We are proud to present the biggest collection of Tamil proverbs.(வி-வரிசை)
Here is the link for popular Proverbs : Popular Tamil Proverbs
 

5680 விசும்பிற்றுளி வீழினல்லால் பசும்புற்றலை காண்பது அரிது.
5681 விசுவாசக் கொக்கு நடமாடிச் செத்ததாம்.
5682 விசுவாசம் இருந்தால் வேசியும் பிழைப்பாள், நிசம் இருந்தால் நீசனும் தழைப்பான்.
5683 விசுவாசப் பூனை கருவாட்டைத் தூக்கிகொண்டு போகிறதாம்.
5684 விஷத்தைக் குடிக்கப் பாலாமா?
5685 விஷத்தின் மேல் விஷம், விஷம் போக்கும்.
5686 விஷம் தின்றால் கொல்லும்.
5687 விஷம் குடித்தவன் மிளகுநீர் குடிக்க வேண்டும்.
5688 விஷம் குடித்தாலும் சாகார் விசுவாசிகள்.
5689 விஷம் பெரிதோ பாவம் பெரிதோ?
5690 விஷம் தீர வைத்தியன் வேண்டும், பாவம் தீரத் தெய்வம் வேண்டும்.
5691 விஷ்ணு பெரியவர் என்று ஸ்ரீரங்கத்தில் பார்க்கவேண்டும்.
5692 விஷ்ணுவைப் பெரிது என்பார் ஸ்ரீரங்கத்தில், சிவனை பெரிது என்பார் அருணாசலத்தில்.
5693 விஷ்ணுவே சமஸ்தம் என்பார் சிலர், சிவனே பெரிது என்பார் சிலர்.
5694 விடாச்சுரத்துக்கு விஷணுகரந்தை.
5695 விடாத மழை பெய்தால் படாத பாடு படவேண்டும்.
5696 விடாத மழையால் இல்லி ஒழுக்கு அடைபடும்.
5697 விடிந்தால் தெரியம் மாப்பிள்ளை குருடும் பெண் குருடும்.
5698 விடிந்தும் பெண்ணுக்கு முட்டாக்கோ?
5699 விடிய விடியக் கதை கேட்டு இராமனுக்குச் சீதை என்ன வேண்டுமென்று கேட்டதுபோல.
5700 விடியற்காலம் கல்யாணம், பிடி அடா தாம்பூலம்.
5701 விடியா மூஞ்சிக்கு வேலை அக்ப்பட்டாலும் கூலி அகப்படாது.
5702 விடியுமட்டும் இறைத்தவனும் விடிந்தபின்பு சாலை உடைத்தவனும் சரி.
5703 விடியுமட்டும் மழை பெய்தாலும் ஒட்டாங்கிளிஞ்சில் முளைக்காது.
5704 விட்டிற்பூச்சியைப்போல் பறந்து திரிகிறான்.
5705 விட்டு விட்டுப் பெய்கிற மழையிலும் விடாமற் பெய்கிற தூவானம் நல்லது.
5706 விட்டுதடா ஆசை விளாம் பழத்து ஒட்டோடே.
5707 விண் காட்டப் போனவன் கண் காட்ட வந்தானாம்.
5708 விண்ணாணம் எங்கே, கின்னரம் எங்கே?
5709 விண்ணுமாலைக்குக் கல்யாணம் விழுந்து கொட்டடா சாம்புவா.
5710 விண்ணேறு தப்பினாலும் கண்ணேறு தப்பாது.
5711 விண்தொடு கொடிமுடி மேருவும் வீறளி தென்திசைக் கிரியும்.
5712 விண் பொய்த்தால் மண் பொய்க்கும்.
5713 விண் வலிதோ மண் வலிதோ?
5714 விதி போகிற வழியே மதி போகும்.
5715 விதி முடிந்தவனைப் பாம்பு கடிக்கும்.
5716 விதியை மதியால் தடுக்கலாமா?
5717 விஸ்தாரக்காரன் செத்தால் பிழைக்கான்.
5718 வித்து இல்லாச் சம்பிரதாயம் மேலும் இல்லைக் கீழும் இல்லை.
5719 வித்துவானுக்கு எது பரதேசம்?
5720 வித்துவான்களுக்கு எது பெரிது?
5721 வித்தைக் கள்ளி மாமியார் விறகு ஒடிக்கப் போனாளாம் கற்றாழை முள்வந்து கொத்தோடே தைத்ததாம்.
5722 வித்தை அற்றவன் அழகு வாசனை இல்லா முருக்கம் பூப்போல.
5723 வித்தை விரும்பு.
5724 வித்தைக் க்ள்ளி, விளையாட்டுக் கள்ளி,
5725 வித்தையடி மாமி விக்குதடி பணிகாரம்.
5726 வித்தையில் எளியது சூனியம், பன்னத்திலே எளியது நீற.றுப் பெட்டி.
5727 வித்தை அடிக்கிற கோழிக்கு விலாவில் இருக்கிறதாம் பித்து.
5728 வித்தையுள்ளவன் பெரியவன்.
