Tamil To Tamil & English Dictionary

  

 

 

Tamil WordTamil MeaningEnglish Meaning
இருண்ட இருள் நிறைந்தdark
இருத்தலியல் தனி மனிதன் சுதந்திரமும் பொறுப்பும் உடையவன் என்றும் அவற்றைப் பயன்படுத்தி அவன் எடுக்கும் முடிவுகள் அவன் வாழ்க்கை நிலையை நிர்ணயிக்கின்றன என்றும் கூறும் தத்துவம்existentialism
இருந்தபோதிலும் தனியான இரு கூற்றுகளில் முதல் கூற்று ஒரு நிலையை விவரிக்க, அதனால் எதிர்பார்க்கும் இயற்கையான விளைவுக்கு மாறான விளைவை இரண்டாவது கூற்று தெரிவிக்கையில் அவற்றைத் தொடர்புபடுத்தும் தொடர்in spite of (it)
இருந்தாலும் இருந்தபோதிலும்nevertheless
இருந்தும் இருந்தபோதிலும்nevertheless
இருப்பிடம் வசிக்கும் இடம்place for living
இருப்பினும் இருந்தபோதிலும்nevertheless
இருப்புக்கொள் (பெரும்பாலும் எதிர்மறையில் அல்லது எதிர்மறைத் தொனியில்) (ஓர் இடத்தில்) இருத்தல்be at ease
இருப்புச்சட்டி (தாளித்தல் போன்ற சமையல் வேலைகளுக்குப் பயன்படும்) குழிந்த உட்பகுதி உடைய உலோகப் பாத்திரம்a kind of deep round pan (used for seasoning dishes or frying)
இருப்புப்பாதை தண்டவாளம் போடப்பட்ட (புகைவண்டி செல்வதற்கான) பாதைrailway track
இருபது பத்தின் இரு மடங்கைக் குறிக்கும் எண்(the number) twenty
இருபாலார்/இருபாலினர் (மக்களில்) ஆண்பெண்male and female
இரும்பு (இயந்திரம், கருவி முதலியன செய்யப் பயன்படும்) கறுப்பு நிறத்தில் இருக்கும் உறுதியான உலோகம்iron
இரும்புத்திரை மேலைநாடுகள் தமக்கும் ஐரோப்பியக் கம்யூனிச நாடுகளுக்கும் இடையே இருந்ததாகக் கருதிய, நேரடி வாணிபத் தொடர்பும் செய்திப் பரிமாற்றமும் கொள்ள முடியாத கட்டுப்பாடுiron curtain
இருமல் தொண்டையிலிருந்து வெடிப்புடன் வெளிப்படும் காற்றுcough
இருமு தொண்டையிலிருந்து வெடிப்பது போல் காற்று வெளிப்படுதல்cough
இருமுடி (சபரிமலைக்குச் செல்பவர்கள் பூஜைக்கும் பயணத்திற்கும் வேண்டிய பொருள்களை வைத்திருக்கும்) இரு பை கொண்ட துணிa piece of cloth with two bag-like compartments containing offerings, personal effects carried on the head by pilgrims to the temple at Sabari
இருமுனை வரி ஒரு பொருள் (உற்பத்தி செய்யப்படும் இடத்திலிருந்து) முதலில் விற்கப்படும்போதும் (கடையிலிருந்து வாங்குபவர்களுக்கு) கடைசியாக விற்கப்படும்போதும் விதிக்கப்படும் விற்பனை வரிsales tax levied on goods at the point of first sale and at the point of last sale
இருவழி போவதற்கும் வருவதற்கும் தனியாகவும் அல்லது (ஒரே வழியில்) இரண்டாகவும் பிரிக்கப்பட்டிருக்கும் தடம்(of railway) double line or track
இருவாட்சி இரவில் மலரும் மணம் மிக்க சிறு வெண்ணிறப் பூ/மேற்குறிப்பிட்ட பூவைத் தரும் சிறு மரம்tuscan jasmine
இருள்1(வெளிச்சம் குறைந்து) கருமை கவிதல்become dark (when the light is blocked)
இருள்2(வெளிச்சம் குறைவதால் ஏற்படும்) ஒளி இன்மைabsence of light
இரை1உரத்த குரலில் திட்டுதல்admonish
இரை2(இயல்பைவிட) வேகமாக சுவாசித்தல்pant
இரை3பிற உயிரினத்தைத் தின்று வாழும் விலங்குகளின் அல்லது பறவைகளின் உணவுprey
இரைச்சல் பெரும் சத்தம்noise and bustle
இரைப்பு இயல்பைவிட அதிக வேகத்தோடு வெளிப்படும் சுவாசம்pant
இரைப்பை உணவைக் கூழாக்குவதற்குத் தேவையான அமிலங்களைக் கொண்டதும் சுருங்கி விரியக் கூடியதுமான பை போன்ற உறுப்புstomach
இரை மீட்டு அசைபோடுதல்ruminate
இரையாக்கு (தீ, வெள்ளம் முதலியவற்றுக்கு) பலிகொடுத்தல்subject
