Tamil To Tamil Dictionary
| Tamil Word | Tamil Meaning |
| ஓ | இரக்கம் இவற்றைக் காட்டிடுமோ ருபசருக்கம் அசைநிலை உ-ம் வம்மினோ, அதிசயவிரக்கச்சொல் உ-ம் ஓபுதினம்,இரக்கச்சொல் உ-ம் ஓகொட்டேன், இழிவுச்சிறப்பு உ-ம் ஓகொடியன்,உயர்வு சிறப்பு உ-ம் ஒபெரியன், எதிர்மறை உ-ம் யானோசெய்தது, ஒழிபிசை உ-ம் கொளலோகொண்டான்ஓரெழுத்து, தெரிநிலை உ-ம் ஆணோஅதுவுமன்று, பிரிநிலை உ-ம் அவனோகொண்டான், மடையடைக்குங்கதவு, வினா உ-ம் சாத்தனோ - தமிழ்மொழியின் நெடுங்கணக்கில்வரும் பதினோராம் எழுத்து. உயிர்முயற்சியாற் பிறக்கும் எழுத்துக்களுள் வாயைத்திறத்தலாகிய அகரக்கூறும் இதழ்குவிவாகிய உகரக்கூறும் சந்தித்துப் பிறந்த ஒருநெட்டுயிர்,அகாரஉகாரசந்தியக்கரம் அயன்-அரன் - அழைத்தல் [ - tamiẕmoẕiyiṉ நெடுங்கணக்கில்வரும் பதினோராம் eẕuttu. உயிர்முயற்சியாற் piṟakkum எழுத்துக்களுள் வாயைத்திறத்தலாகிய akarakkūṟum இதழ்குவிவாகிய உகரக்கூறும் cantittup பிறந்த ஒருநெட்டுயிர்,akārukāracantiyakkaram அயன்-அரன் - அழைத்தல்] ஓ, நாசம்! உயர்விழிவுகளின் சிறப்புக்குறிப்பு. (நன். 423.) கழிவிரக்கக் குறிப்பு. ஓஒ தமக்கோ ருறுதி யுணராரோ (நன். 42 விருத்.) மகிழ்ச்சிக்குறிப்பு. ஓபெரிதுவப்பக் கேட்டேன் (சீவக. 905) வியப்புக்குறிப்பு. முகந் திங்களோ காணீர் (சிலப். 7, பாடல். 11) ஞாபகக்குறிப்பு. ஓ தெரிந்தது அழைத்தற்குறிப்பு. ஓ மகனே! |
| ஓ | மதகுநீர் தாங்கும் பலகை வினா |
| ஓ | பதினோராம் உயிரெழுத்து வினாவெழுத்து விளரி என்னும் இசையின் எழுத்து நீக்கம் ஒழிவு சென்று தங்குகை மதகுநீர் தாங்கும் பலகை உயர்வு இழிவு சிறப்புக் குறிப்பு மகிழ்ச்சிக் குறிப்பு வியப்புக் குறிப்பு தெரிதல் குறிப்பு நினைவுக் குறிப்பு கொன்றை பிரமன் ஒழியிசை, வினா, சிறப்பு, எதிர்மறை, தெரிநிலை பிரிநிலை, ஐயம், அசைநிலை இவற்றைக் காட்டும் ஓர் இடைச்சொல் |
| ஓ-என்று | வலி, துக்கம் ஆகியவற்றின் தீவிரத்தை வெளிப்படுத்தும் ஒலிக்குறிப்பு |
| ஓஒ | அதிசயக்குறிப்பு. (பிங்.) |
| ஓஒ | வியப்புக் குறிப்பு |
| ஓக்கம் | உயர்ச்சி எழுச்சி பருமை பெருமை பெருக்கம் |
| ஓக்கமிராட்டி | ஒருவகைக்கலித் தாழிசை |
| ஓக்காளம் | ஓங்காளம் |
| ஓக்காளம் | ஓங்காளம், வாயாலெடுத்தல், கக்குதல் |
| ஓக்காளித்தல் | வாந்திக் குணமுண்டாதல் வாந்தி செய்தல் |
| ஓக்காளிப்பு | வாந்திசெய்கை |
| ஓக்காளிப்பு | வாந்திக் குணம் |
| ஓக்கியம் | ஏற்றது, தகுந்தது |
| ஓக்குதல் | உயர்த்துதல், எழும்பச்செய்தல் அறுதியிடுதல் தருதல் எறிதல் ஆக்குதல் |
| ஓகணம் | பேன் மூட்டைப்பூச்சி |
| ஓகணி | பேன் |
| ஓகம் | ஓகக் கலை உடலியல் கலை உடற்பயிற்சி |
| ஓகம் | பெருங்கூட்டம் பெருக்கு வெள்ளம் புகலிடம், அடைக்கலம் ஒரு குருவி |
| ஓகாரம் | ஓரெழுத்து |
| ஓகாரவுரு | கடவுள் |
| ஓகாரவுரு | பிரணவ வடிவம், கடவுள் |
| ஓகுலம் | அப்பம் |
| ஓகை | உவகை |
| ஓகை | உவகை, மகிழ்ச்சி இனிய மொழி ஆரவாரம் ஆறு நீர்ப்பெருக்கு |
| ஓகோ | அதிசயம் முதலிய மனநிலை காட்டுஞ் சொல். ஓகோ வுனைப்பிரிந்தார் (தாயு. பராபரக். 30) அதிசயச்சொல் |
| ஓகோ | வியப்பு முதலிய மனநிலை காட்டும் சொல் |
| ஓகோ | ஒருவர் புதிய செய்தி ஒன்றைக் கேட்கும்போதோ தான் புரிந்துகொண்ட ஒன்று தவறு என்று அறிந்துகொள்ளும்போதோ பயன்படுத்தும் சொல் |
| ஓகோ-என்று | (பிறர்) மெச்சும்படியாக |
| ஓகோதணி | மூட்டுப்பூச்சி |
| ஓகோதனி | ஓகணம், மூட்டுப்பூச்சி |
| ஓங்கல் | உயர்ச்சி மேடு மலை மலையுச்சி எழுச்சி மூங்கில் யானை மரக்கலம் வலியோன் தலைவன் அரசன் வழித்தோன்றல் சாதகப்புள் ஒருவகை நீர்ப்பறவை |
| ஓங்கார உப்பு | கல்லுப்பு |
| ஓங்காரம் | பிரணவம், ஓம் |
| ஓங்காரம்2 | பலத்த சப்தம் |
| ஓங்காரவுரு | கடவுள் கௌரிபாடாணம் |
| ஓங்காரன் | பிள்ளையார் |
| ஓங்காரன் | ஓங்காரவுருவன், கடவுள் |
| ஓங்காரி | சத்தி |
| ஓங்காரி | பிரணவப் பொருளானவள், சக்தி |
| ஓங்காரித்தல் | உறுக்குதல் |
| ஓங்காரித்தல் | ஓங்காரத்தை உச்சரித்தல் உறுக்குதல் வாந்தி செய்தல் |
