Tamil to Tamil&English Dictionary

We are happy to provide you with the best Online Tamil to Tamil Dictionary/Translator.
For typing word in Tamil you can use our tool typing tool

  
Tamil WordTamil MeaningEnglish Meaning
உள்ளுணர்வு (காரணம் தெரியாவிட்டாலும் ஒரு நிகழ்ச்சி நடக்கப்போவதை) மனம் தானே உணரும் திறன்intuition
உள்ளும்புறமும் முழுமையாகin and out
உள்ளுறை1(சங்க இலக்கிய அகப்பாடல்களில்) வெளிப்படையாகப் பொருளைக் கூறாமல் குறிப்பால் உணர்த்தும் உவமை(in akam poems) implicit simile
உள்ளுறை2உள்ளார்ந்தintrinsic
உள்ளுறை வெப்பம் ஒரு திடப் பொருள் திரவ நிலையை அல்லது திரவம் வாயு நிலையை அடையும்போது வெப்ப நிலையில் மாற்றம் இல்லாமல் அது உள்வாங்கும் அல்லது வெளிவிடும் வெப்பச் சக்திlatent heat
உள்ளூர் (தான்) வாழும் (அதே) ஊர்home town
உள்ளூர் வரி பொருள்களின் மீது உள்ளாட்சி நிர்வாகமோ மாநில அரசோ விதிக்கும் விற்பனை வரி போன்ற வரிtax levied on commodities either by the state government or local bodies
உளநூல் உளவியல்psychology
உளப்பாங்கு மனப்பாங்குattitude
உளவாளி உளவு வேலையில் ஈடுபடுபவர்spy
உளவியல் மனித மனம் செயல்படுவதைக் குறித்தும் மனத்தின் வெளிப்பாடுகளான நடத்தை, குணம் குறித்தும் ஆராயும் (அறிவியல்) துறைpsychology
உளவு ஒரு நாட்டின் ராணுவ ரகசியம் போன்றவற்றையோ ஒரு போட்டி அமைப்பின் திட்டம் முதலியவற்றையோ தந்திரமாகச் சேகரிக்கும் முறைspying
உளவு பார் உளவு வேலையில் ஈடுபடுதல்spy
உளறுவாயன் ரகசியத்தைக் காப்பாற்றத் தெரியாமல் எளிதில் வெளியே சொல்லிவிடுபவன்one who blurts out
உளு (காய்ந்த மரம், மரத்தாலான பொருள்கள் புழு, சிறு வண்டு முதலியவற்றால் அரிக்கப்பட்டு) பொடியாதல்(of wood) be worm eaten
உளுத்தம் பருப்பு/உளுந்தம் பருப்பு உடைத்துத் தோல் நீக்கிய உளுந்துbroken blackgram (the outer cover of which is removed)
உளுந்து மெல்லிய கரு நிற மேல்தோல் மூடிய உருண்டை வடிவப் பருப்புblackgram (which is the main ingredient with rice in preparing இட்லி)
உளை1(கை, கால், மூட்டு போன்ற இடங்களில்) குத்திக் குடைந்து வலித்தல்(of limbs and joints) have pricking and gripping pain
உளை2(வயலில் அல்லது மண் சாலையில்) மண்ணும் நீரும் கலந்த கலவைmire
உளைச்சல் (கை, கால், மூட்டு போன்ற இடங்களில் ஏற்படும்) கடுமையான குடைச்சல் வலி pricking and gripping pain (in limbs and joints)
உற்சவம் (கோயிலில்) இறைவன் விக்கிரகத்தை அலங்கரித்து வீதியுலா வரச்செய்து நிகழ்த்தும் விழா/(சமயத் தொடர்பான) கொண்டாட்டம்(Hindu) temple festival (in which the deity is decorated and taken out in procession, etc.)/(religious) celebration
உற்சவமூர்த்தி/உற்சவர் (கோயிலில்) உற்சவக் காலங்களிலும் கும்பாபிஷேகத்தின்போதும் மூலவராகவே பாவிக்கப்படும் விக்கிரகம்idol (to which the sanctity is transferred) worshipped during festivals and during purificatory ceremonies
உற்சாகம் (-ஆக, -ஆன) (ஒன்று முடிந்ததும் ஏற்படும்) மகிழ்ச்சிcheerfulness
உற்பத்தி (பொருள்) தயாரித்தல்act of producing (products)/(agricultural) production
உற்பத்தியாகு (நதி ஓர் இடத்திலிருந்து) தோன்றுதல்(of river) originate
உற்பாதம் தீய விளைவுserious misfortune
உற்ற மிகவும் வேண்டியtrusted
உற்றறிவு தொடு உணர்வுsense of touch
உற்றார் (நெருங்கிய) உறவினர்(close) relative
உறக்கம் தூக்கம்sleep
உறங்கு தூங்குதல்sleep
உறவாடு உரிமையுடன் பழகுதல்move closely
உறவினர் சொந்தக்காரர்relative
உறவு (பிறந்த குடும்பத்தின்மூலமாகவும் திருமணத்தின்மூலமாகவும் ஏற்படும்) சொந்தம்relationship
உறவுமுறை (இருவரிடையே உள்ள) உறவு அழைக்கப்படும் விதம்manner of relationship (between two persons related or otherwise)
உறி1உறிஞ்சுதல்draw in
உறி2(வீடுகளில் பால், வெண்ணெய் முதலிய பொருள்களை வைத்திருக்கும் பானைகளைத் தாங்கி இருக்கும்) உத்திரத்திலிருந்து தொங்கவிட்டிருக்கும் கயிறு அல்லது சங்கிலியால் ஆன கூம்பு வடிவ அமைப்புa conical network of rope or chain (suspended from the roof beam for placing pots containing foodstuff such as milk, butter to keep them away from ants, etc.)
