Tamil To Tamil & English Dictionary

  

 

 

Tamil WordTamil MeaningEnglish Meaning
கக்கம்1அக்குள்armpit
கக்கம்2(நல்லெண்ணெய், கடலை எண்ணெய் போன்றவற்றின் அடியில் தங்கும்) கசடுdark coloured sediment (in certain vegetable oils)
கக்கு (உணவு முதலியவற்றை வாய் வழியாக) வெளித்தள்ளுதல்throw up (the contents of the stomach)
கக்குவான் (குழந்தைகளுக்கு) தொடர்ந்து கடுமையான இருமலையும் நீண்ட மூச்சு இரைப்பையும் ஏற்படுத்தும் நோய்whooping cough
கக்கூஸ் கழிப்பிடம்lavatory
கக்கூஸ்படை ஒரு வகைக் காளானால் தொடையின் இடுக்குகளில் படையாகப் பரவி அரிப்பை ஏற்படுத்தும் நோய்jock itch
கங்கணம் நடைபெற வேண்டிய மங்கலக் காரியம் முடியும்வரை அல்லது மேற்கொண்ட உறுதியை நிறைவேற்றும்வரை மணிக்கட்டில் கட்டிக்கொள்ளும் தாயத்தோ மஞ்சள் துண்டோ கோக்கப்பட்ட கயிறுa cord tied with a talisman or a piece of turmeric worn around the wrist till a particular auspicious event comes to an end or till the vow taken is fulfilled
கங்கணம்கட்டு (ஒரு செயலை நிறைவேற்றியே தீர்வது என்று) உறுதிகொள்ளுதல்take a vow
கங்காணி (தேயிலைத் தோட்டம், காப்பித் தோட்டம் முதலியவற்றில் வேலைசெய்யும் கூலியாட்களை) மேற்பார்வையிடும் பணியைச் செய்பவர்supervisor (of workers in plantations)
கங்காரு வலுவான பின்னங்கால்களால் உந்தித் தாவிச் செல்லக் கூடிய ஒரு வகை விலங்குkangaroo
கங்கா ஸ்நானம் தீபாவளிப் பண்டிகையன்று அதிகாலையில் எண்ணெய் தேய்த்துக் குளித்தல்bath with some oil on the body taken in the wee hours of தீபாவளி day
கங்கு முழுதும் தணலாக உள்ள கரித்துண்டுlive coal
கங்குகரை (ஏதேனும் ஓர் உணர்ச்சியின் பெருக்கைக் குறிப்பிடும்போது) வரம்பு(with reference to emotions) bound
கச்சடா மட்டரகம்base
கச்சா பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில் சுத்தம் செய்யப்படாததுcrude
கச்சா எண்ணெய் நிலத்தடியிலிருந்து எடுக்கப்படும், சுத்திகரிக்கப்படாத எண்ணெய்crude oil
கச்சாப்பொருள் (தொழிற்சாலையில் ஒன்றை உற்பத்தி செய்வதற்குத் தேவையான) மூலப்பொருள்raw material
கச்சான் (மேற்கிலிருந்து வீசும்) வறண்ட காற்றுdry westerly wind
கச்சான் கொட்டை நிலக்கடலைgroundnut
கச்சிதம் (சற்று அதிகம் அல்லது குறைவு என்று இல்லாமல் மிகவும்) சரியான அளவு(most) apt
கச்சு (முற்காலத்தில் பெண்கள்) மார்பில் கட்டும் துணி அல்லது மார்பிலிருந்து இடைவரைக்குமான ஆடை(in ancient times) a kind of brassiere (sometimes extending up to the hip)
கச்சேரி1(இசை, நாட்டியம் முதலிய) கலை நிகழ்ச்சிperformance (of music, dance, etc.)
