Tamil to Tamil&English Dictionary

We are happy to provide you with the best Online Tamil to Tamil Dictionary/Translator.
For typing word in Tamil you can use our tool typing tool

  
Tamil WordTamil MeaningEnglish Meaning
சண்டை (கையாலோ, கம்பாலோ, ஆயுதத்தாலோ) தாக்கிக்கொள்ளுதல்fight
சண்டைக்கு நில் சண்டை வளர்ப்பதில் தீவிரம் காட்டுதல்be ready to fight or confront
சணல் பழுப்பு நிற நாரினால் திரிக்கப்பட்ட சிறு கயிறுcord made by twisting together strands of jute
சத்தம்1பொருள்களின் உராய்வு, மனிதர்களின் பேச்சு, விலங்குகளின் கத்தல் போன்றவற்றால் எழும் (ஒழுங்கற்ற) ஒலிsound
சத்தம்2(வண்டிக்குத் தரும்) வாடகைfare (for hired vehicles, esp
சத்தம்போடு பலமாகச் சத்தம் எழுப்புதல்make noise
சத்தமாக சத்தம் அதிகமாகக் கேட்கும்படிloudly
சத்தி வாந்திvomit
சத்தியப்பிரமாணம் (நீதிமன்றத்தில் விசாரணையின்போது) கடவுள் பேரிலோ மனசாட்சியின் பேரிலோ உண்மையாக நடப்பேன் என்று எடுத்துக்கொள்ளும் உறுதிமொழிoath taking (by witnesses in the court)
சத்தியவந்தன்/சத்தியவான் சொன்ன வாக்குத் தவறாமல் நடந்துகொள்பவன்man of his word
சத்தியா(க்)கிரகம் (ஒத்துழையாமை, உண்ணாவிரதம் போன்ற) அற நெறியில் எதிர்ப்பைத் தெரிவிக்கும் முறைprotest in the name of truth (by resorting to non-cooperation, hunger-strike, etc.)
சத்திர சிகிச்சை அறுவைச் சிகிச்சைsurgery
சத்து (குறிப்பிடப்பட்ட) ஒரு பொருள் மற்றொன்றில் அடங்கியிருக்கும் அளவுcontent
சத்துணவு (உடலுக்கு வளர்ச்சியும் வலிமையும் அளிக்கக் கூடிய) சத்துகள் அதிகம் உடைய உணவுnutritious meal
சத்துரு எதிரிenemy
சதக்-என்று (வெட்டுதல், குத்துதல், மிதித்தல் முதலிய செய்கைகளில்) வேகமாக உள்ளே பதியும்படி(while referring to cutting, piercing, trampling) deep into something soft or squashy
சதகம் (கடவுளைத் தலைவனாகக் கொண்டு பாடும்) நூறு பாடல்களால் ஆன சிற்றிலக்கிய வகைa type of literary work containing a hundred verses (having a deity as its protagonist)
சதகுப்பை மிருதுவான இலைகளையும் வெளிர் மஞ்சள் நிற விதைகளையும் கொண்ட ஒரு வகைச் சிறு செடி(the medicinal herb) dill
சதசதப்பு (மண், மணல் முதலியவை) நீர் பட்டுக் குழைவாக இருக்கும் நிலைwetness
சதம்1(சில வகை விளையாட்டு வழக்குகளில்) நூறு(in certain games only) hundred
சதம்2நிரந்தரமானதுthat which is permanent
சதமானம் சதவிகிதம்percentage
சதயம் இருபத்தேழு நட்சத்திரங்களுள் இருபத்துநான்காவதுthe twentyfourth of the twentyseven stars
சதவிகிதம்/சதவீதம் (ஒரு குறிப்பிட்ட) மொத்தத்தை நூறாக மாற்றும்போது மொத்தத்துக்கு இவ்வளவு என்று இருப்பது அடையும் மதிப்புpercentage
சதா விடாமல்continually/always
சதாபிஷேகம் எண்பது வயது முடிவடைந்தவருக்குக் கொண்டாடும் விழாcelebration for one who has completed eighty years
சதி1(தீய செயல்களுக்கான) மறைமுகத் திட்டம்plot
சதி2(கற்பில் சிறந்த) மனைவி (virtuous) wife
சதிபதி தம்பதிman and wife
