We are proud to present the biggest collection of Tamil proverbs.(வை-வரிசை)
Here is the link for popular Proverbs : Popular Tamil Proverbs
 

6041 வை என்ற எழுத்தே பெயரும் வினையும் ஆகும்.
6042 வைகறைத் துயில் எழு.
6043 வைகாசி மாதம் ஆற்றில் தண்ணீர்.
6044 வைகுண்டம் என்பது திரு மா நகரம்.
6045 வைகை ஆற்றுத் தண்ணீர் வேகம் அதிகம்.
6046 வைகை ஆற்று வெள்ளத்தில் பாலம் நிலைக்கிறது இல்லை.
6047 வைகை ஆறு தாமிரபருணிக்கு மத்திமம்.
6048 வைக்கத் தெரியாமல் வைக்கோற்போரிலே வைத்தானாம்.
6049 வைக்கத் தெரியாமல் வைத்துவிட்டு வந்தவரை எல்லாம் கேட்கலாமா?
6050 வைக்கோற்கட்டுகாரனை ஒப்புக்குக் கட்டி அழுதாப்போல.
6051 வைக்கோற்பட்டடையில் கட்டின நாய்.
6052 வைக்கோல் பஞ்சமா வறட் பசு பஞ்சமா?
6053 வைக்கோல் தின்னும் குதிரை வீட்டுக் கூரையையம் பிடுங்கும்.
6054 வைக்கோல் தின்கிற மாட்டுக்குப் பால் கொஞ்சம், மதுரம் அதிகம்.
6055 வைக்கோல் தின்கிற குதிரைக்கு வேகம் அதிகமா?
6056 வைக்கோற் கூரையிலும் விழற் கூரை வெகு நாள் இருக்கும்.
6057 வைக்கோற் கூளமும் ஒரு வேலைக்கு உதவும்.
6058 வைசியரும் சூத்திரம் இருந்து அல்லோ பிராமணரும் ஷத்திரியரும் வருவார்கள்.
6059 வைசியர்களில் பூவைசியர் சிரேஷடம்.
6060 வைசூரி வந்தவர்கள் அம்மா என்று கூப்பிடவேண்டும்.
6061 வைதாரை வாழவைக்கும் வாழ்ந்தாரைத் தாழவைக்கும்.
6062 வைதீPPகர் என்றால் பார்ப்பாருக்கு பெயர்.
6063 வைதீகம் லௌகீகம் இரண்டும் வேண்டும.
6064 வைதீகம் என்றால் தெய்வ சமயம்.
6065 வைதீகம் ஆய்ந்து அறி.
6066 வைத்தது உண்டானால் கெட்டதும் உண்டாம்.
6067 வைத்தது க்ணடது சொல்லாதே.
6068 வைத்தால் குடுமி சிரைத்தால் மொட்டை.
6069 வைத்தியன் பெரிதோ வாத்தி பெரிதோ?
6070 வைத்தியனுக்கும் வாத்திக்கும் பேதம் இல்லை.
6071 வைத்தியன் எல்லாருக்கும் பொது.
6072 வைத்தியம் வேண்டாதார் உலகில் இல்லை.
6073 வைத்தியம் வாயாடிக்குப் பலிக்கும்.
6074 வைத்தியம் எல்லாம் நமபிககையாற் பலிக்கும்.
6075 வைத்தியனுக்கும் அஞ்சவேண்டும், வம்பனுக்கும் அஞ்சவேண்டும்.
6076 வைத்தியமோ பைத்தியமோ?
6077 வைத்தியன் சொன்னது எல்லாம் மருந்து.
6078 வைத்தியனுக்குத் தன் அவிழ்தம் பலிக்காதாம்.
6079 வைத்தியன் தகப்பன் போல.
6080 வைத்தியனே பெரிது என்பார் சிலர், வாத்தியே பெரிது என்பார் சிலர்.
6081 வைத்தியன் பாராத நோய் தீருமா?
6082 வைத்தியன் பிள்ளை நோயினால் அல்ல, மருந்தினால் சாகும்.
6083 வைத்தியனுக்கு ஊரார் யாவரும் சினேகிதர்.
6084 வைத்தியத்தில் இரண வைத்தியமும், வயதில் எவ்வளமும் நல்லது.
6085 வைத்தியலோ உன்னையே குணமாக்கு.
6086 வைத்தியம் செய்தவன் எல்லாம் வைத்தியன்.
