Tamil To Tamil & English Dictionary

  

 

 

Tamil WordTamil MeaningEnglish Meaning
இக்கட்டு தீர்வுக்கான வழி தோன்றாமல் தடைபட்டிருப்பதுpredicament
இகம் இந்த உலக வாழ்வுlife in this world
இகழ் தூற்றுதல்vilify
இகழ்ச்சி நிந்தனைvilification
இங்காலே இந்தப் பக்கம்this side
இங்கிதம் சூழ்நிலைக்கும் குண இயல்புக்கும் ஏற்ற இணக்கம்propriety
இங்கே இந்த இடத்தில்here
இங்ஙனம்1/-ஆகஇப்படிin this manner
இச்சகம் (காரியம் நிறைவேறுவதற்காகச் செய்யும்) புகழ்ச்சிflattery
இச்சி (ஒன்றை அடைய) தீவிரமாக விரும்புதல்desire strongly or greedily
இச்சை (ஒன்றை அடைய வேண்டும் என்பதில் காட்டும்) தீவிர விருப்பம்strong desire
இசகு??பிசகாக எதிர்பாராத விதமாக எதிர்பாராத இடத்தில்unexpectedly in a place and manner difficult to describe
இசிவு திடீரென ஏற்படுவதும் வலியைத் தருவதுமான தசை இறுக்கம்spasm
இசை2பாடுதல்sing (a song)
இசை3வாயால் பாடி அல்லது இசைக் கருவியால் இசைத்து முறைப்படுத்திய ஓசைகளாலான கலைvocal or instrumental music
இசைக் கருவி சங்கீதத்திற்கு ஏற்ற (தோல், துளை, நரம்பு) கருவிmusical instrument
இசைக் குழு மெல்லிசை நிகழ்ச்சி நடத்தும் இசைக் கலைஞர் குழுa musical troupe especially for light music
இசைகேடு-ஆக/-ஆன உரிய முறையில் இல்லாமல்/உரிய முறையில் இல்லாதawkward
இசைத்தட்டு இசை, பேச்சு முதலியன வளைவுக் கோடுகளாகப் பதிவுசெய்யப்பட்டிருக்கும் உலோகம் அல்லாத சாதனம்gramophone disc
இசையமை (திரைப்படம், நாட்டியம் முதலியவற்றுக்குத் தேவையான) பின்னணி இசையையோ பாடுவதற்கான இசையையோ உருவாக்குதல்compose music (for a film, play, dance, etc.)
இசையமைப்பாளர் (திரைப்படம், நாடகம் முதலியவற்றுக்கு) இசையமைப்பவர்music director (of a film, play, etc.)
இசைவாணர் இசைக் கலைஞர்musician
இசைவு (ஒரு கருத்து, ஆலோசனை முதலியவற்றுக்குத் தரும்) ஒப்புதல்acceptance
இஞ்சி (உணவிலும் நாட்டுமருந்திலும் சேர்க்கும்) உறைப்புச் சுவை மிகுந்த கிழங்குginger
இட்டுக்கட்டு (இல்லாததை இருப்பதாக அல்லது நிகழாததை நிகழ்ந்ததாக) கற்பித்துக் கூறுதல்concoct
இட்டுச்செல் (ஒருவரை ஓர் இடத்துக்கு) அழைத்துச்செல்லுதல்take