சதிர் (தேவதாசியின்) நாட்டியம்dance (performed formerly by professional dancing girls)
சதிர்த்தேங்காய் சிதறுதேங்காய்coconut hurled on the ground to go to pieces
சதுக்கம் (பெரும்பாலும் நான்கு) சாலைகள் கூடும் இடத்திலுள்ள சதுர வடிவ (திறந்த) வெளி(road) junction
சதுப்புநிலம் (தரைமட்டத்தில் நீர் தேங்கி) ஈரமும் சேறுமாக இருக்கும் நிலப் பகுதிmarsh
சதுர்த்தி வளர்பிறையிலிருந்து அல்லது தேய்பிறையிலிருந்து நான்காம் திதிthe fourth திதி in a lunar fortnight
சதுர அடி பக்கங்கள் ஓர் அடியாகக் கொண்ட சதுரத்தின் பரப்பைக் குறிக்கும் அலகுsquare foot
சதுரங்கம் கறுப்பு வெள்ளைக் கட்டங்களில் குறிப்பிட்ட விதிமுறைகளின்படி (ராஜா, ராணி போன்ற) காய்களை நகர்த்தி இருவர் விளையாடும் விளையாட்டுchess
சதுரம் நேர் கோணங்களில் ஒத்த அளவுடைய நான்கு பக்கங்கள் கொண்ட வடிவம்square
சதை (உடலில்) தோலுக்குக் கீழ் எலும்பைச் சுற்றியுள்ள கொழுப்பு நிறைந்த மென்மையான பகுதிflesh
சதைப்பற்று/சதைப்பிடிப்பு சதை நிறைந்துள்ள நிலைaccumulation of flesh
சதைபோடு (நான்காம் வேற்றுமை உருபோடு) சற்றுப் பருத்தல் அல்லது குண்டாதல்(with dative) become stout or plump
சந்தக்கவி நான்கு எழுத்துமுதல் இருபத்தாறு எழுத்துவரை உள்ள அடிகள் நான்கு கொண்ட ஓசை நயம் மிகுந்த ஒரு வகைச் செய்யுள்rhythmic stanza of four lines with four to twenty-six syllables in a line
சந்தடி (ஆட்களின் நடமாட்டம், வாகனங்களின் இயக்கம் முதலியவற்றால் எழும்) கலவையான சத்தம்various noises
சந்தணக்குச்சி ஊதுபத்திincense stick
சந்ததி பரம்பரையைத் தொடர்ந்து நிலைக்கச்செய்யும் குழந்தைdescendant
சந்தம் (செய்யுளில், பாட்டில்) தாளக் கதியைத் தோற்றுவிக்கும் ஓசை நயம்musical or rhythmic flow
சந்தர்ப்பம் நிகழ்ந்த அல்லது நிகழ்கிற தருணம்occasion
சந்தர்ப்பவசத்தால்/சந்தர்ப்பவசமாக எதிர்பாராத விதத்தில்by force of circumstances
சந்தர்ப்பவாதம் எந்தச் சூழ்நிலையையும் சுய லாபத்துக்குப் பயன்படுத்திக்கொள்ளும் போக்குopportunism
சந்தனக்கல் சந்தனக் கட்டையை இழைக்கப் பயன்படும் கல்stone for grinding sandalwood into paste
சந்தனக் காப்பு (கோவில்களில்) விசேஷ நாட்களில் மூல விக்கிரகத்தின் மேல் சந்தனத்தை அப்பிச் செய்யும் அலங்காரம்covering the idol with sandal paste as an adornment at festivals
சந்தனக்கூடு முஸ்லிம் மகான்களுக்காக நடத்தப்படும் திருவிழாவில் சிறு தேரின் நடுவில் வைத்து எடுத்துச்செல்லும் சந்தனக் குடம்a small pot filled with sandal paste kept in a temple chariot taken out in procession in honour of Muslim saints
சந்தனம் மணம் மிகுந்த எண்ணெய் எடுக்கவும் வாசனைப் பொருள்கள் தயாரிக்கவும் பயன்படுத்தும் மரம்sandalwood (tree)
சந்தனாதித்தைலம் சந்தனத்தை முக்கியப் பொருளாகக் கொண்ட மருத்துவத் தைலம்medicated oil having sandal as the main ingredient
சந்தா பத்திரிகை முதலியவற்றை ஒரு குறிப்பிட்ட காலம்வரை பெறுவதற்கு அல்லது ஓர் அமைப்பில் உறுப்பினராக இருப்பதற்குச் செலுத்தப்படும் கட்டணம்subscription (to a journal, to a club, etc.)
