Tamil to Tamil&English Dictionary

We are happy to provide you with the best Online Tamil to Tamil Dictionary/Translator.
For typing word in Tamil you can use our tool typing tool

  
Tamil WordTamil MeaningEnglish Meaning
கருத்தரங்கம்/கருத்தரங்கு குறிப்பிட்ட ஒரு துறையில் ஏதேனும் ஒரு தலைப்பில் அல்லது சில தலைப்புகளில் அந்தத் துறையில் பயிற்சியுடையவர்கள் கூடிக் கட்டுரை படித்தல் அல்லது கருத்துத் தெரிவித்தல்symposium
கருத்தரி (பெண்ணின் கருப்பையில் குழந்தைக்கான) கரு உருவாதல்become pregnant
கருத்தாக்கம் (ஒரு பொருள்குறித்து உருவாக்கப்படும்) பொதுச் சிந்தனைconcept
கருத்தியல் சித்தாந்தம்ideology
கருத்து (ஒன்றைப்பற்றி அல்லது ஒருவரைப்பற்றிக் கொண்டுள்ள) எண்ணம்opinion
கருத்துப்படம் (பத்திரிகைகளில் நாட்டுநடப்பு, அரசியல் தலைவர்களின் நடவடிக்கைகள் முதலியவற்றை) வேடிக்கையான முறையில் வெளிப்படுத்தி வரையப்படும் படம்cartoon (in newspapers, journals, etc.)
கருத்துமுதல்வாதம் கருத்துகளே முதலில் தோன்றியவை, உண்மையானவை, அனைத்திற்கும் அடிப்படையானவை என்று கூறும் தத்துவம்idealism
கருத்துரை (ஒரு நூலைப்பற்றிய அல்லது ஒரு பொருளைப்பற்றிய) சிந்தனை வெளிப்பாடுopinion or thought expressed (on a book or a subject)
கருத்து வேற்றுமை (பிறரோடு) கருத்தில் வேறுபாடுdifference of opinion
கருத்தொற்றுமை நோக்கத்தால் ஒன்றிணைந்த நிலைconsensus
கருது மனத்தில் உணர்தல்view
கருதுகோள் (பெரும்பாலும் கலைச்சொல்லாக) உண்மை என்று நிறுவப்படாத, அனுமான அளவிலான கொள்கைhypothesis
கருநாக்கு (இயல்பாகவே) சிறு கரும் புள்ளிகளை உடைய நாக்குtongue with black dots
கருநாகம் கரு நிற நாகப்பாம்புblack cobra
கருப்பட்டி பதநீரைக் காய்ச்சிக் கட்டி வடிவில் தயாரித்த அடர்ந்த பழுப்பு நிறமுடைய இனிப்புப் பொருள்unrefined jaggery (made from palmyra or coconut sap)
கருப்பை (தாயின் வயிற்றில்) கரு முழுவளர்ச்சியடைந்து வெளிவரும்வரை தங்கியிருக்கும் பை போன்ற உறுப்புwomb
கரும் கரியblack
கரும்பலகை (பள்ளி, கல்லூரி முதலிய இடங்களில்) எழுதிக் காட்டப் பயன்படுத்தும் (பெரும்பாலும்) கருப்பு நிறம் பூசப்பட்ட பலகைblack board (in schools, etc.)
கரும்பு (சர்க்கரை தயாரிக்கப் பயன்படும்) மூங்கில் போன்று நீண்டு வளர்வதும் இனிய சாறு நிறைந்ததுமான ஒரு வகைத் தாவரம்sugarcane
கருமணல் (கடல், ஆறு முதலியவற்றின் கரையில் அல்லது நிலத்தடியில் காணப்படும்) கரிய நுண் மணல்fine black sand (on the sea shore, the bank of the river, etc.)