இட்லி அரைத்த அரிசியையும் உளுந்தையும் (குறிப்பிட்ட விகிதத்தில்) கலந்து குழிவுடைய தட்டில் ஊற்றி ஆவியில் வேகவைத்துத் தயாரிக்கும் உணவுப் பண்டம்an eatable prepared by mixing rice dough with blackgram (in certain ratio) and by steaming it on a perforated or porous plate with pits
இட்லித்தட்டு இட்லி அவிப்பதற்கு ஏற்றதாக அமைத்த குழிவுகளை உடைய தட்டுround plate with slight depressions which are filled in by rice dough and kept inside a vessel for steaming
இடது (பெரும்பாலோர்) எழுதுவதற்குப் பயன்படுத்தாத கையுள்ள பக்கம்left
இடதுசாரி தொழிலாளர் வர்க்க உரிமைகளையும் பொதுவுடைமைத் தத்துவங்களையும் ஆதரிப்பது அல்லது ஆதரிப்பவர்leftist
இடம்2இடது புறம்left
இடம்கொடு (கண்டிப்புக் காட்ட வேண்டிய நபருக்கு) சுதந்திரமாக இருக்க வாய்ப்பளித்தல்show (one) some consideration
இடம்பெறு (குழுவில், பட்டியலில், நிகழ்ச்சியில் அல்லது பார்வைக்காக) சேர்க்கப்படுதல்find a place
இடமாற்றம் மாற்றல்transfer
இடர் இடையூறுtrouble
இடர்ப்பாடு இடையூறுக்குள்ளான நிலைtrouble
இடாப்பு (பள்ளி, அலுவலகம் முதலியவற்றின்) பதிவேடுregister
இடி1(கட்டப்பட்ட அமைப்பு) உடைதல்(of a building, bridge, etc.) come down
இடி2(கட்டப்பட்ட அமைப்பு ஒன்றைக் கருவியால் தாக்கி) உடைத்தல்demolish (a building)
இடி3(இடி) பேரொலியை எழுப்புதல்(of thunder) thunder
இடி4(முழங்கை முதலியவற்றால் பக்கவாட்டில் கிடைக்கும்) குத்து(தலை முதலியவை ஒன்றில் மோதுவதால் கிடைக்கும்) அடிa forceful blow (by an elbow, shoulder)
இடி5மழை வருவதற்கு அறிகுறியாக வானத்தில் கேட்கும் (மின்னலுடன் கூடிய) பேரொலிthunder
இடித்துரை (அறிவுரை கூறித் திருத்தும் நோக்கத்தோடு) கண்டித்தல்rebuke
இடிதாங்கி (மின்னல் தாக்கிச் சேதம் அடைவதைத் தடுப்பதற்கு உயரமான கட்டடத்தில் வைத்திருக்கும்) மின்னலின் மின்சக்தியைத் தரைக்குக் கொண்டுசெல்லும் பாதுகாப்பு அமைப்புlightning conductor or rod
இடிபாடு (கட்டடம் போன்றவை) தகர்ந்து விழுந்த நிலைruins
இடியாப்பம் அரிசிமாவை நூல் போலப் பிழிந்து ஆவியில் வேகவைத்துத் தயாரிக்கும் உணவுப் பண்டம்steamed rice noodles
இடு1(உணவு, மாவு போன்றவற்றைப் பாத்திரம் போன்றவற்றில்) போடுதல்put (food, flour, etc, into a vessel, etc.)
