Tamil To Tamil & English Dictionary

  

 

 

Tamil WordTamil MeaningEnglish Meaning
ஆக்கபூர்வம்-ஆக/-ஆன பயன் தரும் விதத்தில்/பயன் தரும்படியானconstructively/constructive
ஆக்கம் நன்மைbenefit
ஆக்கவினை ஒரு செயலைச் செய்வதற்கு மற்றொருவர் அல்லது மற்றொன்று காரணமாக இருப்பதைத் தெரிவிக்க (தற்காலத் தமிழில்) பயன்படுத்தும் (செய என்னும் வாய்பாட்டு வினையெச்சத்தின் பின் வரும் செய், வை போன்ற) வினைcausative verb (such as செய், வை, etc in modern Tamil, which come after an infinitive)
ஆக்காட்டு (குழந்தையை) வாயைத் திறந்து காட்டும்படி சொல்லுதல்tell (a child) to open the mouth (for a purpose)
ஆக்கியோன் (கவிதை, இலக்கணம் முதலியவற்றை) இயற்றியவர்one who writes (a poem, book, etc.)
ஆக்கிரமி (சட்ட விரோதமாக ஓர் இடத்தை, நாட்டை) கவர்ந்துகொள்ளுதல்occupy (a place, country illegally, by force)
ஆக்கிரமிப்பு (நாட்டைக் கைப்பற்றும் நோக்கம் கொண்ட) போர் நடவடிக்கைaggression
ஆக்கு1படைத்தல் create
ஆக்கை உடல்body
ஆக்ஞை கட்டளைcommand
ஆக்ரோஷம் வெறிfury
ஆக1மொத்தத்தில்altogether
ஆக2ஆகவேhence
ஆகமம் சைவம், வைணவம் முதலிய சமயத்தினர் மத ஆசாரத்துக்குப் புனிதமாகக் கொள்ளும் நூல்கள்scriptures of saiva, vaishnava religious sects
ஆகமொத்தம்/ஆகமொத்தத்தில் (எல்லாவற்றையும் கணக்கெடுத்துப் பார்த்த பின்) முடிவில்net result
ஆகர்ஷி (காந்தம் முதலியன பொருள்களை) இழுத்தல்(of magnet, earth) pull
ஆகவும் (அடைக்கு அடையாக வரும்போது) மிகவும்immensely
ஆகவே அதன் காரணமாக அல்லது விளைவாகas a result
ஆகாது (-அல் அல்லது -தல் விகுதி ஏற்ற தொழிற்பெயர்களின் பின்) கூடாதுa form of prohibition and disapproval
ஆகாயம் வானம்sky
ஆகாய விமானம் விமானம்aeroplane
ஆகாரம் (திட, திரவ) உணவு(solid, liquid) food
ஆகிய ஒன்றை அடுத்து ஒன்றாகத் தொகுத்துத் தரப்பட்டதன் பின் அந்தத் தொகுப்பில் தரப்பட்டவற்றுக்கு மேல் சேர்ப்பதற்கு வேறு இல்லை என்பதை வரையறுப்பதாக இருப்பதுused at the end of enumeration as a term indicating that everything has been included
ஆகிருதி உடம்புphysique
ஆகிவந்த மங்கலமான காரியங்கள் பல நடந்ததால் மிகவும் ராசியான (வீடு, இடம்)(a house, a place) considered lucky because many auspicious things have happened
ஆகுதி யாகத்தில் வளர்க்கும் தீயில் இடப்படும் பொருள்oblation offered into the fire
ஆகையால் ஆகவேtherefore
ஆங்காங்கு அங்கங்கேscattered
ஆங்காரம் அகங்காரம்haughtiness
ஆங்கிலம் இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளிலும் தாய்மொழியாகப் பேசப்படும் இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழி(the) English (language)
ஆச்சரியக்குறி வியப்பைத் தெரிவிக்க வாக்கியத்தில் பயன்படுத்தும் சிறு குத்துக் கோட்டின் கீழ் புள்ளியை உடைய குறியீடுexclamatory mark
ஆச்சரியம் கடினமானது என்று நினைத்திருந்தது எளிதாக முடிந்துவிடும்போது அல்லது வழக்கத்திற்கு மாறானது நடந்துவிடும்போது ஏற்படும் உணர்வுsurprise
ஆச்சி வயதான பெண்மணிold woman
ஆசனம் உட்கார்வதற்கு உரியதுanything to sit on