கருமாதி (இறந்தவருக்கு) இறுதிச் சடங்குfinal obsequies
கருமான் கொல்லன்blacksmith
கருமி கஞ்சன்miser
கருமுட்டை கருப்பையிலிருந்து வெளிப்படும் நுண்ணிய முட்டைovum
கருமை கறுப்புblackness
கருவண்டு ஒருவித ரீங்காரத்தை எழுப்பும் (நாவல் பழத்தைப் போன்ற) கறுப்பு நிற வண்டுblack beetle
கருவறை (கோயிலில்) கர்ப்பக்கிரகம்(in temples) sanctum sanctorum
கருவாடு (உப்புச் சேர்த்து வெயிலில் நன்றாக) காயவைக்கப்பட்ட மீன்salted and dried fish
கருவி வேலையை எளிதாக்கும் பொருட்டு அல்லது வேலைக்கு உதவும் பொருட்டுக் கையாலோ மின்சக்தியாலோ இயக்கிப் பயன்படுத்தும் சாதனம்tool
கருவிநூல் (ஒன்றைக் கற்பதற்கும் கற்கும்போது ஏற்படும் சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்வதற்கும்) துணையாக அமையும், அடிப்படைத் தகவல்கள் அடங்கிய நூல்reference work
கருவிமொழி ஒரு மொழியைப்பற்றி விவரித்துக் கூறப் பயன்படுத்தும் மொழிmetalanguage
கருவிழி கண்ணின் (நடுவில் உள்ள) கரு நிறப் பகுதிiris
கருவுயிர் கருக்கொள்ளுதல்become pregnant
கருவுறு கருத்தரித்தல்conceive
கருவூலம் மதிப்பு மிகுந்த பொருள்களைச் சேர்த்துவைத்துள்ள இடம்treasure house
கருவேல் முட்கள் நிறைந்த, கறுப்பு நிறப் பட்டையை உடைய வேல மர வகைblack babul
கரை4(நீரைத் தேக்குவதற்கு அல்லது நீர் செல்வதற்கு ஏற்ற முறையில் ஆறு, கால்வாய் முதலியவற்றில்) உயர்த்தப்பட்ட (மண்) மேடுbank (of a river, etc.)
கரைகாண் (ஒரு கலையில் அல்லது துறையில்) சிறந்த தேர்ச்சி பெறுதல்attain consummate scholarship
கரைச்சல் தொந்தரவுtrouble
கரைசல் ஒரு திடப் பொருளோ வாயுவோ கலந்திருக்கும் திரவம்solution
கரைத்துக்குடி (ஒரு கலையின் அல்லது ஒரு துறையின்) சகல நுணுக்கங்களையும் அம்சங்களையும் தெரிந்துகொள்ளுதல்know (a subject) inside out
கரைதட்டு (கப்பல் அல்லது பெரும் படகு) கரையோரப் பகுதியில் சிக்குதல்(of ship) run aground
கரைபுரள் (மகிழ்ச்சி, உற்சாகம்) மிக அதிகமாக வெளிப்படுதல்(of joy, enthusiasm) know no bounds
கரையேறு (துன்பம், வறுமை முதலியவற்றிலிருந்து) மீள்தல்get out or be saved (from distress, poverty, etc.)
கல் சட்டி (புளி சேர்த்துச் சமைக்கும் கறி, ஊறுகாய் போன்றவற்றை வைப்பதற்காகப் பயன்படுத்தப்படும்) மாக் கல்லால் செய்யப்பட்ட மூடி இல்லாத பாத்திரம்a lidless vessel made of soft stone (used to keep sour dishes,pickles, etc.)
