Tamil to Tamil&English Dictionary

We are happy to provide you with the best Online Tamil to Tamil Dictionary/Translator.
For typing word in Tamil you can use our tool typing tool

  
Tamil WordTamil MeaningEnglish Meaning
சம்சாரி1(பெரிய) குடும்பத்தை உடையவர்man with a large family
சம்சாரி2நிலத்தில் பயிரிடுபவர்farmer
சம்பத்து செல்வம்riches
சம்பந்தப்பட்ட (குறிப்பிட்ட ஒன்றோடு) தொடர்புடையconnected
சம்பந்தப்படுத்து (குற்றத்தில் மற்றொருவரையும்) தொடர்புபடுத்திக் கூறுதல்implicate
சம்பந்தம் தொடர்புrelevance
சம்பந்தி தன் மருமகளின் அல்லது மருமகனின் பெற்றோர்the parents of son-in-law or daughter-in-law
சம்பல் தேங்காய், மிளகாய், புளி முதலியவற்றைச் சேர்த்து அரைத்த துவையல்a kind of துவையல்
சம்பவம் குறிப்பிடத்தக்க அல்லது நினைவுகூரத்தக்க நிகழ்ச்சிhappening
சம்பவி (சாவு, துன்பம் முதலியவை) நேர்தல்happen
சம்பளம் (ஒவ்வொரு மாதமும்) உழைப்பிற்குப் பெறும் தொகைsalary
சம்பா (பொதுவாக, தை மாதம் அறுவடையாகும்) ஐந்து மாத கால நெற் பயிர்a crop of paddy of five months duration (harvested sometime in தை)
சம்பாத்தியம் (ஒருவர்) சேர்த்த பொருள்earnings
சம்பாதி (வருமானமாக) பணம் பெறுதல்(செல்வம், லாபம்) சேர்த்தல்earn
சம்பாஷணை பேச்சுconversation
சம்பாஷி பேசுதல்converse
சம்பிரதாயம் (பின்பற்றப்படும்) தொன்றுதொட்டு வரும் பழக்கம் அல்லது நடைமுறைtime-honoured custom
சம்புடம் (விபூதி, சாம்பிராணி முதலியவற்றை வைத்துக்கொள்ள உதவும்) மூடி போட்ட வட்ட வடிவப் பாத்திரம்small round metal case (to keep sacred ash)
சம்பூர்ணம் நிறைவுcompleteness
சம்போகம் உடலுறவுsexual intercourse
சம்மதம் (ஒன்றைக்குறித்து ஒருவர் தெரிவிக்கும்) உடன்பாடுconsent
சம்மதி சம்மதம் தெரிவித்தல்consent
சம்மன் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்போது வாதிகளையும் பிரதிவாதிகளையும் சாட்சியங்களையும் குறிப்பிட்ட நாளில் வருமாறு நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுsummons (issued by a court of law)
சம்மேளனம் (ஒரு தொழிலின் முன்னேற்றத்திற்கான, ஒரு நிர்வாகத்தின் ஒழுங்கிற்கான) உறுப்பினர்களின் கூட்டமைப்புfederation
சம்ரட்சணை பராமரிப்புmaintenance
சம்ரட்சி (ஒருவரை, குடும்பத்தை) பேணிப் பாதுகாத்தல்support (a person, a family)
சம்ஹாரம் அழித்தல்destruction
சமகாலம் ஒருவர் வாழ்ந்த அல்லது ஒன்று தோன்றிய அதே காலம்contemporary period
சமணம் உயிரும் (ஆன்மாவும்) சடப் பொருளும் அழிவற்றவை, ஆன்மாக்கள் பல என்பன போன்ற கொள்கைகளைக் கூறுவதும் அகிம்சையை வாழ்க்கை நெறியாகக் கடைப்பிடிக்கக் கூறுவதுமான மதம்jainism
சமத்துவம் உலகில் மக்கள் அனைவரும் சமம் என்றும் மக்களுக்குச் சம வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்றும் கூறும் கொள்கைequality
சமதர்மம் அனைவருக்கும் ஒரே நியாயம், நீதி என்னும் செயல்பாட்டு முறைequal justice
