Tamil To Tamil & English Dictionary

  

 

 

Tamil WordTamil MeaningEnglish Meaning
அடிக்கோடு (நினைவில் அல்லது கவனத்தில் கொள்வதற்காக) சொல், தொடர் முதலியவற்றின் கீழ்ப் போடப்படும் கோடுline drawn under words, phrase, etc சிவப்பு மையால் பிரதியின் பல பக்கங்களில் அடிக்கோடுகள் போடப்பட்டிருந்தன
அடிகள் துறவறம் மேற்கொண்டவர்களை அல்லது துறவி போல் சிறப்புற்றவர்களை மரியாதையுடன் குறிக்கப் பயன்படுத்தும் சொல்a term of respectful address for someone who leads the life of a monk
அடிகோலு அடிப்படையாக அமைதல்prepare the ground
அடிச்சுவடு (ஒருவர்) வகுத்துக்காட்டிய வழிfootprint
அடித்தடி அளவுகோல்foot rule
அடித்தல்திருத்தல் பிரதியில் நேரிடும் தவறுகளை நீக்குதலும் மாற்றி எழுதுதலும்corrections (in a manuscript)
அடித்தளம் (கப்பலின்) கீழ்த்தளம்lower deck (of a ship)
அடித்து (தன் கருத்தை) வலியுறுத்திemphatically
அடித்துக்கொண்டு செல் (வெள்ளம், காற்று முதலியன) இழுத்துக்கொண்டு போதல்(of flood, wind, etc.) blow off
அடித்துக்கொள் (ஒருவரோடொருவர்) சண்டைபோடுதல்scramble
அடித்துப்பிடித்து பல வகையிலும் சிரமத்துடன் முயன்றுstruggling hard
அடிதடி சண்டைexchange of blows
அடிப்படை ஒன்றின் மிக ஆதாரமானதுbasis
அடிப்படைச் சம்பளம் படி எதுவும் சேராத ஊதியம்basic pay
அடிப்புக் கூலி கதிர் அடிப்பதற்கான கூலிwages for thrashing sheaves of corn
அடிபட்டுப்போ (பிறர் நடுவில்) எடுபடாமல்போதல்(பிறரால்) ஏற்றுக்கொள்ளப்படாமல் தள்ளப்படுதல்pale into insignificance
அடிபடு1நசுக்கப்படுதல்get crushed
அடிபடு2(பரவலாக) குறிப்பிடப்படுதல்be mentioned (widely)
அடிபணி அதிகாரத்துக்கு உட்படுதல்obey
அடிபோடு (தன் நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள) பீடிகைபோடுதல்(சண்டை போன்றவற்றைத் தொடங்க) திட்டம்போடுதல்broach cleverly
அடிமட்டம் (பல நிலைகளாக உள்ளவற்றில்) கீழ்நிலைlower level or stratum
அடிமனம் அறிவுநிலைக்கும் உணர்வுநிலைக்கும் அப்பாற்பட்ட மனம்subconscious or unconscious mind
அடிமாடு (உழுதல், வண்டி இழுத்தல் போன்ற வகையில் பயன் அதிகம் இல்லாததால்) இறைச்சிக்காகக் கொல்லப்படும் மாடுcattle for slaughter
அடிமுட்டாள் முழுமடையன்downright idiot or fool
அடிமை (விலைக்கு வாங்கப்பட்ட) தன்னுரிமை இழந்த பணியாள்slave
அடியவர் இறைவனுக்கு வழிபாடு செய்வதைத் தொண்டாகக் கொண்டவர்religious follower
அடியாக மூலமாகbased on
அடியாள் ஒருவரை அடித்து மிரட்டுவதற்கு அல்லது கொலை செய்வதற்கு அமர்த்தப்படும் நபர்hatchet man
அடியுரம் நிலத்தில் விதைப்பதற்கும் நடுவதற்கும் முன்பு இடப்படும் உரம்basal dressing (before sowing or planting)
அடியெடுத்து வை நடக்க ஆரம்பித்தல்head for
அடியேன் தன்னைத் தாழ்த்திக் குறிப்பிடும் ஒரு பணிவு மொழிa term of humility used by one who practises self effacement
அடியோடு முற்றிலும்totally
அடிவயிறு வயிற்றில் தொப்புளுக்குக் கீழே உள்ள பகுதிabdomen
அடிவாங்கு அனுபவம் பெறுதல்be battered (in life)
அடிவாரம் மலையின் கீழ்ப்பகுதிfoothills
அடிவானம் வானமும் நிலமும் சந்திப்பது போல் தோன்றும் இடம்horizon
அடுக்களை அடுப்பங்கரைkitchen
அடுக்கு1ஒன்றன் மேல் ஒன்றாக அல்லது ஒன்றன் பின் ஒன்றாக வைத்தல்pile one on top of another
