We are proud to present the biggest collection of Tamil proverbs.(வீ-வரிசை)
Here is the link for popular Proverbs : Popular Tamil Proverbs
 

5785வீக்கமோ தூக்கமோ?
5786வீக்கம் கண்டால் தூக்கமாம்.
5787வீங்கலுக்கு விஷம் அதிகம்.
5788வீசம் இறுத்த குடி நாசம்.
5789வீசி நடந்தால் வெள்ளி வீசம் குறையும்.
5790வீச்சு என்றாலும் விடுவேனா, வீர புத்திர அம்பலகாரா?
5791வீடு அசையாமல் தின்னும் யானை அசைந்து தின்னும்.
5792வீடு எல்லாம் குருடு, வாசல் எல்லாம் கிணறு.
5793வீடு கட்டுகிறது அரிது, வீடு அழிக்கிறது எளிது.
5794வீடு கட்டுமுன்னம் கிணறு வெட்டவேண்டும்.
5795வீடு தருவோன் மேலும் தருவோன்.
5796வீடு நிறைந்த விளக்குமாறு.
5797வீடு போ என்கிறது, காடு வா என்கிறது.
5798வீடு வெறு வீடு வேலூர் அதிகாரம்.
5799வீடு வெறுவீடாய் இருந்தாலும் மணியம் ஏழு ஊர்.
5800வீட்டில் அழகு வேம்பு அடியாகும்.
5801வீட்டில் அடங்காதவன் ஊரில் அடங்குவான்.
5802வீட்டுக்கருமம் நாட்டுக்கு உரையேல்.
5803வீட்டுக்கு இருந்தால் வெண்கலப் பெண்டாட்டி, வீட்டுக்கு இல்லாமற் போனால் தூங்கற் பெண்டாட்டி.
5804வீட்டுக்கு அலங்காரம் பெரிய குடி.
5805வீட்டுக்கு சோற்றுக்கு இல்லை சிவன் அறிவான், நாட்டுக்குச் செல்வப்பிள்ளை நான் அல்லவோ?
5806வீட்டுக்கு அலங்காரம் விளக்கு.
5807வீட்டுக்கு வீடு மண் அடுப்புத்தான்.
5808வீட்டுக்கு அலங்காரம் மனையாள்.
5809வீட்டுக்கு அலங்காரம் வேளாண்மை.
5810வீட்டுச் செல்வம் மாடு, தோட்டச் செல்வம் முருங்கைக்காய்.
5811வீட்டுச் சோற்றைத் தின்று வீண் சண்டைக்குப் போவானேன்?
5812வீட்டுச் சோற்றைப் போட்டு வீண் பேச்சுக் கேட்பானேன்?
5813வீட்டுப் பாம்பு காட்டுக்குப் போனால் அதுவும் காட்டுப் பாம்பு ஆகும்.
5814வீட்டு வேலை வெளி வேலை பார்த்துக் காட்டு வேலைக்குக் கட்டோடே போகலாம்.
5815வீட்டுப் பிள்ளையம் வெளிப்பிள்ளையும் வித்தியாசம் அறியாது.
5816வீட்டு மூதேவியும் காட்டு மூதேவியும் கூடி உலாவுகிறது.
5817வீட்டுக்குப் புகழ்ச்சியோ நாட்டுக்குப் புகழ்ச்சியோ?
5818வீட்டுக்காரியம் பாராதவன் நாட்டுக் காரியம் பார்ப்பானா?
5819வீட்டுக்காரி என்று பெண்சாதிக்குப் பெயர்.
5820வீட்டுக்கு வீரன் காட்டுக்குக் கள்ளன்.
5821வீட்டுக்கு வீடு எதிர் வீடு ஆகாது.
5822வீட்டுக்கு ஏற்றின விளக்கு விருந்துக்கும் ஆகும்.
5823வீட்டுக்கு வாய்த்தது எருமை, மேட்டுக்கு வாய்த்தது போர்.
5824வீட்டுக்கு ஒரு வாசற்படி, பூட்டுக்கு ஒரு திறவுகோல்.
5825வீட்டுப் பெண்சாதி வேம்பும் காட்டுப் பெண்சாதி கரும்பும்.
5826வீட்டைக் கட்டிக் குரங்கை குடி வைத்ததுபோல.
5827வீட்டைக் காத்து அருள், பாட்டைப் பார்த்து அருள்.
5828வீட்டைக் கட்டிப் பார், கல்யாணம் செய்து பார்.
5829வீட்டைப் பிடுங்கி விறகாய் எரித்தாலும் வீணாதிவீணனுக்கு ஐந்து பணம் எப்படி வரும்?
5830வீட்டைக் காத்த நாயும், காட்டைக் காத்த நரியும், வீண் போகாது.
5831வீட்டைக் கட்டி ஒட்டைப் போடு.
5832வீட்டைக் கட்டு, அல்லது காட்டை அழி.
5833வீட்டை ஏன் இடித்தாய் மூட்டைப்பூச்சிக்குப் பயந்து?
5834வீட்டை எல்லாம் வெல்லத்திற்கு மாறினான்.
5835வீணருக்குச் செய்தது எல்லாம் வீணாம், கடற்கiயில் காணும் மணல்மேல் எழுத்துக்காண்.
5836வீணாய் உடைந்த சட்டி வேண்டியது உண்டு என் தலையிற் பூணாரம் பூண்ட புதமைதனைக் கண்டது இல்லை.
5837வீணுக்கு உழைக்கிறவன் வீணன்.
5838வீண் இழவுக்கு மார் அடிக்கிறதா?
5839வீண் இழவுக்கு வீட்டைப்க் கட்டிப் பார இழவிற்குப் பந்தல் போடு.
5840வீண் விபரீதத்தால் பேதையர் வீண் செலவு செய்ய உடன்படுவார்கள்.
5841வீம்புக் குப்பையில் விளையும் வீண் செடி.
5842வீம்புக்கு வேடம் கொள்ளாதே.
5843வீம்பு பேசுகிறவன் அழிவான், வீரியம் பேசுகிறவன் விழுவான்.
5844வீரம் பேசிக்கொண்டு எழுந்த சேவகன் வெட்டும் களம் கண்டு முதகிடலாமா?
5845வீரன் கேண்மை கூர் அம்பாகும்.
5846வீரியம் பெரிதோ காரியம் பெரிதோ?