| ஓங்காளம் | ஓங்காளம், வாயாலெடுத்தல், கக்குதல் |
| ஓங்கி | (உயரத்தைக் குறிப்பிடும்போது) உயரமாக |
| ஓங்கிப் பிடித்தல் | எழும்பிப் பிடித்தல் |
| ஓங்கிப்பார்த்தல் | உன்னிப் பார்த்தல் |
| ஓங்கியடித்தல் | உயர்த்தித் தாக்குதல் பிறன் சொல்வது ஓங்காமல் மறுத்துக் கூறல் |
| ஓங்கில் | ஒருமீன் |
| ஓங்கில் | ஒரு கடல்மீன்வகை |
| ஓங்கு1 | (அடிக்கவோ வெட்டவோ ஒன்றை) உயர்த்துதல் |
| ஓங்கு2 | வளர்நிலையைக் காட்டும் முதன்மை வினைகளின் செயல் மேலும் உயர்வான நிலை அடைதல் என்ற பொருள் தரும் ஒரு துணை வினை |
| ஓங்குதல் | உயர்தல் வளர்தல் பரவுதல் பெருமையடைதல் பெருகுதல் மேலே பறிதல் ஓக்காளித்தல் |
| ஓங்குவித்தல் | ஓங்கச்செய்தல், உயரச்செய்தல் |
| ஓச்சம் | உயர்வு, புகழ் |
| ஓச்சல் | உயர்வு தளர்ச்சி |
| ஓச்சன் | பிடாரிகோயில் பூசாரி கணக்காயன் ஆசான் |
| ஓச்சன் கத்தி | பலி வெட்டும் அறுவாள் |
| ஓச்சுதல் | எறிதல் பாய்ச்சுதல் செலுத்துதல் வீசுதல் உயர்த்துதல் ஓட்டுதல்: தூண்டி விடுதல் |
| ஓச்சை | வறையல், வறுத்த உணவு |
| ஓசம் | ஒளி மிகுபுகழ் நிமித்தம் சமர்த்து ஆதாரம் வலிமை ஆண்குறி |
| ஓசரம் | நிமித்தம், பொருட்டு |
| ஓசரி | கேடு வியப்புக் குறிப்பு துன்பக் குறிப்பு |
| ஓசழக்கு | அழகு வருத்தமின்மை சிரமமின்மை |
| ஓசன் | ஆசாரியன் |
| ஓசனித்தல் | பறவை சிறகடித்தல் போதற்கு முயலுதல் |
| ஓசனை | யோசனையளவு நான்கு காதம் |
| ஓசி | இரவல் ஆசிரியன் மனைவி |
| ஓசிவனம் | பிழைப்பு |
| ஓசு | புகழ் வலி சும்மா கிடைப்பது |
| ஓசுநன் | வலியோன் எண்ணெய் வாணிகன் பரவசாதியான் மீகாமன் |
| ஓசை | அதிக அளவுடன் ஒலிக்கும் ஒலி வாழை |
| ஓசை | ஒலி எழுத்தோசை செய்யுளோசை வான் என்னும் பூதம் தோன்றுவதற்குக் காரணமாகிய ஏழு தன்மாத்திரை புகழ் இரைச்சல் மிடற்றொலி சொல் பேச்சு இயம் பாம்பு வாழை |
| ஓசை | (ஒன்று மற்றொன்றின் மீது படும்போது ஏற்படும்) சப்தம் |
| ஓசைசெய்தளை | காலணிவகை |
| ஓசைப்படாமல் | (ஒரு செயலைச் செய்யும்போது) சப்தம் ஏற்படாதவாறு |
| ஓசையுடைமை | நூலழகினொன்று |
| ஓசையுடைமை | இன்னோசையுடைமை, நூலழகு பத்தனுள் ஒனறு |
| ஓசையுண்ணுதல் | செய்யுளோசை இசைதல் |
| ஓசையூட்டுதல் | செய்யுள் ஓசையை இசையச் செய்தல் செய்யுளோசை வாய்பாட்டால் அளந்தறிதல் |
| ஓட | உவமையுருபு. (தொல். பொ. 290.) |
| ஓடக்காரன் | ஓடமோட்டி பாய்பின்னும் இனத்தான் |
| ஓடக்கோல் | படகுதள்ளுங் கழி |
| ஓட்டக்காரன் | அஞ்சற்காரன் |
| ஓட்டகம் | பாடல் முழுதும் இதழ் குவிந்தும கூடியும் இயலும் எழுத்துகளேயுள்ள சித்திரகவி |
| ஓட்டங்காட்டுதல் | ஓடுவதுபோல நடித்தல் முன்னோடிக் காட்டுதல் ஏமாற்றுதல் |
| ஓட்டசாட்டம் | தடபுடல் |
| ஓட்டடுக்கு வீடு | ஓடு வேய்ந்த மனை |
| ஓட்டடை | அப்பவகை |
| ஓட்டத்தி | ஓட்டுத் துத்திச்செடி |
| ஓட்டப் பந்தயம் | (குறிப்பிட்ட இடத்திலிருந்து ஆரம்பித்துக் குறிப்பிட்ட தூரம்வரை) ஓடும் போட்டி |
| ஓட்டப்பம் | அப்பவகை |
| ஓட்டபல்லவம் | மேலுதடு |
| ஓட்டம் | ஓடல் மேலுதடு உதடு நீரோட்டம் ஓடுமோட்டம் வருவாய் தோல்வி உருக்கித் தூய்மை செய்கை மனம் செல்லுகை |
| ஓட்டம் பிடி | தப்பிச் சென்று விடு |
| ஓட்டம்பிடித்தல் | தப்பி ஓடுதல் |
| ஓட்டல் | (பெரும்பாலும் தங்கும் வசதி இல்லாத) உணவு விடுதி |
| ஓட்டன் | நடந்து செல்லும் தூதன் பாட்டனுக்குப் பாட்டன் |
| ஓட்டாங்கச்சி | சிரட்டை, தேங்காய் ஓடு மட்கலவோட்டின் துண்டு |
| ஓட்டாங்கட்டி | உடைத்த ஒட்டுத்துண்டு |
| ஓட்டாங்கிளிஞ்சல் | ஒருமீன் |
| ஓட்டாங்கிளிஞ்சல் | ஒருவகை மீன் உடைந்த சிப்பி |
| ஓட்டாங்குச்சு | கலவோடு |
| ஓட்டாஞ்சல்லி | உடைந்த மண் பாத்திரத்தின் சிறு துண்டு |
| ஓட்டாண்டி | நல்ல நிலையிலிருந்து கெட்டழிந்து : வறிஞன் ஆனவன் |
| ஓட்டாண்டி | இரந்துண்பவன் பிச்சைக்காரன் |
| ஓட்டாண்டி | (நல்ல நிலையிலிருந்து) பிச்சையெடுக்கும் நிலைக்கு வந்துவிட்டவன் |
| ஓட்டாம்பாரை | ஒருமீன் |
