We are proud to present the biggest collection of Tamil proverbs.(வ-வரிசை)
Here is the link for popular Proverbs : Popular Tamil Proverbs
 

5481வங்கணக்காரன் புளுகு வாசற்படி மட்டும்.
5482வங்கம் தின்றால் தங்கம், வங்கம் கெட்டால் பங்கம்.
5483வங்கிஷம் வார்த்தைக்கு அஞ்சும், புழுக்கை உதைக்கு அஞ்சும்.
5484வசனம் பண்ண உபாயம் காரணம்.
5485வச்சநாபியிலே புழுத்த புழு.
5486வச்சநாபியை உப்புப் பார்க்கலாமா?
5487வச்சத்துக்கு மேலே வழி இல்லை, பிச்சைக்குப் போகச் சுரைக்குடுக்கை இல்லை.
5488வஞ்சகருக்கு என்ன நேசம் காட்டினாலும் நெஞ்சு நேசம் கொள்ளார்.
5489வஞ்சர் உறவை வழுவி விலகு.
5490வஞ்சர் பால் ஊட்டினாலும் நஞ்சாய்விடும்.
5491வஞ்சித்து நெடும் காவம் வாழ்தலில் மரணம் அடைவதே நலம்.
5492வடகாற்று அடிக்க வந்தது மழையே.
5493வடக்கத்தியானையும் வயிற்று வலியையும் நம்பல் ஆகாது.
5494வடக்கே கறுத்தால் மழை வரும்.
5495வடக்குப் பார்த்த மச்சுவீட்டைப் பார்க்கிலும் தெற்புப் பார்த்த தெருத்திண்ணை நல்லது.
5496வடலியை வெட்டி ஆள், எருமையைக் கட்டி ஆள்.
5497வடலி வளர்த்துக் கள்ளைக் குடிக்கிறதா?
5498வடுகனும் தமிழனும் கூட்டுப் பயிர் இட்ட கதை.
5499வடுகன் தமிழ் அறியான் வைக்கோலைக் கசு என்பான்.
5500வடுகு கொழுத்தால் வறை ஒட்டிற்கும் ஆகாது.
5501வடுகு பொடுகாச்சு வைக்கோற் போர் நெல் ஆச்சு.
5502வடையைத் தின்னச் சொன்னாளா துளையை எண்ணச் சொன்னாளா?
5503வட்டம் சுற்றுpயம் வழிக்கு வரவேண்டும்.
5504வட்டி ஆசை முதலைக் கெடுத்தது.
5505வட்டிக்கு வட்டி எதிர் வட்டியா?
5506வட்டி ஒட்டம் விழ ஒட்டத்திலும் அதிகம்.
5507வட்டுவத்தின் மேல் கொட்டுப் போட்டால் வட்டுவத்திற்கு மாத்ரமா படும்?
5508வணங்கின வில் தீங்கை விளைக்கும்.
5509வணங்கின முள் தைக்காது.
5510வணிகருக்கு அழகு வாணியம் செய்தல்.
5511வண்டி ஒடத்தின் பெயரில் ஒடம் வண்டியின் பெயரில்.
5512வண்டு தூரத்திலே பூவின் வாசனைய அறியும், அதுபோல, கற்றோர் தூரத்திலேயே ஒருவன் நடத்தையை அறிந்து கொள்வார்கள்.
5513வண்டு ஏறாத மரம் இல்லை.
5514வண்ணத்துக்குக் கிண்ணம் பாடுகிறான்.
5515வண்ணானுக்கு நோய் வந்தால் கல்லோடே.
5516வண்ணானுக்கும் நிருவாணிக்கும் உறவு என்ன?
5517வண்ணானுக்கு வண்ணாத்திமேல் ஆசை, வண்ணாத்திக்குக் கழுதைமேல் ஆசை.
5518வண்ணான் கையில் மாற்றுச் சும்மா.
5519வண்ணான் கையில் சேலையைப் போட்டுக் கொக்கின் பின்னே போகிறதா?
