Tamil to Tamil&English Dictionary

We are happy to provide you with the best Online Tamil to Tamil Dictionary/Translator.
For typing word in Tamil you can use our tool typing tool

  
Tamil WordTamil MeaningEnglish Meaning
உருவு (கட்டிலிருந்து அல்லது செருகியிருப்பதிலிருந்து அல்லது பிடிப்புடன் உள்ளதிலிருந்து ஒன்றை) பலமாக இழுத்தல்draw out (a sword, etc.)
உருவெடு ஒன்று வேறொன்றாக மாறுதல் அல்லது வெளிப்படுதல்transform
உருவெளித் தோற்றம் (ஒன்றைப்பற்றியே நினைத்துக்கொண்டிருப்பதால் அதைக் கண்ணால் காண்பது போல் தோன்றும்) போலித் தோற்றம்illusory vision
உருளி வாய் அகன்ற உருண்டை வடிவ வெண்கலப் பாத்திரம்spherical shaped bronze vessel with a wide mouth
உருளை (-ஆன) நீள் உருண்டை (வடிவம்)(of shape) cylindrical
உருளைக்கிழங்கு பழுப்பு நிற மெல்லிய தோல் மூடிய உருண்டை வடிவக் கிழங்குpotato
உரை1தெரிவித்தல்state
உரை2(தங்கத்தின் மாற்று அறியும் பொருட்டு) தேய்த்தல்(சுக்கு முதலியவற்றைக் கல்லில்) உரசுதல்rub (gold on a touchstone or dried ginger, etc, on a wet stone to get a small amount of paste)
உரை3(பெரும்பாலும், எழுதிப் படிக்கப்படும்) பேச்சு (mostly, prepared) speech
உரைக்கோவை ஒரு பொருளைப்பற்றிய பலருடைய கருத்து அல்லது கட்டுரைத் தொகுப்புanthology in a subject
உரைகல் (பொற்கொல்லர் தங்கத்தின் மாற்று அறியத் தேய்த்துப் பார்க்கும்) கையடக்கமான கருமை நிறக் கல்touch-stone (of the goldsmith)
உரைசெய் (இலக்கிய, இலக்கண, சமய நூல்களுக்கு) உரை எழுதுதல்write commentary (on literary, grammatical works)
உரைநடை (கவிதை அல்லாத) இயல்பான எழுத்து மொழிநடைprose
உரையாசிரியர் (இலக்கிய, இலக்கண, சமய நூல்களுக்கு) விளக்கம் எழுதும் ஆசிரியர்commentator
உரையாடல் கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளும் விதத்தில் பேசும் பேச்சுconversation
உரையாடு இருவர் அல்லது அதற்கு மேற்பட்டோர் தம் கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளும் விதத்தில் பேசுதல்talk
உல்லாசப்பயணம் (பார்க்கத் தகுந்த இடங்களுக்கு மேற்கொள்ளும்) மகிழ்ச்சியான பொழுதுபோக்குப் பயணம்pleasure trip (to tourist spots)
உல்லாசப்பயணி உல்லாசப்பயணம் செல்பவர்tourist
உல்லாசம் மகிழ்ச்சியான சுகம்loving fun
உல்லு (மட்டையோடு கூடிய தேங்காயை உரிக்கப் பயன்படும்) கூரான முனையுடைய இரும்புக் கம்பி பொருத்தப்பட்ட சாதனம்a tool to peel (the outer cover of coconut)
உலக்கை (தானியங்களை உரலில் இட்டு இடிக்க அல்லது குத்தப் பயன்படும்) முனையில் இரும்புப் பூண் பொருத்தப்பட்ட, உருண்டை வடிவ, நீண்ட மரச் சாதனம்a long round ended heavy wooden pestle
உலகக் கோப்பை ஒரு விளையாட்டில் சர்வதேச அளவில் போட்டிகள் நடத்தி, வெற்றி பெறும் அணிக்குத் தரும் கோப்பைworld cup
உலகப்பற்று ஒருவர் தன் குடும்பத்தின் மீதும் தன் உடமைகளின் மீதும் கொண்டிருக்கும் பிடிப்புattachment to worldly life
உலகம் உயிரினங்கள் வாழும் பூமிearth
உலக வங்கி முன்னேறிய நாடுகளுக்கும் பின்தங்கிய நாடுகளுக்கும் இடையே காணப்படும் பொருளாதார ஏற்றத்தாழ்வை அகற்றுவதற்காக ஏற்படுத்தப்பட்ட வங்கிinternational Bank for Reconstruction and Development
உலக வழக்கு பெரும்பாலானவர்கள் பின்பற்றும் வழக்கம்common practice
