We are proud to present the biggest collection of Tamil proverbs.(வெ-வரிசை)
Here is the link for popular Proverbs : Popular Tamil Proverbs
 

5847 வெங்கண்ணை வாங்கு உன் கண்ணைக் கொடுத்து.
5848 வெகுஜன வாக்கியம் கர்த்தவ்வியம்.
5849 வெச்செனவுக்கு அன்றி வெண்ணெய் உருகுமா?
5850 வெட்கம் கெட்டாலும் கெடட்டும் தொப்பையில் இட்டால் போதும்.
5851 வெட்கத்தால் ஒல்காதவள் குலஸ்திரிக்குப் போகாது.
5852 வெட்கம் அற்ற பெண்பிள்ளை வீண்
5853 வெட்கப்படுகிற வேசியம் வெடகம் கெட்ட சமுசாரியும் உதவாதவர்கள்.
5854 வெட்கமே கெட்டு வெளிப்பட்ட முண்டைக்கு முக்காடு ஏது?
5855 வெட்கத்துக்கு அஞ்சினவன் சச்சரவு செய்வானா?
5856 வெட்கத்துக்கு அஞ்சினவன் கடனுக்கு அஞ்சுவான்.
5857 வெட்கத்தை விற்றுக் கக்கத்திலே கொண்டுபோகிறான்.
5858 வெட்கம் கெட்டவனுக்கு மேனி எல்லாம் அழுக்குத்தான்.
5859 வெட்டப் பலம் இல்லை வெட்டிக்கு போக மனம் இல்லை.
5860 வெட்ட வெளியிலே வையாளி விடுகிறதா?
5861 வெட்டிக்கு இறைத்து விழலுக்குத் தண்ணீர் கட்டினதுபோல.
5862 வெட்டிக் கொண்டுவா என்றாற் குத்திக் கொண்டுவருகிறான்.
5863 வெட்டிவேரில் விசிறியும், விலாமிச்சை வேரில் தட்டியும் பண்ணு.
5864 வெட்டின இடத்தில் சலம் ஊறம், வீடு கட்டின இடத்தில் நடை ஏறும்.
5865 வெட்டி எல்லாம் தண்ணீர், மண் கட்டி எல்லாம் புல் நாற்று.
5866 வெட்டிவெட்டிப் பார்த்தாலும் முட்டக் கரிக்காசுதான் அகப்படும்.
5867 வெட்டிக்குப் பெற்று வேலியில் எறிந்தார்களா?
5868 வெட்டியானும் பிணமும் கட்டிக்கொண்டு அழட்டும்.
5869 வெட்டின குளத்திலும் தண்ணீர் குடியாது கட்டின வேலியும் தாண்டமாட்டாது.
5870 வெட்டினவனுக்கு ஒரு கேணி வீணாதி வீணனுக்குப் பல கேணி.
5871 வெட்டு ஒன்று கண்டம் இரண்டு.
5872 வெட்டென உரையே துட்டர்கள் அறைவர்.
5873 வெட்டெனப் பேசேல்.
5874 வெண்கலக் கடையில் யானை புகுந்ததுபோல.
5875 வெண்டலைக் கருடன் வந்திடுமானால் எவர் கைப்பொருளும் தன் பொருள் ஆகும்.
5876 வெண்ணெய்யை வைத்துக்கொண்டு நெய்க்கு அழலாமா?
5877 வெண்ணெய் திரளுகிறபோது தாழி உடைந்தாற்போல.
5878 வெண்ணெய் உருக்குகிறதற்குள்ளே பெண்ணை ஆற்றிலே தண்ணீர் வருகிறது.
5879 வெந்த சோற்றைத் தின்று வந்தது எல்லாம் பிதற்றுகிறான்.
5880 வெந்த சோற்றைத் தின்று விதி வந்தால் சாகிறது.
5881 வெந்ததுபோதும் முன்றானையிலே கொட்டு.
5882 வெந்ததைப் போடு முன்றானையிலே.
5883 வெந்த புண் வினை செய்யாது.
5884 வெந்தயம் இட்ட கறிக்கு சந்தேகம் இல்லை.
5885 வெந்தயம் போடாத கறியும் அல்ல, சந்தை இல்லாத ஊரம் ஊர் அல்ல.
5886 வெந்தால் தெரியும் வெங்காயம் மணப்பு.
5887 வெந்நீரிலே வீடு வேகுமா?
5888 வெய்யிலிலே போட்டாலும் உலரான், தண்ணீரிலே போட்டாலும் நனையான்.
5889 வெய்யோன் வெயில் முன் எரி தீபம்போல.
5890 வெல்லப் படை இலலை, தின்னப் படை உண்டு.
5891 வெல்லப் பானையை எறும்பு மொய்த்துபொல.
5892 வெல்லப் பானையை ஈக்கள் மொய்த்துக்கொண்டதுபோல.
5893 வெல்லம் சாப்பிடுகிறவன் ஒருவன் விரலைச் சூப்புகிறவன் ஒருவன்.