| ஓட்டாம்பாரை | ஒட்டாம்பாரை |
| ஓட்டி | ஓட்டுகிறவன் ஓட்டும்பொருள் பாட்டிக்குப் பாட்டி கொவ்வைக் கனி |
| ஓட்டி | (வாகனத்தைக் குறிக்கும் சொற்களுடன் இணைந்து வரும்போது) ஓட்டுபவர் |
| ஓட்டியம் | பாடல் முழுதும் இதழ் குவிந்தும கூடியும் இயலும் எழுத்துகளேயுள்ள சித்திரகவி |
| ஓட்டிரம் | ஒரு நாடு ஒரிசா என வழங்கும் உற்கல நாடு |
| ஓட்டு | செலுத்து கப்பலோட்டம் |
| ஓட்டு | ஓடுகை புறங்காட்டியோடுகை கப்பலோட்டம் நூலிழையோட்டுகை |
| ஓட்டு2 | (தேர்தலில்) வாக்கு |
| ஓட்டுக்கொடுத்தல் | ஓடிவிடுதல் |
| ஓட்டுத்துத்தி | ஒருபூடு |
| ஓட்டுதல் | ஓட்டல் |
| ஓட்டுதல் | செலுத்துதல் நீங்கச்செய்தல் புகுத்துதல் செய்துமுடித்தல் அழித்தல் காலந்தாழ்த்துதல் நூலால் இழையிடுதல் கட்டடத்தில் பூசிய சாந்தை வழுவழுப்பாகத் தேய்த்தல் கலத்தல் |
| ஓட்டுநர்/ஓட்டுனர் | பேருந்து, கார் முதலிய வாகனங்களை ஓட்டும் பணி புரிபவர் |
| ஓட்டுமுத்து | சிப்பியில் ஒட்டிய முத்து |
| ஓட்டெடுத்தல் | விரைந்தோடுதல் |
| ஓட்டெழுத்து | தலையெழுத்து |
| ஓட்டை | ஓடுப்பொருளையுணர்த்தவரும் மூன்றாம் வேற்றுமை யுருபு. பர்வத பரமாணு வோட்டை வாசிபோரும் (திவ். திருப்பா. அவ.) With, used as adj. meaning equal with, as அவனுக்கு இவனோட்டை வயது உடனொத்த உடையல் |
| ஓட்டை | சில்லி சிதைவு துளை ஓடுப்பொருளை உணர்த்தவரும் மூன்றாம் வேற்றுமையுருபு உடனொத்த |
| ஓட்டை | ஒன்று உட்சென்று வெளிவரக் கூடிய வட்ட வடிவ இடைவெளி அல்லது திறப்பு |
| ஓட்டை வாய் | எல்லாவற்றையும் பிறரிடம் கூறும் தன்மை: இரகசியத்தைக் கட்டிக் காத்தவன் எல்லாவற்றையும் எல்லாரிடமும் எளிதாகச் சொல்லிவிடுகின்ற இயல்பு |
| ஓட்டைக்கை | எளிதாக செலவு செய்யும் தன்மை |
| ஓட்டைக்கை | பொருள் தங்காத கை |
| ஓட்டைக்கை | எவ்வளவு பணம் இருந்தாலும் எளிதாகச் செலவு செய்துவிடும் தன்மை |
| ஓட்டைக்கையன் | பணத்தைத் தாராளமாகச் செலவு செய்து விடும் இயல்பு |
| ஓட்டைச்செவி | கேள்வி பற்றாத செவி |
| ஓட்டைநெஞ்சு | அறைபோன மனம், வெறுமை மனம் |
| ஓட்டைப்பல் | சிதைவுற்ற பல், மூளிப் பல் |
| ஓட்டைமனம் | ஒன்றும் தாங்காத மனம் இள நெஞ்சு |
| ஓட்டையுடைச்சல் | பயன் படுத்த முடியாத வீட்டுச் சாமான்கள் |
| ஓட்டையுடைசல் | சிதைந்த பண்டங்கள் |
| ஓட்டையுடைசல் | (ஓட்டை விழுதல், உடைதல் போன்ற காரணங்களால்) உபயோகப்படுத்த முடியாத வீட்டுப் பாத்திரம் அல்லது தட்டுமுட்டுச் சாமான்கள் |
| ஓட்டைவாய் | எதையும் பிறரிடம் எளிதாகச் சொல்லிவிடக் கூடிய தன்மை |
| ஓட்டைவாயன் | உளறுவாயன் மறையினை வெளியிடுபவன் |
| ஓடதி | மருந்து மூலிகை மருந்துச் செடி ஆண்டில் ஒருமுறை காய்த்து அழியும் செடி |
| ஓடதிநாதன் | சந்திரன் |
| ஓடதிபதி | சந்திரன் |
| ஓடம் | படகு |
| ஓடம் | தெப்பம் படகு மிதவை நெசவுநாடா ஓடப்பாட்டு செங்கருங்காலி மகநாள் |
| ஓடம் | (ஆறு முதலியவற்றில் பயணிகளை ஏற்றிச் செல்லப் பயன்படும்) குறைந்த அகலமும் அதிக நீளமும் உடைய ஒரு வகைப் படகு |
| ஓடல் | அச்சக்குறிப்பு ஓடுதல் |
| ஓடல் | ஓடுதல் குலைதல் கெடுதல் ஒரு மரம் ஆமெனல் |
| ஓடவிடுதல் | புடமிடுதல் |
| ஓடவைத்தல் | புடமிடுதல் |
| ஓடவைத்தல் | புடமிடுதல் உறுதிப்படுத்தல் |
| ஓடன் | ஆமை |
| ஓடாக | உடல் மெலியும்படி |
| ஓடாணி | அணிகலக் கடைபூட்டாணி |
| ஓடாவி | மரக்கலம் செய்வோன் தச்சன் ஓவியன் |
| ஓடி | ஒருவகை நிலம் வனநெல் |
| ஓடிகை | வனநெல், காட்டில் விளையும் ஒருவகை நெல் |
| ஓடித்திரிதல் | அலைதல் பெருமுயற்சி செய்தல் |
| ஓடிப்போ | (மன வருத்தத்தால் வீட்டைவிட்டு) வெளியேறுதல்(காதலிப்பவருடன்) ரகசியமாக வெளியேறுதல் |
| ஓடிப்போதல் | விட்டு நீங்குதல் ஓட்டமெடுத்தல் |
| ஓடியம் | சபைக்கடாப்பேச்சு பரிகாசம் |
| ஓடியம் | பரிகாசம் சபைக்குத் தகாத பேச்சு |
| ஓடியவோடம் | கிளிஞ்சில் |
| ஓடியவோடம் | கிளிஞ்சல் |
| ஓடியாடிப்பார்த்தல் | பெருமுயற்சி செய்தல் |
| ஓடியாடு | (களைப்பு இல்லாமல்) அலைந்துதிரிதல் |