சமதளம் மேடுபள்ளம் இல்லாமல் ஒரே சீராக இருக்கும் பரப்புlevel
சமதை ஒப்புparity
சமநிலை ஏற்றத்தாழ்வு, வேறுபாடு ஆகியவை இல்லாத ஒப்பான நிலைequal footing
சமபந்தி (சாதி வேறுபாடு, ஏழை பணக்காரன் போன்ற ஏற்றத்தாழ்வு பார்க்காமல்) எல்லோரும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணுதல்sitting all at a time to eat food (ignoring caste or status)
சமம் (ஒப்பிடும்போது) ஒத்த தன்மை(when comparing) equal
சமயசஞ்சீவி (பெரும்பாலும் உவமையாக) தக்க சமயத்தில் உயிர்காக்கும் மருந்து(often used metaphorically) life-saving drug
சமயத்தில் எப்போதாவது ஒரு முறைat times
சமயம்1(குறிப்பிட்ட ஒன்றைச் செய்வதற்கான) நேரம்time
சமயம்2மதம்religion
சமயோசிதம் (அந்த) சமயத்துக்குப் பொருத்தம்presence of mind
சமர் போர்war
சமர்த்தன் திறமை அல்லது கெட்டிக்காரத்தனம் வாய்ந்தவன்skilful person
சமர்த்து (-ஆக, -ஆன) தொல்லை தராமல் நடந்துகொள்ளும் கெட்டிக்காரத்தனம்(ஒருவரின்) சாமர்த்தியம்திறமைsmartness
சமர்ப்பணம் ஒருவரை கௌரவிக்கும் விதத்தில் அவருக்குத் தன்னுடைய படைப்பைச் சமர்ப்பித்தல்(of a book, etc.) dedication (to s
சமரச சன்மார்க்கம் எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்த வேண்டும், ஏற்றத்தாழ்வு இல்லாமல் அனைவரையும் சமமாக பாவித்துச் செயல்பட வேண்டும் என்னும் கொள்கைa religious doctrine advocating love of fellow beings and equality
சமரசம் (-ஆக) இணக்கமான முடிவுaccord
சமவெளி மேடுபள்ளம் இல்லாத பரந்த நிலப் பகுதிplain
சமன்பாடு (ஒன்றுக்கொன்று) ஒத்துப்போகும் அல்லது சமமாக இருக்கும் தன்மைbalance
சமனம் (உணர்ச்சிக் கொந்தளிப்பின்) தணிந்த நிலைstate of calmness or equilibrium
சமஷ்டி தனித்தனியாக இயங்குவதற்கான அதிகாரம் படைத்த அமைப்புகள் ஒன்றுகூடி அமைத்துக்கொள்ளும் உயர் கூட்டமைப்புfederation
சமஸ்கிருதம் (வேதங்கள் இயற்றப்பட்டதும் தற்போது பேச்சு வழக்கில் இல்லாததுமான) பழமையான இந்திய மொழிsanskrit
சமஸ்தானம் (இந்தியாவில் சுதந்திரத்திற்கு முன்) (குறுநில) மன்னர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த நிலப் பகுதிprincely state (at the time of British India)
சமா(ச்)சாரம் செய்திmatter
சமாதானம் (சண்டை, வழக்கு, பிரச்சினை முதலியவை தீர்க்கப்பட்டு ஏற்படும்) அமைதிpeace
சமாதி இறந்தவரைப் புதைத்த இடத்தில் அல்லது எரித்துச் சாம்பல் வைக்கப்பட்ட இடத்தில் உள்ள நினைவுச்சின்ன மேடைtomb
சமாதியடை (ஞானிகள், மகான்கள் ஆகியோரின் மறைவை மங்கல வழக்காகக் கூறுகையில்) இறத்தல்(of sages, etc, euphemistically) die
சமானம் சமம்equal by comparison
சமி செரித்தல்digest
சமிக்கை/சமிக்ஞை (செய்தியை) குறிப்பாக வெளிப்படுத்தக் கூடிய சைகை அல்லது குறியீடுgesture
சமிதி சங்கம்association
சமிபாடு ஜீரணம்digestion
சமியாக்குணம் அஜீரணம்indigestion
சமீபத்திய அண்மைக் காலrecent