5894 வெல்லப் போனான் ஒரு செல்லப்பிள்ளை மெல்லப் போனான் ஒரு அமுங்குத் தலையன்.
5895 வெல்லாது உங்கள் படை செல்லாது பாண்டியன் முன்.
5896 வெள்pச்சம் இருள் ஆனால் இருள் என்னவாம், மெய்ஞ்ஞானி துர்மார்க்னானால் அஞ்ஞானி எப்படி ஆவான்?
5897 வெளிச்சீர் உட்சீரைக் காட்டும் கண்ணாடி.
5898 வெளுத்தது எல்லாம் பால் கறுத்தது எல்லாம் தண்ணீர்.
5899 வெளுத்து விட்டாலும் சரி சும்மா விட்டாலும் சரி.
5900 வெள்ளம் பள்ளத்தை நாடும் விதி புத்தியை நாடும்.
5901 வெள்ளம் வருவதறகுமுன் அணை கோலிக் கொள்ளவேண்டும்.
5902 வெள்ளரிக்காய் விற்ற பட்டணம்.
5903 வெள்ளாடு நனைகிறது என்று வேங்கைப்புலி விழுந்து விழுந்து அழுகிறதாம்.
5904 வெள்ளாடு குழை தின்றதுபோல.
5905 வெள்ளாட்டிக்குச் சன்னதம் வந்தால் விழுந்து விழுந்து கும்பிடவேண்டும்.
5906 வெள்ளாட்டி பெற்ற பிள்ளை விடியற்காலம் செத்துப்போயிற்று.
5907 வெள்ளாட்டியும் பெண்டாட்டியும் சரியா?
5908 வெள்ளாளன் மரபே மரபு கள்ளர் திருட்டே திருட்டு.
5909 வெள்ளாளன் கெடுக்கவிட்டாலும் வெள்ளோலை கெடுக்கும்.
5910 வெள்ளாளன் மினுக்குப்பண்ணிக் கெட்டான் வேசி சளுக்குப் பண்ணிக் கெட்டாள்.
5911 வெள்ளாளன் கிரந்தமும் பார்பான் தமிழும் விழல் விழலே.
5912 வெள்ளாளர் செய்யாத வேளாண்மை அல்ல.
5913 வெள்ளாளர் குடிக்கு ஒரு கள்ளாளர் குடி.
5914 வெள்ளிக்கு எதிரே போனாலும் வெள்ளாளனுக்கு எதிரே போகலாகாது.
5915 வெள்ளிக்குப் போட்டதும் கொள்ளிக்குப் போட்டதும் சரி.
5916 வெள்ளி போட்ட காலுக்கு வெறுங்கால் அடிமையா?
5917 வெள்ளி வட்டிலும் வேண்டும் விளிம்பிலே பொன்னும் வேண்டும்.
5918 வெள்ளெருக்குக்கும் வெள்ளாட்டுப் பாலுக்கம் கள்ளக் கருமேகம் காணாமற்போம்.
5919 வெள்ளை கொடுக்க வினை தீரும்.
5920 வெள்ளைக்குக் கள்ளம் இல்லை.
5921 வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை.
5922 வெறுங்கைத் தட்டான் இரும்பு ஊதிச் செத்தான்.
5923 வெறிகாரன் குடியை விடான் வீண் புத்திக்காரன் பாவத்துக்கு அஞ்சான்.
5924 வெறிகொண்ட யானை மிதந்து திரிகிறாப்போலே.
5925 வெறிக்கிட்டு அழயேல்
5926 வெறு நாய் சந்தைக்குப் போனால் வெள்ளிக்கோலால் அடிப்பட்டு வரும்.
5927 வெறும் கை முழம் போடுமா?
5928 வெறும் சட்டி தாளிக்கிறேன்.
5929 வெறும் புளி தின்றால் பற் கூசும்.
5930 வெறும் பானையில் ஈ புகுந்ததுபோல.
5931 வெறும் பயலுக்கு ஏற்ற வீறாப்பு.
5932 வெறும்பிலுக்கு வண்ணான் மாற்று.
5933 வெறுவாய்க்கு இலைகெட்டவன் விறகுக்குப் போனால் விறகு கிடைத்தாற் கொடி கிடையாது கொடி கிடைத்தால் விறகு கிடையாது.
5934 வெறுவாய் மெல்லுகிற அம்மையாருக்கு நாழி அவல் அக்ப்பட்டதுபோல.
5935 வெறு வாயைத் தின்றவனுக்கு வெள்ளை அவல் கிடைத்தது போல.
5936 வெற்றி பெற்றவன் சுத்த வீரன்.
5937 வெற்றிலைக்குத் தண்ணீரும் வேசைக்கு மஞ்சளும்போல.
5938 வெற்றிலைபோல் இருக்கும் மிகுந்த மரம் ஆகி விடும் பத்தி உள்ள பூமரத்துக்குப் பூவிரண்டு வக்கணையாம்.