Tamil to Tamil&English Dictionary

We are happy to provide you with the best Online Tamil to Tamil Dictionary/Translator.
For typing word in Tamil you can use our tool typing tool

  
Tamil WordTamil MeaningEnglish Meaning
கட்டுரை ஏதேனும் ஒரு பொருள்பற்றித் தகவல் தந்து உரைநடையில் எழுதப்படுவதுinformative essay
கட்டுவிரியன் கரும் சாம்பல் நிற உடலில் வெண்ணிற வளையம் போன்ற குறியுடைய ஒரு வகை நச்சுப் பாம்புpoisonous snake with visible white rings on its body
கட்டுறுதி (பெரும்பாலும் உடல் அமைப்பைக் குறிப்பிடும்போது) வலிமையும் உறுதியும் உடையது(of body or structure) strongly built
கட்டெறும்பு (சாதாரண எறும்பைவிடச் சற்றுப் பெரிய) கடித்தால் வலி ஏற்படுத்தக் கூடிய கரிய நிற எறும்புa kind of black ant (whose sting is painful)
கட்டைக்குரல் அடித்தொண்டையிலிருந்து எழும் கனத்த குரல்deep voice
கட்டை பிரம்மச்சாரி திருமணம் செய்துகொள்வதில்லை என்பதில் மிகவும் உறுதியாக இருப்பவர்confirmed bachelor
கட்டைவண்டி (இருசுக் கட்டையின் இரு பக்கங்களிலும் பெரிய சக்கரங்களை உடைய) மூடும் அமைப்பு இல்லாத, பாரம் ஏற்றிச் செல்லும் மாட்டு வண்டிa bullock cart without cover, used mainly for carrying loads
கட்டைவிரல் கையில் மற்ற நான்கு விரல்களைவிட உயரத்தில் குறைந்தும் தனித்தும் (பொருளைப் பிடிப்பதற்கு வசதியாகவும்) இருக்கும் விரல்/காலில் மற்ற விரல்களைவிடத் தடியாக உள்ள முதல் விரல்thumb/big toe
கட்டோடு அடியோடுcompletely
கட (ஒரு பரப்பின்) ஒரு பக்கத்திலிருந்து எதிர்ப் பக்கத்தை அடைதல்/(இடத்தை, பொருளை, நபரை) கழிந்து நீங்குதல்cross (a road, a river, etc.)/go past
கடகட (உறுதித் தன்மையுடன் அல்லது இறுக்கத்துடன் இருக்க வேண்டியவை) ஆட்டம்காணுதல்become loose
கடகட-என்று1தடங்கல் இல்லாமல்without break, interruption or pause
கடகட-என்று2/-என்ற(பொருள்) உருள்வதைப்போன்று/உருள்வதைப்போன்றheartily and loudly/loud
கடகம்1நண்டைக் குறியீட்டு வடிவமாக உடைய நான்காவது ராசிfourth constellation of the zodiac having crab as its sign
கடகம்2பனை ஓலையால் பின்னப்பட்ட பெரிய பெட்டிa box-like basket made of palm leaves
கடத்தல் (ஒருவரை, ஒரு பொருளை) கடத்துதல்kidnapping
கடத்தி வெப்பத்தை அல்லது மின்சாரத்தைத் தன் ஊடாகச் செல்ல அனுமதிக்கும் பொருள்conductor (of heat and electricity)
கடத்து (ஒருவரை) விருப்பத்துக்கு மாறாகக் கொண்டுபோதல்(அரசால் தடைசெய்யப்பட்ட பொருளை) அனுமதி இல்லாமல் எடுத்துச்செல்லுதல்kidnap (a person)
கடந்த (காலத்தைக் குறிக்கையில்) கழிந்துபோன(of time) past
கடப்பாடு (தானே உணர்ந்து செய்ய வேண்டிய) கடமைbounden duty
கடப்பாரை (இடித்தல், நெம்புதல் போன்ற செயல்களுக்குப் பயன்படும்) பட்டை முனையும் கொண்டைத் தலையுமாக உள்ள கனத்த இரும்புக் கம்பிa long iron bar (used for digging pits, raising heavy objects, etc.)
