Tamil to Tamil&English Dictionary

We are happy to provide you with the best Online Tamil to Tamil Dictionary/Translator.
For typing word in Tamil you can use our tool typing tool

  
Tamil WordTamil MeaningEnglish Meaning
கம்பு1உருண்டையாகத் திருத்தமாக வெட்டியெடுக்கப்பட்ட மரக்கோல்(shapely) stick
கம்பு2(உணவுப்பொருளாகப் பயன்படும்) பச்சையும் வெள்ளையும் கலந்த நிறத்தில் மணிகள் உள்ள ஒரு வகைத் தானியம்bulrush
கம்மல்1தங்கத்தாலான (பெண்கள் அணியும்) காதணி(gold) ear-ring
கம்மல்2(ஜலதோஷம் போன்றவற்றால்) குரலின் கம்மிய ஒலி(of voice) hoarse and faint nature
கம்மி (அளவிட்டு அல்லது அளந்து கூறக் கூடியவற்றில்) குறைவுvery little
கம்மியர் பொற்கொல்லர், கொல்லர் போன்றோரைக் குறிக்கும் பொதுப்பெயர்a general term for smith and artisan
கமக்காரன் விவசாயிpeasant
கமகம் ஒரு ஸ்வரத்தில் அல்லது ஒரு ஸ்வரத்திலிருந்து மற்றொரு ஸ்வரத்திற்குச் செல்லும்போது வெளிப்படுத்தும் ஒலி அசைவுthe transition from one ஸ்வரம் to another in the rendering of a composition through voice modulation
கமகம அதிகமாக மணத்தல்be fragrant
கமகம-என்று/-என்ற மணம் மிகுந்து/மணம் மிகுந்தsmelling pleasantly/smelling pleasant
கமண்டலம் (முனிவர், மதத் தலைவர் ஆகியோர் பூஜைக்கு உபயோகிக்கும்) நீர் வருவதற்கு ஏற்றவாறு குழல் வடிவ மூக்குக் கொண்ட ஒரு வகைச் செம்புa cruet-like vessel (containing holy water carried by saints and heads of certain religious institutions)
கமம் விவசாயம்agriculture
கமர்கட்டு வெல்லப்பாகில் தேங்காய்த் துருவலைப் போட்டுக் கிளறிச் சிறுசிறு உருண்டையாகப் பிடிக்கப்பட்ட ஒரு தின்பண்டம்a small ball-shaped sweetmeat prepared by mixing coconut scrapings in treacle
கமலா ஆரஞ்சு (மலைப் பகுதிகளில் விளையும்) சிவந்த மஞ்சள் நிறத் தோலினுள் சுளைகளைக் கொண்ட சிறு பழம்a kind of orange which has a loose jacket
கமலை பெரிய தகரத் தவலை போன்றதும் அடிப்பகுதியில் நீண்ட தோல் பை இணைக்கப்பட்டதும் மாட்டின் உதவியால் கிணற்றிலிருந்து நீர் இறைக்கப் பயன்படுவதுமான ஒரு விவசாயத் தொழில் சாதனம்a device consisting of a cauldron-like vessel and bellows-like part attached at the bottom for lifting water from a well with oxen
கமழ் (மணம்) நிறைந்திருத்தல்(of fragrance) be permeated with
கமறல் எரிச்சலையும் இருமலையும் ஏற்படுத்தும் (மிளகாய் வற்றல் போன்றவற்றின்) நெடிpungent and irritating smell (of chillies, tobacco, etc.)