| ஓடியாடுதல் | ஓட்டமும் ஆட்டமுமாயிருத்தல் |
| ஓடியுறைதல் | படிப்படியாய் இறுகுதல் |
| ஓடிவிறைத்தல் | உடல் முழுவதும் விறைத்தல் |
| ஓடிவெளித்தல் | வெளிவாங்குதல் நன்கு வெளிப்படுதல் |
| ஓடு | மூன்றனுருபு. (தொல். சொல். 74 உரை.) |
| ஓடு | ஆமை முதலியவற்றின் ஓடு சிப்பி தட்டோடு வேயும் ஓடு செங்கல் உடைந்த பானையோடு மண்டையோடு இரப்போர் கலம் மூன்றனுருபு |
| ஓடு1 | (மனிதன், விலங்கு ஆகியவை கால்களை முன்னும்பின்னும் வேகமாக எடுத்துவைப்பதன்மூலம்) நடப்பதை விட விரைந்துசெல்லுதல் |
| ஓடுகரப்பான் | கரப்பான்வகை |
| ஓடுகால் | நீரோடுங் கால்வாய் |
| ஓடுகாலி | வீட்டில் தங்காத பெண் |
| ஓடுகாலி | (முறைகேடாக) வீட்டைவிட்டுச் சென்றுவிடும் பெண் |
| ஓடுதல் | ஓட்டமாய்ச் செல்லுதல் செல்லுதல் நீர் முதலியன ஓடுதல் மிகுதியாதல் மனம்பற்றுதல் நீளுதல் வருந்துதல் நேரிடுதல் பிறக்கிடுதல் கழலுதல் பொருந்துதல் எண்ணஞ்செல்லுதல் பரத்தல் மதிப்பிற்குரியதாதல் தீர்மானிக்கப்படுதல் |
| ஓடுதளம்/ஓடுபாதை | விமானம் மேல் எழும் முன் அல்லது கீழ் இறங்கிய பின் சற்றுத் தூரம் ஓட வேண்டியிருப்பதால் அதற்கு அமைக்கப்படும் நீண்ட பாதை |
| ஓடுதாவடி | அவசரங்களில் நேரும் குழப்பம் |
| ஓடுதிருப்புதல் | ஓடுமாற்றிப் புதுப்பித்தல் |
| ஓடுபடம் | இடுதிரை |
| ஓடுபந்தல் | நடைப்பந்தல் |
| ஓடும் | ஓர் அசைச்சொல் |
| ஓடுவாயு | வாதநோய்வகை |
| ஓடுவிப்புருதி | ஒரு சிலந்தி |
| ஓடுவிப்புருதிக்கட்டி | புரையோடும் புண்வகை அரித்தரித்துச் செல்லும் புண் |
| ஓடை | ஊட்டம் |
| ஓடை | நீரோடை குளம் அகழி மலைவழி நெற்றிப்பட்டம் யானையின் நெற்றிப் பட்டம் சந்தனம் வைக்கும் மடல் ஒருவகைப் படர்க்கொடி கிலுகிலுப்பைச் செடி உலவை மரம் குடைவேலமரம் |
| ஓடை | (பெரும்பாலும்) இயற்கையாக ஆற்றிலிருந்து பிரிந்து வரும் (சிறிய) நீர்வழி |
| ஓணப்பிரான் | ஓணநாளுக்குரிய திருமால் |
| ஓணம் | மலையாள மாதமான சிங்கம் மாதத்தின் துவக்கம் தான் இந்த திரு ஓணம் தினமாகும் |
| ஓணம் | ஆறு இருபத்திரண்டாம் நட்சத்திரமான திருவோண நாள் ஒரு விழா |
| ஓணான் | ஓணான் பல்லி வகையை சார்ந்தது. கரட்டாண்டி எனப்படும் இது ஓந்தி அல்லது பச்சோந்தி போல் நிறம் மாறுவது அன்று. அதனைப்போன்று நீளமான நாக்கும் இல்லை. இது கண்களை 360° கோணத்தில் சுற்றாது. பெரும்பாலும் மரங்களிலும் செடிகளிலும் காணப்படும் இது சிறு பூச்சிகளை உண்ணும். வேகமாக ஓடும். பற்களை உடையது |
| ஓணான் | ஓர் ஊரும் உயிரி ஓந்தி |
| ஓணான் | தடித்த சொரசொரப்பான தோலும் கூர்மையான வாயும் நீண்ட வாலும் கொண்ட பல்லி இனத்தைச் சேர்ந்த ஒரு பிராணி |
| ஓணான்குத்தி | ஒருவகை இராசாளி |
| ஓதக்கால் | பெருங்கால் |
| ஓதக்கால் | பெருங்கால், ஆனைக்கால் |
| ஓத்தி | ஓந்தி |
| ஓத்தி | ஓணான் |
| ஓத்திரம் | ஓமத்திற்குரிய பொருள் |
| ஓத்திரி | வேள்விசெய்வோன் |
| ஓத்தின்சாலை | வேதம் கற்பிக்கும் இடம் |
| ஓத்து | வேதம் |
| ஓத்து | ஓதுகை, ஓதப்படுவது வேதம் ஓரினப் பொருளை ஒருவழி வைத்திருக்கும் இயல், நூற்பிரிவு விதி |
| ஓத்துமுறை வைப்பு | இயல் முதலியவற்றை முறைப்படி அமைத்தலாகிய உத்திவகை |
| ஓத்துமுறைவைப்பு | ஒருயுக்தி |
| ஓத்துரைப்போன் | வேதமோதுவோன் உபாத்தியாயன் |
| ஓதப்பள்ளி | இஸ்லாமியச் சிறுவருக்குக் குர்ஆன் கற்றுக்கொடுக்கும் இடம் |
| ஓதப்புரோதம் | நெசவின் நெட்டிழை, குறுக்கிழைகள் |
| ஓதம் | ஈரம் வெள்ளம் நீர்ப்பெருக்கு கடல் அலை ஒலி பெருமை அண்டவாதநோய் சோறு |
| ஓதம்1 | மழைக் காலத்தில் சுவரிலோ தரையிலோ ஏற்படும் ஈரக்கசிவு |
| ஓதம்2 | விரைவீக்கம் |
| ஓதல் | நெட்டுரு மனப் பாடம் செய்தல் : வேதம் ஓதுதல் |
| ஓதல் | ஓதுதல் படித்தல் சொல்லல் கல்வி பயிலுதல் போதித்தல் மந்திரஞ் செபித்தல் ஒழிதல் |
| ஓதவனம் | கடல் |
| ஓதளை | காசுக்கட்டி, காவிக்கட்டி |
| ஓதனம் | உண்டி சோறு பெருமை போர் |
| ஓதன்மை | ஓதல் தன்மை பாடல் |
| ஓதா | வேள்வி செய்யும் ஆசிரியருள் ஒருவன் |