அடுக்கு2(-ஆக, -ஆன) ஒன்றன் மேல் ஒன்றாக அல்லது ஒன்றன் பின் ஒன்றாக உள்ள அமைப்புarrangement of things one on top of another or side by side
அடுக்குத்தொடர் (பெரும்பாலும்) ஒருவர் தன் உணர்வுக்குக் காரணமாக இருப்பதன் பெயரை அல்லது உணர்ச்சியை வெளிப்படுத்தக் கூடிய சொல்லை அடுக்கிக் கூறும் முறைrepetition of semantically significant word in a sentence for emphasis or reinforcement
அடுக்குமாடி (கட்டடத்தில்) ஒன்றன் மேல் ஒன்றாக வரிசையாக இருக்கும் மாடி(of building) multi-storeyed
அடுகிடைபடுகிடையாகக் கிட பழிகிடத்தல்stay put
அடுத்த (காலத்தில்) ஒன்று கழிந்த பின் தொடர்ந்து வருகிற(இடத்தில்) தொடர்ந்தாற்போல் இருக்கிறnext (in time and space)
அடுத்தபடியாக (ஒன்றை) அடுத்துnext
அடுத்தவன் தன்னைச் சார்ந்தவன் அல்லாத மூன்றாவது ஆள்third person
அடுத்தாற்போல அடுத்துimmediately after
அடுத்து அணுகிapproaching
அடுப்பங்கரை சமையல் அறைkitchen
அடுப்பு (விறகு, மண்ணெண்ணெய் முதலியவை கொண்டு அல்லது மின்சாரம் முதலியவற்றால்) சூடு உண்டாக்கிச் சமையல் முதலியவற்றிற்குப் பயன்படுத்தும் சாதனம்oven of various kinds for cooking, etc
அடுப்புக்கரி அடுப்பில் விறகு எரிந்த பின் எஞ்சியுள்ள கரிburnt wood from a domestic oven
அடுமனை ரொட்டி தயாரித்து விற்கும் இடம்bakery
அடை1பெறுதல்obtain
அடை2(ஓர் இடத்தில்) பிடித்து வைத்தல்(ஒரு வரையறைக்குள்) நிறுத்துதல்put in (a prison, etc.)
அடை3குஞ்சு பொரிப்பதற்காக வைத்திருக்கும் முட்டைகளின் தொகுப்புcollection of eggs kept for incubation
அடை5அரிசியோடு சில பருப்பு வகைகளைச் சேர்த்துச் செய்யப்படும் காரச் சுவையுடைய ஒரு வகை (தடித்த) தோசைa kind of (thick) தோசை prepared with a fairly loose mixture of broken rice and several pulses
அடை6(தறியில்) பேட்டு நெய்வதற்கான அமைப்புa system for weaving extra warp design
அடைக்கலம் ஆபத்தில் இருப்பவர் அல்லது ஆதரவு அற்றவர் நாடும் (பாதுகாப்பான) இடம் அல்லது நபர்refuge
அடைகா (குஞ்சு பொரிப்பதற்குத் தேவையான வெப்பத்தைத் தருவதற்காகப் பறவை) முட்டைகளின் மீது இறக்கையை விரித்து இருத்தல்sit on eggs
அடைசல் (அறை முதலியவற்றில்) பொருள்கள் நிறைந்து இருப்பதால் ஏற்படும் இடப் பற்றாக்குறைcrowded condition (in a room, etc as a result of being filled with too many things)
அடைப்பான் (கண்ணாடிக் குடுவை போன்றவற்றின்) குறுகிய வாயில் செருகிவைக்கும் மூடி/(திரவத்தை வெளியேற்றவும் நிறுத்தவும் குடுவையின் கீழ்ப்பகுதியில் இருக்கும்) திருகமைப்புstopper/end-tap
அடைப்புக் குறி (சொல், எண் முதலியவற்றின் முன்னும் பின்னும் இடும்) நகம் போல் வளைந்த அல்லது பகரம் போல் இருக்கும் குறியீடு(round or square) brackets
அடைபடு வெளியேற முடியாதபடி (ஓர் இடத்தில்) தடுக்கப்பட்டிருத்தல்remain entrapped
அடைமழை (மழைக் காலத்தில்) பல நாள் விடாது பெய்யும் மழைheavy rains (of the monsoon)
அடையாள அட்டை ஒருவருடைய அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையில் அவரது புகைப்படம், பெயர், விலாசம் முதலியவற்றைக் கொண்ட பத்திரம்identity card
அடையாள அணிவகுப்பு குற்றவாளியை அடையாளம் காட்டும் வகையில் குற்றவாளிகள் என்று சந்தேகப்படுபவர்களை அணிவகுத்து நிற்கவைத்தல்identification parade