உறிஞ்சு (உதடுகளைக் குவித்தோ சிறு குழல் வழியாகவோ திரவத்தை) உள்ளிழுத்தல்(மூக்கினால் பொடி முதலியவற்றை) உள்ளிழுத்தல்sip (a drink)
உறிஞ்சுதாள் மை முதலியவற்றை உறிஞ்சி உள்ளிழுத்துக்கொள்ளும் தன்மை கொண்ட ஒரு வகைக் காகிதம்blotting-paper
உறு2வினைப்படுத்தும் வினைa verbalizer
உறுத்து தொல்லையான நெருடல் உணர்ச்சி தருதல்get an uneasy feeling (caused by some irritant)
உறுதி1(பொருளின் தன்மையைக் குறிக்கையில்) பலம்strength
உறுதி2பத்திரம்deed
உறுதிசெய் உண்மையாக்குதல்confirm
உறுதிப்பாடு திட நம்பிக்கைfirm faith
உறுதிப்பொருள் மனிதன் வாழ்வில் அடையத் தகுந்தவையாகக் கூறப்படும் (அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு) குறிக்கோள்objectives worthy of human pursuit (viz
உறுதிமொழி கட்டுப்படுத்தும் (வாய்மூலமான) தீர்மானம் அல்லது (எழுத்துமூலமான) ஒப்பந்தம்(solemn) promise
உறுதுணை (ஒருவருக்கு அல்லது ஒன்றைச் செய்வதற்கு) இன்றியமையாத பெரும் உதவிunflinching support
உறுப்பினர் வரையறுக்கப்பட்ட அமைப்பை அல்லது குழுவைச் சார்ந்தவர்member (of an organized group)
உறுப்பு உடலில் ஒரு பாகம்part of the body
உறுமல் (சில விலங்குகள்) உறுமும் ஒலி(of pig) grunt
உறுமிமேளம் வளைந்த முன்பகுதியைக் கொண்ட கோலால் பக்கப் பகுதியில் அழுத்தி இழுக்கும்போது ஒரு வகையான உறுமல் சத்தத்தை எழுப்பும் நீள் உருண்டை வடிவத் தோல் கருவிa kind of two-headed drum which produces a sound like a growl when played with a curved stick
உறை1(நீர், எண்ணெய், இரத்தம் முதலியன) கெட்டித் தன்மை அடைதல்(of water) freeze
உறை2காரமாக இருத்தல்be pungent or hot
உறை3(கடிதம் முதலியவற்றை வைப்பதற்குப் பயன்படுத்தும்) ஒரு பக்கம் திறக்கக் கூடிய (தாளால் ஆன) கூடு(பொருளை மூடுவதற்குப் பயன்படுத்தும்) துணி அல்லது துணி போன்ற பொருளால் ஆன மூடிenvelope (for letters, etc.)
உறை ஊற்று (காய்ச்சி ஆறவைத்த) பாலைத் தயிராக்குவதற்காகச் சிறிது புளிப்பு (பெரும்பாலும் மோர்த் துளிகள்) சேர்த்தல்make curds by adding sour substance (usually a few drops of buttermilk)
உறைநிலை ஒரு திரவப் பொருள் திட நிலைக்கு மாறத் தொடங்கும் வெப்பநிலைfreezing or solidifying point
உறைப்பு மிளகாய் போன்றவற்றைக் கடிக்கும்போது உணரப்படுகிற சுவை(taste of) pungency
உறைபனி (நீர் உறைந்துவிடக் கூடிய வெப்பநிலைக்கும் குறைவான வெப்பநிலையில்) நிலத்தின் மேல் நீர் உறைந்து ஏற்படுகிற குளிர்frost
உறை மோர் பாலைத் தயிராக்குவதற்காக ஊற்றப்படுகிற மோர்buttermilk (used for making curds)
உறையுள் தங்கும் இடம்boarding
உறைவிடம் தங்கியிருக்கிற அல்லது வசிக்கிற இடம்abode
உன்மத்தம் உணர்ச்சியின் உக்கிர நிலைfrenzy
உன்னதம் (தன்மையில், பண்பில், இயல்பில்) மிக உயர்வானதுeminence
உன்னிப்பு கூர்மைwatchfulness
உஷ்ணம் (ஒருவருடைய உடலின் அல்லது நெருப்பு, சீதோஷ்ணம் போன்றவற்றின்) வெப்பம்heat
உஷ்ணமானி வெப்பமானிthermometer
உஷார் (-ஆக, -ஆன) (செயலில் காட்டும்) விழிப்புணர்வுwatchfulness
   Page 4 of 5    1 2 3 4 5