| ஓதி | அறிவு கல்வி ஓதுபவன் ஓந்தி செறிவு பெண்மயிர் நெருங்கித் தாக்குகை அன்னம் |
| ஓதிஞானம் | அவதி ஞானம் மெய்யறிவு |
| ஓதிமம் | அன்னம் கவரிமான் மலை புளியமரம் |
| ஓதிமமுயர்த்தோன் | அன்னக்கொடியுடைய பிரமன் |
| ஓதிமமுயர்ந்தோன் | பிரமன் |
| ஓதிமவாகனன் | அன்னத்தை ஊர்தியாகவுடைய பிரமன் |
| ஓதிமவிளக்கு | அன்னப் பறவை வடிவாகச் செய்யப்பட்ட விளக்கு |
| ஓதிமன் | அன்னத்தை ஊர்தியாகவுடைய பிரமன் |
| ஓதியிடுதல் | திருமணம் முதலியவற்றில் மொய்யிடுதல், திருமணம் முதலியவற்றில் தரும் அன்பளிப்பு |
| ஓதியிறைத்தல் | மந்திரநீர் தெளித்தல் |
| ஓதியுடைத்தல் | மந்திரித்துத் தேங்காய் உடைத்தல் |
| ஓது | பூனை சொல்லுதல் |
| ஓது | (வேதத்தை அல்லது மந்திரங்களை) முறைப்படி வாய்விட்டுச் சொல்லுதல் |
| ஓதுதல் | படித்தல் சொல்லுதல் கற்பித்தல் இரகயசியமாய்ப் போதித்தல் செபஞ்செய்தல் மந்திரம் உச்சரித்தல் பாடுதல் தோடம் நீங்குவதற்காக அன்னம் முதலியவற்றிலே மந்திரஞ்சொல்லி உருவேற்றுதல் |
| ஓதுவார் | கோயிலில் தேவாரம் முதலிய அருட்பாக்கள் பாடுவோர் வேதசாத்திரம் படிப்போர் |
| ஓதுவார் | சிவன் கோவில்களில் பூசை நடக்கும் வேளையில் சைவத் திருமுறைகளிலிருந்து பாடல் பாடும் உரிமை உடையவர் |
| ஓதுவார்க்குணவிடுதல் | அறமுப்பத்திரண்டினொன்று |
| ஓதுவார்க்குணவு | கற்பவர்க்கு உணவிடுதல், முப்பத்திரண்டு அறங்களுள் ஒன்று |
| ஓதுவான் | ஆசான் படிப்பவன் மாணாக்கன் திருப்பாட்டுப் பாடுவோன் |
| ஓதுவித்தல் | படிப்பித்தல் வேதசாத்திரம் கற்பித்தல் |
| ஓதை | ஓசை பேரொலி, ஆரவாரம் எழுத்தொலி மலை காற்று மதில் மதிலின்மேல் வழி |
| ஓதைவாரி | இறகு |
| ஓதைவாரி | சிறகு வீட்டின் வரிசை ஒலியுள்ள கடல் |
| ஓந்தி | ஓணான் |
| ஓநாய் | கோநாய், ஒருவகை நாய் |
| ஓநாய் | நாய்க் குடும்பத்தைச் சேர்ந்ததும் கூட்டமாக வாழும் இயல்புடையதுமான காட்டு விலங்கு |
| ஓப்படியாள் | கணவனுடன் பிறந்தானின் மனைவி |
| ஓப்புதல் | ஓட்டுதல் துரத்துதல் நீக்குதல் உயரவெடுத்தல் |
| ஓபாதி | கூறு, அம்சம் அவித்தை |
| ஓபு | கதவு |
| ஓம் | தன்மைப்பன்மைவிகுதி. (நன். 140.) |
| ஓம் | ஆமென்னும் உடன்பாட்டை உணர்த்தும் ஓர் இடைச்சொல் தன்மைப் பன்மை விகுதி பிரணவம் |
| ஓம குண்டலம் | யாகம் செய்வதற்கு தீ எரிக்கும் ஓர் சிறிய கிடங்கு அல்லது நிலம் |
| ஓமக்கொட்டை | மாங்கொட்டை |
| ஓமகுண்டம் | வேள்விக்குழி |
| ஓமசாந்தி | நெருப்பு வளர்த்துச் சாந்தி பண்ணுகை |
| ஓமசாலை | வேள்விச்சாலை |
| ஓமத்திரவியம் | வேள்விக்குரிய துணைப்பொருள், ஓமம் செய்யும் பொருள் |
| ஓமத்திராவகம் | ஓமச்சத்துக் கலந்த நீர் |
| ஓம்படல் | காவல் கையடை |
| ஓம்படுத்தல் | பாதுகாக்குமாறு சேர்த்தல் பரிகரித்தல் உறுதிகூறல் |
| ஓம்படுதல் | உடன்படுதல் |
| ஓம்படை | காவல், பாதுகாப்பு பாதுகாக்குமிடம் கையடை போதிக்குமிடம் கழுவாய் பரிகாரம் மறவாமை |
| ஓம்படைக்கிளவி | பெரியயோர் கூறும் அறிவுரை தலைவியைப் பாதுகாத்துக்கொள் எனத் தலைவற்குத் தோழி கூறும் கூற்று |
| ஓமப்பொடி | திருநீறு |
| ஓமப்பொடி | ஓமம் செய்த சாம்பல் திருநீறு ஓமமிட்ட ஒருவகைத் தின்பண்டம் ஓம மருந்து |
| ஓமப்பொடி | பிசைந்த கடலை மாவை அச்சு முதலியவற்றின்மூலம் நூல்நூலாகப் பிழிந்து எண்ணெய்யில் இட்டுப் பொரித்துச் செய்யப்படும் காரமான ஒரு வகைத் தின்பண்டம் |
| ஓம்பு | பேணுதல் |
| ஓம்புதல் | காப்பாற்றுதல், பாதுகாத்தல், பேணுதல், வளர்த்தல் தீங்கு வாராமற் காத்தல் போற்றுதல் உபசரித்தல் சீர்தூக்குதல் பரிகரித்தல் தவிர்த்தல் விலக்கல் நீக்குதல் உண்டாக்குதல் |
| ஓமம் | அசமதாகம் |
| ஓமமண்டபம் | ஓமாலயம் |
| ஓமம்வளர்த்தல் | வேள்வி செய்வதற்காகத் தீ வளர்த்தல் வேள்வி செய்தல் |
| ஓமல் | ஊர்ப்பேச்சு வசைப்பேச்சு அலர் எங்கும் பரவுகை |
| ஓமலிப்பு | ஊர்ப்பேச்சு வசைப்பேச்சு அலர் எங்கும் பரவுகை |
| ஓமவல்லி | கருப்பூரவல்லிப் பூண்டு |
| ஓமவள்ளி | கருப்பூரவல்லிப் பூண்டு |
| ஓமவிறகு | சமிதை |