கமறு (இருமவைக்கும் வகையில் தொண்டையில்) நெடி தாக்குதல்(of pungent smell, acrid things) cause irritation (in the throat)
கமுக்கம்-ஆக/-ஆன வெளியே தெரியாதபடி/வெளிவிடாதsecretively/secretive
கமுகு பாக்கு மரம்areca (tree)
கயமை (ஒருவரின் செயல், குணம் ஆகியவற்றைக் குறிக்கையில்) மிகவும் கேவலம்vileness
கயல் (இலக்கியங்களில் பெண்களின் நீண்ட விழிக்கு உதாரணமாகக் காட்டப்படும்) கெண்டை மீன்carp
கயவன் கீழ்த்தரமான அல்லது தீய குணமுடையவன்dishonest person
கயிறு (பொருள்களைக் கட்டவும் தூக்கவும் இழுக்கவும் பயன்படுத்தும்) சணல், நார், நூல் போன்றவற்றைத் திரித்து முறுக்கிச் செய்யப்படுவதுrope (made of jute)
கயிறுதிரி அரைகுறையாகத் தெரிந்த தகவல்களைக்கொண்டு பொய்யாகக் கதை விடுதல்spin a yarn
கர்ணகடூரம் (பேச்சு, இசை முதலியவற்றைக் குறிக்கையில்) காதுக்குச் சற்றும் இனிமையில்லாததுthat which is jarring
கர்ணபரம்பரை ஒரு பரம்பரையிலிருந்து மற்றொரு பரம்பரைக்குக் காலம்காலமாக வாய்வழியாகச் சொல்லப்பட்டு வழங்கும் முறைspoken account (of something/somebody) handed down from the past
கர்ணம்1கிராமங்களில் நிலவரி, நில அளவை தொடர்பான கணக்குகளை எழுதி வைக்கும் பணிக்கு வருவாய்த் துறை அதிகாரிகளால் முன்பு நியமிக்கப்பட்ட ஊழியர்(formerly) village officer who maintained the records of land revenue, etc of a village
கர்ணம்2தலைகீழாகப் பாய்தல்somersault
கர்ணம்3ஒரு செங்கோண முக்கோணத்தில் அடிப்பக்கத்தையும் குத்துயரத்தையும் இணைக்கும் கோடுhypotenuse
கர்ணம்4(பெரும்பாலும் பிற சொற்களோடு இணைந்து) காது(a combining form) ear
கர்த்தர் இயேசு கிறிஸ்துவாகிய கடவுள்the Lord
கர்த்தா (ஒரு செயலை) செய்பவன்doer
கர்நாடக சங்கீதம் தென்னிந்திய மரபில் வந்த இசை முறைcarnatic music
கர்நாடகம் (-ஆக, -ஆன) (மாறிவரும் பழக்கவழக்கங்களுக்குத் தகுந்தபடி நவீனமாக மாற விரும்பாத) பழைய மரபு வழிப்பட்ட முறைbeing old-fashioned
கர்ப்பகிரகம் கோயிலின் மையத்தில் மூலஸ்தானத்தைக் கொண்டு விளங்கும் இடம்sanctum sanctorum
கர்ப்பம் பெண்ணின் கருப்பையில் கரு உருவாகி வளர்ந்துவரும் நிலைthe state of having conceived
கர்ப்பவதி கர்ப்பிணிpregnant woman
கர்ப்பிணி வயிற்றில் குழந்தையை உடையவள்expectant mother
கர்மயோகி தான் செய்யும் செயலைத் தவிர வேறு எதையும் சிந்திக்காதவர்one who pursues his work single-mindedly
கர்லாக்கட்டை (உடற்பயிற்சிக்குப் பயன்படும்) தடித்த கீழ்ப்புறத்தை உடைய நீள் உருண்டை வடிவக் கட்டைheavy wooden club (used for physical exercises)
கர்வம் (-ஆக, -ஆன) பிறரை மதிக்காமல் தன்னைப்பற்றி உயர்வாக எண்ணும் போக்குarrogance
கர்வி கர்வம் கொண்ட நபர்one who is arrogant or haughty
கர்ஜனை (சிங்கம் எழுப்பும்) பெரும் குரல்(of lion) roar
கர்ஜி (சிங்கம், கடல்) பேரொலி எழுப்புதல்(of lion, sea, wind, etc.) roar