கச்சேரி2நீதிமன்றம்court
கச பாகற்காயில் இருப்பது போன்ற சுவை கொண்டிருத்தல்have a bitter taste
கசக்கிப்பிழி (ஒருவரை) கடுமையாக வருத்துதல்squeeze
கசகச (வியர்வையால்) பிசுபிசுப்பாக உணர்தல்feel sticky (with sweat)
கசகசா வெண்மை நிறத்தில் இருக்கும் அபினியின் சிறு விதைpoppy seed
கசங்கு (துணி, தாள் போன்றவை) தாறுமாறான மடிப்புடையதாதல்(of clothes, paper) get crumpled
கசடன் கீழ்த்தரமான எண்ணம் உடையவன்mean and unscrupulous person
கசடு (எண்ணெய் போன்றவற்றின்) அடியில் கரிய நிறத்தில் படிந்திருப்பது(mostly of oils) dregs
கசப்பு பாகற்காய் முதலியவற்றை உண்ணும்போது உணரப்படும் சுவைbitter taste
கசமுச-என்று/-என்ற (பேச்சைக்குறித்து வருகையில்) வெளிப்படையாக இல்லாமல்/வெளிப்படையாக இல்லாத(spreading scandal) in whispers/juicy
கசாப்பு ஆடு, மாடு போன்ற விலங்குகள் இறைச்சிக்காக வெட்டப்படுதல்slaughter
கசி (இரத்தம், கண்ணீர், வியர்வை முதலியவை) மிகச் சிறிய அளவில் வெளிவருதல்(of blood, tears, sweat, etc.) ooze out
கசிப்பு கள்ளச் சாராயம்illicit liquor
கசிர் (ஏலச் சீட்டில்) சீட்டை ஏலம்விட்டுக் கிடைக்கும் லாபப் பணத்தில் உறுப்பினர்களுக்குக் கிடைக்கும் பங்குத் தொகைdividend
கசிவு (நீர் முதலியவற்றின்) சிறிய அளவிலான ஒழுக்கு(of water, etc.) oozing
கசை (முற்காலத்தில் தண்டனை பெறும் ஆட்களை அடிப்பதற்குப் பயன்படுத்திய) தோலால் அல்லது கயிற்றால் பின்னப்பட்ட நீண்ட சவுக்குlashing whip
கசையடி கசையைக்கொண்டு அடித்துத் தரப்படும் தண்டனைwhiplash (as punishment)
கஞ்சத்தனம் அவசியமான செலவைக்கூடத் தவிர்த்துப் பணத்தை மிச்சம் பிடிக்க நினைக்கும் குணம்niggardliness
கஞ்சம் கஞ்சத்தனம்niggardliness
கஞ்சன் கஞ்சத்தனமாக இருப்பவன்niggard
கஞ்சா (புகைத்தால்) போதை தரும் ஒரு வகைச் செடியின் இலை(the leaves and the seed of) Indian hemp
கஞ்சி சோறு வெந்த பிறகு வடித்து எடுத்த, கொழகொழப்புத் தன்மை உடைய நீர்sticky, starchy water drained from the cooked rice
கஞ்சிகாய்ச்சு (பலர் ஒன்றாகச் சேர்ந்துகொண்டு ஒருவரை) அளவுக்கு அதிகமாகக் கிண்டல்செய்தல்make fun of
கஞ்சிரா வட்ட உலோகத் தகடுகள் பொருத்தப்பட்டிருக்கும் வளையத்தின் ஒரு பக்கத்தில் இழுத்துக் கட்டப்பட்ட தோலைக் கையால் தட்டி வாசிக்கும் இசைக் கருவிa musical instrument of circular wood on the one side of which a hide is drawn tightly and whose frame is fitted with small cymbals, played by striking with the hand
கட்சிக்காரர் வழக்கறிஞரிடம் தன் வழக்கை ஒப்படைத்து நடத்தித் தருமாறு கேட்டுக்கொள்பவர்client (of a lawyer)
கட்சிகட்டு (பிரச்சினை, தகராறு, விவாதம் போன்றவற்றில்) ஒரு தரப்பை ஆதரித்தல்take sides
கட்சிதாவு சட்டமன்ற அல்லது பாராளுமன்ற உறுப்பினர் தன் கட்சியிலிருந்து மற்றொரு கட்சிக்கு மாறுதல்switch over (to some other party after getting elected)
கட்சியாடு கட்சிகட்டிக்கொண்டு வாதாடுதல்argue in a partisan manner
கட்டடக் கலை கட்டடங்களை வடிவமைத்து நிர்மாணிக்கும் தொழில்நுட்பக் கலைarchitecture
கட்டடம் (வசித்தல், வேலைசெய்தல் முதலியவற்றிற்காக) செங்கல், கல் முதலியவற்றால் எழுப்பிய சுவர்களின் மீது தளமோ கூரையோ கொண்டதாக உருவாக்கப்படும் அமைப்புbuilding
கட்டணம் பயன்படுத்திக்கொள்வதற்கு, அனுமதிக்கப்படுவதற்கு அல்லது சேவைக்குச் செலுத்தும் பணம்fare
