Tamil To Tamil & English Dictionary

  

 

 

Tamil WordTamil MeaningEnglish Meaning
எஃகு (கடினத் தன்மை உடையதும் வார்ப்பு இரும்பிலிருந்து குறிப்பிட்ட அளவு கரித் தன்மையை நீக்குவதால் கிடைப்பதுமான) இரும்பின் வகைகளில் ஒன்றுsteel
எக்கச்சக்கம் (கூட்டம், செலவு முதலியன) மிக அதிகம்(of crowd, expenditure, etc.) heavy
எக்கச்சக்கமாக வசமாகin a tight corner
எக்களி (சாதனையின் பயனாக) பெருமகிழ்ச்சி அடைதல்rejoice
எக்களிப்பு (சாதனையால்) இறுமாப்புடன் கூடிய மகிழ்ச்சிproud rejoicing
எக்காளம்2ஏளனம்mocking tone
எக்கு (இறுக்கமான ஆடையை அணிந்துகொள்ளவோ பிறவற்றிற்காகவோ வயிற்றை) உள்ளிழுத்தல்draw in (the abdominal muscles as when wearing clothes)
எக்குத்தப்பாக/எக்குத்தப்பான இசகுபிசகாக/இசகுபிசகானawkwardly/awkward
எங்கணும் எங்கும்everywhere
எங்கும் (குறிப்பிடப்படும் இடத்தின்) எல்லாப் பகுதியிலும்everywhere
எங்ஙனம் எவ்வாறுin what way
எச்சம் (உயரே பறந்து செல்லக் கூடிய பறவைகளின் அல்லது கூரை, சுவர் முதலியவற்றில் ஊர்ந்து செல்லும் பல்லி முதலியவற்றின்) கழிவுdroppings (of birds which can fly or house lizards)
எச்சரி (பாதகமான விளைவுகள் ஏற்பட இருப்பதைக்குறித்து) கவனமாக இருக்கும்படி கூறுதல்warn (against the dangers or the consequences that would follow)
எசமான் (கிராமத்தில்) வீட்டில் அல்லது நிலத்தில் வேலைசெய்ய ஆள் வைத்துக்கொள்பவர்(in villages) one who provides employment in his house or lands
எசமானி எசமான் என்பதன் பெண்பால்feminine of எசமான்
எஞ்சு (கழிந்தது போக) மீதி அல்லது மிச்சம் இருத்தல்remain
எட்ட (ஓர் இடத்தைவிட்டு) தள்ளிoff
எட்டத்தில் தூரத்தில்at or from a distance
எட்டி1(சற்று) தள்ளி(சற்று) தூரத்தில்எட்டat a distance
எட்டி2(உடலை அல்லது உடலின் ஓர் உறுப்பை) நீட்டிto stretch out or reach out
எட்டி3மருந்தாகப் பயன்படும் காயைத் தரும் ஒரு வகை மரம்strychnine tree
எட்டிக்காய் வழவழப்பான மேற்புறத்தையும் சற்றுக் கடினமான மேல் ஓட்டையும் நச்சுத் தன்மையையும் கொண்ட, எட்டி மரத்தின் சாம்பல் நிறக் காய்nux vomica
எட்டிப்பார் (கிடைக்கும் குறைந்த நேரத்தில் ஒருவரை) பார்க்க வருதல்pay a short visit
எட்டிப்பிடி (இலக்கு முதலியவற்றை) முயன்று அடைதல்reach with effort (target, etc.)
எட்டிப்போடு (காலை நீட்டி நடப்பதன்மூலம் நடையை) வேகப்படுத்துதல்quicken (the pace by long steps)
எட்டு2(நடக்கும்போதோ தாவும்போதோ) இரு காலுக்கு இடையில் உள்ள தூரம்step
எட்டு3ஏழு என்னும் எண்ணுக்கு அடுத்த எண்(the number) eight
எட்டுக்கால்பூச்சி ஒரு வகைச் சிறிய சிலந்திa kind of spider small in size
எடுகோள் கருதுகோள்hypothesis
எடுத்த எடுப்பில் தொடங்கியவுடன்straight away
எடுத்தலளவை நிறுத்தலளவைmeasurement of weight
எடுத்தாள் (சிறப்பாகக் கூறும்பொருட்டு உதாரணமாக, மேற்கோளாக) கையாளுதல்employ (for the purpose of effectiveness, as an illustration)
எடுத்துக்காட்டு1(ஒன்று அடிப்படையாக அமைந்து) வெளிப்படுத்துதல்show
எடுத்துக்காட்டு2உதாரணம்example