இரையாகு (தீ, வெள்ளம் முதலியவற்றுக்கு) பலியாதல்/(நோய் முதலியவற்றுக்கு) உட்படுதல்be subject to destruction (by fire, flood, etc.)/be a victim to (disease, etc.)
இல்லம் வீடுhouse
இல்லறம் கணவன் மனைவி சேர்ந்து நடத்தும் வாழ்க்கைlife of a householder
இல்லாத உள்ள, உடைய, இருக்கிற ஆகிய சொற்களின் எதிர்மறைச் சொல்antonym of உள்ள (=which is), உடைய (=that has) and இருக்கிற (=that exists or is present)
இல்லாமல் (ஒருவர்) உடனிருக்காமல்(ஒன்று ஓர் இடத்தில்) காணப்படாமல்/(குணம், தன்மை முதலியன) அமையாமல்without
இல்லாமை இல்லாத நிலை அல்லது தன்மைthe state of not having
இல்லாவிட்டால்/இல்லாவிடில் (முதலில் கூறும் நிலை) இல்லை என்றால்(ஒருவர்) உடனிருக்காவிட்டால்(ஒன்று) காணப்படாவிட்டால்
இல்லாள் மனைவிwife
இலக்கணம் மொழியின் ஒலி, எழுத்து, சொல், வாக்கியம் முதலியவற்றின் அமைப்பை வழக்குகளின் அடிப்படையில் விவரிக்கும் விதிகள்/அந்த விதிகளைக் கூறும் நூல்grammar (of a language)/grammatical treatise
இலக்கம் எண்number
இலக்கியத் திருட்டு பிறருடைய படைப்பை அல்லது படைப்பின் ஒரு பகுதியை மற்றொருவர் (மூல ஆசிரியரின் பெயரைக் குறிப்பிடாமல்) தன் எழுத்தில் எடுத்தாளும் முறையற்ற செயல்plagiarism
இலக்கியம் கலை நயம் தோன்ற ஏதேனும் ஒரு வடிவத்தில் எழுதி வெளிப்படுத்தும் படைப்பு(creative) literature
இலக்கு குறிaim
இலகு1எளிதுeffortlessly
இலகு2கனமற்றதுlight (in weight)
இலங்கு அனைவரும் அறியும்படியாக அமைந்திருத்தல்be an illuminating example of
இலச்சினை (பெரும்பாலும்) ஓர் அரசனின் அல்லது அரசின் அதிகாரத்தைக் குறிப்பிடும் சின்னம்(royal) insignia
இலட்சியம் (வாழ்வில்) அடைய விரும்பும் உன்னத நிலைideal(s)
இலந்தை சிவந்த பழுப்பு நிறத் தோல் உடையதும் இனிப்பும் புளிப்பும் கலந்த சுவை உடையதும் சற்றுப் பெரிய கொட்டையைக் கொண்டதுமான சிறு பழம்/மேற்குறிப்பிட்ட பழத்தைத் தரும், முட்கள் நிறைந்த சிறு மரம்jujube fruit or the tree
இலவசம் பணம் பெறாமல் தருவதுfree (of cost)
இலவம் பஞ்சு இலவமரத்தின் முற்றிய காயிலிருந்து எடுக்கப்படும் பஞ்சுcotton from the silk-cotton tree
இலவமரம் பஞ்சு இழைகளைக் கொண்ட நீண்ட காய் காய்க்கும் உயரமான மரம்silk-cotton tree
இலா(க்)கா அமைச்சகம்ministry
இலுப்பை எண்ணெய் வித்துகளாகப் பயன்படுத்தும் விதைகளைக் கொண்ட உறுதியான பெரிய மரம்south Indian mahua
இலை தாவரத்தின் தண்டிலிருந்து அல்லது கிளையிலிருந்து தோன்றுவதும் பச்சையாகவும் தட்டையாகவும் இருப்பதுமான பாகம்leaf
இலைசுருட்டுப் புழு நெற்பயிரின் தோகையில் உள்ள பச்சையத்தைச் சேதப்படுத்தி இலை சுருண்டுவிடுமாறு செய்யும் ஒரு புழுleafroller (that causes the leaf to roll up)
இலைபோடு (இலையைப் போட்டு) உணவு பரிமாறுவதற்கான ஆயத்தம்செய்தல்prepare to serve food (on the laid out leaf)
இலைமறைவு காய்மறைவாக தெரிந்தும் தெரியாமலும்not overtly
இலையான் fly
இவ்வளவுக்கும் இத்தனைக்கும்for all
இவ்வாறு இப்படிin the manner (as told, decided, requested, etc at this time)
இவ்விடம் (பெரும்பாலும் கடிதம் எழுதும்போது) இங்கு(mostly in letter writing) here (where the sender is)
இவர்கள் அருகில் இருக்கும் ஆண், பெண் ஆகிய இரு பாலுக்கும் உரிய படர்க்கைப் பன்மைப் பெயர்third person plural (of those who are nearer to the speaker)
இவை அருகில் இருக்கும் அஃறிணைப் பொருள்களைச் சுட்டும் பெயர்neuter plural (for those which are nearer)
இழ (இருப்பதை) பறிகொடுத்தல்lose