சந்தாதாரர் (பத்திரிகை முதலியவற்றிற்கு) சந்தா செலுத்துபவர்subscriber (to a journal, etc.)
சந்தி1(ஒருவர் மற்றொருவரை) நேரில் அணுகிப் பார்த்தல் அல்லது பார்த்துப் பேசுதல்(ஒன்றை) நேருக்கு நேர் பார்த்தல்meet
சந்தி2சாலைகள் கூடும் இடம்junction (of roads)
சந்தி3பகலும் இரவும் பிரியும் அல்லது சந்திக்கும் நேரம்twilight
சந்திக்கு இழு அவமானப்படுத்தும் நோக்கத்தோடு ஒருவரின்) குறைகளைப் பலரும் அறியச்செய்தல்expose (to public ridicule)
சந்திப்பு ஒருவர் மற்றொருவரைச் சந்திக்கும் செயல்meeting (with a person)
சந்தியக்கரம் (சமஸ்கிருதத்தில்) இரண்டு உயிரெழுத்துகள் இணைந்து ஒலிக்கும் ஏ, ஐ, ஓ, ஔ ஆகிய எழுத்துகள்diphthongs (of Sanskrit) viz
சந்தியாகால பூஜை கோயிலில் மாலை ஐந்து மணிக்கு மேல் ஏழு மணிக்குள் நைவேத்தியமும் தீபாராதனையும் காட்டிச் செய்யப்படும் பூஜைone of the obligatory பூஜை in a temple with நைவேத்தியம் and தீபாராதனை performed after 5 p
சந்தியாவந்தனம் காலை, உச்சி, மாலை ஆகிய மூன்று வேளைகளிலும் குறிப்பிட்ட மந்திரம் சொல்லிச் செய்யும் வழிபாடுchanting of mantras in the morning, at noon and in the evening
சந்திரகாந்தம் நிலா வெளிச்சத்தில் காட்டினால் நீரை வெளிவிடும் தன்மையும் (காந்தம் இரும்பைக் கவர்வது போல) வெள்ளியைக் கவரும் தன்மையும் கொண்டதாகக் கூறப்படும் ஒரு வகைப் படிகக் கல்moonstone said to glisten with water when exposed to moonlight and said to attract silver
சந்திர மண்டலம் சந்திரன் என்னும் துணைக்கோளும் அதைச் சுற்றியுள்ள வெளியும்moon and the space around it
சந்திரன் பூமியை இருபத்தெட்டு நாட்களுக்கு ஒருமுறை சுற்றி வருவதும் சூரிய ஒளியைப் பிரதிபலித்து இரவில் தெரிவதுமான ஒரு துணைக்கோள்moon
சந்து அகலக் குறைவான தெரு அல்லது வழிnarrow street
சந்துபொந்து (பழக்கம் இல்லாத) குறுகலான வழியும் பாதையும்nook and corner
சந்தேகப்பிராணி (மிக எளிதில்) சந்தேகப்படும் நபர்one who is suspicious by nature
சந்தேகம் (இதுதான், இவ்வளவுதான் என்று) துணிந்து கூற முடியாத நிலைdoubt
சந்தேகி சந்தேகம்கொள்ளுதல்doubt
சந்தை (பெரும்பாலும்) கிராமங்களிலிருந்து ஒரு பெரிய ஊரின் எல்லைப்புறத்திற்குக் கால்நடை, உணவுப் பொருள்கள் முதலியவற்றைக் குறிப்பிட்ட சில கிழமைகளில் கொண்டுவந்து நடத்தும் விற்பனைfair
சந்தோஷம் மகிழ்ச்சிhappiness
சப்-என்று (உப்பு, உறைப்பு, புளிப்பு முதலிய) சுவை எதுவும் இல்லாமல்bland
சப்தநாடியும் ஒடுங்கு (அதிர்ச்சி, பயம் முதலியவற்றால் ஒருவரின்) அனைத்துப் புலன்களும் செயலற்றுப்போதல்become (almost) paralysed (with fear, etc.)