கட்டம் நான்கு பக்கமும் கோடுகளால் அமையும் வடிவம்square
கட்டம்கட்டு (பத்திரிகைகளில் ஒரு செய்தி தனித்துத் தெரியும் வகையில் அதை) கோடுகளாலான பெட்டி போன்ற வடிவத்தினுள் அச்சிடுதல்separate a news item (by putting it) within a box
கட்டமைப்பு அமைப்பு முறைstructure
கட்டவிழ்த்துவிடு (ஓர் அமைப்பு வன்முறை போன்ற அழிவுச் சக்திகளைப் போராடுபவர்கள் மீது) ஏவிவிடுதல்let loose (repression, violence)
கட்டழகன் கடுமையான பயிற்சிகளால் உடலைக் கட்டுக்குலையாமல் வைத்திருப்பவன்one who has a well built physique
கட்டழகி (கட்டுக்குலையாத) அழகான பெண்beautiful woman
கட்டாக்காலி தன்னிச்சைப்படி அலையும் மாடுstray cattle
கட்டாடி சலவைத்தொழில் செய்பவர்washerman
கட்டாந்தரை வறண்டு இறுகிக் கெட்டியாக இருக்கும் நிலப்பகுதிhard set earth
கட்டாயக் காத்திருப்பு (அரசாங்கத்தில்) ஒரு துறையிலிருந்து மற்றொரு துறைக்கு மாற்றப்படும் அல்லது நீண்ட விடுமுறையிலிருந்து திரும்பும் உயர் அதிகாரி அடுத்த பதவி ஒதுக்கப்படும்வரை காத்திருக்க வேண்டிய காலம்interim period of compulsory waiting (for higher officials for a change of portfolio)
கட்டாயம்1(ஒரு சூழ்நிலையில் ஒன்றைச் செய்வதை) தவிர்க்க முடியாத நிலை(ஒருவரின்) வற்புறுத்தல்நிர்ப்பந்தம்compulsory
கட்டாயம்2/-ஆகஅவசியம்certainly
கட்டாரி பிடியுடைய குத்துவாள்cross-hilted dagger
கட்டி (உடலில் தோன்றும்) கெட்டியான புடைப்புhard boil or swelling (on or in the body)
கட்டிக்கா சிதறுண்டு போகாமல் நிலைப்படுத்துதல்preserve (unity)
கட்டிக்கொண்டு (பயன் இல்லை என்றோ இதைவிடப் பயனுள்ளது மற்றொன்று உண்டு என்றோ தெரிந்தும்) விடாமல் வைத்துக்கொண்டுclinging to
கட்டிக்கொள்1இறுக அணைத்துக்கொள்ளுதல்hold tightly
கட்டிக்கொள்2திருமணம் செய்துகொள்ளுதல்marry (a person)
கட்டிப்பால் (இனிப்புச் சுவை சேர்த்துச் சற்று) கெட்டியாக்கப்பட்ட பால்condensed milk
கட்டிப்புரள் (ஒருவர் மற்றொருவரை) பிடித்தபடியே உருளுதல்roll over (one holding the other as in a fight)
கட்டிமேய் (கட்டுப்பாட்டிலிருந்து தப்பிவிடாமல்) அடக்கி நடத்துதல்manage or control (as one would a herd of cattle)
கட்டியங்காரன் கூத்தில் பிற பாத்திரங்களை அறிமுகப்படுத்துதல், பார்வையாளர்களைச் சிரிக்கவைத்தல் முதலிய செயல்களைச் செய்யும் பாத்திரம்a character in கூத்து who, among other things, introduces other characters to the audience and acts as a clown
கட்டியம் கூறு வருகையைத் தெரிவித்து முன்னறிவிப்புச்செய்தல்announce in advance
கட்டியாள் அடக்கி ஆளுதல்rule (with absolute authority)
கட்டில் நான்கு கால்களால் தாங்கப்படுவதும் இரும்புத் தகடு, மரப் பலகை ஆகியவற்றால் ஆன அல்லது கயிறு, நாடா போன்றவற்றால் பின்னப்பட்ட, செவ்வக நடுப்பகுதி உடைய, படுத்துக்கொள்வதற்கான சாதனம்bed (without mattress)
கட்டிவளர் (கட்சி, குடும்பம் முதலியவற்றை) பிளவுபடாமல் பாதுகாத்து முன்னேற்றம் அடையச்செய்தல்nurture
கட்டிவா கட்டுப்படியாதல்(of prices offered) be enough
கட்டிளம் கட்டுடலும் இளமையும் உடைய(of men) strong and youthful
கட்டு1(வீடு, பாலம் முதலியவற்றை வடிவமைத்தபடி) உருவாக்குதல்/(பறவை, தேனீ முதலியவை வசிப்பதற்கான) இடம் அமைத்தல்construct (a house, bridge, etc.)/build (a nest, etc.)
