Tamil to Tamil&English Dictionary

We are happy to provide you with the best Online Tamil to Tamil Dictionary/Translator.
For typing word in Tamil you can use our tool typing tool

  
Tamil WordTamil MeaningEnglish Meaning
சேமிப்பு (எதிர்காலத் தேவை கருதி வங்கி முதலியவற்றில் சிறிதுசிறிதாக) சேர்த்துவைத்தல் அல்லது சேர்த்துவைத்திருக்கும் பணம்savings (in a bank, etc.)
சேமிப்புப் பத்திரம் (அரசு நேரடியாகவோ அஞ்சலகம் முதலிய அமைப்புகள் வழியாகவோ) ஒருவர் சேமிப்பாகச் செலுத்திய தொகையைக் குறிப்பிட்ட கால முடிவில் வட்டியுடன் திருப்பித் தருவதாக எழுத்துமூலம் உறுதியளித்துத் தரும் பத்திரம்savings certificate
சேமியா (பாயசம், சிற்றுண்டி ஆகியவை செய்யப் பயன்படும்) கோதுமை, கிழங்கு முதலியவற்றின் மாவிலிருந்து மெல்லிய கம்பி போல் பிழிந்து உலர்த்திய உணவுப் பொருள்vermicelli
சேய் குழந்தைchild
சேய்மை தூரம்being at a distance
சேர்1கூட்டாக இருத்தல்(of men) come together
சேர்2(நபர்களை) ஒன்றுதிரட்டுதல்(பொருள்களை) சேகரித்தல்assemble (people)
சேர்3(தற்போது வழக்கில் இல்லாத) முந்நூற்றிருபது கிராம் கொண்ட நிறுத்தலளவை(a former) measure of weight, roughly about 320 grams
சேர்க்கை ஒன்றோடொன்று சேர்ந்திருக்கும் நிலைcombination
சேர்த்தி (ஒன்றுடன்) இணைத்துப் பார்க்கக் கூடியதுthat which can be identified with (something)
சேர்த்து (குறிப்பிடப்படுவதுடன்) கூடalso
சேர்த்துவை ஒத்துப்போகுமாறு செய்தல்reconcile
சேர்ந்த (குறிப்பிட்ட ஊர், நாடு முதலியவற்றை) பிறப்பிடமாகவோ வாழ்விடமாகவோ கொண்ட(ஒன்றை) எல்லையாகக் கொண்டு அதற்கு உட்பட்டbelonging to (a country, nation, etc.)
சேர்ந்தாற்போல் தொடர்ச்சியாகcontinuously
சேர்ந்து (செயலைச் செய்யும்போது) ஒன்றாகtogether
சேர்ப்பி (ஒன்றை ஒருவரிடத்தில்) ஒப்படைத்தல்hand over
சேர்ப்பு (பட்டியலில்) பதிவுசெய்தல்enrolment
சேர்மம் பொருள்களின் அல்லது திரவங்களின் கலப்பால் ஏற்படும் கூட்டுப் பொருள்(chemical) compound
சேர்மானம் (நகை செய்வதற்காகச் சுத்தத் தங்கத்தில் செம்பின்) கலப்பு விகிதம்ratio of (copper) added (to pure gold)
சேரன் (முற்காலத்தில் வில்லையும் அம்பையும் அரசுச் சின்னமாகக் கொண்டு) கேரளத்தை உள்ளடக்கிய நிலப் பகுதியை ஆண்ட பரம்பரையைச் சேர்ந்த மன்னன்any king of the Chera dynasty which ruled over modern Kerala and parts of Tamil Nadu
சேரி (கிராமங்களில்) தாழ்த்தப்பட்ட வகுப்பினர் வசிக்கும் பகுதிthat part of the village where people of certain castes (whose traditional occupation is agriculture) live
சேலை புடவைsaree
சேவகம் (இறைவனுக்கு அல்லது உயர்நிலையில் உள்ளவர்களுக்கு) தொண்டுworking as a servant
சேவகன் (அரசனின் அல்லது செல்வந்தரின்) பணியாள்servant (of a king or a rich man)
சேவல் (பெரும்பாலும் கோழிகளில்) ஆண் பறவை(in poultry) male bird
சேவார்த்தி (கோயில்களில் இறைவனை) வழிபட வரும் பக்தர்devotee
சேவாஸ்ரமம் சமூகத் தொண்டில் ஈடுபட்டவர்கள் தம் சேவைக்காக அமைத்துக்கொண்ட குடில்an establishment or institution where people who dedicate themselves to social service live and work together
சேவு கடலை மாவைப் பிசைந்து அச்சில் தேய்த்து எண்ணெய்யில் இட்டுச் செய்யப்படும் (கார அல்லது இனிப்புச் சுவையுடைய) தின்பண்டம்a savoury or sweet in the shape of short stick-strips made of chickpea paste fried in oil