எடுத்துக்கொள் (தனக்கு) உரிமையாக்கிக்கொள்ளுதல்take possession of
எடுத்துச்செல் (கருத்தை, செய்தியை) பரப்புதல்carry
எடுத்துவிடு அதிகமாகச் சொல்லுதல்give an exaggerated account
எடுத்தெறிந்து பேசு (ஒருவரை) பொருட்படுத்தாமல் அல்லது அலட்சியப்படுத்தும் வகையில் பேசுதல்talk back insolently
எடுப்பார்கைப்பிள்ளை (மற்றவர்கள் சொல்வதைச் சரியென நம்பிச் செயல்படும்) சுய சிந்தனை அற்ற ஒருவர்one who is incapable of acting on his own
எடுப்பு1ஒரு பாட்டு அதற்கு உரிய தாளத்தில் ஆரம்பிக்கும் இடம்the starting point in the rendering of a composition set to a particular தாளம்
எடுப்பு2-ஆக/-ஆன(உடலமைப்பில் அல்லது தோற்றத்தில்) கவர்ச்சியாக/கவர்ச்சியானattractively/attractive
எடுப்புச்சாப்பாடு உணவு விடுதியிலிருந்து (அடுக்குப் பாத்திரத்தில்) எடுத்துவரப்படும் உணவுmeal brought (to s
எடுபடு (ஒரு குழுவினரிடையே) வரவேற்கப்படுதல்gain acceptance
எடுபிடி (மிகுந்த பொறுப்புடையதாக இல்லாத) சிறு பணிpetty errands
எடை (ஒருவரை அல்லது ஒன்றை) நிறுத்துக் கணக்கிடப்படும் நிறை அளவுweight (of a person or a thing)
எடைக்கல் (நிறுப்பதற்குப் பயன்படுத்தும்) நிறை குறிக்கப்பட்ட உலோகக் கட்டிa piece of metal of standard heaviness (for weighing)
எடைகட்டு தராசில் வைக்கும் பாத்திரத்தின் எடைக்குச் சமமான எடைக்கற்களை வைத்தல்offset the weight (of the container before weighing the contents)
எடைபோடு எடையைக் கணக்கிடுதல்weigh
எண்1(எத்தனை உள்ளன என்பதை) கணக்கிட்டுச் சொல்வதற்கு உதவும் 1, 2, 3 முதலிய கணிதக் குறியீடுnumber
எண்கோணம் எட்டு (சம) கோணமுடைய வடிவம்octagon
எண்சுவடி (பெருக்கல் முதலியவை அடங்கிய) வாய்பாட்டுப் புத்தகம்multiplication tables
எண்சோதிடம் (பிறந்த தேதி, மாதம், வருடம், பெயருக்கான மதிப்பு ஆகியவற்றைக் கூட்டி அதன் அடிப்படையில் ஒருவரின்) குணநலன்கள், எதிர்காலப் பலன்கள் முதலியவற்றைக் கணித்துக் கூறும் கலைnumerology
எண்ணக்கரு கருத்தாக்கம்concept
எண்ணம் நினைப்புthinking
எண்ணி (வழக்கமாக எதிர்பார்ப்பதற்கும்) குறைந்த அளவில்far below (the normally expected number)
எண்ணிக்கை எத்தனை அல்லது எவ்வளவு என்னும் கணக்கு(total) number
எண்ணு1(வரிசையாக அல்லது முறைப்படி) எண்களைக் கூறுதல்/(எத்தனை இருக்கின்றன என்று) கணக்கிடுதல்count
எண்ணு2(நினைவுக்குக் கொண்டுவந்து ஒன்றை) சிந்தித்தல்think (of)
எண்ணெய் தாவர வித்துகளிலிருந்தும் மிருகக் கொழுப்பிலிருந்தும் பெறப்படுவதும் உணவுப்பண்டங்கள் முதலியவை தயாரிக்கப் பயன்படுவதுமான திரவம்oil (obtained from oil seeds, animal fats)
எண்ணெய்க்கிணறு நிலத்தடியிலிருந்து எண்ணெய் எடுப்பதற்காகத் தோண்டப்படும் துளைoil well
எண்ணெய்ச் சுத்திகரிப்பு ஆலை நிலத்தடியிலிருந்து கிடைக்கும் கச்சா எண்ணெய்யைச் சுத்தப்படுத்தி அதிலிருந்து மண்ணெண்ணெய் போன்றவற்றைத் தனியாகப் பிரித்தெடுக்கும் தொழிற்சாலைoil refinery
எண்ணெய்வித்து எண்ணெய் எடுக்கப் பயன்படும் தாவரங்களின் விதை, பருப்பு முதலியனoil seed(s)
எண்பது பத்தின் எட்டு மடங்கைக் குறிக்கும் எண்(the number) eighty