இடுக்கண் துன்பம்distress
இடுக்கி உருண்டை வடிவ அல்லது பட்டை வடிவக் கம்பியைச் சம நீளத்தில் வளைத்து அல்லது இரு நீளக் கம்பிகளை இணைத்து ஒரு பொருளை எடுப்பதற்கும் பிடித்துக்கொள்வதற்கும் அமைத்த கருவிvarious kinds of tongs-like tool
இடுக்கு2(சுவர் முதலியவற்றில்) வெடிப்பு(இரு பொருள்கள் இணையும் இடத்திலுள்ள அல்லது இரு உறுப்புகளுக்கு இடையே உள்ள) குறுகிய வெளிதிறப்புnarrow gap
இடுகாடு இறந்தவரைப் புதைக்கும் அல்லது எரிக்கும் இடம்a place where the dead is buried or burnt
இடுகுறி காரண அடிப்படை இல்லாமல் ஒரு பொருளுக்கு ஏற்பட்டு வழங்கும் பெயர்name given to a thing arbitrarily
இடுங்கு (கண் இயல்பான அளவில் இல்லாமல்) சுருங்குதல்(of eyes) be screwed up
இடுப்பு தொப்புளுக்குக் கீழும் அடிவயிற்றுக்கு மேலும் உள்ள இரு பக்கமும் வளைவான பகுதிwaist
இடுப்புவலி குழந்தை பிறப்பதற்குச் சிறிது நேரத்துக்கு முன் கர்ப்பிணிக்கு உண்டாகும் வலிpain connected with labour
இடுபொருள் பயிர் விளைவிப்பதற்கான (விதை, உரம், பூச்சிமருந்து, கருவிகள், பாசனம், கடன் வசதி, தொழில்நுட்பம் ஆகிய) தேவைகள்(agricultural) input
இடை1(பெண்ணின்) இடுப்பை ஒட்டிய பகுதிwaist
இடை2இடையேbetween
இடைக்கட்டு வீட்டின் நடுப்பகுதிthe middle part between the entrance of the house and the hall (of the old fashioned type of houses)
இடைக்காலத் தடை தொடுக்கப்பட்ட வழக்கு முடியும்வரை எந்த ஒரு நடவடிக்கையையும் தற்காலிகமாக நிறுத்திவைக்கும் நீதிமன்ற உத்தரவுinterim injunction
இடைக்காலம் நிரந்தரத் தீர்வு காண்பதற்கு முன் உள்ள நிலைinterim
இடைகழி வீட்டின் வெளிவாசலுக்கும் உள்வாசலுக்கும் இடையில் உள்ள பகுதிpassage or space between the entrance and the second doorway in an old house
இடைச்செருகல் (கவிதை, நாடகம் போன்ற) ஒரு படைப்பின் மூலத்தில் அதன் ஆசிரியர் அல்லாத ஒருவர் இடையிடையே சேர்க்கும் பகுதிinsertions made in the original text by someone other than the author
இடைஞ்சல் ஒன்றின் செயல்பாட்டுக்கு அல்லது இயக்கத்துக்குக் குறுக்கீடாக உள்ளதுobstruction (to another or to a free movement)
இடைத்தரகர் (பெரும்பாலும் வர்த்தக ஒப்பந்தம் போன்ற) பெரும் பேரத்தை முடித்துவைக்கும் நபர்middleman
இடைத்தேர்தல் ஒரு தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் ராஜினாமா செய்தாலோ மரணம் அடைந்தாலோ அந்தத் தொகுதியில் மீண்டும் நடத்தப்படும் தேர்தல்/மாநிலச் சட்டசபைக்கோ பாராளுமன்றத்துக்கோ வரையறுக்கப்பட்ட காலத்துக்கு முன் நடத்தப்படும் பொது வாக்கெடுப்புby-election/an election conducted before the end of the term
இடைநிலை (பல நிலைகளாக உள்ள அமைப்பில் மேல்நிலையும் கீழ்நிலையும் அல்லாத) இடைப்பட்ட நிலைmiddle (level, grade)
இடைநிறுத்து (தற்காலிகமாக) நிறுத்திவைத்தல்suspend (the operation or enforcement of a law, rule, etc.)