| ஓமறத்தல் | ஒழிவறுதல் |
| ஓமாக்கினி | ஓமத்தீ |
| ஓமாக்கினி | வேள்வித் தீ |
| ஓமாலிகை | நறும்புனலில் இடும் மணப்பொருள்கள் இலவங்கம், பச்சிலை, கச்சோலம், ஏலம், நாகணம், கோட்டம், நாகம், மதாவரிசி, தக்கோலம், நன்னாரி, வெண்கோட்டம், கத்தூரி, வேரி, இலாமிச்சை, கண்டில், வெண்ணெய், கடு, நெல்லி, தான்றி, துத்தம், வண்ணக் கச்சோலம், அரேணுகம், மாஞ்சி, சயிலேகம், புழுகு, புன்னை, நறுந்தாது, புலியுகிர், சரளம், தமாலம், வகுளம், பதுமுகம், கொடிவேலி, நுண்ணேலம் |
| ஓமான் | ஓணான் |
| ஓமி | வேள்வி செய்கிறவன் தீ நீர் நெய் |
| ஓமிடி | துக்கம் |
| ஓமிடி | கேடு, அழிவு, துன்பம் |
| ஓமிடித்தல் | கேடுறல் |
| ஓமிடிதல் | கேடுறுதல், அழிதல் |
| ஓமித்தல் | ஓமஞ்செய்தல் வேள்வி செய்தல் |
| ஓமியம் | ஓமம், வேள்வி |
| ஓமுடிதல் | கேடுறுதல், அழிதல் |
| ஓமுடிவு | அழிவு |
| ஓமை | ஒரு பாலைநிலத்து மரம் உகாமரம் மாமரம் |
| ஓய் | ஒரு விளியிடைச்சொல் ஒருமையிலே வரும் ஒரு விளியுருபு ஒரு விளிக்குறிப்பு |
| ஓய் | (தன் போக்கிலேயே நிகழ்ந்து தானாகவே) ஒரு முடிவான நிலைக்கு வருதல் |
| ஓய்ச்சல் | ஓய்வு தளர்ச்சி |
| ஓய்ச்சல் | அசதி |
| ஓய்ச்சலொழிவில்லாமை | சிறிதும் ஓய்வில்லாமை |
| ஓய்தல் | தளர்தல் முடிதல் முற்றுந் தேய்தல் முன்னிலை சுருங்கல் உள்ளதன் நுணுக்கம் மாறுதல் இளைப்பாறுதல் அழிதல் |
| ஓய்ந்திருத்தல் | ஆறியிருத்தல் வேலையொழிந்திருத்தல் சோம்பியிருத்தல் |
| ஓய்ப்பிடியாள் | ஒரகத்தி |
| ஓய்வு | ஒழிவு தளர்வு முடிவு சாதல் |
| ஓய்வு | (வேலையை முடித்த பின்) களைப்பை நீக்கிப் பெறும் அமைதி |
| ஓய்வுஒழிச்சல் | (பெரும்பாலும் எதிர்மறை வினைகளோடு) மிகக் குறைந்த நேர ஓய்வு |
| ஓய்வுக்காலம் | நிர்ணயிக்கப்பட்ட வயதுக்குப் பிறகு பணியிலிருந்து விலகிக் கழிக்கும் காலம் |
| ஓய்வுகரை | அளவுமுடிவு |
| ஓய்வுகரை | அளவு முடிவு ஓய்வு எல்லை |
| ஓய்வுநாள் | விடுமுறை நாள் |
| ஓய்வுபெறு | (நிர்ணயித்த வயதுக்குப் பிறகு ஒருவர்) பணியிலிருந்து விலகுதல் |
| ஓய்வூதியம் | அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெறுபவருக்கு ஒவ்வொரு மாதமும் அரசாங்கத்தால் வழங்கப்படுகிற ஊதியம் |
| ஓய்வெடு | (களைப்பு நீங்கும்படியாக) அமைதியுடன் இருத்தல் |
| ஓயாமல் | இடைவிடாமல் |
| ஓயாமல் ஒழியாமல் | எந்த நேரமும் |
| ஓர் | ஓர் அசைநிலை. (சிலப். 2 37 உரை.) |
| ஓர் | ஒன்று ஓர் அசைச்சொல் |
| ஓர் | (வி) ஆராய் தெளி |
| ஓரக்கண்ணன் | சாய்ந்த பார்வையுடையவன் ஒருதலைப் பட்சமாய் நடப்பவன் |
| ஓரக்கண்ணால் | (நேராக அல்லாமல்) கடைக்கண்ணால் |
| ஓரக்காரன் | சாய்ந்த பார்வையுடையவன் ஒருதலைப் பட்சமாய் நடப்பவன் |
| ஓர்க்கோலை | அம்பர், ஒரு மணப்பண்டம் |
| ஓர்கட்புள் | காகம் |
| ஓர்கட்புள் | ஒருகண் பார்வையுடைய காகம் |
| ஓரகத்தன் | மனைவியுடன் பிறந்தாள் கணவன், சகலன் |
| ஓரகத்தாள் | கணவனுடன் பிறந்தானின் மனைவி |
| ஓரகத்தி | கணவனுடன் பிறந்தானின் மனைவி |
| ஓர்குடி மணாளன் | ஓர்குடியிற் பெண் கொண்டோன், ஓரகத்தன், சகலன் |
| ஓர்குடியிற்கொண்டோன் | ஓர்குடியிற் பெண் கொண்டோன், ஓரகத்தன், சகலன் |
| ஓர்குண்டலன் | ஒரு காதில் குண்டலமணிந்த பலராமன் |
| ஓரங்க நாடகம் | (வழக்கமான நாடகங்கள் போல் பல பகுதிகளாகப் பிரிக்கப்படாமல்) ஆரம்பம்முதல் முடிவுவரை ஒரே ஒரு பகுதியை மட்டும் கொண்டு நிகழ்த்தப்படும் நாடகம் |
| ஓர்ச்சி | ஆராய்ச்சி ஆலோசனை |
| ஓர்ச்சி | ஆராய்ச்சி உணர்ச்சி அறிவு |
| ஓர்சல் | ஓரிசு |
| ஓர்சல் | ஓரிசு தீர்மானம் சமாதானம் |
| ஓரசைச்சீர் | அசைச்சீர் |
| ஓரசைச்சீர் | ஓர் அசையே சீர்நிலைபெற்று வருகை, தனித்து நேரசையோ நிரையசையோ சீர்நிலை பெறல், அசைச்சீர் |
| ஓரட்டும் | எல்லாம் முழுதும் |
| ஓர்டர் | ஆணை அளிப்பாணை |
| ஓரடி | ஒருபோகம் |
| ஓரடிக்கோரடி | அடிக்கடி |
| ஓரடிக்கோரடி | அடிக்கடி நெருக்கமாக |
| ஓரடிப்பதம் | ஒருவகை இசைப்பாட்டு |
| ஓரடை | ஒரு சிற்றளவு |
