Tamil to Tamil&English Dictionary

We are happy to provide you with the best Online Tamil to Tamil Dictionary/Translator.
For typing word in Tamil you can use our tool typing tool

  
Tamil WordTamil MeaningEnglish Meaning
கணம்2(பெரும்பாலும் சோதிடத்தில்) பிரிவுclass
கணம்3பொதுவான அம்சங்கள் கொண்ட பொருள்களின் வரையறுக்கப்பட்ட தொகுப்பு(in mathematics) set
கணவன் ஒரு பெண்ணைச் சட்டப்படி மணந்து வாழ்பவன்husband
கணவாய் (போக்குவரத்துக்குப் பயன்படும் அளவில்) இரண்டு மலைகளுக்கு இடையே இயற்கையாக அமைந்துள்ள பாதை(mountain) pass
கணி (இன்னது என்று அல்லது இன்ன விளைவுகள் உடையதாக இருக்கும் என்று) மதிப்பிடுதல்predict
கணிகை (கலைகளில் தேர்ச்சி பெற்ற) விலைமகள்courtesan
கணிசம்-ஆக/-ஆன (குறைவு என்று சொல்ல முடியாதவாறு) குறிப்பிடத் தகுந்தபடியாக/குறிப்பிடத் தகுந்தபடியானconsiderably
கணிதம் எண்களையும் அளவுகளையும் குறித்து விவரிக்கும் அறிவியல்mathematics
கணிப்பு (இன்னது என்றும் அல்லது இன்ன விளைவுகள் உடையதாக இருக்கும் என்றும் செய்யப்படும்) நிர்ணயம்forecast
கணிப்பொறி கொடுக்கப்படும் தகவல்களைத் தன்னுள் பதிவுசெய்துகொண்டு அவற்றைத் தொகுத்துப் பகுத்துத் தருதல் போன்ற பணியையும் கணக்கிடுதல் போன்ற பணியையும் மிக விரைவாகச் செய்யும் மின்னணுக் கருவிcomputer
கணினி கணிப்பொறிcomputer
கணீர்-என்று/-என்ற (குரல், ஒலி, மணி ஓசை) உரத்துத் தெளிவாக/உரத்துத் தெளிவான(of voice, clang of bell) clear and loud
கணு (கரும்பு, மூங்கில் முதலியவற்றில்) ஒரு துண்டுப் பகுதியும் மற்றொரு துண்டுப் பகுதியும் இணைந்தது போல் காணப்படும் வரையுள்ள இடம்(of sugar-cane, bamboo, etc.) node
கணுக்கால் பாதமும் கெண்டைக்காலின் கீழ்ப்பகுதியும் இணையும் இடம்ankle
கணை1அம்புarrow
கணை2(மண்வெட்டி, கோடாலி முதலியவற்றின்) மரத்தாலான கைப்பிடிwooden handle (of spade, axe, etc.)
