Tamil to Tamil&English Dictionary

We are happy to provide you with the best Online Tamil to Tamil Dictionary/Translator.
For typing word in Tamil you can use our tool typing tool

  
Tamil WordTamil MeaningEnglish Meaning
ஆழ்ந்து கூர்ந்துintensely
ஆழ்வார் திருமால் மீது பாசுரங்கள் பாடிய பன்னிரண்டு வைணவ அடியார்களைக் குறிப்பிடும் பொதுப் பெயர்a general term for the early twelve saint-poets who sang the praise of Vishnu in their hymns
ஆழம் (-ஆன) மேல்மட்டத்திலிருந்து அடிமட்டம்வரையில் உள்ள அளவுdepth
ஆழம்பார் (ஒருவருக்கு எவ்வளவு தெரியும் என்பதை) மறைமுகமான கேள்விகளால் அறிய முயலுதல்gauge (a person with careful questions)
ஆழாக்கு (முன்பு வழக்கில் இருந்த முகத்தல் அளவையான) படியில் எட்டில் ஒரு பாகம்one eighth of a measure (which is roughly quarter of a litre)
ஆள்காட்டி விரல் ஒருவரைச் சுட்டிக்காட்டப் பயன்படுத்தும் விரல்index finger
ஆள்சேர் (படைக்கு அல்லது ஒரு தொழிற்சாலைக்கு) ஆட்கள் தேர்ந்தெடுத்தல்(பக்கத் துணையாக) ஆட்கள் திரட்டுதல்recruit (for the army, factory, etc.)
ஆள்படை உதவி செய்யச் சேர்ந்திருக்கும் நபர்கள்retinue of helpers
ஆள் மாறாட்டம் தவறுதலாக ஒருவரை மற்றொருவர் என நினைத்து நடந்துகொள்ளுதல்mistaking one for another
ஆள்விடு (ஒருவரை) அழைத்துவர அல்லது (ஒருவருக்கு) செய்தி சொல்ல ஒரு நபரை அனுப்புதல்send
ஆளாக்கு (மகிழ்ச்சி, துன்பம் முதலிய உணர்ச்சிக்கு அல்லது ஒரு நிலைக்கு ஒருவரை) உள்ளாக்குதல்plunge
ஆளாகு (மகிழ்ச்சி, துன்பம் முதலான உணர்ச்சிக்கு அல்லது ஒரு நிலைக்கு) உள்ளாதல்become subject to
ஆளுநர் மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்டுக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும், மாநில நிர்வாகப் பொறுப்புடைய தலைவர்a person appointed by the President to govern a state
ஆளுமை ஒரு மனிதனின் தனிப்பட்ட குணத் தொகுப்புpersonality
ஆளோடி தேவையற்ற பொருள்களைப் போடப் பயன்படுத்தும் வகையில் வீட்டின் பின்புறம் இருக்கும் இடம்a place to dump unwanted things, situated at the back of a house
ஆற்றல் ஒன்றைச் செய்து முடிக்கக் கூடிய அல்லது வெளிப்படுத்தக் கூடிய சக்திcapability
ஆற்றாமை (ஒரு சூழ்நிலையில்) எதுவும் செய்ய முடியாத நிலைhelplessness
ஆற்று1(கொதிநிலையில் இருக்கும் ஒன்றின்) சூட்டைக் குறைத்தல்cool (hot water, etc.)
ஆற்று2(பணி, கடமை முதலியவற்றை) நிறைவேற்றுதல்do
ஆற்றுப்படுத்து (எதிர்ப்பு, அதிருப்தி முதலியவற்றை ஆக்கப் பணிக்கு உதவுமாறு) நெறிப்படுத்துதல்channelize
ஆற அமர நிதானமாகleisurely
ஆறப்போடு (ஒரு பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வுகாணாமல்) தள்ளிப்போடுதல்defer
ஆறறிவு (புலன் உணர்வோடு கூடிய) பகுத்தறியும் திறன்rational faculty
ஆறு1(கொதிநிலையில் இருப்பது) சூடு குறைதல்(of anything which is hot) get cold
ஆறு2ஐந்து என்ற எண்ணுக்கு அடுத்த எண்(the number) six
ஆறு3இயற்கையான முறையில் இரு கரைகளுக்கு இடையில் நீர் ஓடும் பரப்புriver
ஆறுதல் (வருத்தத்திலிருந்தும் ஏமாற்றத்திலிருந்தும் மனம் மீள) தெம்பு தருவதுwords of comfort
ஆன்மா உடலிலிருந்தும் மனத்திலிருந்தும் வேறானதாகக் கருதப்படும் பொருள்soul
ஆன்மீகம் ஆன்மா தொடர்பானதுspirituality
ஆனந்தம் (-ஆக, -ஆன) மகிழ்ச்சிjoy
ஆனந்தி மகிழ்ச்சி அடைதல்feel happy
ஆனாலும் ஆயினும்nevertheless
ஆனானப்பட்ட (மிகுந்த) திறமையும் பலமும் வாய்ந்தeven the most (powerful, influential, etc.)
ஆனி மூன்றாம் தமிழ் மாதத்தின் பெயர்the name of the third Tamil month, i
ஆஜர்படுத்து (குற்றம் சாட்டப்பட்டவரை) விசாரணைக்காக (நீதிமன்றத்திற்கு) கொண்டுவருதல்produce (the accused before a court of law)
ஆஜராகு (சாட்சி, வழக்கறிஞர் முதலியோர் நீதிமன்றத்தில்) விசாரணை செய்ய அல்லது விசாரணைக்கு வந்திருத்தல்(of a witness, lawyer) appear (in a court of law, before a committee, etc.)
ஆஜானுபாகு நல்ல உயரமும் உயரத்துக்கு ஏற்ற எடையும் உடைய தோற்றம்a tall and hefty figure
ஆஷாடபூதி வெளித்தோற்றத்துக்குப் பொருத்தம் இல்லாத (முரணான) செயலைச் செய்பவன்one who does things which are not appropriate to his appearance
ஆஸ்திகம் கடவுள் உண்டு என்று நம்பும் கொள்கைtheism
ஆஸ்துமா மூச்சுவிடுவதில் தடை ஏற்படும் நுரையீரல் தொடர்பான நோய்asthma
ஆஸ்பத்திரி மருத்துவமனைhospital
   Page 2 of 3    1 2 3