கல்தா (அவமானப்படத் தக்க வகையில்) வெளியேற்றம்expel
கல்நார் சாம்பல் நிறத்தில் இழைஇழையான தாதுவாகக் கிடைப்பதும் தீயால் எரிக்கப்பட முடியாததுமான ஒரு பொருள்asbestos
கல்நெஞ்சம் இரக்க உணர்வு சிறிதும் இல்லாத மனம்hard heartedness
கல்மழை ஆலங்கட்டி மழைshower of hailstones
கல்மிஷம் சூதுவாதுcunning
கல்மூங்கில் குறுகிய சுற்றளவு கொண்ட கெட்டியான மூங்கில்a variety of bamboo
கல்யாணச்சாவு முதிர்ந்த வயதுடையோரின் இயற்கையான சாவுnatural death of a person at a ripe old age (which is not considered a sorrowful event)
கல்யாணம் திருமணம்marriage
கல்லறை இறந்தவரைப் புதைத்த இடம்cemetery
கல்லா (பெரும்பாலும் பழைய பாணியில் நடத்தப்படும் கடையில்) (பொருளுக்கான) பணத்தைப் பெற்றுக்கொள்ளும் இடம்cash counter
கல்லீரல் வயிற்றில் பித்தநீரைச் சுரப்பதும் இரத்தத்தைச் சுத்தம் செய்வதுமான உறுப்புliver
கல்லுப்பு பொடியாக்கப்படாத உப்புக் கட்டிcrystalline salt
கல்லுளிமங்கன் தான் நினைப்பதையோ தன் உணர்ச்சிகளையோ வெளிவிடாத அழுத்தமான ஆள்a man who maintains strong silence when confronted
கல்லூரி பள்ளிப் படிப்பு முடித்தவர்கள் கலை, அறிவியல், தொழிற்கல்வி முதலியவற்றில் உயர் கல்வி பெறுவதற்கான நிறுவனம்college
கல்வாழை இரு புறமும் விரிந்த வெளிர்ப் பச்சை நிற இலைகளை ஒன்றின் மீது ஒன்றாகக் கொண்ட ஒரு வகைச் செடிindian shot
கல்வி படித்துப் பெறும் அறிவுeducation
கல்வி ஆண்டு (பெரும்பாலும் ஜூன் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் முடியும்) கல்வி நிறுவனங்கள் செயல்படும் ஆண்டுacademic year (in India from June to April)
கல்விக்கூடம் (பள்ளிக்கூடம், கல்லூரி போன்ற) கல்வி கற்பிக்கும் இடம்educational institution
கல்விமான் நன்றாகக் கற்றவர்scholar
கல்வியாளர் கல்வித் துறை தொடர்பான எல்லாப் பணிகளிலும் தேர்ச்சி பெற்றவர்educationist
கல் விளக்கு மாக் கல்லால் செய்யப்பட்ட எண்ணெய் விளக்குlamp made of soap stone
கல்வீச்சு (கட்டடம், வாகனம் முதலியவற்றின் மீது) கற்களை வீசிச் சேதம் ஏற்படுத்தும் வன்முறைச் செயல்pelting of stones (at buildings, vehicles, etc an act of vandalism)
கல்வெட்டு (பெரும்பாலும் அரசர் பெற்ற வெற்றி, அளித்த கொடை முதலியவற்றைக் குறித்து) பாறையில் அல்லது கல்லில் செதுக்கப்பட்ட வாசகம்inscription (of historical value found on rock or stone slab)
கல (ஒரு திட அல்லது திரவப் பொருளோடு மற்றொரு திட அல்லது திரவப் பொருளை) சேர்த்தல்mix (a liquid, powder or solid substance with another)
கலக்கம் (உறுதியான முடிவை எடுக்க இயலாத) தெளிவற்ற மனநிலைstate of confusion or disturbance
கலக்கு (ஒரு திரவத்தை அல்லது ஒரு திரவத்தில் ஒன்றைப் போட்டு) சுழலச்செய்தல்(தெளிந்த நீர் முதலியவற்றை) கலங்கச்செய்தல்stir
கலகம் அமைதியைக் குலைக்கும் சண்டைclash
கலகல (ஒன்றாக இருக்கும் சிறு பொருள்கள் ஒன்றோடொன்று) மோதி அல்லது உருண்டு ஒலி உண்டாக்குதல்produce a rattling noise
கலகலப்பு (பேச்சும் சிரிப்புமாக அல்லது ஆட்கள் நடமாட்டத்தால்) ஆரவாரத்தோடு இருக்கும் நிலைliveliness (resulting from noisy chatter and laughter)
கலங்கரைவிளக்கம் கடலில் செல்லும் கப்பல்களுக்கு வழிகாட்ட ஒளிக்கற்றைகளைப் பாய்ச்சி நெறிப்படுத்தும் நிலையம்lighthouse
கலங்கல் (நீர், எண்ணெய் போன்ற திரவங்களின்) கலங்கிய நிலை(of liquids) turbidity
கலங்கு (நீர், எண்ணெய் போன்ற திரவங்கள் பிறவற்றுடன் சேர்ந்து) தெளிந்த நிலை கெடுதல்(of liquids) get stirred or disturbed
கலசம் கோபுரத்தின் மேல் இருக்கும் செம்பு வடிவ அமைப்புpot-like structure on the top of temple towers
கலந்துகொள் (ஒரு நிகழ்ச்சி, விழா போன்றவற்றில் ஒருவர்) பங்குகொள்ளுதல்take part (in an activity, a competition, etc.)