ஆசனவாய் மலத் துவாரம்anus
ஆசாபாசம் உலகப் பொருள்களின் மீதும் உறவுகளின் மீதும் வைக்கும் ஆசைworldly desire
ஆசாமி (பெரும்பாலும் அறிமுகம் இல்லாதவரைக் குறிப்பிடுகையில்) ஆள்a person
ஆசாரம் பொது ஒழுக்கத்துக்கான அல்லது சமய, குல ஒழுக்கத்துக்கான நெறிமுறைகள்(moral, ethical, caste) codes and practices
ஆசாரி தச்சுத் தொழில் செய்பவர்/இரும்பு அல்லது பொன் வேலை செய்பவர்carpenter/blacksmith
ஆசாரியர் ஆன்மீக குருspiritual master
ஆசான் (கற்பித்த அல்லது உபதேசித்த ஆசிரியரை உயர்வாகக் குறிப்பிடுகையில்) குரு(a term of respect for) learned master
ஆசி ஆசிர்வாதம்blessings
ஆசிர்வதி சீரும் சிறப்பும் நன்மையும் பெறுமாறு நல்வாக்கு தருதல்wish one happiness, prosperity, etc
ஆசிர்வாதம் சீரும் நன்மையும் பெறுமாறு கூறும் நல்வாக்குblessings
ஆசிரமம் முனிவர் அல்லது ஆன்மீக நெறியில் ஈடுபட்டோர் வாழும் இடம்the abode of an ascetic or anyone who is engaged in spiritual activities
ஆசிரியப்பா அகவல்the metre known as அகவல்
ஆசிரியை பெண் ஆசிரியர்woman teacher or writer
ஆசுகவி கொடுத்த பொருளில் உடன் செய்யுள் இயற்றும் திறமை படைத்த புலவன்one who composes verses extempore
ஆசுவாசம் (பரபரப்பும் கவலையும் நீங்கியதும் கிடைக்கும்) ஆறுதல்relief
ஆசை (ஒன்றைக்குறித்த) எதிர்பார்ப்புடன் கூடிய உணர்வுdesire
ஆசைகாட்டு (-காட்ட, -காட்டி) ஒன்றன் மேல் விருப்பம் கொள்ளுமாறு செய்தல்lure
ஆசைநாயகி திருமணமானவர் (மனைவியாக ஏற்றுக்கொள்ளாமல்) தன் இச்சைக்கு வைத்திருக்கும் பெண்mistress
ஆசை வார்த்தை (ஒருவரை ஏமாற்றும் நோக்கத்தோடு அவரது) விருப்பத்தை அல்லது ஆவலைத் தூண்டிவிடும் விதத்தில் கூறப்படும் வார்த்தைகள்seductive utterance
ஆட்குறைப்பு (பெரும்பாலும் தொழிற்சாலைகளில்) வேலை செய்பவர்களின் எண்ணிக்கையைக் குறைத்தல்reduction of manpower
ஆட்கொள் (இறைவன் செயலாகக் கூறும்போது) அடியாராக ஏற்றுக்கொள்ளுதல்(when described as an act of God) admit as a slave
ஆட்சி (தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் கட்சியின்) நாட்டு நிர்வாகம்(of an elected political party) office
ஆட்சிமொழி அரசு தன் நிர்வாகம் தொடர்பானவற்றில் பயன்படுத்துவதற்கு அரசியல் சட்டம் அனுமதித்த மொழிofficial language
ஆட்சேபணை (ஒன்றைச் செய்வதற்கு அல்லது ஏற்பதற்கு ஒருவர் தெரிவிக்கும் அல்லது எழுப்பும்) தடைobjection
ஆட்சேபம் ஆட்சேபணைobjection
ஆட்சேபி (ஒரு கூற்றை) எதிர்த்தல்/ஆட்சேபணை தெரிவித்தல்protest against/object
ஆட்டக்காரர் விளையாட்டு வீரர்sportsman or sportswoman
ஆட்டபாட்டம் ஆரவாரம் மிகுந்த கேளிக்கைhilarious celebration
ஆட்டம்காண் (-காண, -கண்டு) வலுவற்ற நிலையில் இருத்தல்be in a shaky or weak position
ஆட்டிவை தான் விரும்பியபடியெல்லாம் பிறரை நடக்கச்செய்தல்boss over
ஆட்டுக்கல் வட்ட வடிவக் கல்லின் நடுவே குழியும் குழியில் செங்குத்தாக நின்று சுற்றக் கூடிய குழவியும் உடைய மாவு அரைக்கும் கல்a large round stone with a deep basin in the centre and a fitting pestle that is placed erect in the basin, used for grinding
