We are proud to present the biggest collection of Tamil proverbs.(வே-வரிசை)
Here is the link for popular Proverbs : Popular Tamil Proverbs
 

5939 வேகத்தில் நாலுவிதம் உண்டு.
5940 வேகப் பொறுத்தது ஆறப் பொறுக்க் கூடாதா?
5941 வேகாத வீட்டில் வேகும் கட்டை காமம்.
5942 வேகாத சோற்றுக்கு விருந்தாளிகள் இரண்டு பெயர்.
5943 வேகிற வீட்டில் பிடுங்குகிறது லாபம்.
5944 வேகிற வீட்டுக்கு வெட்டுகிற கிணறு.
5945 வேகிற வீட்டிற்குக் கணக்கு பார்ப்பார் உண்டோ?
5946 வேகிற வீட்டை அவிக்காமல் இருப்பார் உண்டோ?
5947 வேசி உறவு காசிலும் பணத்திலுந்தான்.
5948 வேசி காசு பறிப்பாள்.
5949 வேசியாரும் நாயும் விதிநூல் வைத்தியரும் பாசம் அற்று நிற்பது கண்பார்.
5950 வேடக்காரனுக்கும் ஆடக்காரனுக்கும் பகை, வேசிக்கும் தாசிக்கும் பகை.
5951 வேடக்hரா வேடம் விடடா, ஒடக்காரா ஓடம் விடடா.
5952 வேடத்தில் நாலு விதம் உண்டு.
5953 வேடத்தினால் என்ன, வெண்ணீற்றினால் என்ன?
5954 வேடமோ தவவேடம் மனதிலோ அவவேடம்.
5955 வேடம் மூன்று வகை.
5956 வேடம் அழிந்துபோம்.
5957 வேடம் கூடமும் கொள்ளாது.
5958 வேடருக்கு அருமையான் வேட்டை முசல் வேட்டை.
5959 வேடருக்கு தேன் பங்சமா, மூடருக்கு அடி பஞ்சமா?
5960 வேடர் இல்லா ஊரில் யாவம் குடி இருக்கும்.
5961 வேடர்களில் மலைவேடர் விசேஷம்.
5962 வேடர் கையில் அகப்பட்ட தேன் கூண்டுபொல.
5963 வேட்டை ஆடிச் சிங்கம் தின்னும்.
5964 வேட்iயில் பெரிய வேட்டை பன்றி வேட்டை.
5965 வேட்டையில் பிரியமான வேட்டை சிக்காரி வேட்டை.
5966 வேண்டாத பெண்டாட்டியின் கைபட்டாற் குற்றம் கால் பட்டாற் குற்றம்.
5967 வேண்டாத பேருக்கு ஈந்து என்ன, வேலையில் ஆற்றுத்தண்ணீர் விழுந்து எனன?
5968 வேண்டி வினை செயேல்
5969 வேண்டி வேண்டிக் கொடுத்தாலும் வேண்டாம் என்றாற்போல.
5970 வேண்டுமெனற்hல் வீடு வேண்டாம என்றால் காடு.
5971 வேண்டும் என்று நூற்றல் வெணணெய்க் கொடிபோல.
5972 வேதத்தில் நாலு விதம் உண்டு.
5973 வேதத்திற்கும் விக்கிரபத்திக்கும் பகை.
5974 வேதத்தை அறியாத கிழவன் வீண.
5975 வேதத்திற்கு உலகம் பகை உலகத்திற்கு ஞானம் பகை.
5976 வேதம் ஆய்ந்து ஒதல் போதகர் முறைமை.
5977 வேதம் பொய்த்தாலும வியாழம் பொய்யாது.
5978 வேதம் கேட்டவரை வேதம் கேட்டவர் என்பான் ஏன்?
5979 வேதம் ஏன் நாதம் ஏன் விஸ்தாரக் கள்ளருக்கு?
5980 வேதம் ஒத்த மித்திரன்.
5981 வேதம் ஒதிய வேதியருக்கு ஒர் மழை.
5982 வேதாரணியத்தில் பாம்பு கடிக்கிறதாம் இல்லை, வேதாரணித்தில் பாம்பு குறைகிறதும் இல்லை.
5983 வேதியருக்கு அழகு வேதமும் ஒழுக்கமும்.
5984 வேதியருக்கு அழகு வேதம் ஒதுதல்.
5985 வேந்தனும் பாம்பும் சரி.
5986 வேந்தன் சீறில் ஆந்துணை இல்லை.
5987 வேப்பெண்ணெயும் ஆபத்துக்கு உதவும்.
5988 வேப்பெண்ணெய் விற்ற காசு கசக்குமா?
5989 வேப்பெண்ணெய் விருந்து எண்ணெய் அல்ல, மருந்து எண்ணெய்.
5990 வேம்பில் தேனை விட்டால் கசப்பு நீங்குமா?
5991 வேம்பும் கரும்பாச்சுசே வெற்றிலையும் நஞ்சாச்சே.
5992 வேம்புக்குப் பல் அழகு, வேலுக்குப் பல் இறுகும்.
5993 வேம்பும் சரி வேந்தனும் சரி.
5994 வேம்பும் சரி பாம்பும் சரி.
5995 வேம்பை விரும்ப விரும்பக் கரும்பு.