கணைக்கால் முழங்காலுக்கும் பாதத்துக்கும் இடையில் உள்ள காலின் பகுதிthe part of the leg between the knee and the ankle
கணைச்சூடு பித்தம் அதிகரிப்பதால் குழந்தைகளின் உடல் இளைத்தும், இயல்புக்கு அதிகமான சூட்டுடனும் இருக்கும் நிலைincrease in body temperature due to the excessive secretion of bile (according to the Siddha system)
கணையம் இரைப்பைக்குக் கீழ் இடது பக்கம் அமைந்துள்ளதும் உணவைச் செரிக்கச் செய்யும் ஒரு விதத் திரவத்தைச் சுரப்பதுமான உறுப்புpancreas
கணையாழி (பொதுவாக) மோதிரம், (சிறப்பாக) முத்திரை மோதிரம்(generally) ring
கத்தரிக்கோல் இரண்டு சம நீள உலோகப் பட்டைகளைக் குறுக்கில் ஒன்றின் மேல் ஒன்றாக வைத்து இணைத்து அவற்றின் கூர்மையான உட்பகுதியால் துணி முதலியவற்றை வெட்டப் பயன்படுத்தும் ஒரு கருவிscissors
கத்தரி வெயில் அக்கினி நட்சத்திரம்hottest days
கத்தி பட்டையான உலோகத் தகட்டின் ஓரங்களில் கூர்மை உடையதாக உள்ள வெட்டும் கருவிknife
கத்திக்கப்பல் (சிறுவர்கள் செய்யும்) கீழ்ப்புறம் கத்தி முனை போன்ற பகுதியைக் கொண்ட காகிதக் கப்பல்a paper boat with a sharp edge at the bottom (made by children)
கத்திரி வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்படும் (உணவாகும் காய் தரும் ஊதா நிறப் பூப் பூக்கும்) ஒரு காய்கறிச் செடிthe plant of aubergine
கத்திரிக்காய் காய்கறியாகப் பயன்படுத்தும் கத்திரிச் செடியின் காய்aubergine
கத்தோலிக்க (கிறித்தவ மதத்தில்) ரோமானியப் பிரிவைச் சேர்ந்தcatholic
கதகத-என்று இரு மிதமான வெப்பத்துடன் இருத்தல்be warm
கதகளி விஸ்தாரமான முக ஒப்பனையையும் நுண்ணிய முக அசைவுகளையும் முக்கியக்கூறுகளாகக் கொண்டு கதை ஒன்றை நடித்துக்காட்டும் (கேரள நாட்டின்) நாட்டிய நாடக வகைகளுள் ஒன்றுa classical dance-drama form of kerala
கதம்பம் (பல வகையான) பூக்களும் இலைகளும் வேர்களும் ஒன்றாகத் தொடுக்கப்பட்ட சரம்flowers of different kinds, leaves of aromatic plants strung together
கதர் கையால் நூற்ற இழைகளைக்கொண்டு கைத்தறியில் நெய்யப்பட்ட துணிcloth woven by handloom with hand-spun yarn
கதலி அளவில் சிறிய ஒரு வகை வாழைப்பழம்a kind of small size banana
கதவடைப்பு (தொழிலாளர்களுடன் ஏற்படும் பிரச்சினைக்குத் தீர்வு காணும்வரை தொழிற்சாலையில்) பணி செய்ய அனுமதி மறுப்புlockout
கதவு (கட்டடம், அறை முதலியவற்றின் வாயிலில் அல்லது அலமாரி, வாகனம் முதலியவற்றின் வெளிப்பக்கத்தில் திறந்து மூடுவதற்கு ஏற்ற வகையில்) மரத்தால் அல்லது பிற பொருளால் ஒற்றையாக அல்லது பிரிவுகளாகச் செய்யப்படும் அமைப்புdoor
கதாகாலட்சேபம் (பெரும்பாலும் கோயில்களில்) புராணக் கதைகளை இசைப்பாடல்களுடன் கூறி நடத்தும் சொற்பொழிவுnarration of puranic stories interspersed with songs
கதாசிரியன் கதை எழுதுபவர்story writer
கதாநாயகன் (காப்பியம், திரைப்படம் முதலியவற்றில்) முக்கிய ஆண் பாத்திரம்hero (of a play, epic, etc.)
கதாநாயகி கதாநாயகன் என்பதன் பெண்பால்heroine
கதாபாத்திரம் கதையில் வரும் பாத்திரம்character (in an epic, story, etc.)