கரகம் (வேண்டுதலுக்காகவோ கேளிக்கைக்காகவோ) (நீர் நிரம்பிய) சிறிய உலோகக் குடத்தைப் பூவால் அலங்கரித்துத் தலையில் வைத்துக் கீழே விழாதவாறு நையாண்டி மேளத்தின் தாளத்திற்கு ஏற்ப ஆடும் நாட்டுப்புறக் கலைan acrobatic folk dance in which the dancer bears on his or her head a flower-decked water-filled brass pot and dances to the rhythm of நையாண்டி மேளம் (either for fulfilling a vow or entertainment)
கரகரப்பு (தொண்டையில்) அரிப்புirritation (in the throat)
கரகோஷம் (ஒருவரைப் பாராட்டும் நோக்கத்தில் அவையினர்) கைதட்டி உண்டாக்கும் ஒலி(thunderous) applause
கரடி உடல் முழுவதும் அடர்ந்த சொரசொரப்பான ரோமம் உடையதும் கால்களில் கூரிய நகங்கள் உடையதும் (கால்களால் மனிதரை இறுக்கிப் பிடிக்கும் என்று கூறப்படுவதும்) ஆன ஒரு காட்டு விலங்குbear
கரடியாய்க் கத்து (ஒருவரின் கருத்து, திட்டம் முதலியவற்றைப் பிறர் கேட்காதபோதும்) திரும்பத்திரும்ப (வலியுறுத்தி) கூறுதல்reiterate to no purpose
கரடிவிடு (தான் சொல்வதை மற்றவர் நம்பிவிடுவார் என்ற நினைப்பில்) தீங்கற்ற பொய் சொல்லுதல்tell white lies
கரடு சிறு குன்றுlow hill
கரடுமுரடு-ஆக/-ஆன (நிலப் பரப்பைக் குறிக்கும்போது) மேடுபள்ளங்களும் கற்களும் நிறைந்து/மேடுபள்ளங்களும் கற்களும் நிறைந்த(of an area) unevenly/uneven
கரண்டகம் (வெற்றிலை போடுபவர்கள்) சுண்ணாம்பு வைத்திருக்கும் டப்பிsmall metal box for keeping quicklime (used by those who chew betel)
கரண்டைக்கால் கணுக்கால்ankle
கரணம்2(நாட்டியத்தில்) முத்திரை(dance) posture
கரத்தை (ஒற்றை) மாட்டு வண்டிbullock cart (drawn by a single ox)
கரப்பான் (பெரும்பாலும் குழந்தைகளுக்கு வரும்) தடித்து அரிப்பை ஏற்படுத்தும் ஒரு தோல் நோய்a skin disease that causes eruption and itch
கரப்பான் பூச்சி உணர்வு அறியும் மீசை போன்ற மெல்லிய உறுப்பையும் நீண்ட (ஆறு) கால்களையும் உடைய கருஞ்சிவப்பு நிறப் பூச்சிcockroach
கரப்பொத்தான் கரப்பான் பூச்சிcockroach
கரம்பற்று திருமணம் செய்துகொள்ளுதல்marry
கரம்பு சாகுபடி செய்யாத நிலம்uncultivable land
கரவு (மனத்திற்குள்) மறைத்துவைத்திருக்கும் பழிவாங்கும் எண்ணம்vengeance
கரவொலி கரகோஷம்applause
கரி1(தீயினால்) கருகுதல்be charred
கரி2(நெருப்பில் எரித்து) கரியாக்குதல்char
கரி4மரம் முதலியவை எரிந்து கிடைக்கும் கரிய நிறத் துண்டுcharcoal
கரிச்சான் பிளவுபட்ட வால் உடைய கரிய நிறப் பறவைglossy black bird with long forked tail
கரிசல் நீண்ட நாள் ஈரத்தைத் தன்னுள் நிறுத்திவைத்துக்கொள்ளும் தன்மை உடைய கருப்பு நிற மண்black soil (which is capable of retaining water for long)
கரிசலாங்கண்ணி (நீர்நிலைகளின் அருகில் வளரும்) சற்றுத் தடித்த சிறு இலைகளையும் கரு நீல நிறத் தண்டுப் பகுதியையும் உடைய ஒரு வகைக் கீரைa kind of greens with short thick leaves
கரிப்பு உப்புச் சுவைsaltiness
கரிம வேதியியல் கரியை மூலக்கூறாக உடைய கூட்டுப்பொருள்பற்றி விவரிக்கும் வேதியியல்organic chemistry
கரிய கருமை நிறம் உடையblack
கரியமிலவாயு (கரியை மூலக்கூறாகக் கொண்டதும்) வெளிவிடும் மூச்சில் கலந்திருப்பதும் காற்றை விடக் கனமானதுமான வாயுcarbon dioxide
கரியாக்கு வீணாக்குதல்fritter away (money)