கடப்பைக்கல் (கட்டடங்களின் தரையில் பதிப்பதற்குப் பயன்படுத்தும்) கடினமான கறுப்பு நிறக் கல்a kind of granite (used for paving floors)
கடம்பு வழவழப்பாகக் காணப்படும் முடிச்சுமுடிச்சான கிளைகளைக் கொண்ட பெரிய காட்டு மரம்common cadamba (tree)
கடம்போடு (பாடங்களை) மனப்பாடம்செய்தல்learn by rote
கடமான் (காடுகளில் வசிக்கும்) நீண்டு கிளைத்த கொம்புகளை உடைய ஒரு வகைப் பெரிய மான்sambar
கடமை (ஒருவர் தான்) இருக்கும் நிலை, வகிக்கும் பதவி முதலியவற்றின் காரணமாகச் செய்ய வேண்டிய பணி/(ஓர் அரசு, அமைப்பு முதலியன) அடிப்படையாக ஆற்ற வேண்டிய பொறுப்புduty/obligation
கடமைப்பட்டிரு நன்றி தெரிவிக்க வேண்டியிருத்தல்be indebted to
கடல் உப்புக் கரிக்கும் நீர் நிறைந்த, அலைகள் எழும் பெரும் பரப்புsea
கடல்மட்டம் நிலப்பகுதியில் உயரத்தையும் நீர்ப்பகுதியில் ஆழத்தையும் கணக்கிட ஏற்படுத்திக்கொண்ட பொது அளவுmean sea level
கடலியல் கடலில் உள்ள பொருள்கள், வாழுகிற உயிரினங்கள் ஆகியவற்றை ஆராயும் அறிவியல் துறைoceanography
கடலை சில தாவரங்களின் தோல் மூடிய பருப்பு அல்லது விதைa general term for some seeds or nuts covered with husk
கடலை எண்ணெய் வேர்க்கடலையை ஆட்டி எடுக்கப்படுகிற எண்ணெய்groundnut oil
கடலைப் பருப்பு (வடை முதலியவை செய்வதற்குப் பயன்படுத்தும்) இரண்டாக உடைத்த கொண்டைக்கடலைthe pulse known as bengalgram
கடலை மாவு கடலைப் பருப்பின் மாவுflour of bengalgram
கடலை மிட்டாய் வறுத்த வேர்க்கடலையை வெல்லப் பாகில் போட்டுச் சிறு சதுரமாகவோ செவ்வகமாகவோ வெட்டி எடுத்த தின்பண்டம்peanut candy
கடலோடி (முற்காலத்தில் ஒரு நாட்டுக்குச் செல்ல அல்லது நாட்டைக் கண்டுபிடிக்கத் தரை வழியாகச் செல்வதைவிட) கடல் வழியாகப் பயணம்செய்வதை விரும்பி மேற்கொண்டவர்seafarer (of olden times)
கடவுச்சீட்டு (வெளிநாடு செல்வதற்கு அரசு தரும்) பயண அனுமதிக்கான கையேடு அல்லது பத்திரம்passport
கடவுள் உலகம், உயிர் ஆகியவற்றின் தோற்றத்துக்குக் காரணமாகக் கருதப்படும், மனித ஆற்றலால் அறிய முடியாதபடி இருப்பதாக நம்பப்படும் மேலான சக்திgod
கடற்கரை கடல் அலைகள் நிலத்தைத் தொடும் மணல் நிறைந்த பகுதிseashore
கடற்படை கப்பல்படைnavy
கடற்பாசி கடல் நீரில் வளரும் கொத்தாக உள்ள பாசி வகைseaweed
கடன்படு கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய நிலையில் இருத்தல்be a debtor
கடனாளி கடன் வாங்கியவன்one who is in debt
கடனுக்கு (ஒன்றைச் செய்வதில்) எந்த வித ஈடுபாடும் இல்லாமல் வெறும் கடமை என்ற அளவில்for the sake of formality
கடா ஆட்டில் ஆண்male of sheep
கடாசு வீசி எறிதல்throw
கடாமுடா-என்று பெருத்த ஒலியோடுwith a tumbling or rumbling noise
கடாய் வாணலி(a kind of) frying pan
கடாரங்காய் ஒரு வகை நாரத்தைa kind of seville orange
கடாவு (ஆணி, ஆப்பு முதலியவற்றை) செலுத்துதல்drive (a nail, wedge, etc.)