இழப்பு இழத்தல்loss
இழிந்த தாழ்ந்தdegraded
இழிநிலை கீழ்நிலைdegraded or disgraceful state
இழிவு (-ஆக, -ஆன) கீழ்த்தரம்degradation
இழுக்கப்பறிக்க (பணம், பொருள் முதலியன) பற்றாக்குறை நிலையில்barely sufficient
இழுக்கு களங்கம்blemish
இழுத்தடி (தொல்லைதரும் நோக்கத்தோடு) அலையவைத்தல்cause (one to) come (many times with the intention of harassing)
இழுத்து (மூடு, சாத்து போன்ற வினைகளோடு) வேறு வழி இல்லாமல் வலுக்கட்டாயமாகdeliberately
இழுத்துப்பிடி கட்டுப்பாட்டுடன் இருத்தல்reduce expenditure
இழுத்துப்போட்டுக்கொள் (வேலைகளை அல்லது பொறுப்புகளை) வலிய ஏற்றுக்கொள்ளுதல்take upon oneself (jobs, responsibilities, etc voluntarily)
இழுப்பறை (மேஜை, பீரோ போன்றவற்றில்) வெளியே இழுக்கக் கூடிய முறையில் உள்ள, மேல்புறம் திறந்திருக்கும் பெட்டிdrawer (of a table, desk, etc.)
இழுபறி முடிவு எவ்வாறு இருக்கும் என்பது தெரியாத நிலை(state of) uncertainty (about the outcome of an issue)
இழை1(இணைந்து) உணரத்தக்க முறையில் வெளிப்படுதல்touch (with affection, etc.)
இழை2(மரக்கட்டையை வழவழப்பாக்க இழைப்புளியால்) சீவுதல்shave (in order to smoothen the surface of a block of wood with a plane)
இழை3(குற்றம், துரோகம் போன்ற கேடான செயல்களைக் குறிக்கும் சொற்களோடு மட்டும்) செய்தல்(with words suggesting harm, injustice, etc.) do
இழை4பஞ்சிலிருந்து திரிக்கப்பட்டு ஆடை நெய்வதற்குப் பயன்படுத்தும் மெல்லிய நூல்yarn
இழையோடு (ஒரு செய்தி அல்லது உணர்வு ஒன்றின் பின்புலத்தில்) ஊடுருவி இருத்தல்(of emotion, motif) run through
இளக்கம் (மலம்) இளகுதல்loosening of the constipated excreta, phlegm, etc
இளக்காரம் (-ஆக, -ஆன) தாழ்வான கருத்து வெளிப்படும்படியான போக்குtendency to slight, humiliate or look down upon
இளக்கு (கெட்டித் தன்மையிலிருந்து) நெகிழச்செய்தல்melt
இளகு (தார், மெழுகு போன்றவை வெப்பத்தால்) கெட்டித் தன்மை இழத்தல்soften
இளங்கலை பல்கலைக்கழகப் படிப்பில் முதல் நிலைப் பட்டப் படிப்புundergraduate (course)
இளசு (காய்கறி, தேங்காய் முதலியவற்றைக் குறிப்பிடும்போது) முற்றாதது(of vegetables, coconut, etc.) tender
இளந்தாரி இளைஞன்young man
இளநிலை (பல நிலைகளைக் கொண்ட பதவி வரிசையில்) தொடக்க நிலைjunior grade
இளநீர் இனிப்பான நீரும் முற்றாத பருப்பும் கொண்ட, மட்டை உரிக்காத தேங்காய்tender coconut
இளப்பம் இளக்காரம்tendency to look down upon
இளம் (மனிதர்களின், மிருகங்களின் வயதைக் குறிப்பிடுகையில்) இளமையான(மிருகங்களில்) சிறுவயதுடைய(when referring to the age of human beings, animals) young
இளம்பிள்ளைவாதம் இளம் குழந்தைகளின் கைகால்களில் உள்ள தசைகளை வளர்ச்சியற்றதாக்கி, இயங்கும் சக்தியை இழக்கச் செய்யும் ஒரு வகை நோய்poliomyelitis
இளமை உடல் பலமும் தோற்றக் கவர்ச்சியும் உடைய கட்டம்youth
இளரத்தம் விளைவுகளை எண்ணிப்பார்க்காமல் துணிச்சலுடன் எதிலும் இறங்கிவிடக் கூடிய இளம் வயதுdaring young age
இளவட்டம் மகிழ்ச்சியாகப் பொழுதுபோக்க விரும்பும் இளைஞன்pleasure loving, carefree youth
இளவயதினர் (பொதுவாக) பதினெட்டு வயது நிறைவடையாதவர்minor
இளவரசன் அரசனின் அல்லது அவனுடைய நெருங்கிய உறவினர்களின் புதல்வன்prince
இளவரசி அரசனின் அல்லது அவனுடைய நெருங்கிய உறவினர்களின் புதல்விprincess
   Page 2 of 4    1 2 3 4

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    × Want to join our classes?