கலந்துரையாடல் (ஏதேனும் ஒரு பொருள்குறித்து) ஒன்றுகூடி நிகழ்த்தும் கருத்துப் பரிமாற்றம்discussion
கலப்படம் ஒரு பொருளில் அதே மாதிரியான வேறொரு தரம் குறைந்த அல்லது மலிவான பொருளைச் சேர்த்து ஒன்றாக்குதல்adulteration (in foodstuff, etc.)
கலப்பினம் ஓர் இனத்தின் இரு வகைகளை ஒன்றுசேர்த்து உருவாக்கும் வீரிய வகை(of animal, seed, etc.) hybrid
கலப்பு ஒன்றில் (தேவையற்ற) மற்றொன்றின் சேர்க்கைmixing (of two that ought to be kept separate)
கலப்புத் திருமணம் வேறு ஜாதி அல்லது மதத்தைச் சார்ந்தவருடன் செய்துகொள்ளும் திருமணம்intercaste or interreligious marriage
கலப்பை (மாட்டைப் பூட்டி) நிலத்தை உழுவதற்குப் பயன்படுத்துகிற மரத்தாலான கருவிplough
கலம்1(தானியங்களை மதிப்பிடும்) முகத்தலளவையில் பன்னிரண்டு மரக்கால் கொண்ட ஓர் அளவுa measure of capacity for grains (twelve மரக்கால்)
கலம்2(உண்பதற்கான) கும்பா போன்ற பாத்திரம்a large shallow bowl
கலம்பகம் (தெய்வத்தையோ அரசனையோ தலைவனாகக் கொண்டு) பல வகைச் செய்யுளாலும் பாடப்படும் ஒரு சிற்றிலக்கிய வகைa kind of poem composed of different kinds of metric stanzas (having a deity or a king for its protagonist)
கலயம் (கஞ்சி, கள் முதலியவை குடிக்கப் பயன்படுத்தும்) சற்று நீண்ட கழுத்தும் குறுகிய வாயும் உடைய சிறிய மண் பானைan earthen pot having raised neck and a narrow mouth (used for drinking rice gruel, toddy, etc.)
கலர் (பல நிறங்களில் கிடைக்கும்) தாகத்தைத் தணிக்கப் பருகும், கண்ணாடிப் புட்டியில் அடைத்து விற்கப்படும் இனிப்புச் சுவை கொண்ட நீர்soft drink (which is available in several colours)
கலவரம் கலகம்revolt
கலவி (ஆண், பெண்) சேர்க்கைsexual union
கலவை பல்வேறுபட்ட பொருள்களின் கலப்புmixture (of many things)
கலன் (நீர் முதலியவற்றைக் கொதிக்கவைத்தல், எரிவாயு ஆக்குதல் முதலியவற்றுக்குப் பயன்படும்) பெரிய உலோகப் பாத்திரம்boiler-like metal container
கலாச்சாரம் பண்பாடுculture
கலாசாலை (மொழி கற்பிக்கும் அல்லது பயிற்சி தரும்) கல்லூரிschool (of languages)
கலாட்டா கூச்சல்போட்டு (நாகரிகம் அற்ற முறையில் நடந்து) ஏற்படுத்தும் வீணான தகராறுfracas
கலாநிதி (இசை, நாட்டியம் முதலிய) கலைகளில் சிறந்தவருக்கு வழங்கப்படுகிற கௌரவப் பட்டம்a title given to a great master of fine arts such as music, dance, etc சங்கீதக் கலாநிதி/ நாட்டியக் கலாநிதி
கலாபூர்வம்-ஆக/-ஆன கலை அம்சம் பொருந்தியதாக/கலை அம்சம் பொருந்தியartistically/artistic
கலாய்பூசு ஈயம்பூசுதல்tin (the vessels)
   Page 5 of 36    1 3 4 5 6 7 36