5996 வேரைக் கல்லி வெந்நீர் வார்த்த கதை.
5997 வேர் களைந்த மரம் பிழைப்பது எங்கே?
5998 வேர் நின்றால் மரம் நிற்கும், வியாபாரம் நின்றால் செட்டி நிற்பான்.
5999 வேர் மூலிகை, மரமூலிகை காய் மூலிகை.
6000 வேலமரத்து முள்ளும் ஆலமரத்துக் கனியும் ஆனேன்.
6001 வேலமரத்திற்கு நிழல் இல்லை, வெள்ளாளனுக்கு உறவு இல்லை.
6002 வேலம் பட்டை மேகத்தை நீக்கும், ஆலம் பட்டை பித்தத்தை அடிக்கும்.
6003 வேலி ஒன்றுக்குப் பன்னிரண்டு கலம் விரைப்பாடு.
6004 வேலி ஒன்றுக்குப் ஈரணை மாடும், இரண்டு ஆளும் வேண்டும்.
6005 வேலிக்கு ஓணான் சாட்சி, வெந்ததுக்குச் சொக்கன் சாட்சி.
6006 வேலிக்குப் போட்ட முள் காலுக்கு விiயாச்சுது.
6007 வேலி பயிரை மேய்ந்தால் விளைவது எப்படி?
6008 வேலிலும் நாலு பலன் உண்டு.
6009 வேலிவைத்துக் காப்பாற்றாத கன்றும் ஆலைவைத்து ஆட்டாத வாணியனும் சரி அல்ல.
6010 வேலை அற்ற அம்பட்டன் பூனையைப் பிடித்துச் சிரைத்தானாம்.
6011 வேலை அதிகம் சம்பளம் கொஞ்சம்.
6012 வேலை இல்லா ஊரக்கு ராஜா ஏன், பாம்பு இல்லா ஊருக்குக் கீரிப்பிள்ளை ஏன்?
6013 வேலை இல்லாதவனுக்குச் சாப்பாடு என்னத்திற்கு, எச்சிசோற்றுக்காரனுக்கு டம்பம் என்னத்திற்கு?
6014 வேலை இல்லாத அம்பட்டன் ஆட்டைச் சிரைத்தானாம்.
6015 வேலை ஏன், பிள்ளை ஏன், வேலை இல்லாருக்குச் சாப்பாடு ஏன்?
6016 வேலைக்கள்ளிக்குப் பிள்ளைமேல் சாக்கு, வெட்கம் கெட்ட நாறிக்கு அகமுடையான்மேலே சாக்கு.
6017 வேலைக்கள்ளிக்கு வேளைக்குக் காற்படி, வீண் கட்டைக்கு வேளைக்கு அரைப்படி.
6018 வேலைக்கள்ளிக்குப் பிள்ளைமேலே சாக்கு.
6019 வேலைக்காரியாய் வந்தவள் வீட்டுகாரியானால் அவள் அதிஷ்டம்.
6020 வேலைக்காரி என்று வேண்டிய பேர்கள் கேட்டார்கள், குடித்தனக்கரி என்று கொடுக்கமாட்டோம் என்றார்கள்.
6021 வேலைக்குத் தக்க கூலி, விருப்பத்துக்குத் தக்க கூhமை.
6022 வேலைக்கோ சம்பளம், ஆளுக்கோ சம்பளம்?
6023 வேலை செய்தாற் கூலி, வேஷம் போட்டாற் காசு.
6024 வேலை செய்யாத பிள்ளையைக் கையில வை, வேலை செய்கிற பிள்ளையைக காலில் வை.
6025 வேலை மினக்கெட்ட அம்பட்டன் பெண்டாட்டடி தலையைச் சிதைதானாம்.
6026 வேலை மினக்கெட்டு அம்பட்டன் பூனைக்குட்டியைச் சிரைத்தானாம்.
6027 வேலை முத்தோ பிள்ளை முத்தோ?
6028 வேலையைப் பார்த்துக் கூலி கொடு.
6029 வேலையைப் பார்த்துப் பெண்ணை எடு, சாலையைப் பார்த்து ஊருக்கு நட.
6030 வேல் வைத்துப் பயிர் ஆக்குவோர் இல்லை.
6031 வேழத்தை ஒத்த வினை வந்தால் தீர்வது எப்படி?
6032 வேழத்திற்குச சிறிதும் பெரிதாய்த் தோன்றும்.
6033 வேழம் முழங்கினாற்போல.
6034 வேலை அறிந்து பேசு, நாளை அறிந்து பயணம் பண்ணு.
6035 வேலைக்கு அரைக்காசு ஆயிரம் பொன் ஆகும்.
6036 வேலைக்கு உதவாத பிள்ளை தாழங்காய்க்குச் சரி.
6037 வேளையோ அவவேலை வீட்டிலோ அன்னம் இல்லை.
6038 வேறே வினை தேவை இல்லை, வினையாத்தாள் கோவிலுக்குப் போகவேண்டியதில்லை.
6039 வேனலுக்குக் கன மழை வரும், வேந்தனுக்குக் கன சனம் சேரும்.
6040 வேனிற் காலத்திற்கு விசிறி ஆன காலத்திற்கு ஆச்சாவும் தேக்கும்.