உலகாயதம் பொருள்களே முதலில் தோன்றியவை, உண்மையானவை, அனைத்திற்கும் அடிப்படையானவை என்று கூறும் தத்துவம்materialism
உலர் (ஈரம்) காய்தல்become dry
உலர்சலவை ரசாயனப் பொருள்களைப் பயன்படுத்தி இயந்திரத்தால் துணிகளைச் சுத்தப்படுத்தும் முறைdry cleaning
உலர்த்து (ஈரமாக இருப்பதைக் காற்றில், சூரிய ஒளியில்) காயவைத்தல்dry (anything wet)
உலவு (பெரும்பாலும் மிருகங்கள், பறவைகள்) நடமாடுதல் (of animals, birds) roam
உலா (வீதியில் தெய்வ விக்கிரகம் அல்லது அரசன் சுற்றிவருகிற) ஊர்வலம்(temple or royal) procession
உலாத்து (இங்குமங்குமாக) நடத்தல்pace (up and down)
உலாத்தை உத்திரம்cross beam
உலாவு (மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிக்க) நடத்தல்stroll
உலுக்கு (பலமாக) அசைத்தல்shake (vigorously)
உலுத்தன் நியாயமாக நடந்துகொள்ளாதவன்dishonest person
உலுப்பு உலுக்குதல்shake (vigorously)
உலுவா வெந்தயம்fenugreek
உலை1(கட்டு) தளர்தல்(of a bundle or anything tied up) get loosened
உலை2(கட்டை) பிரித்தல்unpack
உலை3(சோறு சமைப்பதற்காக) நீருடன் அடுப்பில் வைக்கப்படும் பாத்திரம்/அந்தப் பாத்திரத்தில் உள்ள நீர்vessel with water kept on an oven (in order to cook rice)/water in that vessel
உலைக்களம் கொல்லன் பட்டறைsmithy
உலைமூடி சோறு சமைக்கும் பாத்திரத்தின் மூடிremovable lid or cover for a vessel (used for cooking food)
உலைவை (சோறு சமைப்பதற்காக) நீரைப் பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்தல்set a vessel of water on an oven (to cook rice)
உலோகம் திட நிலையில் காணப்படுவதும் தகடாகவோ கம்பியாகவோ மாற்றக் கூடியதுமான (இரும்பு, தங்கம் போன்ற) பொருள்metal
உலோபி கஞ்சன்miser
உவ விரும்புதல்like
உவகை மகிழ்ச்சிdelight
உவப்பு மனத்துக்குப் பிடித்ததுpleasing
உவமி ஒப்பிடுதல்speak or talk in similitudes
உவமை இணையாகக் காட்டும் ஒப்புமைcomparison involving a simile
உவர் கரித்தல் taste saltish
உவர்த்தன்மை உப்புத் தன்மை கொண்டதுsalinity
உவர்நிலம் உப்புத் தன்மை கொண்ட நிலம்saline soil
உவர்ப்பு (உப்பின்) கரிப்புsaltiness
உழக்கு (முன்பு வழக்கில் இருந்த முகத்தல் அளவையான) படியில் நான்கில் ஒரு பாகம் அல்லது இரண்டு ஆழாக்குone fourth of a measure (which is roughly half of a litre)
உழப்பு நேரடியாகப் பதில் சொல்லாமல் அல்லது உரிய வேலையைச் செய்யாமல் குழப்புதல்muddle
உழல் (வறுமை, நோய், வேலை முதலியவற்றில் அமிழ்ந்து) திணறுதல்(நீண்ட காலமாக) அவதிப்படுதல்suffer (out of poverty, illness, etc over a long period)
உழவன் உழவுத் தொழிலில் ஈடுபட்டிருப்பவன்agriculturist
உழவு (கலப்பையால்) மண்ணைக் கிளறிவிடும் செயல்turning the soil (with a plough)
உழு (விதைக்கும் முன் கலப்பையால்) மண்ணைக் கிளறிவிடுதல்turn the soil (with a plough)
உழை கடினமாக வேலைசெய்தல்work (hard)
உழைப்பாளி கடுமையாக வேலைசெய்பவர்one given to hard work
உழைப்பு கடுமையான வேலை அல்லது பணிhard work
உள்1(கட்டடம், பெட்டி, குழாய் போன்றவற்றில்) ஒரு திறப்பின் பின் காணப்படும் பகுதி(of a house) in (and out)
உள்கை (சட்டவிரோதச் செயல்களுக்கு) வெளித்தெரியாமல் இருந்து உதவி செய்பவர்accomplice
உள்துறை ஒரு நாட்டின் அல்லது ஒரு மாநிலத்தின் சட்டம், ஒழுங்கு முதலியவற்றுக்குப் பொறுப்பாக அமைந்துள்ள அரசுத் துறைinternal affairs
உள்நாக்கு உள் வாயின் குழிந்த மேல்புறத்தின் முடிவில் தொங்கும் சிறு சதைuvula