ஆட்டுத்தொட்டி (இறைச்சிக்காக) ஆட்டை வெட்டும் இடம்slaughter house for sheep and goat
ஆட்படு உட்படுதல்be subjected to
ஆட்படுத்து உட்படுத்துதல்subject
ஆடம்பரம் அலங்கார நோக்கம் மிகுதியாக உடையதுshow
ஆடல் நடனம்(classical) dance
ஆடவன் ஆண்man
ஆடாதொடை (மருந்தாகப் பயன்படும்) கொழகொழப்பான நீர்த்தன்மை உடைய தண்டையும் தடித்த இலைகளையும் கொண்ட ஒரு வகைக் குத்துச் செடிmalabar-nut
ஆடி1நான்காம் தமிழ் மாதத்தின் பெயர்the name of the fourth Tamil month i
ஆடி2ஒளியைப் பிரதிபலிக்கும் பளபளப்பான மேற்பரப்பு உடைய கண்ணாடி முதலிய பொருள்mirror
ஆடிப்போ (எதிர்பாராத அல்லது துயரமான செய்தியால், நிகழ்ச்சியால்) மிகவும் பாதிப்பு அடைதல்be rudely shaken
ஆடு1(தொங்கிய நிலையில் அல்லது நின்ற நிலையில் இருப்பது) அங்குமிங்கும் அசைதல்which is hanging or standing in a position
ஆடு2இறைச்சி, ரோமம், பால் ஆகியவற்றுக்காக வளர்க்கப்படும் வீட்டு விலங்கின் பொதுப்பெயர்goat
ஆடுகளம் கூத்து அல்லது விளையாட்டு நடைபெறுவதற்கு உரிய இடம்the area marked for a stage play or a game
ஆடுசதை முழங்காலுக்கும் கணுக்காலுக்கும் இடையில் உள்ள பின்தசைcalf (muscle)
ஆடை1உடலில் அணிவதற்கு என்றே தைத்த அல்லது நெய்த துணிclothes
ஆடை2பாலைக் காய்ச்சும்போது மேல்பரப்பில் படியும் மெல்லிய ஏடுa thin layer formed over the boiled milk
ஆண் உயிரினத்தில் பெண் அல்லாத பிரிவுmale of the living beings
ஆண்குறி ஆண் இனப்பெருக்க உறுப்புmale genital organ
ஆண்டவன் இறைவன்male deity
ஆண்டான் திரண்ட சொத்திற்கும் பல ஊழியர்களுக்கும் அதிபதிone who has vast property and a number of servants
ஆண்டி (பெரும்பாலும்) தலையை மழித்து, கழுத்தில் உருத்திராட்சம் கட்டி, வீடுகளில் பிச்சை பெற்று வாழ்பவன்(generally) one with a tonsured head and a string of beads tied round his neck going around begging for food
ஆண்டு பன்னிரண்டு மாதங்கள் கொண்ட கால அளவுyear
ஆண்டுகொள் ஆட்கொள்ளுதல்accept as a slave (of god)
ஆண்மகன் வயதுவந்த ஆண்adult male
ஆண்மை உடல் வலிமை, பலம் போன்ற ஆணின் இயல்பு அல்லது தன்மைmanly qualities such as physical strength, prowess, etc
ஆணவம் மற்றவரை மதிக்காத தன்மைarrogance
ஆணழகன் அழகான ஆண்handsome man
ஆணித்தரம்-ஆக/-ஆன (கருத்தைச் சொல்லும் விதத்தில்) அழுத்தம்திருத்தமாகfirmly
ஆணிவேர் (சில வகைத் தாவரங்களில்) தண்டின் அல்லது அடிப்பாகத்தின் தொடர்ச்சியாக மண்ணில் நேராக இறங்கும் பெரிய வேர்tap root
ஆணை உத்தரவுorder
ஆணையர் குறிப்பிட்ட துறை தொடர்பான மேல்முறையீடு முதலியவற்றில் நீதி வழங்கும் முறையில் தீர்ப்பளிக்கும் அதிகாரத்தைக் கொண்ட நிர்வாக அதிகாரிcommissioner
ஆத்தா(ள்) தாய் mother
ஆத்மசுத்தி மனத் தூய்மைpurity of heart
ஆத்ம ஞானம் தன்னைப்பற்றி அல்லது ஆன்மாவைப்பற்றி உணர்ந்து அறிவதுself-realization
ஆத்ம ஞானி தன்னைப்பற்றியும் ஆன்மாவைப்பற்றியும் உணர்ந்து அறிந்தவன்one who has achieved self-realization
   Page 1 of 3   1 2 3

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    × Want to join our classes?