கடி1கடிந்துகொள்ளுதல்scold
கடி2(பொருளை நொறுக்குதல், துண்டாக்குதல் போன்றவற்றிற்காக) பற்களைப் பதித்துப் பலமாக அழுத்துதல்(நாய், பாம்பு முதலியன) பல் பதித்துக் கவ்வுதல்bite (with teeth)
கடி3பல்லின் பலமான பதிவுbiting (with teeth)
கடிகாரம் ஒரு நாளின் நேரத்தை மணி, நிமிடம், நொடி ஆகியவையாக அளவிடும் கருவிclock
கடிதப் போக்குவரத்து (இருவருக்கிடையே நிகழும்) கடிதப் பரிமாற்றம்exchange of letters
கடிதம் ஒருவர் மற்றொருவருக்குத் தெரிவிக்க விரும்பும் செய்தியை எழுதிக் கையெழுத்திட்டு அனுப்பும் தாள்letter (sent through a person or by post)
கடிவாய் (நாய், தேள் முதலியவை) பல்லால் கடித்து அல்லது கொடுக்கால் கொட்டிக் காயம் ஏற்படுத்திய இடம்wound caused by the bite
கடினம் (-ஆன) (செயலைக் குறிக்கும்போது) எளிமையாக அல்லது சுலபமாக இல்லாதது(when referring to acts) difficult
கடு (கை அல்லது கால் ஒரு செயலைத் திரும்பத்திரும்பச் செய்வதால் அல்லது நீண்ட நேரம் செய்வதால்) குத்துவது போன்று வலித்தல்(வயிற்றில்) பிசைவது போன்ற வலி ஏற்படுதல்(of hands and legs) have a throbbing pain
கடுக்கன் (ஆண்கள் அல்லது சிறுவர்கள்) காது மடலின் கீழ்ப்பகுதியில் போட்டுக்கொள்ளும் கல் வைத்துக் கட்டிய காதணிa kind of stud (worn by men or boys) inlaid with stone
கடுக்காய் கரும் பழுப்பு நிற ஓடும், துவர்ப்புச் சுவையும் கொண்ட (மருந்தாகப் பயன்படுத்தும்) சிறிய காய்gall-nut
கடுக்காய் கொடு (ஒருவர் மற்றொருவரை அவர் கண் எதிரிலேயே தன் சாமர்த்தியம், தந்திரம் முதலியவற்றால்) ஏமாற்றித் தப்பித்தல்give
கடுகடு (பேச்சில், செயலில் ஒருவர் தன் கோபத்தின்) கடுமையை வெளிப்படுத்துதல்scowl
கடுகடுப்பு (கோபத்தால் பேச்சில், செயலில் வெளியாகும்) கடுமைscowl
கடுகதி (பேருந்து, ரயில் போன்றவற்றைக் குறிக்கையில்) விரைவு(of bus, train) express
கடுகு (எண்ணெய் எடுப்பதற்கும் சமையலில் தாளிப்பதற்கும் பயன்படும்) மிகச் சிறியதாகவும் உருண்டையாகவும் இருக்கும் கரிய நிற விதைmustard (seed)
கடுகுமாங்காய் ஆவக்காய்a kind of mango pickle
கடுங்காப்பி பால் சேர்க்கப்படாத காப்பிblack coffee (with sugar)
கடுங்காவல் தண்டனை சில கொடிய குற்றங்களுக்கு விதிக்கப்படும் கடுமையான சிறைத் தண்டனைrigorous imprisonment
கடுதாசி கடிதம் letter
கடும் (பொறுக்க முடியாத) அளவுக்கு அதிகமானextreme
கடுமை (பொறுக்க முடியாத) அளவுக்கு அதிகம்severity