சேவை1மக்களுக்குத் தேவையான வசதிகளை இலவசமாக அல்லது வணிகரீதியில் ஏற்படுத்திக் கொடுக்கும் பணிpublic service (by an individual, organization or government to people)
சேவை2அரிசி மாவை நூல் போலப் பிழிந்து நீராவியில் வேகவைத்துச் செய்யப்படும் உணவுa noodle-like steamed rice preparation
சேவைநாழி சேவை தயாரிப்பதற்காக மாவைப் பிழியும் சாதனம்the press used in the preparation of சேவை
சேறு நீரால் குழம்பிக் கொழகொழப்பாக இருக்கும் மண்mud
சேனை1(அரசர்களின் ஆட்சிக்காலங்களில்) படை(formerly) army (of a king)
சேனை2(சமையலில் பயன்படும்) கறுப்பு நிறத் தோலும் வெளிர்ச் சிவப்பு நிறச் சதைப் பகுதியும் கொண்ட அரைக் கோள வடிவத்தில் இருக்கும் ஒரு வகைக் கிழங்குa kind of yam
சைக்கிள் மிதிவண்டிbicycle
சைக்கிள் ரிக்ஷா பயணிகளை ஏற்றிச் செல்லப் பயன்படும் மூன்று சக்கர மிதிவண்டிa three wheeler (mostly pedalled) used as a passenger transport
சைகை (செய்தி தெரிவிக்கும் முறையில் அல்லது குறிப்பாக உணர்த்தும் முறையில் கைகால்) அசைவுgesture
சைத்தியம் புத்த மதத்தினரின் ஆலயம்buddhist shrine
சைத்திரிகன் ஓவியன்painter
சைவசித்தாந்தம் இறைவன் (=பதி), ஆன்மா (=பசு), ஆன்மாவுக்குத் தடையாக இருப்பது (=பாசம்) ஆகிய மூன்று அடிப்படைகளில் அமைக்கப்பட்ட இந்து சமயத் தத்துவம்a philosophical system of Hindu religion based on the three entities viz
சைவம்1சிவனை முழு முதல் கடவுளாகக் கொண்ட இந்து மதப் பிரிவு(a sect of) Hindu religion which regards Siva as the Supreme God
சைவம்2(இறைச்சி, மீன் முதலியவற்றைத் தவிர்த்து) காய்கறிகளை உணவாகக்கொள்ளும் முறைvegetarianism
சைவன்1இந்துக்களின் சைவப் பிரிவைச் சார்ந்தவன்one who follows Saivism
சைவன்2சைவ உணவு உண்பவன்vegetarian
சொக்கட்டான் உருட்டிப் போடும் கட்டைகளின் எண்ணிக்கைக்குத் தகுந்தபடி விளையாடும் தாய விளையாட்டுa game played according to the number obtained in the dice
சொக்கப்பனை கார்த்திகைத் திருவிழாவில் கோயில் முன்பு வைத்து எரிப்பதற்காக அமைக்கப்பட்டிருக்கும் காய்ந்த பனை ஓலைகளைக் கொண்ட கூடு போன்ற அமைப்புa bonfire made in front of temples as part of கார்த்திகை festival
சொக்கு1(அழகு, திறமை முதலியவற்றால்) தன் வசம் இழத்தல்be bewitched (by beauty, etc.)
சொக்கு2கன்னக் கதுப்புplumpness of the cheek
சொக்குப்பொடி (ஒரு பெண் ஒருவரைத் தன் வசத்திலேயே வைத்திருக்கப் பயன்படுத்துவதாகக் கூறப்படும்) மயக்குப் பொடிa magical powder (said to be used by women to enslave men)
சொகுசு சகல ஆடம்பரமான வசதிகளும் நிறைந்ததுluxury
சொச்சம் (குறிப்பிட்ட தொகைக்கும் சற்று) அதிகம்a little more (than the specified sum)
சொட்டச்சொட்ட வழிந்தோடும் அளவுக்குdrenched
சொட்டு1(திரவம்) சிறுசிறு துளிகளாக விழுதல்drip
சொட்டு2(திரவம் கீழே விழும்போது) சிறு உருண்டை வடிவ அளவிலானதுdrop
சொட்டு3(தேங்காய்) கீற்று(of coconut kernel) slice
சொட்டுநீர்ப் பாசனம் மிக மெல்லிய குழாய்களின் வழியாக நீரைச் செலுத்திச் சொட்டுசொட்டாக விழவைத்து மரம், செடி, கொடிகளின் வேர்ப் பகுதியை நனையவைக்கும் பாசன வகைdripirrigation
சொட்டுப்பால் கெட்டியான தேங்காய்ப் பால்juice extracted from coconut kernel
சொட்டுமருந்து (கண், காது, மூக்கு, வாய் ஆகியவற்றில்) சொட்டுசொட்டாக விடப்படும் திரவ மருந்து(of medicines) drops
சொட்டை (தலையில் ஒரு சிறு பகுதியில்) முடி உதிர்ந்து ஏற்படும் வெற்றிடம்baldness (in patches)
சொட்டைசொள்ளை (அடுத்தவர் செயலில் காணும்) குற்றம்குறைminor defects