கதி2(இயங்கும் ஒன்றின் அல்லது நடைபெறும் ஒன்றின்) சீரான போக்கு அல்லது நடைpace
கதிகலங்கு (மோசமான விளைவு ஒன்றின் பாதிப்பால்) நிலைகுலைதல்be badly shaken up
கதிர்1தானியப் பயிர்களில் (மணிகள் உள்ள) மேல்பகுதிear (of cereal)
கதிர்2(ஒளியின்) கீற்றுray (of light)
கதிர்நாவாய்ப்பூச்சி நெற்பயிரில் பால் பிடிக்கும் பருவத்தில் மணிகளில் உள்ள பாலை உறிஞ்சி சேதப்படுத்தும் ஒரு வகைப் பூச்சிearhead bug (that causes damage to the corn of the paddy)
கதிரடி (நெல்லின் தாளைக் கொத்தாகக் கையில் பிடித்து) தரையில் அடித்து மணிகளைப் பிரித்தல்thresh (paddy)
கதிரவன் சூரியன்sun
கதிரியக்கம் சில தனிமங்களின் அணுக்களைப் பிளக்கும்போது வெளிப்படும் (உயிருக்கு ஆபத்தான) சக்திradiation
கதிரை நாற்காலிchair
கதுப்பு கன்னச் சதைplumpness of the cheek
கதை1(ஒருவரோடு ஒருவர்) பேசுதல்converse
கதை2ஏதேனும் ஒரு செய்தியை, நிகழ்ச்சியை அல்லது கற்பனையான ஒன்றை மையமாக வைத்துச் சுவையுடன் சொல்லப்படுவதுstory
கதை3(பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட) நீண்ட பிடியும் உருண்டை வடிவத் தலைப்பாகமும் உடைய உலோகத்தாலான ஒரு வகை ஆயுதம்a heavy mace without spikes (used as a weapon in olden days)
கதை அள அதிகமாக நம்ப முடியாத அளவில் கூறுதல்spin a yarn
கதை கட்டு பொய்ச் செய்தி கிளப்புதல்make up a gossipy story
கதைப்பாடல் (தெய்வத்தின் அல்லது ஒரு பகுதியில் தலைவனாகக் கருதப்படுபவனின்) வாழ்க்கைச் சரித்திரத்தைப் பாட்டு வடிவில் கூறும் நாட்டுப்புற இலக்கிய வகைfolk epic-poem
கதைபண்ணு தெரிந்துகொண்டும் தெரியாதது போல் பேசுதல்(while talking to s
கந்தக அமிலம் கந்தகத்தை மூலக்கூறாகக் கொண்டுள்ள அமிலம்sulphuric acid
கந்தகம் (வெடிமருந்து, தீக்குச்சி முதலியவை தயாரிக்கப் பயன்படும்) கார நெடியுடைய மஞ்சள் நிறப் பொருள்sulphur
கந்தர்வமணம் (கந்தர்வர்கள் செய்துகொள்வது போன்ற) சடங்கு எதுவும் இல்லாத காதல் திருமணம்marriage based on mutual love and without rituals (as practiced by Gandharvas)
கந்தர்வர் (புராணத்தில்) தேவர்களுள் (இசையை விரும்பும்) ஒரு பிரிவினர்a class of celestial beings (fond of music)
கந்தரகோளம் ஒழுங்கில்லாத நிலைdisorderly state
கந்தல் கிழிந்து துண்டுதுண்டாக இருப்பதுrag(s)
கந்துவட்டி கடனாகக் கொடுக்கப்படுகிற தொகைக்கு முன்கூட்டியே வாங்குகிற வட்டிinterest for a loan deducted from the principal at the time of lending
கந்தூரி விழா மறைந்த மகானின் நினைவாக ஆண்டுதோறும் முஸ்லிம்கள் கொண்டாடும் விழாa festival celebrated by Muslims annually in memory of Muslim saints
கந்தை கிழிந்து ஒட்டுப்போட்ட துணிsewn up tatters
கந்தோர் அலுவலகம்office
கப்சிப்-என்று (திடீரென்று) அமைதியாக(suddenly) quiet
கப்பம் திறைtribute (to a king)