5729 விநாசகாலே விபரீத புத்தி.
5730 வியாச்சியம் சேற்றில் நட்ட கம்பம்.
5731 வியாதிக்கு மருந்து உண்டு விதிக்கு மருந்து உண்டா?
5732 வியாதியிலும் மருந்து கொடிது.
5733 விரதத்திலும் பெரிதோ ஒரு சந்தி?
5734 விரதம் கெட்டாலும் சுகம் தக்க வேண்டும்.
5735 விரலுக்குத் தக்க வீக்கம்.
5736 விரல் உதவி விருந்தினர் உதவார்.
5737 விரல் உரல் ஆனால் உரல் என்ன ஆகும்?
5738 விரல் போகாத இடத்தில் உரல் போமா?
5739 விரிந்த உலகில் தெரிந்தவர் சிலர்.
5740 விருது கூறி வந்து செடியில் நுழையலாமா?
5741 விருதுக்கோ வேட்டை ஆடுகிறது?
5742 விருத்தாசலம் போனால் திரட்பாவம் போகும்.
5743 விருந்து இட்டுப் பகை தேடுகிறது.
5744 விருந்திலோருக்கு இல்லைப் பொருந்திய ஒழுக்கம்.
5745 விருந்து இல்லாச் சோறு மருந்து.
5746 விருந்தைப் பண்ணிப் பொருந்தப் பண்ணு.
5747 விருந்தும் மருந்தும் மூன்று பொழுது.
5748 விருப்பத்தினால் ஆகாதது வீம்பினால் ஆகுமா?
5749 விரை ஒன்று போடச் சுரை ஒன்று முளைக்குமா?
5750 விலக்கக் கூடாத துன்பத்திற்கு விசனப்படாதே.
5751 விலங்கை விட்டுத் தொழுவில் மாட்டிக்கொண்டதுபோல.
5752 விலை மகட்கு அழகு தன் மேனி மினுக்குதல்.
5753 வில் அடியால் சாகாதது கல் அடியால் சாகுமா?
5754 வில் இல்லாதவன் அம்பு தேடுவான் ஏன்?
5755 வில்லம்போ சொல்லம்போ?
5756 வில்லுக் குனியாது எய்தால், விலகாது எதிர்த்த பகை.
5757 வில்லுக்கு விஜயன் பரிக்கு நகுலன்.
5758 வில் வளைந்தால் மோசம் தரும்.
5759 வில்வப்பழம் தின்பார் பித்தம் போக. பனம்பழம் தின்பார் பசி போக.
5760 விவேகத்தின் மேன்மை அவிவேகத்தை ஒழித்தல்.
5761 விழலுக்கு இறைத்த நீர்.
5762 விழித்தவன் கன்று நாகுகன்று தூங்கினவன் கன்று கடாக்கன்று.
5763 விழுகிற சுவரிலே கை வைப்பான் ஏன்?
5764 விழுங்கின ரசம் வயிற்றில் இராது.
5765 விழுந்த பிள்ளையை எடுக்க நேரம் இல்லை.
5766 விழுந்தாலுமு மீசையில் மண் ஒட்டவில்லை என்கிறான்.
5767 விளக்குமாற்றுக்கு பட்டுக் குஞ்சமா?
5768 விளக்கெண்ணெய்க்கு கேடே தவிரப் பிள்ளை பிழைப்பது இல்லை.
5769 விளக்கெண்ணெயைத் தடவிக்கொண்டு ஆற்று மணலில் புரண்டாலும் ஒட்டுகிறதுதான் ஒட்டும்.
5770 விளக்கெண்ணெiயாம் தலைக்கு எண்ணெய்.
5771 விள்ககைப் பிடித்துக்கொண்டு கிணற்றில் விழுகிறதா?
5772 விளக்கைக் கொளுத்திக் கீழே வைபப்hர் உண்டோ?
5773 விளக்கை வைத்துக்கொண்டு நெருப்புக்கு அலைகிறதுபோல.
5774 விளக்கு ஒளிக்கு ஆசைப்பட்ட விட்டில்போல.
5775 விளங்கா மடையன் விறகுக்குப் போனால் விறகு கிடைத்தாலும் கொடி கிடையாது.
5776 விளையாட்டுப் பிள்ளை விஷத்துக்கு அஞ்சாது.
5777 விளையாட்டாய் இருந்தது வினையாய் முடிந்தது.
5778 விளையாட்டுப் பண்டம் வீடு வந்து சேராது.
5779 விளையும் பயிர் முளையிலே தெரியும்.
5780 விறகு கட்டுக்காரனுக்கு நாரை வலம் ஆனால் ஒரு பணம் விற்கிறது ஒன்றேகாற்பணம் விற்கும்.
5781 விறகு கோணலானாலும் நெருப்புப் பற்றதா?
5782 விற்ற குண்டைக்குப் புல் போடுவான் ஏன்?
5783 வினைக்காலம் வரும் காலம், மனை வழியும் தெரியாது.
5784 வினை விதைத்தவன் வினை அறுப்பான் தினை விதைத்தவன் திணை அறுப்பான்.