சொடக்கு கட்டைவிரலையும் நடுவிரலையும் சேர்த்துச் சுண்டி எழுப்பும் ஒலிsnap (of the fingers)
சொடுக்கு (சாட்டை முதலியவற்றை) சுண்டியிழுத்தல்(முதலை முதலியவை வாலை) ஒலி வரும்படி அடித்தல்give a sharp, snapping sound
சொடுகு பொடுகுdandruff
சொண்டு (பறவையின்) அலகுbeak (of a bird)
சொத்-என்று (கடினத்தன்மை இல்லாத பொருள்) அதிக விசையும் சத்தமும் இல்லாமல்(fall) with a thud
சொத்தி ஊனம்physical handicap
சொத்து (நிலம், வீடு, வாகனம் முதலிய) பண மதிப்புடைய உடமைwealth
சொத்துசுகம் சொத்தும் சொத்து தரும் வசதியும்wealth and comfort
சொத்தை (உள்ளே அரிக்கப்பட்டு) கெட்டுப்போனதுthat which is decayed (eaten by worms)
சொதசொத-என்று (மண் முதலியன) ஈரப்பதத்துடன்(of soil) wet and soft
சொதி தேங்காய்ப் பாலால் செய்யப்படும் ஒரு வகைக் குழம்புa kind of vegetable sauce prepared from the extract of coconut
சொந்த (இடத்தைக் குறிக்கையில்) தன் பிறப்பால் அல்லது தன்னுடைய முன்னோரின் பிறப்பால் உரிமையுடைய(of place) native
சொந்தக்காரன் (நிலம், வீடு, பொருள் முதலியவற்றிற்கு) உரிமை உடையவன்owner (of a house, etc.)
சொந்தக்காரி சொந்தக்காரன் என்பதன் பெண்பால்feminine of சொந்தக்காரன்
சொந்தப் பெயர் இயற்பெயர்real name (as distinguished from pen name, etc.)
சொந்தம் (நிலம், பொருள் முதலியவற்றின் மீது ஒருவருக்கு உள்ள) உரிமைownership
சொப்பனம் கனவுdream
சொர்க்கபோகம் (சொர்க்கத்தில் கிடைப்பது போன்ற) வசதியும் சுகமும்a life of luxury
சொர்க்கம் (புண்ணியம் செய்தவர்கள் இறந்த பின் அடைவதாக நம்பப்படும்) இன்பம் நிறைந்த மேலுலகம்heaven
சொர்க்கவாசல் வைணவக் கோயில்களில் மார்கழி மாதத்து ஏகாதசியன்று மட்டும் திறக்கப்படும் (வைகுண்டம் செல்வதற்கு வழியாக நம்பப்படும்) வடக்குப் பக்கம் அமைந்திருக்கும் வாசல்the door in Vishnu temples which is opened once a year (believed to be the gateway to the abode of Vishnu)
சொர்ணம் தங்கம்gold
சொர்ணவாரி (ஆனிமுதல் புரட்டாசிவரை உள்ள மாதங்களில் பயிரிடப்படும்) குறுகிய கால நெற் பயிர்a short term paddy crop (cultivated between June and September)
சொரசொரப்பு (ஒன்றின் மேற்பரப்பு) உராய்வை ஏற்படுத்துவதாக உள்ள நிலைroughness (of a surface)
சொரிமணல் புதைமணல்quicksand
சொரூபம் உருவம்form
சொரூபி (குறிப்பிட்ட குணத்தின்) முழு வடிவம்one who is the embodiment of
சொல்2பொருள் குறிக்கும் ஒலி அல்லது ஒலிகளின் தொகுதிword
சொல்லடைவு ஒரு நூலில் இருக்கும் அனைத்துச் சொற்களையும் அகர வரிசையில் தொகுத்துத் தயாரிக்கும் பட்டியல்word-index (for texts, esp
சொல்லப்போனால் உண்மையில்in fact
சொல்லாக்கம் (புதிய கருத்துகளை உணர்த்த ஒரு மொழியில்) புதிய சொற்களை உருவாக்குதல்coining new words or terms
சொல்லாட்சி சொற்களைப் பயன்படுத்தும் முறைcommand over words
சொல்லாமல் சொல் (ஒன்றை) நேரடியாகச் சொல்லாமல் குறிப்பால் உணர்த்துதல்state
சொல்லிக்கொடு1கற்பித்தல்teach
சொல்லிக்கொள் (போய்வருவதாகச் சொல்லி) விடைபெறுதல்take leave (of s
சொல்லியனுப்பு (வரும்படியாக) செய்தி தெரிவித்தல்send for
சொல்லிவை முன்னரே கூறுதல்inform beforehand
சொல்லிவைத்தாற்போல முன்கூட்டியே திட்டமிட்டது என்று தோன்றும்படிas if agreed upon or preplanned
சொலவடை பழமொழிproverb
சொள்ளு (குழந்தை) எச்சில்dribbling (from the mouth of a child)
சொற்கட்டு கால அளவைக் காட்டும் (பொருளற்ற) ஒலிக்குறிப்புகளின் தொகுதிa way of ordering and rendering the rhythmic groups
   Page 24 of 26    1 22 23 24 25 26