கப்பல் மனிதர்களையும் பொருள்களையும் ஏற்றிச் செல்வதற்கான நீர்வழிப் போக்குவரத்து வாகனம்ship
கப்பல்கூடம் கப்பல் கட்டும் அல்லது பழுதுபார்க்கும் இடம்shipyard
கப்பல்படை போர்க் கப்பல்கள் கொண்ட ராணுவப் பிரிவுnavy
கப்பி1(தார் போடாத சாலை அமைக்கப் பயன்படுத்தும்) மண் கலந்த சிறுகற்கள்gravel
கப்பி2(பொருள்களை இழுத்துத் தூக்கப் பயன்படும் விதத்தில் கயிறு முதலியவை பதிந்து) சுற்றக் கூடிய உருளைpulley
கப்பு1செறிந்து படிதல்be wrapped up
கப்பு2சாயத்தின் அழுத்தம்fastness of colour (in dyeing cloth)
கபக்கட்டு (நெஞ்சில்) சளி திரண்டு ஏற்பட்டிருக்கும் அடைப்புaccumulation of phlegm (in the lungs)
கபகப-என்று மிகுந்த உக்கிரத்துடன் அல்லது வேகத்துடன்in a raging manner
கபடதாரி கபடம் நிறைந்த நபர்man with guile
கபடநாடகம் (பேச்சு, செயல் முதலியவற்றில்) தீய உள்நோக்கத்தை மறைத்துவைத்திருக்கும் நடிப்புoutward show concealing the deceit
கபடம் தீய உள்நோக்கம்guile
கபம் சளிphlegm
கபருஸ்தான் இறந்தவர் உடலை அடக்கம்செய்யும் இடம்burial place
கபளீகரம்செய் (பெருமளவில்) உட்கொள்ளுதல்swallow up
கபாலம் (உறுதியான எலும்பையுடைய) மண்டையோடுskull
கபிலம் கரும் சிவப்பு(of colour) coffee brown
கபோலம் கன்னம்cheek
கம்-என்று1எதையும் செய்யாமல்(be) quiet
கம்-என்று2மூக்கைத் துளைக்கும்படியாகpleasantly
கம்பசூத்திரம் மிகவும் கடினமானதுthat involves extraordinary skill
கம்பம் (குழியில் செங்குத்தாக நிறுத்தப்படும்) மரம், உலோகம் முதலியவற்றால் ஆன தூண்post
கம்பவுண்டர் (மேல்நாட்டு மருத்துவ முறையில் பட்டம் பெற்ற மருத்துவர் நோயாளிகளுக்கு எழுதித் தரும் முறைப்படி) மருந்து கலந்துதரும் பணி செய்பவர்one who compounds medicine according to the prescription
கம்பளம் (பெரும்பாலும்) ஆட்டு ரோமத்தால் நெய்யப்பட்ட தரைவிரிப்பு(woollen) carpet
கம்பளி ஆட்டு ரோமத்தால் தயாரிக்கப்பட்டதுmade of wool
கம்பளிப்புழு/கம்பளிப்பூச்சி உடம்பின் மேல்புறத்தில் ரோமங்களை உடையதும் (மனித உடம்பில் படும்போது) அரிப்பை ஏற்படுத்தக் கூடியதுமான கரும் பழுப்பு நிறப் புழுcaterpillar
கம்பி உலோக இழைa thin metal line
கம்பிஎண்ணு சிறைத் தண்டனை பெறுதல்be put behind bars
கம்பிநீட்டு (பொருள்களைத் திருடிவிட்டு அல்லது தவறான செயல்களைச் செய்துவிட்டு) அகப்படாமல் ஓடிவிடுதல்decamp
கம்பிமத்தாப்பு கையில் பிடித்துக் கொளுத்தியதும் பூக்கள் போல அல்லது நட்சத்திரங்கள் போலத் தீப்பொறிகள் சிதறும் பட்டாசு வகைsparkler
கம்பியில்லாத் தந்தி (நேரடியான மின் கம்பி இணைப்பு இல்லாமல்) ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் செய்தியை மின்காந்த அலைகளாக மாற்றி அனுப்பப் பயன்படுத்தும் கருவிwireless
கம்பீரம் (பேச்சு, நடை, பார்வை முதலியவற்றில் வெளிப்படும்) ஆளுமை மிக்க தோரணைelegance
   Page 3 of 36    1 2 3 4 5 36