இடைப்பட்ட (குறிப்பிட்ட இரண்டு இடத்துக்கு அல்லது காலத்துக்கு) நடுவில் உள்ளbetween (two specified places or points of time)
இடையறாத இடைவிடாதuninterrupted
இடையறாமல் இடைவிடாமல்continuously
இடையன் ஆடு அல்லது மாடு மேய்ப்பதைத் தொழிலாகக் கொண்டவன்shepherd
இடையிடையே (ஒரு செயலின் அல்லது நிகழ்ச்சியின்) நடுநடுவே/(ஒரு காலத் தொடர்ச்சியில்) அவ்வப்போதுin between (an action, event)/every now and then
இடையில் இடைப்பட்ட இடத்தில் அல்லது காலத்தில்(of space or time) in between (two or more objects, or points of time)
இடையினம் மெய்யெழுத்துகளின் மூன்று பிரிவுகளுள் (வல்லினத்துக்கும் மெல்லினத்துக்கும் ஒலியில் இடைப்பட்ட நிலையில் அமைவதாகக் கருதப்படும்) ய், ர், ல், வ், ழ், ள் ஆகிய ஆறு எழுத்துகளை உள்ளடக்கிய பிரிவுthe six medial consonants of the Tamil (tripartite) system
இடையீடு குறுக்கீடுinterruption
இடையூறு தடைobstruction
இடைவிடாத (தொடங்கி முடியும்வரை) நடுவில் நிற்காத அல்லது நிறுத்தப்படாதcontinuous
இடைவிடாமல் (தொடங்கி முடியும்வரை) நடுவில் நிற்காமல் அல்லது நிறுத்தப்படாமல்continuously
இடைவெளி (ஒரு நிகழ்ச்சிக்குப் பின்) கழிந்துசென்ற காலம்passage (of time)
இடைவேளை (திரைப்படம், விளையாட்டு, அலுவலகம் முதலியவற்றில் உணவு, தேநீர் முதலியன அருந்தத் தரப்படும்) குறுகிய ஓய்வு வேளைinterval (in a cinema)
இணக்கம் பொருத்தம்being agreeable
இணங்கு (பிறர் விருப்பம், வேண்டுகோள் போன்றவற்றுக்கு) இசைதல்(ஒரு கொள்கைக்கு, நடப்புக்கு விட்டுக்கொடுத்து அல்லது மாறுதல்களை ஏற்று) ஒத்துப்போதல்comply with (the request, wish of s
இணுக்கு (புகையிலையில், கீரையில் கிள்ளி எடுக்கப்பட்ட) ஒரு சிறு பகுதிa small bit (of tobacco, etc.)
இணுங்கு (இலைகள், தளிர்கள் போன்றவற்றை) கிள்ளிப் பறித்தல்nip
இணை1(தனித்தனியாக இருப்பவை அல்லது இருப்பவர்) ஒன்றுசேர்தல்join together
இணை2(தனித்தனியாக இருப்பவற்றை) ஒன்றுசேர்த்தல்join (one with another)
இணை3(ஒப்பிடும்போது தகுதியில், மதிப்பில், செயலில்) ஒத்த நிலைequal
இணைகரம் இணையான எதிர்ப் பக்கங்களைக் கொண்ட நான்கு பக்க வடிவம்parallelogram
இணைகோடு ஒரு கோட்டைத் தொடாமல் சம இடைவெளியில் இணையாகச் செல்லும் கோடுparallel line
இணைசேர்1(பறவை, விலங்கு) துணையோடு சேர்தல்(of birds, animals) mate
இணைசேர்2(ஜோடியாகப் பொருந்துமாறு) ஒன்றுசேர்த்தல்match
இணைப்பு ஒன்றாகத் தொடர்புபடுத்தப்பட்ட நிலைlinking
இணைபிரியா(த) (ஒருவரை விட்டு ஒருவர்) பிரிந்திருக்க முடியாதinseparable (friends, etc.)
இணைபிரியாமல் (ஒருவரை விட்டு ஒருவர்) நீங்காமல்(remain) inseparable
இணையகம் (பணி விரிவடையும்போது) இடத் தேவை கருதிப் பயன்படுத்தும் துணைக் கட்டடம்annexe
இணையம் (பல மாநிலங்களின் அல்லது பல சங்கங்களின்) கூட்டமைப்புfederation
இணையமைச்சர் ஓர் அமைச்சகத்தின் பொறுப்பைத் தனித்தோ காபினட் அந்தஸ்துள்ள அமைச்சருக்குக் கட்டுப்பட்டோ நிர்வகிக்கும் அமைச்சர்a minister having an independent portfolio not enjoying the cabinet rank or one assisting a minister of the cabinet rank
இணைவிழைச்சு உடலுறவுintercourse
இத்தகைய (கூறப்பட்ட) இந்த விதமானof this kind or sort or nature
   Page 1 of 4   1 2 3 4

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    × Want to join our classes?