அடையாளம் (இன்னார், இப்படிப்பட்டது என) தெரிந்துகொள்ள உதவும் தோற்றக் குறிrecognizable feature
அண்டங்காக்கை மிகவும் கரிய நிறமுடைய பெரிய காகம்a big black jungle crow
அண்டப்புளுகன் நம்ப முடியாத அளவுக்குப் பொய் சொல்பவன்monstrous liar
அண்டம் பிரபஞ்சம்universe
அண்டா அகன்ற வாயும் குவிந்த அடிப்பாகமும் உடைய பெரிய பாத்திரம்a large vessel with a wide mouth used for storing water or cooking food in large quantities
அண்டு (ஒருவரை) அணுகுதல்(of illness, harm, etc.) reach
அண்டை1அருகில் இருப்பதுneighbouring
அண்டை2முட்டுprop
அண்டை அயல் அக்கம்பக்கம்neighbourhood
அண்ணல் வணக்கத்திற்கு உரியவர்venerable soul
அண்ணன் உடன்பிறந்தவர்களில் தனக்கு மூத்தவன்elder brother
அண்ணாவி (சிலம்பம் முதலியவை கற்றுத்தரும்) ஆசான்learned master
அண்மு (ஓர் இடத்தை) நெருங்குதல்approach
அண்மை தற்காலத்தை ஒட்டிய கடந்த காலம்recentness
அணா (முன்பு) ரூபாயின் பதினாறில் ஒரு பங்கு(formerly) one sixteenth of a rupee
அணி1(ஆடை, அணிகலன் முதலியவற்றை) உடலில் பொருத்துதல்put on (clothes, pieces of jewellery, etc.)
அணி2(பொதுவாக) உடம்பின் உறுப்பில் அணியப்படுவது(சிறப்பாக) நகை(generally) that which is worn on any part of the body
அணி3ஒரு திட்டத்தின் அல்லது கொள்கையின் அடிப்படையில் ஒன்றுபடும் குழுgroup
அணிகலன் நகை போன்ற அலங்காரப் பொருள்jewellery
அணிசெய் அழகு சேர்த்தல்add beauty
அணிசேர்1(குறிப்பிட்ட கொள்கைக்காக) இணைந்துகொள்ளுதல்align with
அணிசேரா நாடு வல்லரசுகளுடன் சேராமல் நடுநிலைக் கொள்கை மேற்கொள்ளும் நாடுnon-aligned country
அணிந்துரை நூலுக்கு (புகழ்பெற்ற) ஒருவர் தரும் முன்னுரைforeword to a book given by s.o. (usually a celebrity).
அணில் மென்மையான மயிர் அடர்ந்த வாலும் முதுகில் மூன்று வரிகளும் கொண்ட ஒரு சிறு பிராணிsquirrel
அணிவகு (படைவீரர், மாணவர் போன்றோர்) சீரான ஒழுங்கில் ஒன்றுகூடுதல்be on parade
அணிவகுப்பு (படைவீரர், மாணவர் முதலியோர் அமைத்துக்கொள்ளும்) வரிசை ஒழுங்குparade
அணிவகுப்பு மரியாதை (சுதந்திரத் தினம் முதலியவற்றின்போது குடியரசுத் தலைவர், பிரதமர் போன்றோருக்கு அல்லது வருகை தரும் வெளிநாட்டுத் தலைவர்களுக்கு) படைப் பிரிவுகள் அணிவகுத்துச் செலுத்தும் மரியாதைguard of honour
அணு மிகச் சிறிய கூறுa small bit
அணு ஆயுதம் அணுசக்தியைப் பயன்படுத்திச் செய்யப்படும் போர்க் கருவிnuclear weapon
அணு உலை குறிப்பிட்ட முறையில் அணுசக்தியை உற்பத்திசெய்யும் சாதனம்atomic reactor
அணுக்கம் (உறவில், தொடர்பில்) நெருக்கம்closeness (of contact, in relationship)
அணுகு அருகில் செல்லுதல்go near
அணுகுண்டு அணுவைப் பிளப்பதன்மூலம் வெளிப்படும் ஆற்றலைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் (பேரழிவை உண்டாக்கும்) குண்டுatom bomb
அணுசக்தி சில தனிமங்களின் அணுக்களைப் பிளக்கும்போதோ சேர்க்கும்போதோ வெளிப்படும் பெரும் சக்திnuclear energy
அணு மின்நிலையம் அணுசக்தியால் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் இடம்atomic or nuclear power station
   Page 2 of 204    1 2 3 4 204

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    × Want to join our classes?