவன் பெண்டு இழந்தான்.
5645வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ?
5646வாய் மதத்தால் வழக்கு இழந்தான்.
5647வாய் மத்த்தால் வாழவை இழந்தான்.
5648வாய் வாழைப்பழம் கை கருணைக்கிழங்கு.
5649வார்த்தை இருந்துபோம், வழி தூர்ந்துபேர்ம.
5650வாலிபத்திலே முதிர்ந்த புத்தி குறுகின வயதுக்கு அடையாளம்.
5651வால் நீPண்ட கரிக்குருவி வலம் இருந்து இடம் போனால், கால் நடையாய்ப் போனவர்கள் கனக தண்டிகை ஏறுவார்கள். நுடையாய் போனவர்கள் ககை தண்டிகை ஏறுவார்கள்.
5652வால் போனாலும் போகிறது எனக்குத் தோல் வேண்டும்.
5653வாழாத பெண்ணுக்கு மை ஏண்டி, பொடடு ஏண்டி, மஞ்சள் குளி ஏண்டி?
5654வாழுகிற வீட்டில் மரநாய் கட்டினது போல.
5655வாழும் பிள்ளையை விளையாட்டில் தெரியும்.
5656வாழை அடி வாழை.
5657வாழைப்பழததில் ஊசி ஏறுவதுபோல.
5658வாழைப்பழம் தின்னாத குரங்கு இல்லை.
5659வாழைப்பழம் கொண்டுபோனவள் வாசலில் இருந்தாள், வாய் கொண்டுபோனவள் நடு வீட்டில் இருந்தால்.
5660வாழை வடக்கு ஈனும் வான் கமுகு தெற்கு ஈனும்.
5661வாழ்கிற பெண்ணைத் தயார் கெடுத்தது போல.
5662வாழ்கிற வீட்டில் வன்குரங்கு வைத்ததுபோல.
5663வாழ்கிற வீட்டுக்கு இது ஒரு ஒரு வன்குரங்கு.
5664வாழ்கிற வீட்டுக்கு வாழை வைத்துப்பார்.
5665வாழ்க்கை கொடுத்தவன் கையில் வாணாளும்.
5666வாழ்ந்தது கெட்டால் வறு ஓட்டுக்கும் ஆகாது.
5667வாழ்ந்தவன் வறியவனானால் வறை ஒட்டிற்கும் ஆகான்.
5668வாழ்ந்த மகள் வந்தால் வண்ணத் தடுக்கு இடு, கெட்டமகள் வந்தால் கிழிந்த தடுக்கு இடு.
5669வாழ்வாருக்குச் சீதேவி வாயிலே.
5670வாழ்வும் சிலது காலம் தாழ்வும் சிலது காலம்.
5671வாளுக்கு ஆயிரம் தோளுக்கு ஆயிரம் சம்பாதித்தாலும் மட்டாய்ச் செலவிடு.
5672வாளுக்கு ஆயிரம் தோளுக்கு ஆயிரம்.
5673வானத்துக்குக்கீழ் இருந்து மழைக்குப் பயப்படலாமா?
5674வானமும் பூமியம் கொள்ளாதான் மரததிலும் கல்லிலும் இருப்பானா?
5675வானமே ஈன்றது பூமியே தாங்கிற்று.
5676வானம் பார்க்கப் போயும் இடைஞ்சலா?
5677வானம் சுரக்கத் தானம் சிறக்கும்.
5678வானம் சுருங்கிற்றானம் சுருங்கும்.
5679வான் செய்த உதவிக்கு வையகம் என்ன செய்யும்?