We are proud to present the biggest collection of Tamil proverbs.(வெள-வரிசை)
Here is the link for popular Proverbs : Popular Tamil Proverbs
 

6133 வெளவாலுக்கு ஒரு கனிக்கு நூறு கனி நஷ்டம்.
6134 வெளவாலுக்கு மரமே கதி, அதன் குஞ்சுக்கு அதுவே கதி.
6135 வெளவாலுக்கு எது தூரம்.
6136 வெளவாலுக்கு இரவில் கண் தெரியும்.
6137 வெளவாலுக்கு நீளவும் தெரியும் குறுகவும் தெரியும்.
6138 வெளவாலைத் தின்றாலும் அணிலைத் தின்னல் ஆகாது.
6139 வெளவாலைக் கொன்றாலும் பிடியை விடாது.
6140 வெளவாலைப் பட்சி என்னலாமா?
6141 வெளவாலோடு அணிற்பிள்ளை சேருமா?
6142 வெளவாலோ சிறிது அதன் அடியோ வலிது.
6143 வெளவால் அடித்துத் தின்னும், அணில் கடித்துத் தின்னும்.
6144 வெளவால் அடிக்குப் பயப்படலாமா?
6145 வெளவால் கூட்டம் கூட்டமாக இருக்கும்.
6146 வெளவால் தலை நரித் தலைபோல்.
6147 வெளவால் தின்னாத பழம் இல்லை.
6148 வெளவால் போலத் தொங்குகிறான்.
6149 வெளவால் அடித்த பழமும் அணில் கடித்த பழமும் தள்ளுபடி ஆகுமா?
6150 வெளவால் அடைகிற வீட்டில் குடி இருப்பது எப்படி?
6151 வெளவி அணில் தொத்துகிறதுபோல.
6152 வெளவிச்சேர்த்த பேர்க்குப் பொருள் உண்டு.
6153 வெளவில் குடி இருக்கலாமா?
6154 வெளவிச் சேர்த்தாலும் மற்றவருக்கு வைத்து ஒழிவான்.
6155 வெளவின பேருக்கு முடிவது சுருக்கு.
6156 வெளவிய கருமம் எண்ணித் துணி.