சமீபம் (காலத்திலும் இடத்திலும்) அண்மைproximity (in time and place)
சமீபி நெருங்குதல்come close
சமுகமளி வருகை தருதல்be present (in a meeting)
சமுத்திரம் கடல்sea
சமுதாயம் மக்கள் தொகுதிsociety
சமூகக்காடு ஊராரின் தேவைகளை நிறைவு செய்யவும் சுற்றுச்சூழல் சமநிலையைப் பாதுகாக்கவும் பொது இடங்களில் வளர்க்கப்படும் காடுsocial forestry
சமூகசேவகி சமூகத்தில் உள்ள பிரச்சினைகளைத் தீர்த்தல், ஏழைகளுக்கு உதவுதல் போன்ற பொதுச் சேவையில் ஈடுபட்டுள்ள பெண்a woman social worker
சமூகம்1சமுதாயம்society
சமூகவியல் குழுவாக வாழும் மனிதர்களைப்பற்றியும் சமூக அமைப்பைப்பற்றியும் ஆராயும் படிப்புsociology
சமூகவிரோதி சமூகத்துக்குக் கேடு விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுபவர்racketeer
சமேதராக (தம்பதி) ஒன்றுகூடி(of married people) together
சமை1(ஒருவர் அதிர்ச்சி, ஆச்சரியம் முதலியவற்றால்) செயலற்ற நிலைக்கு உள்ளாதல்be dazed (when one is shocked or taken aback)
சமை2பூப்படைதல்(of a girl) attain puberty
சமை3(உணவுப் பொருள்களை) உண்பதற்குத் தகுந்தபடியாகச்செய்தல்(உணவு) ஆக்குதல் அல்லது தயாரித்தல்cook (food)
சமையல் உணவு தயாரித்தல்cooking
சமையல் அறை உணவு சமைப்பதற்கான அறைkitchen
சமையல் குறிப்பு குறிப்பிட்ட உணவைத் தயாரிப்பதற்குத் தரப்படும் செய்முறை விளக்கம்recipe
சமையல் சோடா (சமையலில் பருப்பு முதலியவற்றை) வேகவைப்பதற்குப் பயன்படுத்தும் ஒரு வேதியியல் உப்புbaking soda
சமையல் வாயு சாதாரண அழுத்தத்தில் வாயுவாக மாறிவிடும் தன்மை கொண்ட திரவ நிலையில் உள்ள எரி பொருள்cooking gas
சமோசா மைதா மாவினுள் உருளைக்கிழங்கு, வெங்காயம் முதலியவை சேர்ந்த மசாலாவை வைத்து மடித்து எண்ணெய்யிலிட்டுப் பொரித்துச் செய்யப்படும் காரத் தின்பண்டம்savoury fried in oil with a potato filling
சய (கணிதத்தில்) கழித்தல் குறி(in arithmetic) minus sign
சயனம் தூக்கம்sleep
சயனி படுத்தல்lie down to sleep
சர்க்கரை சீனி(candy) sugar
சர்க்கரை நோய் நீரிழிவுdiabetes
சர்க்கரைப் பொங்கல் அரிசியை நன்றாக வேக வைத்து வெல்லத்தைப் பொடித்துப் போட்டு நெய் ஊற்றிச் செய்யும் இனிப்பு உணவுboiled rice mixed with jaggery and clarified butter
சர்க்கரைவள்ளிக் கிழங்கு வெளிர்ச் சிவப்பு நிறத்தில் மெல்லிய தோலை உடையதும் இனிப்புச் சுவை உடையதுமான ஒரு வகைக் கிழங்குsweet potato
சர்க்கா கைராட்டைa hand operated device to spin yarn
சர்க்கார் அரசுgovernment
சர்ச்சை வாக்குவாதம்discussion
சர்ப்பம் பாம்புsnake
சர்பத் நீரில் எலுமிச்சம் பழச் சாறும் நன்னாரியும் ஊற்றிச் சர்க்கரை கலந்து தயாரிக்கும் ஒரு வகைப் பானம்a soft drink prepared by adding lime juice, sugar, essence of sarsaparilla with water
சர்வ அனைத்துall
சர்வகலாசாலை பல்கலைக்கழகம்university
சர்வதேச பல நாடுகள் தொடர்பானinternational
சர்வம் எல்லாம்everything
   Page 2 of 26    1 2 3 4 26