5520வண்ணான் பிள்ளை செத்தால் அம்பட்டனுக்கு மயிர் போயிற்று.
5521வண்ணான் துறையில் முயல்போல.
5522வண்ணானுக்குப் போனான் வண்ணாத்திக்கு வந்தான்.
5523வதுவை செய்து வாழ்.
5524வஸ்திராபரணம் விசேஷமோ, அன்னம் விசேஷமோ?
5525வந்த காலோடு பந்தற் காலைக் கட்டிக்கொண்டு இருக்கிறாய்.
5526வந்த சண்டையை விடுவதும் இல்லை வலியச் சண்டைக்குப் போவதும் இல்லை.
5527வந்தவர் எல்லாம் சந்தையில் குடியா?
5528வந்த வினை யோகாது வாரா வினை வாராது.
5529வந்த அளவிலே சிறுக்க பந்தடித்தாள், வரவரச் சிறுக்pக சேர்ந்து போனாள்.
5530வந்தாரை வாழ வைக்கும், மண்ணில் பிறந்தாரைத் தூங்க வைக்கும்.
5531வந்தாலும் சரி, போனாலும் சரி.
5532வந்தாற் சும்மா வரும் வராமற்போனால் ஒன்றும் வராது.
5533வம்பான வார்த்தை மனதுக்கு அருவருப்பு.
5534வம்புத் துரைத்தனத்தாரைக் கும்பிடத் தகுமோ?
5535வயதுக்கோ நரைத்தது மயிருக்கோ நரைத்தது.
5536வயல் முயற்சியில் தானியம் உண்டாம்.
5537வயித்தியன் தலைமாட்டில் இருந்து அழுததுபோல.
5538வயித்தியன் கையைப் பார்த்து வாக்கிட்டது போல.
5539வயித்தியன் கைவிட்டது போல.
5540வயித்தியனுக்கு மோஷம் இல்லை, உவாத்திக்கு மோஷ வழி உண்டு.
5541வயிராக்கியத்துக்கு அம்பட்டக் கத்தியை விழுங்குகிறதா?
5542வயிறாரப் போசனமும் அரையாறப் புடைவையும் இல்லை.
5543வயிறு நிரம்பினால் பானை மூடாள்.
5544வயிற்றைக் கீறிக் காண்பித்தாலும் மா இந்திர ஜாலம் என்பார்.
5545வயிற்றுச் சோற்றுக்காக வயித்தீசுவரன் கோவில்மட்டும் நடப்பான்.
5546வயிற்றுக் குடலைக் காட்டினாலும் வாழை நார் என்கிறான்.
5547வயிற்றுப் பிள்ளையை நம்பி மாடு மேய்க்கிற பிள்ளையைப் பறி கொடுத்தாற்போல.
5548வயிற்றுப் பாம்புக்குக் கடுகும், வளைப் பாம்புக்கு வெந்நீரும் இடு.
5549வரப்போ தலைக்கு அணை வாய்க்காலேர பஞ்சு மெத்தை.
5550வரம்பு உயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயரக்குடி உயரும், குடி உயர உயரும்.
5551வரம்பு உயர்ந்தால் நெல் உயரும், நெல் உயர்ந்தால் சொல் உயரும்.
5552வரவர மாமியார் கழுதைபோல் ஆனாள்.
5553வரவுக்குத் தகுந்த செலவு.
5554வரவு கொஞ்சம் வலிப்பு மெத்த.
5555வரி போடேல் கேட்டைத் தேடேல்.
5556வரிசையும் இல்லை, அரிசியும் இல்லை.
5557வருகிறபோது எல்லாம் வலிய வரும், வந்தபின் போகிறபோது எல்லாம் போம்.
5558வருணன் சிலரை வகுத்துப் பெய்யுமொ?
5559வருந்தினால் வராதது ஒன்று இல்லை.
5560வருந்தி வருந்திப் பார்த்தாலும் வருகிறபொழுதுதான் வரும்.