கடுவன் குரங்கு, பூனை ஆகியவற்றில் ஆண்male monkey
கடூரம் மிகையான கடுமைharshness
கடை1(மத்து, கோல் முதலியவற்றை ஒன்றில் வைத்து) வலமாகவும் இடமாகவும் மாறிமாறிச் சுழலச்செய்தல்churn (butter-milk)
கடை2(பொருள்) விற்கப்படும் நிலையம்shop
கடை3(காலத்தில், இடத்தில்) முடிவுend (in time and space)
கடைக்காரன் கடைக்குச் சொந்தக்காரன் அல்லது கடையில் வேலை செய்பவன்shop-keeper or employee in a shop
கடைக்கால் அஸ்திவாரம் போடுவதற்குத் தோண்டப்படும் பள்ளம்foundation pit
கடைக்குட்டி (ஒரு குடும்பத்தில்) கடைசிக் குழந்தைyoungest (of the children)
கடைக்கோடி (ஓர் இடம்) முடியும் முனைthe very end (of a street, etc.)
கடைகண்ணி கடைbazaar
கடைசல் (மரக் கட்டை, உலோகம் முதலியவற்றை) தேவையான வடிவம் பெறும்படி கடைதல்shaping wood or metal (on a lathe)
கடைசி (தொடர்ச்சியில், வரிசையில், காலத்தில்) முடிவுlast
கடைத்தெரு (ஊரில்) கடைகள் அதிகம் உள்ள பகுதிbazaar
கடைத்தேற்று ஈடேற்றுதல்save
கடைத்தேறு ஈடேறுதல்be redeemed or saved
கடைந்தெடுத்த (நல்லது அல்லாததற்கு அடையாக) முற்றிலும்somebody bad
கடைநிலை பல நிலைகளைக் கொண்ட பணி அமைப்பில் கடைசி நிலைlast grade (in the hierarchical structure of any service)
கடைப்பிடி (கொள்கை, வழிமுறை, மரபு முதலியவற்றை) பின்பற்றுதல்follow
கடைபோடு (ஓர் இடத்தில் நிலையாக அல்லது தற்காலிகமாக) கடைவைத்தல்open a shop
கடையடைப்பு (ஒரு கோரிக்கைக்காகவோ எதிர்ப்பாகவோ) அனைத்துக் கடைகளையும் வியாபாரம் நடக்காதபடி மூடுதல்shut down
கடையாணி அச்சாணிaxle pin (of a wheel)
கடைவாய் வாயில் உதடுகள் பிரியும் ஓரம்corner of the mouth
கடைவாய்ப் பல் உணவைக் கூழாக்க உதவும், தட்டையான தலைப்பாகத்தைக் கொண்ட பெரிய பல்molar tooth
கடைவிரி (சாலை ஓரத்தில் அல்லது சந்தையில்) பொருள்களை விற்பனைக்குத் தயாராகப் பரப்பி வைத்தல்(of hawking) set up makeshift open stalls
கண்1பார்ப்பதற்குப் பயன்படும் உறுப்புeye
கண்கட்டு வித்தை கண் எதிரிலேயே சில பொருள்களைத் திடீரென்று தோன்ற அல்லது மறையச் செய்யும் (கண்களால் பார்த்தும் நம்ப முடியாத) ஜால வித்தைart of conjuring
கண்கண்ட தெய்வம் தான் உண்டு என்பதை உணரச்செய்வதாக இருக்கும் தெய்வம்god whose grace one experiences personally
கண்கலங்கு துன்பத்துக்கு உள்ளாதல்be in tears
   Page 1 of 36   1 2 3 36