கட்டு2(இல்லாமல் ஆக்குதல் என்ற பொருளில் வழங்கும்) முதன்மை வினையின் செயல் மிகவும் வன்மையுடனும் தீர்மானத்துடனும் நிறைவேற்றப்படுவது என்பதைக் குறிப்பிடும் துணை வினைan auxiliary used to indicate that the action expressed by the main verb will be carried out forcefully and with determination
கட்டு3(ஒருவரின் உடலில் காயம், எலும்பு முறிவு முதலியவை ஏற்பட்ட இடத்தில் போடப்படும்) துணி அல்லது மாவுச் சுற்றுbandage
கட்டு4பால், தேன் முதலியவற்றில் உரைத்துக் கொடுக்கப்படும் கெட்டிப்படுத்தப்பட்ட மருந்துப்பொருள்medicine solidified given to the patient by rubbing it in milk, honey, etc
கட்டுக்கதை முழுக் கற்பனைpure imagination
கட்டுக்கழுத்தி சுமங்கலிmarried woman who has her husbsnd living
கட்டுக்காவல் (ஒருவரை அல்லது ஓர் இடத்தைச் சுற்றிப் போடப்படும்) பலத்த காவல்strict guard
கட்டுக்கோப்பு கட்டுப்பாட்டோடு கூடிய ஒற்றுமைbeing well knit or well disciplined
கட்டுச்சோறு (பயணத்திற்காக) பொட்டலமாகக் கட்டப்பட்ட உணவுfood packed (for a journey)
கட்டுத்திட்டம் கட்டுப்பாடுdiscipline
கட்டுப்படியாகு (பொருளின் விலை) போதுமானதாக இருத்தல்be enough
கட்டுப்படு அடங்கி நடத்தல்submit (oneself) to (a decision, rule, etc.)
கட்டுப்பாட்டு அறை ஒரு துறையின் அல்லது நிறுவனத்தின் பணிகள் பல இடங்களில் தொடர்ந்து நடைபெறும்போது தகவல்களைப் பெறுவதும் வேண்டிய இடங்களுக்கு அவற்றை அனுப்புவதுமாகிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் (தொலைதொடர்புச் சாதனங்கள் அமைந்துள்ள) இடம்control room (in police department, airport, etc.)
கட்டுப்பாடு (-ஆக, -ஆன) வரம்பை மீறாத ஒழுங்குdiscipline
கட்டுப்பெட்டி (புதிய மாறுதல்கள்பற்றி அறிந்துகொள்ளாமல்) பழைய வழக்கங்களையும் நம்பிக்கைகளையும் பின்பற்றி வாழ்பவர்an old fashioned person (who refuses to acknowledge the changes that are taking place)
கட்டுமரம் (மீனவர் கடலுக்குச் செல்லப் பயன்படுத்தும்) நீண்ட மரக்கட்டைகள் ஒன்றாகப் பிணைக்கப்பட்ட மிதவைraft made of logs tied together (used for sea fishing)
கட்டுமஸ்து உடல் வலிமை(of body) robust
கட்டுமானம்1(கட்டடம் போன்றவற்றின்) உருவாக்கம்construction (of a building, etc.)
கட்டுமானம்2கட்டுப்பாடுrestriction
   Page 1 of 36   1 2 3 36

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    × Want to join our classes?