5561வருமுன் காப்பவன் சொன்ன புத்தியை வந்தபின் காப்பவன் தள்ளினது போல.
5562வருவது சொன்னேன் படுவது படு.
5563வருவது வந்தது என்றால் படுவது படவேண்டும்.
5564வருவான் குரடன் விழுவான் கிணற்றிலே.
5565வலிமைக்கு வழக்கு இல்லை.
5566வலியப் பெண் கொடுக்கிறோம் என்றால் குலம் என்ன கோத்திரம் என்ன என்பார்க்ள.
5567வலிய வந்த சீதேவியைக் காலால் உதைத்துத் தள்ளலாமா?
5568வலியவன் எடுத்தது வழி.
5569வலிய உறவாடி வாசலிலே வந்தாலும், பொய் உறவாடிப் போய் வா என்று சொல்லுகிறான்.
5570வலியவன் வெட்டினதே வாய்க்கர்ல்.
5571வலையிற் சிக்கிக்கொண்ட மான்.
5572வல்லடி வழக்கைச் சொல்லடி மாமி.
5573வல்ல்வன் ஆட்டிய பம்பரம் மணலிலும் ஆடும்.
5574வல்லமை பேசேல்.
5575வல்லவனுக்குப் புல்லும் ஆயதம்.
5576வல்லவனுக்குப் புல் ஆயதம்.
5577வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு.
5578வல்லார் இனைத்தால் வந்து இளைப்பாறும் என்று சொல்லாதிரார்கள் சுத்த வீரர்கள்.
5579வல்லார் கொள்ளை வாழைப்பழம் ஆகும்.
5580வல்விலைக் கூறையம் மெல்விலைக் காளையும் ஆகாது.
5581வவ்வால் வீட்டுக்கு வவ்வால் வந்தால் நீயும் தொங்கு நானும் தொங்கு.
5582வழகட்டிப் பறிக்கிறவன் திருடன், வரதராஜலு ஏறுகிறதே கருடன்.
5583வழிநடை வார்த்தை வாகனம் போல.
5584வழியிலே கண்ட குதிரைக்கு வைக்கோற் பழுதை கடிவாளம்.
5585வழியிலே கிடக்கிற கோடாலியை எடுத்துக்காலின்மேல் போட்டுக்கொள்வானேன்?
5586வழியே ஏறுக வழியே மீளுக.
5587வழியே போய் வழியே வந்தால் அதிகாரி செங்கோல் என்ன செய்யும்?
5588வழியே போகிற சனியனை வாரத்துக்கு வாங்கினாற்போல.
5589வழி வழியாய்ப் போகும் போது விதி விதியாய் வருகிறது.
5590வழுக்கி விழாத குதிரை வளமான குதிரை.
5591வழுவழுத்த உறவைப் பார்க்கிலும் வைரம் பற்றிய பகை நன்று.
5592வளரும் காய் பிஞ்சிலே தெரியும்.
5593வளர்த்த கடா மார்பிற் பாய்ந்தது போல.
5594வளர்த்த நாய் முகத்தைப் பார்க்கிறதுபோல.
5595வளர்ப்பு வக்கணை அறியாது.
5596வளவன் ஆயினும் அளவு அறிந்து அளித்து உண்.
5597வளைந்த மூங்கில் அரசன் முடிமேல், வளையாத மூங்கில் கழைக்கூத்தர் காலின் கீழ்.
5598வறியோருக்கு அழகு வறுமையிற் கேண்மை.
5599வறுத்த பயறு முளைக்குமா?
5600வறுமை கண்டவர் வையத்தில் அநேகர்.
5601வறுமை வந்தால் பத்தும் பறந்துபோம்.
5602வறுமைக்கு மூதேவியும் செல்வத்திற்குச் சீதேவியும்.
5603வனந்தரத்து நுழைநரிகள் இடையர்களின் தீர்க்க விரோதிகள்.
5604வன் சொல் வணக்கத்திலும் இன்சொல் வணங்காமை நலம்.