6087 வைத்தியம் கொஞ்சமாகிலும் தெரியாத போகன் இல்லை.
6088 வைத்தியன் மருந்திலும் கைமருந்தே நலம்.
6089 வைத்தின் பெரிதோ மருந்து பெரிதோ?
6090 வைத்தியன் பேச்சு நாளில் ஒரு பங்கு.
6091 வைத்தியனுக்கு வந்தது அவன் தலையோடே.
6092 வைத்திய சாஸ்திரம சாஸ்திரங்களில் விசேஷம்.
6093 வைத்தீசுரன் கோவிலுக்குப் போயும் வயிற்று வலி தீர இல்லை.
6094 வையகத்து உற்றவன் மெய்யகம் உற்றவன்.
6095 வையகத்துக்குத் துணை வரதன் கழல் இணை.
6096 வையகம் ஒழியம் வான் ஒழியும் வல்லவர் வசனம் ஒழியாது.
6097 வையகத்தில் எல்லோரும் ஒரு போக்கு அல்ல.
6098 வையகத்தில் பொய் சொல்லாதவன் இல்லை.
6099 வையத்துள் நீதி செய்யத்தக்கது.
6100 வையத்தில் உயர்ந்தோர் சிலர் தாழ்ந்தோர் பலர்.
6101 வையத்தில் உயர்ந்தோருக்கு இரை தாழ்ந்தோர்.
6102 வையத்தில் உப்புக்கு ஏமாறின பேர் உடம்புக்கும் ஏமாறுவார்கள்.
6103 வையத்தில் உப்பில்லாத பேருக்கு உடம்பு இல்லை.
6104 வையத்தில் உடம்பு இல்லாதபேருக்கு உப்பு வேண்டாம்.
6105 வையத்தில் உப்பும் வேண்டும் உடலும் வேண்டும்.
6106 வையத்தில் உடம்பு இல்லாவிட்டாலும் உடைவேண்டும, பணம் இல்லாவிட்டாலும் கனம் வேண்டும்.
6107 வையத்தில் வாழ்வாங்கு வாழ்பவன் தெய்வத்துள் வைக்கப்படும்.
6108 வையத்தில் மேலான பேருக்குத் தாழ்மையான மனது இருக்க வேண்டும்.
6109 வையத்தில் நல்லோர் ஒருவரைக் கண்டது இல்லை.
6110 வையத்தில் நெல்லுக்கு இறைத்து நீர் புல்லுக்கும் பாயும்.
6111 வையத்தில நெல் அரிசி வேண்டாதாரும் உண்டு, புல் அரிசி சிக்காதாரும் உண்டு.
6112 வையத்தில் சைவனுக்குச் சைவன்மேல.
6113 வையத்தில் வைஷ்ணவனுக்கு வைஷ்ணவன் மேல்.
6114 வையத்தில் தந்தையிலும் தாய் விசேஷம்.
6115 வையத்தில் தெவிட்டாத பொருள் அன்னமும் தண்ணீரும்.
6116 வையத்தில் கல் வினையால் ஆகாதது தீவினையால் ஆகுமா?
6117 வையத்து மனிதர் நாலு வகை.
6118 வையம் தோறும் தெய்வம் தொழு.
6119 வையம் ஏற்றின் ஐயம் இல்லை.
6120 வையம் ஒத்தால் ஐயம் இல்லை.
6121 வையம் புகழ்நதால் ஐயம் இல்லை.
6122 வையம் பெரிதானாலும் வளம் உள்ள இடம் கொஞ்சம்.
6123 வையம் பெரிது அதில் வருத்தமும் பெரிது.
6124 வையம் கெட்டால் ஐயம் இல்லை.
6125 வைய வைய வைரக்கல், திட்டத் திட்டத் திண்டுக்கல்.
6126 வைரத்தை வைரம்கெர்ண்டே அறுக்க வேண்டும்.
6127 வைரம் மனதில் வையாதே.
6128 வைரம் கொண்டவன் வைரப்பபொடி தின்று சாகிறான்.
6129 வைராக்கிய சதகம் சதகங்களில் விசேஷம்.
6130 வைராக்கியம் பகை முதலிய துர்க்குணங்களில் விசேஷம்.
6131 வைவாருக்கு இன்பம் இல்லை, பொறுத்தாருக்குத் துன்பம் இல்லை.
6132 வைராவி துறவிகளில் விசேஷம்.