கரு (கர்ப்பப்பையில் அல்லது முட்டையில் வளர்ச்சியின்) ஆரம்ப நிலையில் இருக்கும் உயிர்embryo
கருக்கரிவாள் உட்புறம் கூரான பற்களை உடைய அரிவாள்sickle with serrated edge
கருக்கல் காலையில் வெளிச்சம் பரவும் முன் அல்லது மாலையில் வெளிச்சம் முழுவதும் போகும் முன் உள்ள அடர்த்திக் குறைவான இருட்டுpre-dawn or pre-dusk darkness
கருக்கலைப்பு (கர்ப்பப்பையில் வளர்ந்துவரும்) கருவை அழித்து அகற்றுதல்abortion
கருக்காய் உள்ளீடாகிய மணி முழு வளர்ச்சி அடையாத நெல்paddy in which the corn is not fully grown
கருக்கு1(ஒரு பொருளைச் சூட்டில் அல்லது நெருப்பில்) கருகச் செய்தல்cause to become black (by over roasting)
கருக்கு2(பனை மட்டையின் இரு ஓரங்களிலும் உள்ள) பல் போன்ற கூர்முனைserrated or toothed edge (on either side of the stalk of palmyra leaf)
கருக்கு3பொலிவுfreshness
கருக்கொள் கருத்தரித்தல்become pregnant
கருகரு-என்று அதிகக் கருமையாகin a jet black manner
கருகல் (சூட்டினால்) கருகியதுthat which is charred or over-roasted
கருகு (தீயில்) எரிந்து அல்லது சூடேறிக் கருப்பு நிறம் அடைதல்get charred (by fire or by the heat of the fire)
கருகுமணி (பெண்கள் கழுத்தில் அணியும்) கருப்பு நிறப் பாசி மணிa string of black beads (worn closely around the neck by women)
கருங்கல் (மலையிலிருந்து வெட்டி எடுக்கப்படும்) கனமான கருப்பு நிறக் கல்black rock
கருங்காலி1(கலப்பை முதலியவை செய்யப் பயன்படும்) கறுப்பு நிறத்தில் இருக்கும் உறுதியான முள் மரம்a kind of ebony
கருங்குரங்கு உடல் கறுப்பாகவும் முகம் வெள்ளையாகவும் இருக்கும் நீண்ட வால் உடைய ஒரு வகைக் குரங்குblack langur
கருஞ்சீரகம் அதிகமான காரமும் கசப்பும் கொண்ட கறுப்பு நிறச் சீரகம்black cumin
கருடசேவை பெருமாளைக் கருட வாகனத்தில் வைத்து நடத்தும் வைணவக் கோயில் விழாa festival in Vaishnava temple in which the deity appears mounted on a mythical bird
கருடன் உடல் செம்மண் நிறமாகவும் கழுத்து வெண்மையாகவும் இருக்கும், இரைகளைக் கொன்று தின்னும் ஒரு வகைப் பறவைwhite-headed kite
கருடஸ்தம்பம் (பெருமாள் கோயிலில்) கோபுர வாசலுக்கு எதிரில் உள்ள, உச்சியில் கருட உருவத்தோடுகூடிய தூண்a column bearing a figure of கருடன் atop (and standing outside the entrance of Vaishnava temple)
கருணைக்கிழங்கு நாக்கில் விறுவிறுப்பை ஏற்படுத்தும் சுவையுடைய கறுப்பு நிறக் கிழங்குa kind of yam that gives a pungent taste
கருணை மனு குற்றத்துக்குத் தீர்ப்பு வழங்கப்பட்ட பிறகு தீர்ப்பின் கடுமையைக் குறைக்க அல்லது ரத்துசெய்யக் குடியரசுத் தலைவருக்கோ ஆளுநருக்கோ குற்றவாளி செய்துகொள்ளும் விண்ணப்பம்petition made to the President or governor by one convicted of an offence for pardon, remission of punishment or commutation of a sentence
கருத்த கரியblack
கருத்தடை கருத்தரிப்பதைத் தவிர்க்க மேற்கொள்ளும் (மருத்துவ ரீதியான) வழிமுறைbirth control
கருத்தடைச்சாதனம் கருத்தடைக்குப் பயன்படுத்தும் பொருள்contraceptive
   Page 4 of 36    1 2 3 4 5 6 36