சப்தம்2பாடமும் சொற்கட்டுகளும் மாறிமாறி வரும் அமைப்பு அல்லது உருப்படிsuggestive and expressive use of gestures communicating the meaning of individual words
சப்தம்3(சில தொடர்களில் அடையாக) ஏழு(in certain phrases) seven
சப்தரிஷி மண்டலம் ஏழு நட்சத்திரங்கள் அடங்கிய ஒரு விண்மீன் கூட்டம்ursa major or the Great Bear
சப்பட்டை சப்பைflat
சப்பணம் முழங்காலை மடக்கிக் கால்களைக் குறுக்காக வைத்தல்sitting cross-legged
சப்பரம் கோயிலில் விழாவின்போது விக்கிரகங்களை வைத்து இழுத்துச்செல்லப் பயன்படும் தேர் போல அலங்கரிக்கப்பட்ட சிறு வண்டிsmall wooden chariot (decorated like a தேர்) in which idols are carried during festivals
சப்பளாக்கட்டை (கதாகாலட்சேபம் செய்வோர்) நான்கு விரல்களில் ஒன்றும் கட்டைவிரலில் ஒன்றுமாகக் கோத்துக்கொள்ளும் சிறு மணிகள் இணைக்கப்பட்ட தாளத்திற்கான இரு கட்டைa pair of wooden pieces, being held in between the fingers, with tiny bells for marking time (by the performers of religious songs)
சப்பளி1உருத்தெரியாமல் தட்டையாதல்be pressed out of form
சப்பளி2உருத்தெரியாமல் தட்டையாக்குதல்press
சப்பாணி நொண்டிcripple
சப்பாத்தி1கோதுமை மாவை அல்லது மைதா மாவைப் பிசைந்து அப்பளம் போல இட்டுச் சுட்டுத் தயாரிக்கும் ஒரு வகை உணவுப் பண்டம்unleavened roasted bread made from wheat or maize dough, thin in size and round in shape
சப்பாத்தி2வெளிர் மஞ்சள் நிறப் பூக்களுடன் அகன்ற தண்டு முழுவதும் முட்கள் நிறைந்து புதராக வளரும் ஒரு தாவரம்common prickly-pear
சப்பாத்து பாதத்தை முழுமையாக மறைக்கும் காலணிshoe
சப்பு (கடிக்காமல்) வாய்க்குள் வைத்து அழுத்தி உறிஞ்சுதல்suck (the finger, nipple, etc.)
சப்புக்கொட்டு (தின்பண்டம் போன்றவற்றின் ஒரு சிறு துண்டைச் சுவைத்து அல்லது சுவைக்க விரும்பி) நாக்கினால் ஒலி எழுப்பி ருசியின் அருமையை வெளிப்படுத்துதல்relish a dish or an item of food by making a click
சப்புச்சவறு (உபயோகமற்றதாகக் கருதி) கழித்துக்கட்டப்பட்ட பொருள்junk
சப்பை (-ஆன) தட்டைflat
சப்பைக்கட்டு (குற்றமோ குறையோ உடைய காரியத்துக்கு அல்லது அதைச் செய்தவருக்கு) ஆதரவாக வலிந்து கூறும் காரணம்lending weak support for the wrongdoings of s
சப்போட்டா மண் நிறத்தில் தோலும் வெளிர்ப் பழுப்பு நிறத்தில் சதைப் பகுதியும் உடைய சிறு பழம்sapota plum
சபலம் (கிடைத்தால்) அடைந்துவிட வேண்டும் என்னும் துடிப்பு அல்லது நினைப்புtemptation
சபா கலை நிகழ்ச்சிகளை உறுப்பினர்களுக்காக நடத்தும் அமைப்புorganization conducting cultural programmes
சபாநாயகர் பேரவைத் தலைவர்speaker (of the legislature)
சபைக்கூச்சம் (மேடையில் பேசுதல், பாடுதல் முதலியவற்றைச் செய்யும் ஒருவருக்கு) கூட்டத்தினரைக் கண்டு எழும் பயம் அல்லது கூச்சம்stage fright
சம்சயம் சந்தேகம்doubt
சம்சாரம் குடும்பம்family
   Page 1 of 26   1 2 3 26