| ஓர்த்தல் | ஆராய்தல் தெரிந்தெடுத்தல் நினைத்தல் கூர்ந்து கேட்டல் |
| ஓர்தல் | ஆராய்தல் எண்ணுதல் உணர்தல் அறிதல் தெளிதல் |
| ஓர்பட்சம் | ஓரவாரம் |
| ஓர்ப்படி | கணவனுடன் பிறந்தானின் மனைவி |
| ஓர்ப்படியாள் | கணவனுடன் பிறந்தானின் மனைவி |
| ஓர்ப்பு | கருமமுடிக்குந் துணிவு பொறுமை ஆடுஉக் குணம் நான்கனுள் ஒன்று துணிவு நினைவு தெளிவு |
| ஓர்பு | ஆராய்கை எண்ணுகை, சிந்திக்கை |
| ஓரம் | விளிம்பு பக்கம் ஒருபக்கம் சார்ந்து பேசுதல் பெண்குறி |
| ஓரம் கட்டு | விலக்கு |
| ஓரம்கட்டு | (வாகனத்தைப் பாதையின்) ஓரத்துக்குக் கொண்டுபோதல் |
| ஓரம்பேசல் | ஒருபக்கஞ் சாயப்பேசல் |
| ஓரம்பேசல் | ஒருபக்கம் சார்ந்து பேசல் |
| ஓர்மம் | மனத்திட்பம் |
| ஓர்மம் | மன உறுதி |
| ஓர்மித்தல் | மனந்திடப்படுதல் |
| ஓர்மை | துணிவு |
| ஓர்மை | ஒருமை ஒற்றுமை துணிவு நினைவு ஆடம்பரம் |
| ஓரவஞ்சகம்/ஓரவஞ்சனை | ஒரு பக்கம் சார்ந்து செயல்படும் (வெளிப்படையான) புறக்கணிப்பு |
| ஓர்வம் | ஒருபாற் சார்கை |
| ஓரவாரம் | ஒருபக்கவாரம் |
| ஓரவாரம் | ஓரவஞ்சனை நெறி தவறி ஒருபக்கத்திலே பற்றுவைத்தல் பட்சபாதம் |
| ஓர்வு | ஆராய்வு |
| ஓரளவு | சிறிது : கொஞ்சம் |
| ஓரளவு/ஓரளவுக்கு | (முற்றிலுமாக அல்லாமல்) சிறிது |
| ஓரற்று | ஒருதன்மையானது |
| ஓரறிவுயிர் | புல் மரம் முதலியன |
| ஓரன்மை | ஒரு தன்மையல்லாமை |
| ஓரா | ஒட்டி ஒருமீன் |
| ஓராங்கு | ஓருசேர ஒன்றுபோல இடைவிடாமல் |
| ஓராசிரியர் பள்ளி | (பெரும்பாலும் கிராமங்களில்) ஒரே ஒரு ஆசிரியரை மட்டும் கொண்ட ஆரம்பப் பள்ளிக்கூடம் |
| ஓராட்டு | தாலாட்டு |
| ஓராட்டுதல் | தாலாட்டுதல் |
| ஓராட்டுப்பட்டோலை | சதுர்ப்பட்டோலை |
| ஓராண்காணி | ஒருவனுக்கே உரிய நிலம் |
| ஓராண்வழி | ஒரு தொடராய் வரும் பரம்பரை |
| ஓராயம் | சேர்க்கை சாய்வு தோணியின் சாய்ந்த ஒருபுறம் இணைப்பு |
| ஓரானொரு | ஏதோ ஒன்று. ஓரானொருநாளில் (குருபரம். 217 பன்னீ) |
| ஓரி | ஆண்நரி ஆண்முசு விலங்கேற்றின் பொது ஆண்மயிர் கடையெழு வள்ளல்களுள் ஒருவன் ஓரியின் குதிரை தேன்முதிர்நிறம் விலங்கின் படுக்கை நீலநிறம் திருமணமாகாதவன் கணவனுடன் பிறந்தான் மனைவி |
| ஓரிசு | தீர்மானம் சமாதானம் இசைவு |
| ஓரிதழ்த்தாமரை | ஒருபூடு சூரியகாந்தி |
| ஓரிபூத்தல் | தேடாமற் கிடத்தல் |
| ஓரிரு | மிகவும் குறைவான : சில |
| ஓரிரு | மிகவும் குறைவான |
| ஓரிலைத்தாமரை | ஒரு பூடு |
| ஓரிலைத்துத்தி | துத்திவகை |
| ஓரினச் சேர்க்கை | ஆண் ஆணோடு அல்லது பெண் பெண்ணோடு கொள்ளும் உடலுறவு |
| ஓரினச்சேர்க்கை | see தற்பால்சேர்க்கை |
| ஓரீற்றா | ஒருமுறை ஈன்ற பசு |
| ஓரு | நொடி |
| ஓரும் | ஓர் அசைச்சொல். (குறள் 40.) |
| ஓருள்ளிப்பூடு | பல பல்லில்லாத உள்ளி |
| ஓரெடை | ஒரு சிற்றளவு |
| ஓரெழுத்துமடக்கு | வந்த எழுத்தே மடக்கிவரும் சொல்லணி |
| ஓரெழுத்தொருமொழி | ஒரெழுத்து நின்று ஒரு பொருளை உணர்த்துவது |
| ஓரை | ஓர் இடைச்சொல். (பிங்.) |
| ஓரை | மாதர் கூட்டம் மகளிர் விளையாட்டு விளையாடிடம் குரவை இராசி ஒரு முகூர்த்தம் நேரம் சித்திரான்னம் கூகை இரண்டரை நாழிகைப் பொழுது அணிகலன் |
| ஓரைப்பாவை | மகளிர் விளையாட்டுப் பாவை |
| ஓரையயர்தல் | ஓரைப்பாவையை வைத்துக் கொண்டு மகளிர் விளையாடுதல் |
| ஓரொட்டு | முழுதும் சராசரியாக |
| ஓரொற்றுவாரம் | தாளத்து ஒரு மாத்திரை பெற்றுவருஞ் செய்யுள் |
| ஓரொன்று | ஒவ்வொன்று |
| ஓரோசிடைநேரிசைவெண்பா | ஓராசிடையிட்டுவரும் வெண்பா |
| ஓரோவழி | ஒருசார் |
| ஓரோவழி | ஒருசார் சிறுபான்மையாய் |
| ஓல் | ஒரு விளியுருபு. சாத்தாவோல் (வீரசோ. வேற்றுமைப். 8 உரை) |
| ஓல் | ஒலி தாலாட்டு ஒரு விளியுருபு |
| ஓலக்கச்சூளை | அத்தாணியிற்சேவை செய்யும் பரிவாரம் |
| ஓலக்கம் | சபை சபை கூடுமிடம் அத்தாணிக் காட்சி |
| ஓலக்கமண்டபம் | சங்கமண்டபம் |
| ஓலக்கமண்டபம் | அத்தாணி மண்டபம் சங்க மண்டபம் சபா மண்டபம் |
| ஓலம் | ஒலி கடல் பாம்பு அபயக்குரல் அடைக்கலம் |