எண்பி நிரூபித்தல்prove
எத்தன் துணிச்சலாக ஏமாற்றுபவன்a cheat
எத்தனம் முயற்சிeffort
எத்தனி முயற்சிசெய்தல்make an effort
எத்தனை (எண்ணப்படக் கூடியதில்) எவ்வளவுhow many
எத்துணை எவ்வளவுhow much
எதற்கெடுத்தாலும் எடுத்ததற்கெல்லாம்at the slightest provocation
எதார்த்தம் (-ஆக, -ஆன) (எதையும் மறைக்காத) வெளிப்படைrealistic manner
எதிர்1(ஒருவரை, ஒரு போக்கை, ஒரு நிலையை) மறுத்து மாறான நிலை மேற்கொள்ளுதல்oppose (a person, attitude, stand, etc.)
எதிர்2நேர் முன்னால் இருப்பது(directly) opposite
எதிர்க்கட்சி ஆளும் கட்சியை (கொள்கை அடிப்படையில்) எதிர்க்கும் கட்சிparty in opposition
எதிர்கொள் (வருபவரை நோக்கி) சென்று சந்தித்தல்approach and greet
எதிர்த்தரப்பு ஒருவரை எதிர்த்துப் போட்டியிடுபவரின் பக்கம் அல்லது எதிரியின் பக்கம்opposite (camp, party)
எதிர்த்தாற்போல் எதிரேin the opposite direction
எதிர்த்து ஏற்றுக்கொள்ளாமல் மறுத்துin protest of
எதிர்த்துப்பேசு (மரியாதைக்கு உரியவர்களை) மதிக்காமல் மறுப்பாகப் பேசுதல்talk back
எதிர்நீச்சல்போடு (வாழ்க்கையில் ஏற்படும் தடை, தொல்லை முதலியவற்றை) எதிர்த்துப் போராடுதல்surmount obstacles
எதிர்நோக்கு எதிர்பார்த்துக் காத்திருத்தல்(ஒன்றை) அடைய அல்லது பெற வேண்டிய நிலையில் இருத்தல்await
எதிர்ப்படு (தற்செயலாக) எதிரில் வருதல்run into
எதிர்ப்பாளர் எதிர்த்தரப்பில் இருப்பவர்one who is opposed to
எதிர்ப்பு உடன்படவோ ஏற்கவோ ஒத்துப்போகவோ முடியாத ஒன்றிற்கு ஒருவர் தெரிவிக்கும் கண்டனம் அல்லது மேற்கொள்ளும் எதிர்ச் செயல்opposition
எதிர்பார் (வர இருப்பதை அல்லது நிகழ இருப்பதை) முன்கூட்டியே பார்த்தல்(ஒன்று இவ்வாறு நடக்க வேண்டும் என்று) நினைத்தல்expect
எதிர்பார்ப்பு (விளைவை, வருகையை, நிகழ்ச்சியை) முன்கூட்டியே எண்ணிப்பார்ப்பதுexpectations
எதிர்பார்ப்பு ஜாமீன் காவல் துறையினரால் கைதுசெய்யப்பட நேர்ந்தால் ஜாமீனில் வருவதற்கு வழி செய்யும் வகையில் முன்கூட்டியே நீதிமன்றத்தில் விண்ணப்பித்துப் பெறப்படும் உத்தரவுanticipatory bail
எதிர்மாறு உடன்படாத நிலைcontrariety
எதிர்முகமாக நேர் எதிராக அல்லது எதிர்ப்பக்கத்தில்in front of
எதிர்வரும் இனி வரும்(in the days, months, etc.) to come
எதிர்விளைவு/எதிர்வினை ஒரு செயலால் ஏற்படும் (பின்) விளைவுreaction
எதிரணி (விளையாட்டில், தேர்தலில்) எதிர்த்துப் போட்டியிடும் பிரிவுrival camp
எதிராளி எதிரிenemy
எதிரி பெரும் தீங்கு விளைவிப்பதுenemy
எதிரிடை (கொள்கை, இயக்கம் முதலியவற்றிற்கு) நேர்மாறுcontrariness
எதிரில் எதிர்ப்பக்கத்தில்in front of
எதிரும்புதிருமாக நேருக்கு நேர் பார்க்கும்படியாகfacing one another
எதிரொலி2(சுவர், மலை ஆகியவற்றில் பட்டு) மீண்டும் கேட்கும்படி திரும்பி வரும் ஒலிecho
எதிரொளி1(கண்ணாடி போன்ற பளபளப்பான பரப்பில் படும்) ஒளி திரும்பி வருதல்reflect
எதிரொளி2(கண்ணாடி போன்ற பளபளப்பான பரப்பில் பட்டு) திரும்ப ஒளிரும் ஒளிreflection
   Page 1 of 2   1 2

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    × Want to join our classes?