உள்நோக்கம் (ஒரு செயலைச் செய்பவர் மற்றவர்க்கு வெளித்தெரியாத வகையில்) உள்ளூரக் கொண்டிருக்கும் (கெட்ட) எண்ணம்ulterior motive
உள்நோயாளி மருத்துவமனையிலேயே தங்கிச் சிகிச்சை பெறுபவர்inpatient
உள்பாவாடை பெண்கள் உள்ளாடையாக அணியும் பாவாடைskirt (over which the saree is worn)
உள்மனம் (ஒருவரை) எச்சரிக்கும் உணர்வுinstinct
உள்முகத்தேடல் ஒருவர் (தன் எழுத்தில்) தன் எண்ணங்களையும் உணர்வுகளையும் அவற்றின் காரணங்களையும் அறிய எடுத்துக்கொள்ளும் மனப் பரிசோதனைintrospection
உள்வாங்கு (ஒன்றை எல்லையாக அல்லது அளவாக வைத்துக்கொண்டு பார்க்கையில் அந்த எல்லையிலிருந்து அல்லது அளவிலிருந்து) தள்ளி அமைதல் அல்லது பின் இயங்குதல்be off (the stated place or mark)
உள்வாடகை ஒருவர் தான் வாடகைக்கு இருக்கும் இடத்தை அல்லது அதன் ஒரு பகுதியை வாடகைக்கு விடும் முறைsub-letting
உள்ள1இருக்கிற அல்லது இருக்கும் என்ற வடிவத்தில் இரு1 என்ற வினையின் முதல் மூன்று பொருளிலும் ஏழாவது பொருளிலும்synonymous with the non-finite forms இருக்கிற or இருக்கும் of the verb இரு1, in the senses 1, 2, 3 and 7
உள்ள2இரு2 என்பதன் எச்ச வடிவமாகிய இருக்கிற, இருக்கும் என்பதன் பொருளில் வருவதுan auxiliary verb form, synonymous with இருக்கிற/இருக்கும் of the verb இரு2
உள்ளங்கால் (தரையில் படும்) காலின் அடிப் பகுதிsole (of the foot)
உள்ளங்கை (ரேகைகள் காணப்படும்) கைப் பகுதிpalm (of the hand)
உள்ளடக்கம் (எழுதப்பட்ட அல்லது பேசப்பட்ட) பொருளின் செய்திcontent
உள்ளடக்கு (ஒன்றின்) கீழ்க் கொண்டுவருதல்(ஒன்றோடு) சேர்த்தல்include
உள்ளடங்கு (குறிப்பிட்ட ஓர் இடத்திலிருந்து) சற்றுத் தள்ளி அமைதல்be a little removed or apart from (the road, etc.)
உள்ளது உண்மைtruth
உள்ளபடி உண்மையான நடப்புப்படிin truth
உள்ளம் மனம்mind
உள்ளாக்கு (உணர்ச்சிக்கு அல்லது ஒரு நிலைக்கு) ஆளாக்குதல்subject
உள்ளாகு (ஓர் உணர்ச்சிக்கு அல்லது ஒரு நிலைக்கு) ஆளாகுதல்become subjected to (an emotion, state, etc.)
உள்ளாட்சி கிராமம் போன்ற சிறு ஊர்களிலும் நகரம் போன்ற பெரிய ஊர்களிலும் வாழ்பவர்கள் தங்கள்தங்கள் ஊருக்கான நிர்வாகத்தைப் பிரதிநிதிகள்மூலம் நடத்தும் முறைlocal self government
உள்ளாடை உடலில் முதலில் அணியும் ஆடைundergarment
உள்ளார்ந்த உள்ளே அமைந்துள்ளintrinsic
உள்ளாற்றல் (ஒருவரின்) உள்ளே அடங்கியிருக்கும் வெளிப்படாத திறன்potentiality
உள்ளி வெள்ளைப்பூண்டுgarlic
உள்ளிட்ட (கூறப்பட்ட ஒருவர்/ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவர்களும்/மேற்பட்டவையும்) சேர்ந்தinclusive of
உள்ளிட்டு (கூறப்பட்டவற்றையும் அல்லது கூறப்பட்டதையும்) சேர்த்துincluding
உள்ளிப்பூண்டு வெள்ளைப்பூண்டுgarlic
உள்ளிருப்பு வேலைநிறுத்தம் தொழிலாளர்கள் தொழிற்சாலையின் உள்ளேயே தங்கியிருந்து நடத்தும் வேலைநிறுத்தம்a form of protest where the employees stay on the premises of the factory and strike work
உள்ளீடு (ஒன்றுக்கு) திண்மையைத் தரும் வகையில் உள்ளிருக்கும் பொருள்(the hard) core or material (of the plants that gives them the solidness)
உள்ளுக்கு (மாத்திரை, மருந்து முதலியவற்றை) வாய்வழியாக வயிற்றுக்குள்(of drugs) orally
உள்ளுக்குள் மனத்தின் அடித்தளத்தில்in the innermost of the mind
   Page 3 of 5    1 2 3 4 5