| ஓலம் | (துக்கம், வலி முதலியவற்றைத் தெரிவிக்கும் வகையில் எழுப்பும்) துயரமான சப்தம் |
| ஓலமிடுதல் | முறையிடுதல் முழங்குதல் அழுதல் அபயங்கூறுதல் |
| ஓலாட்டு | தாலாட்டு |
| ஓலாட்டுதல் | ஓராட்டுதல் |
| ஓலிடுதல் | அலறுதல் முழங்குதல் |
| ஓலுதல் | முழங்குதல் |
| ஓலுறுத்தல் | இன்னோசையுண்டாக்குதல் தாலாட்டுதல் |
| ஓலுறுதல் | ஒலி பொருந்துதல் கூவுதல் |
| ஓலை | பனை, தென்னை முதலியவற்றின் ஓலை தாழையோலை எழுதுமோலை திருமுகம் ஆவண ஓலை சீட்டு ஓலைச் சுருள் பேய்முன்னை ஓலைப்படல் ஓலைக்குடை ஓலைக்குடல் காதணி |
| ஓலை | பனை, தென்னை, ஈச்ச மரம் ஆகியவற்றின் இலை |
| ஓலைக்கண் | ஓலைச்சட்டம் |
| ஓலைக்கண் | ஓலைச்சட்டம் ஓலைச்சட்டத்தில் விழும் துளை |
| ஓலைக்கணக்கர் | பள்ளியிற் படிப்போர், மாணவர்கள் |
| ஓலைக்கணாட்டு | ஓலைத்தளிர் |
| ஓலைக்காந்தல் | ஓலையின் நெருப்புக் கனிவு |
| ஓலைக்காந்தள் | ஓலைத்துகள் |
| ஓலைக்கிணாட்டு | ஓலைத்துண்டு |
| ஓலைக்கிளிஞ்சல் | சங்குவகை கிளிஞ்சல்வகை |
| ஓலைக்கிளிஞ்சில் | ஒருவிதசங்கு |
| ஓலைக்குடை | ஓலையால் மழை வெயில் தாங்க முடையப்படும் கூடு |
| ஓலைக்கூடு | ஓலைக்குடை |
| ஓலைக்கூடை | ஓலையால் மழை வெயில் தாங்க முடையப்படும் கூடு |
| ஓலைக்கோள் | கடிதப் போக்குவரத்து |
| ஓலைச்சுருள் | செந்திரிக்கம் |
| ஓலைச்சுருள் | ஓலைக் கடிதம் |
| ஓலைச்சுவடி | ஓலையால் அமைந்த நூல் ஒரு மீன்வகை |
| ஓலைத்தூக்கு | சீட்டுக்கவி |
| ஓலைதீட்டுதல் | ஓலையில் எழுதுதல் |
| ஓலைதீட்டும்படை | எழுத்தாணி |
| ஓலைநாயகம் | சோழருடைய தலைமைக்காரிய நிருவாகி |
| ஓலைநாயகன் | சோழருடைய தலைமைக்காரிய நிருவாகி |
| ஓலைப்பாசுரம் | கடிதச் செய்தி சீட்டுக்கவி |
| ஓலைப்பாயிரம் | கடிதச் செய்தி சீட்டுக்கவி |
| ஓலைப்புறம் | கட்டளை |
| ஓலைப்பூ | தாழைப்பூ |
| ஓலைப்பூ | தாழம்பூ |
| ஓலைப்பை | a basket made of palmyra leaves like a bag and used by fishermen |
| ஓலைபோக்குதல் | ஓலையில் செய்தி எழுதி அனுப்புதல் |
| ஓலைமுகப்பாசுரம் | கடிதத் தொடக்கத்தில் எழுதும் வக்கணை |
| ஓலைமுத்திரை | ஒருமுத்திரை |
| ஓலைமுத்திரை | ஓலை முகப்பில் இடும் முத்திரை |
| ஓலைமுறி | ஓலைச்சீட்டு |
| ஓலைமூங்கில் | ஒருமூங்கில் |
| ஓலையெழுத்து | இராயசம் |
| ஓலையெழுதுதல் | சீட்டெழுதுதல் சீதனவுறுதியெழுதுதல் கடிதம் அனுப்புதல் |
| ஓலைவாங்குதல் | சாதல் |
| ஓலைவாங்குதல் | சாதல் இறத்தல் |
| ஓலைவார்தல் | எழுதுதற்கு உதவுமாறு ஓலை சீவுதல் |
| ஓலைவாலன் | வாளைமீன்வகை |
| ஓலைவாளை | ஒருமீன் |
| ஓவம் | ஓவியம் சித்திரம் உயரம் |
| ஓவர் | கம்மாளர் ஓவியர் சித்திரகாரர் ஏத்தாளர் |
| ஓவருதல் | ஒழிதல் |
| ஓவன் | ஓவியன் சித்திரகாரன் |
| ஓவாமை | நீங்காமை ஒழியாமை இடைவிடாமை |
| ஓவாய் | பற்கள்போன வாய் மூளியானகலத்தின் வாய் |
| ஓவி | ஓவியம், சித்திரம் |
| ஓவியகாயம் | அழகிய வரிகளையுடைய புலி |
| ஓவியப்பேச்சு | இனியமொழி |
| ஓவியம் | சித்திரம் சித்திரத் தொழில் அழகு பிரதிமை |
| ஓவியம் | (பெரும்பாலும் தூரிகையால் வரையப்படும்) கலையழகு உடைய சித்திரம் |
| ஓவியர் | சித்திரம் வரையக்கூடியவர் பார்க்கும் காட்சியை வரையக்கூடியவன் |
| ஓவியன் | சித்திரம் வரைவோன் |
| ஓவியன் | சித்திரம் வரைபவன் சித்திரகாரன் சிற்பி பிரதிமைசெய்வோன் சிற்ப நூலோன் |
| ஓவியன் | ஓவியம் வரைபவன் |
| ஓவு | ஓவியம், சித்திரம் |
| ஓவுதல் | ஒழிதல், நீங்குதல் நீக்குதல் முடிதல் |
| ஓவெனல் | ஓரொலிக் குறிப்பு ஓவென்றொலித்தல் ஓவென்று முறையிடல் முழு இருட்டாதல் குறிப்பு |
| ஓவென்றவெளி | பெரியவெளி |
| ஓளி | ஒழுங்கு யானையின் கூட்டம் |
| ஓற்பலம் | கோங்கு |
| ஓனம் | எழுத்தின்சாரியை. (தொல். எழுத் 134 உரை.) |
| ஓனம் | எழுத்தின் சாரியை |
| ஓனாய் | கோனாய் |
| ஓஷ்டம் | உதடு மேலுதடு |
| ஓஷ்டி | கோவைக்கனி |
| ஓஷதியம் | கொடிகள் |
| ஓஷதீசன் | சந்திரன் |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.